அஃறிணைப்பொருள்மேல் விரவிவரும் இயற்பெயர் பொரு ளும் உறுப்பும்பண்பும் தொழிலும் இடமும் காலமும் பற்றி வரும். அவை ஒருமைக்கும்பன்மைக்கும் பொது; வினை யாலேயே பால் காட்டும்.எ-டு : ஆ, தெங்கு – பொருள்; இலை, பூ – உறுப்பு ;கருமை, வட்டம் – பண்பு; உண்டல், ஓடல் – தொழில்; அகம், புறம் – இடம் ;யாண்டு, திங்கள் – காலம். ஆ வந்தது என்றவழி ஒருமை; ஆ வந்தன என்றவழிப்பன்மை. (தொ. சொ. 166 தெய். உரை)தொல்காப்பியனார் ‘அஃறிணை இயற்பெயர்’ என்று பெயரிட்டு வழங்கியதனைநன்னூலார் பால் பகா அஃறிணைப் பெயர் என்பர். ‘ஒருவிதி தனக்கே பலபெயர்வருமே’ என்ப தற்கு இலக்கணக் கொத்து இதனைக் காட்டுகிறது. (இ. கொ. 6,130.)