அகன்மக பரப்பை பதம்

வடமொழியில் குறிலை ஈறும் ஈற்றயலுமாகக் கொண்ட வினைச்சொற்கள்பரஸ்மைபதம் எனப்படும். குறித்த வினை பிறர்க்கு எனின் பரப்பைபதம்என்றும், தமக்கு எனின் ஆற்பனேபதம் என்றும் இருந்த மிகப் பண்டைய சொல்வழக்கம் மறைந்துவிட்டதொன்று. ஆகவே ஈறும் ஈற்றயலும் குறிலாக உள்ளவினைச்சொற்கள் பரப்பைபதம் என்றும், பிற ஈறும் ஈற்றயலும் கொண்டவினைச்சொற்கள் ஆற்பனேபதம் என்றும் வழங்குவதே இன்றுள்ள வழக்கம்.தமிழில் இப் பாகுபாடு இல்லை. செயப்படுபொருள் குன்றாத வினை முற்றுச்சொல்லொடு வரும் செயப்படுபொருள் கருத்தாவாக – எழுவாயாக – அமையும்.இது ‘செயப்படு பொருளைச்செய்தது போல’ என்னும் விதிப்படி, சோறு அட்டது – கூரை வேய்ந்தது – என்பன போலவரும். இது கருமகருத்தா என வடமொழியில் வழங்கப்படுகிறது. இது போன்றவினைச்சொற்கள் அகன்மக பரப்பை பதமாம். (பி. வி. 11 {{OR 36?: TVG_1973,p.239}})