‘அஃறிணை மருங்கினும் அறையப் படுமே’

கேளாதவற்றைக் கேட்குந போலவும், பேசாதனவற்றைப் பேசுவன போலவும்,நடவாதனவற்றை நடப்பன போலவும், இத்தொழில்கள் அல்லன பிற செய்யாதனவற்றைச்செய்வன போலவும் அஃறிணையிடத்தும் சொல்லப்படும். இவையெல் லாம் மரபுவழுவமைதியாம்.எ-டு : ‘நன்னீரை வாழி அனிச்சம்!’ (குறள் 1111)‘இரவெல்லாம் நின்றாயால் ஈர்ங்கதிர்த்திங்காள்!’‘பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்’ (குறள் 709)இவ்வழி அவ்வூர்க்குப் போம்.‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ (குறள் 293) (நன். 409 சங்.)