அஃறிணையை ஒன்று பல என்று பிரித்துக் கூறல்.எ-டு : ‘ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம்?’ (தொ. சொ. 24இள. உரை)ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணை இயற் பெயராகியபொதுச்சொல் ‘அஃறிணைப் பிரிப்பு’ எனப் பட்டது.எ-டு : ஒன்றோ பலவோ என்று ஐயம் ஏற்பட்டவழி, ஒன்று கொலோ பலகொலோசெய்புக்க பெற்றம்’ என வினவுதல். பெற்றம் : அஃறிணை இயற்பெயர்.(தொ. சொ. 24 நச். உரை)ஒருமையும் பன்மையும் வினையாற் பிரிக்கப்படுதலின், ஆகுபெயரான்அஃறிணை இயற்பெயர் ‘அஃறிணைப் பிரிப்பு’ எனப்பட்டது. (தொ. சொ. 24 கல்.உரை)அஃறிணைப் பிரிப்பு என்றதனான், பொதுமை (பன்மை) யின் பிரிவதுஒருமையாதலின் ஒருமைச்சொல்லால் சொல்லுதல்.எ-டு : குற்றியோ மகனோ தோன்றுகின்ற அது?(தொ. சொ. 24 தெய். உரை)