அகநிலைச் செயப்படுபொருள்

வந்தான் என்பதற்கு வருதலைச் செய்தான் என்பதே பொரு ளாதாலின், வருதலைஎன்பது அகநிலைச் செயப்படுபொரு ளாம். வருதல் : வினை; செய்தல்: தொழில்ஆதலின் எந்த வினைச் சொல்லின்கண்ணும் ஒரு தொழில் இருக்கும் என்ப தனைக்கொண்டு இங்ஙனம் கூறப்பட்டது. கண்டான் முதலிய வினைச் சொற்கள் காணுதலைச்செய்தான் என்றல் முதலாக விரிக்கப் படுதல் காண்க. (இ. கொ. 31.)அகநிலைச் செயப்படுபொருளாவது அந்தர்ப்பாவித கர்மம். எல்லாவினைச்சொற்களும் ஒருவகையில் செயப்படுபொரு ளுடையன போலவே ஆம் என்னும்இலக்கண நூலுடை யோர் கருத்தும் தோன்ற வருவதொரு விளக்கம் இது.வந்தான் என்புழி, வருதலைச் செய்தான் – என இரண்டனுருபு அடுத்துவரும் தொழிற்பெயராகக் கொள்ளப்படுதலின், செய்தலுக்கு வருதல்செயப்படுபொருளாய் – உட்கிடையாய் – அமைந்திருத்தலின் – இஃது அகநிலைச்செயல்படுபொருள் ஆயிற்று.வருதலைச் செய்தான் என்பதன்கண், வருதல் வினை என்பதும் செய்தல்தொழில் என்பதும் சேனாவரையர் உரையானும் தெளியப்படும். (தொ. சொ. 112)(பி. வி. 12)