தாழிசை தரவிற் சுருங்கின முறைமை யுடைத்து – என்பது நூற்பா.அகப்படுதலாவது, அகம் புறம் என்ற இருகூறு செய்தவிடத்தே முற்கூற்றினுள்படுதல். முன் காலமுன்னாம். ஆகவே, நான்கடி முதல் இரண்டடிகாறும் தாழிசைவரப்பெறும். (தொ. செய். 134. நச்.)‘பொதுமொழி பிறர்க்கின்றி’ என்ற கலியுள் (68) ஆறடித் தாழிசையும்வருதலின், அது கொக்கக்கலியாம். (நச்)பதினோரடி முதல் இரண்டடிகாறும் தாழிசை இழிந்து வரப் பெறும்என்றவாறு. தாழிசை தரவு அகப்பட்டது எனின், தரவின் அடியை விடத் தாழிசைஅடி குறைந்திருக்க வேண்டும் என்பது. இனி, ‘சுருங்கும்’ என்னாது‘அகப்படும்’ என்றது, தரவோடு ஒத்து வரும் தாழிசையும் உள என்றுகொள்ளுதற்கு. அகப்படுதல் – ஒத்தல் எனவும் பொருள்படும்.கலி 124 இல், தரவு 4 அடி; தாழிசையும் 4 அடி (தொ. செய். 134பேரா.)