இருதிணைக்கும் பொதுவான பெயர் விரவுப்பெயர் எனப் படும். இஃதுஒருபோது ஒருதிணையையே குறிப்பிடும். உயர்திணையைக் குறிக்குமிடத்து‘உயர்திணை விரவுப்பெயர்’ எனவும் அஃறிணையைக் குறிக்குமிடத்து ‘அஃறிணைவிரவுப் பெயர்’ எனவும் பெயர் பெறும் என்பது சேனாவரையர்,தெய்வச்சிலையார் முதலியோர் கருத்தாம். தொல்காப்பியத் தில் ‘உயர்திணைவிரவுப்பெயர்’ என்ற தொடர் யாண்டும் இல்லை. ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்றதொடரே தொ.எ. 155, 157; சொ. 152 நச். என்னும் மூன்று இடங்களில்வந்துள்ளது.நச்சினார்க்கினியர், உயர்திணை விரவுப்பெயர்க்கு மறுதலை அஃறிணைவிரவுப்பெயர் என்று குறிப்பிடாது, விரவுப் பெயரின் உண்மைத்தன்மைத்தோற்றம் குறிக்கவே, அல் வழியை ‘வேற்றுமை அல்வழி’ என்று குறிப்பிடுவதுபோல, ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்று பெயரிட்டார் என்பர். அஃறிணைவிரவுப்பெயராவது உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர். சாத்தன்என்ற சொல்லில் உயர்திணை ஆண்பாற்குரிய அன் விகுதி அஃறிணை ஆண்பாலையும்சுட்டுதற்கு வருதலின் உயர்திணையோடு அஃறிணை விரவி அமைவதே விரவுப்பெயர்என்பது.அஃறிணைக்கு ஒன்மைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த் தும் ஈறன்றிஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஓதாமையின்,அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணை ஆண்பாலையும் பெண்பாலையும் உணர்த்துதலின், அஃறிணை உயர்திணையொடு சென்றுவிரவிற்று என்று அவற்றின் உண்மைத்தன்மைத் தோற்றம் கூறியவாறு. ஆதலின்,‘அஃறிணை விரவுப்பெயர்’ என்புழி, அஃறிணை என்ற அடை சேனாவரையர்முதலாயினார்க்குப் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாய் இனத்தைச்சுட்டும் அடை. நச்சினார்க் கினியர்க்கும் கல்லாடர்க்கும் அது தன்னோடுஇயைபின்மை நீக்கிய விசேடணம்; அஃதாவது செஞ்ஞாயிறு என்றாற் போல இனத்தைச்சுட்டாத அடை.எ-டு : சாத்தன் வந்தான், சாத்தி வந்தாள் -உயர்திணை விரவுப்பெயர்; சாத்தன் வந்தது, சாத்தி வந்தது -அஃறிணைவிரவுப்பெயர்இது சேனாவரையர் முதலாயினார் கருத்து.சாத்தன் சாத்தி – என்பன இருதிணை வினைகளும் கொண்டு முடிதலின், இவைஅஃறிணை விரவுப்பெயர் என்பது நச்சி னார்க்கினியர் முதலாயினார் கருத்து.(தொ. எ. 155 நச். உரை) (சொ. 120, 150 சேனா. உரை) (சொ. 152 நச். 153கல் உரை)அஃறிணைவிரவுப்பெயர் தன் முடிக்கும் சொல்லாம் வினையி னாலேயே இன்னதிணையைச் சுட்டுகிறது என்பது புலப்படும். (முடிக்கும் சொல் பெயரும்ஆம்.)எ-டு : சாத்தன் வந்தான், (அவன்) – உயர்திணைசாத்தன் வந்தது, (அது) – அஃறிணை(தொ. சொ. 174 நச். உரை)அஃறிணை விரவுப்பெயர் – உயர்திணைப்பெயரோடு அஃறிணை விரவி வரும்பெயர்கள். (தொ. சொ. 153 கல். உரை)