வினை ஒன்று இரண்டு செயப்படுபொருள்களைப் பெறுதல். ஒரு சில வினைகளேஇங்ஙனம் வருபவை. ஐ வேற்றுமை பெற்ற இரண்டனுள் ஒன்று ஆறாம் வேற்றுமையாகவிரிவது. மற்றொன்று, அங்ஙன மின்றிச் செயப்படுபொருள் காட்டும்இரண்டாவதாகவே பொருள்படுவது.எ-டு : பசுவினைப் பாலைக் கறந்தான், ஆனையைக் கோட்டைக்குறைத்தான்.இவை பசுவினது பாலைக் கறந்தான் – எனவும், ஆனையது கோட்டைக்குறைத்தான் – எனவும் பொருள்படும்.ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினவினான் என்னும் தொட ரில், ஆசிரியனதுஎன்று ஆறாம்வேற்றுமை விரிய இட மில்லை. இதனை வடமொழியில் துகன்மகம்(துவி கர்மகம்) என்பர். (பி. வி. 12)