அஃறிணை விரவுப்பெயர், உயர்திணை விரவுப்பெயருக்கு ஓதப்பட்டவிதிகளைப் பின்பற்றியே விளியேற்கும். நீயிர் – தான் – என்ற ரகர னகரஈற்று விரவுப்பெயர்கள் விளி ஏலா.எ-டு : சாத்தி – சாத்தீ, பூண்டு – பூண்டே, தந்தை – தந்தாய்,சாத்தன் – சாத்தா, கூந்தல் – கூந்தால், மக்கள் – மக்காள்.இவை அண்மை விளியாங்கால், சாத்தி – பூண்டு – தந்தை – சாத்த – எனவருதலும் கொள்க.இனிக் கூறியவாறன்றி, பிணா வாராய் – அழிதூ வாராய் – என ஓதாத ஆகாரஊகாரங்கள் இயல்பாய் விளியேற்றலும்,சாத்தன் வாராய் – மகள் வாராய் – தூங்கல் வாராய் – எனஎடுத்தோதியஈறுகள் கூறியவாறன்றி இயல்பாய் விளியேற்றலும்,மகனே – தூங்கலே – என, ஏகாரம் பெற்று விளியேற்றலும் கொள்ளப்படும்.(தொ. சொ. 150 சேனா. உரை) (152 நச். உரை)