அஃறிணை வினைஈறு ஏழ்

அஃறிணை ஒருமைவினை ஈறு: து று டு ; பன்மைஈறு: அ ஆ வ; பொதுஈறு: னகரம்- என அஃறிணை வினைமுற்று ஈறாவன ஏழாம்.எ-டு : வந்தது, போயிற்று, குண்டுகட்டு; வந்தன, வாரா, வருவ; எவன்அது? (எவன் அவை?) (தொ. சொ. 218, 219, 221 நச்.)