அஃறிணை இயற்பெயராவன அஃறிணை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவானபெயர்களாம். அவை ‘கள்’ விகுதி சேர்ந்தவிடத்துப் பன்மைக்கு உரியவாய்ப்பலவின்பாலை விளக்கும். தனித்து நின்றவழி அப்பெயர்கள் ஒருமை சுட்டுவனஎன்றோ, பன்மை சுட்டுவன என்றோ வரையறுத்துக் கூற இயலாது. முடிக்கும்சொல் சிறப்பு வினையாகவோ சிறப்புப் பெயராகவோ அமையும்வழியே அவற்றின்பால் உணரப் படும்.எ-டு : ஆ, குதிரை – ஒருமைக்கும் பன்மைக்கும்பொது.ஆக்கள், குதிரைகள் – பலவின்பாற் பெயர்ஆ வந்தது, ஆ அது; சிறப்பு வினையும் பெயரும்குதிரை வந்தது, குதிரை } அவை முடிக்க வந்தனஅவைஒருமைக்கோ பன்மைக்கோ சிறப்பாக உரிய வினைகளும் பெயர்களும்சிறப்புவினையும் பெயருமாம். (தொ. சொ. 169, 171 சேனா. உரை)[ஆ வரும் என்புழி, வரும் என்பது ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவானவினை; இவ்வினைகொண்டு ஆ ஒருமை யென்றோ பன்மையென்றோ உணர முடியாது. ஆவேறு, ஆ இல்லை – என்பனவும் அது.]ஆவின் கோடு, குதிரையின் குளம்பு – என்னும் முடிக்கும் பெயர்களும்ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலின், ஆ-குதிரை – என்பனவற்றைஒருமையென்றோ பன்மையென்றோ இத் தொடர்களில், வரையறுத்துக் கூறல்முடியாது.(தொ. சொ. 169, 171 சேனா.உரை)