இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில்
உள்ள ஊர் இது. குமரியிலிருந்து 3 மைல் தூரத்தில் உள்ளது சங்க இலக்கியம் சுட்டாத
இவ்வூர்ப் பெயர் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது. இறைவன்
உறை சுரம் பலவும் இயம்பு வோம் ( பதி, 285-8 ) என்ற நிலையில் பல சுரங்களை
யியம்பும் இவர் அவற்றுள் அகத்தீச்சுரத்தையும் ஒன்றெனக் குறிப்பிடுகின்றார்.
திருநாவுக்கரசு சுவாமிகளின் இப்பாடற் குறிப்பு இரண்டு பொருளை விளங்க வைத்து
இவ்வூர்ப் பெயருண்மையை விளக்குகின்றது. முதலில் இவர் இறைவன் உறையும் சுரம்
கூறும் நிலையில் இவன் அகத்தியன் என்பது சிவனைக் குறிக்கிறது என்பது
தெளிவுபடுகிறது. அடுத்து சுரம் என்ற கூறு காடு என்னும் பொருளில் அமைந்து முதலில்
இறைவன் எழுந்தருளிய பகுதி அல்லது இறைவனை எழுந்தருளச் செய்த பின்னர் மாறியது
என்பதும் விளக்கம் பெறுகிறது. கோயிற் பெயர் ஊருக்கு அமைந்த நிலை தெளிவுபடுகிறது.
அகத்தியர் பூசித்த தலம் என்ற எண்ணமும் அமைகிறது. இதனைப் போன்றே பிற அயனீச்சுரம்.
அக்கீச்சுரம், இராமேச் சுரம் போன்றனவும் சுரம் காரணமாகப் பெயர் பெற்றவையாகும்.
உராக