எழுத்ததிகாரத்துக் கூறப்படும் செய்கையாவது புணர்ச்சியாம்.
அச்செய்கையின் நான்கு வகைகளுள் அகச்செய்கை என்பதும் ஒன்று. உயிரீறு,
புள்ளியீறு, குற்றியலுகர ஈறு ஆகியவை வருமொழி முதலொடு புணரும்வழி
நிகழும் புணர்ச்சி நிலையைக் குறிப்பிடும் இயல்கள் ‘அகத்தோத்து’
எனப்படும். நிலைமொழியீறு வருமொழியில் வன்கணம் முதலிய வரும் வழி
இன்னஇன்னவாறு முடியும் என்று கூறுவது அகச் செய்கையாம்.
எ-டு: பொன் + குடம் = பொற்குடம் (தொ. எ. 332)
நிலைமொழியீற்று னகரம் றகரமாகத் திரிந்தது என்று கூறுதல் போல்வன
அகச்செய்கையாம். (தொ. எ. 1. நச். உரை)