அகநிலை ஒத்தாழிசைத் தனிச்சொல்

அகநிலை ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைக்குப் பின்னும் சுரிதகத்துக்குமுன்னும் பெரும்பான்மையும் ‘ஆங்கு’ என்ற அசைச் சொல்லே தனிசொல்லாகவரும். (‘எனவாங்கு’ என்றாற் போன்ற தனிச்சொற்கள் பொருள் பெற்றுவரும்.எ-டு : கலி. 5 எனவாங்கு – என்று யாம் நினக்குச் சொல்லா நிற்க;(ஆங்கு – அசை – நச்.)ஆங்கு என்னும் அசைச்சொல் பயிலும் எனவே, அல்லாத வாகிய எனவாங்கு, எனஇவள், என நின், அதனால், என நீ, என நம், அவனை, என்று நின் – என்றாற்போல்வன பொருள் பெற வருதல் பெற்றாம். ஆங்கு என்பது ஆங்க எனவும் வரும்.ஆங்கு என்பது ஏழனுருபாய்ப் பொருளுணர்த்திற்றேல், யாண்டும்பொருளுணர்த்துதல் வேண்டும்; அங்ஙனம் நில்லாமையின் அசைநிலை ஆயிற்று.(தொ. செய். 135. நச்.)இது தாழிசை முன்னரும் சிறுபான்மைவரும்.(தொ. செய். 131. இள.)தாழிசைதோறும் தனிச்சொல் வரவும் பெறும்.(தொ. செய். 128. இள.)தனிச்சொல் சில, கலியுள் வருமாறு :என வாங்கு – கலி. க.டவுள் வாழ்த்து 3, 4, 5, 8, 9, 10, 11, 15, 16,17, 20, 22, 23, 25, 27,28, 39, 30 31, 33, 34, 35 முதலியன.என இவள் – கலி. 2.என நின் – கலி . 7 என நீ – கலி. 26அதனால் – கலி. 14, 49, 50, 54, 122, 124, 127என – கலி 105 அவனை – கலி. 47என்று நின்- கலி. 71 ஆங்க – கலி. 75,77, 78, 86, 106, 140என நாம் – கலி. 40, 131 என்றாங்கே – கலி. 141ஆயின் – கலி. 61 ஆங்கு – கலி. 99, 100, 103, 104, 128, 136, 137,149, 150தாழிசை முன்னர்த் தனிச்சொல் – கலி. 101தாழிசைதோறும் தனிச்சொல் – கலி. 130, 148.