அகப்பாட்டுறுப்பு

அகப்பாட்டுக்களின் உறுப்புக்கள் 12 (ந.அ. 211) அவை.1. திணை : கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்ற ஏழுதிணைகள். (தொ.பொ.1)2. கைகோள் : களவு கற்பு ஆகிய ஈரொழுக்கம். காமப் புணர்ச்சி,இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு என்ற நான்குபகுதிகளை யுடையது களவு. மறை வெளிப்படுதல், தமரின் பெறுதல்என்னுமிரண்டும், இவற்றை அடுத்த மலிவு, புலவி, ஊடல், உணர்த்தல், பிரிவுஎன்ற ஐந்து பகுதிகளுமுடையது கற்பு. (தொ. பொ. 498, 499. பேரா.)3. கூற்று : களவியல் கூற்றுக்குரிய அறுவரும், கற்பியல்கூற்றுக்குரிய பன்னிருவரும். (தொ. பொ. 501-507)4. கேட்போர் : தலைவன் தலைவி முதலியோர் கூற்றைக் கேட்டற் குரியோர்.(தொ. பொ. 508-512)5. இடன் : ஒரு செய்யுள் கேட்டால், இஃது இன்ன இடத்து நிகழ்ந்ததுஎனச் சந்தருப்பத்தை உணர்த்துவது. (தொ. பொ. 513)6. காலம் : மூன்று காலத்திலும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச்செய்யுளுள்தோன்றச் செய்யும் காலம் என்ற உறுப்பு. (தொ. பொ. 514)7. பயன் : இச்செயலான் இன்னது பெறப்படும் என்னும் பயன். (தொ. பொ.515)8. மெய்ப்பாடு : சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்குஅறிதல் மெய்ப்பாடு. அது தேவர் உலகம் கூறினும் அதனைக் கண்டாற் போலவேஅறியச் செய்யும் உறுப்பு. அது நகை முதலிய எண் வகைத்து. (தொ. பொ.516-517)9. எச்சம் : கூற்றினாலும், குறிப்பினாலும் முடிக் கப்படும்இலக்கணத்தொடு பொருந்திய சொற்களும் சொற்றொடர்களும் (கூற்று -வெளிப்படக் கூறுவது) எச்சம் என்னும் உறுப்பாம். (தொ. பொ. 518)10. முன்னம் : ஒரு மொழியைக் கூறினோரும் கேட் டோரும் இன்னார் என்றுஅறியச் செய் யும் குறிப்பு நிலையில் உள்ள செய்யுள் உறுப்பு. (தொ. பொ.519)11. பொருள்வகை : எல்லாத் திணைகளுக்கும் பொதுவாகப் புலவனால்செய்யப்படுவது. (தொ. பொ. 620)12. துறை : ஐவகை நிலத்து மாக்களும் மாவும் புள்ளும் போல்வனகூறப்பட்டமுறையை மாற்றிச் செய்யுள் அமைப்பினும் அவ்வத் திணைக்கு ஏற்றஇலக்கணமும் வர லாற்று முறைமையும் பிறழாமை செய் யும் உறுப்பு. (தொ.பொ.521)இப்பன்னிரண்டும் செய்யுள் உறுப்பு 34இல் சிறப்புடைய 26இல்அமைந்தவை. (தொ. பொ. 313)