அகக் கரணம்

மூன்றாம்வேற்றுமைப் பொருள்களில் ஒன்றான கரணம் (கருவி)இருவகைப்படும். அவை அகக்கரணம் புறக்கரணம் என்பன. வடமொழியுள் முன்னதுஅப்பியந்தரம் என்றும் பின்னது பாகியம் எனவும் வழங்கும். ‘மனத்தால்மறுவிலர்’ (நாலடி 180), ‘மனத்தானாம் உணர்ச்சி’ (குறள் 453), ‘உள்ளத்தால் உள்ளல்’ (குறள் 282) என்றல் போல்வன அகக்கரணம். (கண்ணால் கண்டான்,‘நெய்யால் எரி நுதுப்பேம்’ (குறள் 1148) என்றல் போல்வன புறக்கரணம்).(பி. வி. 12)