அஃறிணையில் தொழிலிற் பிரிந்த ஆண்ஒழிமிகுசொல்

யானை நடந்தது – என்புழி, யானை என்னும் அஃறிணைப் பெயர் ஆண்பெண்இரண்டற்கும் பொது. ஆயினும் ‘நடந்தது’ என்னும் வினையான், யானை தொழிலிற்பிரிந்த ஆண் ஒழி மிகு சொல். [ இப்பெற்றம் அறம் கறக்கும் (இள.) ] (தொ. சொ. 50 நச். உரை)