அஃறிணை ஒப்பினான் ஆகிய பெயர்

வினைச்சொற்களை ஈறு பற்றியும் வாய்பாடு பற்றியும் விளக்கும்ஆசிரியர் தொல்காப்பியனார், பெயர்ச்சொற்களை எடுத்தோதியே விளக்கும்இயல்பினர். அஃறிணைப் பெயர்கள் இவையிவை என்று எடுத்து விளக்குறும்போதுஒப்பினான் ஆகிய பெயர்வகையைக் குறிப்பிடுகிறார்.ஒப்பினான் ஆகிய பெயர் – உவமத்தினான் பெற்ற பெயர்ச் சொல். எ-டு :பொன்னன்னது, பொன்னன்ன (தொ. சொ. 170 நச். உரை) பொன்போல்வது,பொன்னனையது, யானைப் போலி (தொ. சொ. 164 தெய். உரை)