அஃறிணை வினைப்பெயர்

வினைமுற்றுக்கள் பகுதியில் பொருள் சிறக்கும். வினைப் பெயர்கள்விகுதியிலேயே பொருள் சிறக்கும். ஆதலின், வினை முற்றுக்கள் எடுத்தும்,பெயர்கள் படுத்தும் சொல்லப்படும். வினைமுற்றுக்கள் எடுத்தலோசையான்அமைவன ஆதலின் அஃறிணை வினை முற்றுக்கள்படுத்தலோசையான் அஃறிணைவினையாலணையும்பெயர்களாம்.எ-டு : வருவது – வருவதாகிய பொருள்வருவன – வருவனவாகிய பொருள்என வினைமுற்று வினைப்பெயர் ஆயினவாறு. (இவ்வினைப் பெயர்களைப்பிற்காலத்தார் வினையாலணையும்பெயர், வினைமுற்றுப்பெயர் எனப் பெயரிட்டுவழங்குப.)(தொ. சொ. 170 நச். உரை)