அஃறிணையில் ‘இனைத்தெனக் கிளக்கும்எண்ணுக்குறிப்பெயர்

எண்ணுப் பெயரெல்லாம் அஃறிணையாம்.எ-டு : ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்இவை இவ்வளவு எண்ணிக்கையுடையன என்று வரையறுக் கப்பட்டவை. இவையேஇத்துணைய என்று வரையறுக்கப் பட்ட எண்ணுக்குறிப்பெயர்களாய் ஆகுபெயர்ஆகாமலேயே பொருளைத் தாமே உணர்த்தும். (தொ. சொ. 170 நச். உரை)