பெயர்களை ஈறு பற்றிப் பகுத்தல் இயலாமையின், அவற்றை எடுத்தோதியேகுறிப்பிடுதல் தொல்காப்பிய மரபாகும்.அது இது உது, அஃது இஃது உஃது, அவை இவை உவை, அவ் இவ் உவ், யாது யாயாவை, பல்ல பல சில உள்ள இல்ல, வினைப்பெயர், பண்புகொள் பெயர்,இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப்பெயர், ஒப்பினாகிய பெயர் -என்பனவும்பிறிது பிற, மற்றையது மற்றையன, பல்லவை சில்லவை, உள்ளது இல்லது,அன்னது அன்ன – போல்வன பிறவும்,அஃறிணைப் பொருள்கள் பலவற்றின் இயற்பெயர்களும் அஃறிணைப்பெயர்களாம்.இவற்றுள் அது என்பது முதல் இல்ல என்பது ஈறாக உள்ளனவும், பிறிதுஎன்பது முதல் அன்ன ஈறாக உள்ளனவும் ஒருமை பன்மை காட்டுவன. இயற்பெயர்கள்ஒருமைபன்மை இரண்டற்கும் பொது. இவை கொண்டுமுடியும் வினை களைக் கொண்டேஇவற்றின் பால் உணரப்படும். (தொ. சொ. 169 – 172.நச்.)சுட்டு முதலாகிய உகர ஐகார ஈற்றுப் பெயரும், எண்ணின் பெயரும்,உவமைப் பெயரும், சாதிப் பெயரும், வினாப் பெயரும், உறுப்பின் பெயரும்அஃறிணைப்பெயராம். அவை வருமாறு:அது இது உது, அவை இவை உவை – சுட்டுப்பெயர்.ஒன்று, இரண்டு, மூன்று – எண்ணின் பெயர்.பொன்னன்னது, பொன்னன்னவை – உவமைப்பெயர்.நாய், நரி, புல்வாய் – சாதிப் பெயர்.எது எவை, யாது யாவை – வினாப் பெயர்.பெருங்கோட்டது, பெருங்கோட்டவை – உறுப்பின் பெயர்.இவை அஃறிணைப் படர்க்கைப் பெயராமாறு அடைவே கண்டுகொள்க. (நேமி.பெயர். 4 உரை)