அஃறிணை உம்மைத்தொகை இயல்பு

அஃறிணை ஒருமை உம்மைத்தொகைகளும், பொது ஒருமை உம்மைத்தொகைகளும்தத்தம் பன்மையீற்றனவேயாம் என்னும் நியதிய அல்ல என்றாராயிற்று. அவைவருமாறு:உண்மையின்மைகள் – உண்மையின்மை, நன்மைதீமைகள் – நன்மைதீமை,இராப்பகல்கள் – இராப்பகல், நிலம்நீர்தீக் காற்றாகாயங்கள் -நிலம்நீர்தீக்காற்றாகாயம் என்பனவும்; தந்தை தாயர் – தந்தைதாய்கள் -தந்தைதாய், சாத்தன் சாத்தியர் – சாத்தன்சாத்திகள் – சாத்தன்சாத்தி -என்பனவும் பன்மை யீற்றானும் இயல்பாகிய ஒருமையீற்றானும் வந்தன. (நன்.372 சங்.)