அகப்பொருளைப் பற்றி வருதலின் அகநிலை ஒத்தாழிசைக் கலியாம்.அகநிலை ஒத்தாழிசைக் கலியுள் இடைநிலைப் பாட்டு, தரவு, போக்கு,அடையென்னும் நான்கும் பயின்றுவரும். (அடை- தனிச்சொல்) இவை பயின்றுவரும் எனவே, தாழம்பட்ட ஓசையினை உடையன அல்லாத இடைநிலைப்பாட்டும் ஒரோவழிவரும் என்பது.இவை பயின்று வரும் எனவே, இத்துணைப் பயிலாது அம்போதரங்கமும்அராகமும் சிறுபான்மை வரும் என்ப. ஆயின், கலித்தொகையிலுள்ள 150கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலியுள் அம்போதரங்க உறுப்பும் அராக உறுப்பும்பயின்று வருவன இன்மையின், அங்ஙனம் கூறுதல் தொல்காப்பிய நூலுக்குமாறுபட்ட செய்தியாம்.இடைநிலைப்பாட்டு என்பது தாழம்பட்ட ஒசையுடையன, தாழம்பட்டஓசையில்லாதன என இரண்டனையும் குறிக்கும். தாழிசை என்பது தாழம்பட்டஓசையுடையனவற்றையே குறிக்கும்.இவ்வொத்தாழிசைக் கலியில் தாழம்பட்ட ஓசையில்லாதன வாகிய இடைநிலைஉறுப்பும் அருகி வருதலின், தாழிசை என்று கூறாது ‘இடைநிலைப்பாட்டு’என்று கூறப்பட்டது.இடைநிலைப்பாட்டினை முற்கூறினார், அதனால் இக்கலி ஒத்தாழிசை எனப்பெயர் பெறுதலின். எனவே, தரவு முன்வைத்தலே முறை. இவ்வொத்தாழிசைக்கலிதரவு, தாழிசை, போக்கு (-சுரிதகம்) என்ற மூன்று உறுப்பானும் வந்துசிறுபான்மை தனிச்சொல்லாகிய அடையின்றியும் வருதலின் தனிச்சொல்இறுதியில் கூறப்பட்டது.படவே, அகநிலை ஒத்தாழிசையின் உறுப்புக்கள் முறையே தரவு, தாழிசைமூன்று, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கும் என்பதுகொள்ளப்படும்.இடைநிலைப்பாட்டு தரவுக்கும் தனிச்சொல்லுக்கும் இடையில் வருவது.(தொ. செய். 132. நச். உரை)