தமிழில் பகாப்பதம் என்பது இது. இது வடமொழியில் பிராதிபதிகம்எனப்படும். இதன் இலக்கணம் வருமாறு: பொருளுடையதும், வினைப்பகுதிஆகாததும், விகுதி உருபு இடைநிலை போன்ற எதுவும் ஆகாததும், அவற்றான்முடிந் துள்ளதாகாததும் ஆகிய பெயர்ப்பகாப்பதமே பிராதிபதிகம் என்பது.தமிழில் பெயர்ப்பகாப்பதமே வேற்றுமையுருபு பெற்று இரண்டாவது முதல்ஏழாவது வரையிலான வேற்றுமை களாம். (பி.வி.7)