அஃறிணை விரவுப்பெயர் அவ்வழி, வேற்றுமை என்ற இரு திறத்துப்
புணர்ச்சிக்கண்ணும் பெரும்பான்மையும் இயல்பாக முடியும்.
எ-டு : சாத்தன் குறியன், மாண்டான், வலியன், அடைந் தான்; சாத்தி
குறியள், மாண்டாள், வலியள், அடைந்தாள் என அவ்வழிக்கண்ணும்,
சாத்தன் கை, மாட்சி, வன்மை, அழகு; சாத்தி கை, மாட்சி, வன்மை,
அழகு என வேற்றுமைக் கண்ணும்
வன்மை – மென்மை – இடைமை – உயிர் – என்ற நாற்கணங் களும் வந்துழியும்
இயல்பாயினவாறு.
னகர ஈற்று விரவுப்பெயரின் முன் தகர நகர முதல் மொழிகள் வரின்,
அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், றகர னகர மாகத் திரியும்.
எ-டு : சாத்தன் + தீயன், நல்லன் = சாத்தன்றீயன், சாத்த னல்லன்
சாத்தன் + தீமை, நன்மை = சாத்தன்றீமை, சாத்தனன்மை (தொ. எ. 155
நச்.)
கப்பி + தந்தை = கப்பிந்தை, சென்னி + தந்தை = சென்னிந்தை என,
இயல்பாகாது வருமொழிமுதல் தகரஉயிர்மெய் கெட்டுப் புணர்ந்தவாறு. (தொ. எ.
246 நச்.)