அகக்கருவி

மூன்றாம் வேற்றுமைக்குப் பொருளான கருவி என்பதனை இலக்கணக்கொத்துமூவகைப் படுக்கும். அவையாவன அகக்கருவி, புறக்கருவி, ஒற்றுமைக் கருவி -என்பன.எ-டு : மனத்தான் நினைத்தான் – மனம் : அகக்கருவி; வாளான்வெட்டினான் – வாள் : புறக்கருவி; அறிவான் அறிந் தான் – அறிவு :அறிதலுக்கு ஒற்றுமைக் கருவி (இ. கொ. 33)