அஃறிணை

உலகப் பொருள்களின் இருவகைப் பகுப்புக்களில் அஃறிணை ஒன்றாம். திணைஒழுக்கம் என்னும் பொருளது. உயர் திணைக்கு மறுதலை அஃறிணையாம். இதனை‘இழிதிணை’ என்றும் கூறுப. (நன். 245)அஃறிணை என்ற பண்புத்தொகைநிலைத்தொடர், உயர்வு அல்லாததாகிய ஒழுக்கம்என்று பொருள்பட்டு, மக்கள் அல்லாத ஏனைய உயிருடைய பொருள் – உயிரிலவாகியபொருள் – ஆகிய இருதிறத்தவற்றையும் குறிக்கும். (தொ. சொ. 1 நச்.உரை)சிலசொற்கள் பொருளான் உயர்திணையவற்றைக் குறிப்பினும், சொல்லளவில்இருதிணைக்கும் பொதுவாய்க் குடிமை நன்று – குடிமை நல்லன், அரசு நன்று -அரசு நல்லன் – என இரு திணை முடிபும் பெறுவதுண்டு. (தொ. சொ. 57நச்.)சில சொற்கள் பொருளான் உயர்திணையவாயினும் சொல் லான் அஃறிணையாய்அஃறிணைமுடிபே கொண்டு, காலம் ஆயிற்று – உலகு நொந்தது – பூதம் புடைத்தது- என்றாற்போல முடிவு பெறுவது முண்டு. (தொ. சொ. 58 நச்.)உயர்வு அல்லாத பொருளாகிய உயிருடையனவும் உயிரில்லன வும் அஃறிணையாம்.திணை – பொருள். அல்பொருள் என்னாது அஃறிணை என்றது, அவ்வாறுஆளுதல்வேண்டி ஆசிரியன் இட்டதொரு குறியாம். (தொ. சொ. 1 தெய். உரை)அல்லாததாகிய திணை எனக் குணப்பண்பு பற்றி வந்த பண்புத்தொகை.‘உயர்திணை அல்லாதது ஆகியது’ என உயர்திணை என்னும் சொல் வருவித்துமுடிக்க. உயர்திணை என்பதற்கு ஏற்ப, ‘இழிதிணை’ என்று (என்பது) இல்என்னும் பொருள்நோக்கம் என உணர்க. (தொ. சொ. 1 கல். உரை)மானிடம் என்பதும், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளிசனி கதிர் மதி திரு – முதலிய சொற்களும் பொருளான் உயர்திணையாயினும்சொல்லான் அஃறிணை முடிபு பெறும். (நன். 260 மயிலை.)‘திணை நிலன் குலம் ஒழுக்கம்’ என்ப ஆதலின், திணை என்னும் பலபொருள்ஒருசொல் ஈண்டுக் குலத்தின்மேல் நின்றது. உயர்திணை அல்லாத திணை அஃறிணைஎனப் பட்டது. அஃறிணை என்பது பண்புத்தொகை.(நன். 261 சங்கர.)