‘அகத்து எழு வளி இசை’

மூலாதாரத்து எழுகின்ற காற்றின் ஓசை ‘அகத்தெழு வளியிசை’ எனப்படும்.
(தொ. எ. 102 நச். உரை)
உள் நின்று எழும் வளியான் ஆகிய இசை. (தொ.எ. இள. உரை)
(உந்தியில் தோன்றும் ஒலியைப் பரை என்றும், அங்கிருந்து இதயத்தை
அடைந்த நாதரூபமான ஒலிவடிவத்தைப் பைசந்தி என்றும், பிறர்செவியில்
கேட்கப்பெறாத மெல்லோசை யாய்ச் சொல்லுவான் தன்னுள் உணர்தற்கு ஏதுவாய்ப்
பைசந்திக்கு மேல் இதயத்திலிருந்து எழும் நாதரூபமான ஒலியை மத்திமை
என்றும், இம்மூன்றும் பிறர் கேட்குமாறு செவிப்புலனுக்கு எட்டா நிலைமைய
ஆதலின் இவை ‘அகத்தெழு வளியிசை’ என்றும் கூறப்பட்டன.)