அகத்தியான் பள்ளி

இப்பெயர் சங்க இலக்கியத்துள் இடம் பெறவில்லை. அகத்தியான் பள்ளி என்ற பெயரை நோக்க, அகத்தியனோடு தொடர்பு கொண்டதொரு பெயர் என்பது மேம்போக்காக நோக்கத் தெரிகிறது. வேதாரணியத்திற்குத் தெற்கில் உள்ள ஊராகிய இது, அகத்தியர் சுவாமியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்கும் பொருட்டுத் தங்கி வழிபட்ட தலம் என்பர். எனினும் இதற்குச் சரியான சான்று இல்லை. அகத்திய பக்த விலாசம் என்றதொரு நூலினை, சிவனடியார்கள் சரிதையை வடமொழியிற் கூறும் நூலினை அபிதான சிந்தாமணி சுட்டு எனவே இங்கு அகத்தியன் சிவனுக்குரிய தாரு பெயராக அமையக் காணலாம். இந்நிலையில் பக்தி இலக்கியங்களில் இடம் பெற்ற இவ்வூர்ப்பெயர் சிவன் உறையும் இடம் என்ற பொருளில் தோன்றியிருக்கவும் வாய்ப்புண்டு. ஆலயத்தில் அகத்தியர் உருவம் உள்ளமையினால் அகத்தியரோடு பொருத்தி இவ்வூர்ப் பெயரைக் குறித்திருக்கலாம். என்பது இன்றும் இப்பெயராலேயே குறிக்கப்படும் இவ்வூர் திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் இருவராலும் பாடப்பட்ட சிறப்புப் பொருந்தியது. இன்றைய வேதாரண்யத்திற்குப் பக்கத் தில் கடல் உள்ளது. எனவே அகத்தியான் பள்ளிக்கு அருகில் உள்ள கடலைப் பற்றிய குறிப்பு கிடைப்பது உண்மை விளக்கமாக அமைகிறது. திருநாவுக்கரசர் அகத்தியான் பள்ளி அமர்ந்த ( 239-6 ) நிலையைக் கூற, ஞானசம்பந்தர் தனியாகப் பதிகமே பாடியுள்ளார்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் ,
தெண் திரை சூழ் கடற்கானல் திருவகத்தியான் பள்ளி
அண்டர்பிரான் கழல் வணங்கி ( 622 )
ஞானசம்பந்தர் சென்றதைப் பாடுகின்றார்.