அஃறிணைப் பால் பகுப்பு

அஃறிணைப் பெயர்க்கண் ஆண்பால் பெண்பால் பகுப்பு உண்டு. ஆண்பாலைத்தெரிவிக்கும் சேவல் ஏற்றை முதலிய சொற்களும், பெண்பாலைத் தெரிவிக்கும்பேடை பெடை முதலிய சொற்களும் அத்திணையில் உள. ஆயின், அஃறிணைவினைமுற்றின்கண் ஆண்பால்ஈறு பெண்பால்ஈறு என்பன தனித்தனியே இல்லை.ஒன்றன்பால் என்னும் ஒருபகுப்பினுள் ளேயே எல்லாம் அடங்கி விடும்.ஆதலின், அஃறிணை ஆணொ ருமை பெண்ணொருமை என்ற இரண் டனையும் அடக்கும்ஒன்றன்பால், ஆண்பன்மை பெண்பன்மை என்ற இரண்டனை யும் அடக்கும்பலவின்பால், என்னும் இரண்டு பாற்பகுப்புக் களே அஃறிணை வினையை யொட்டிஅமைந்துள.“அஃறிணைக்கண் ஆண்பாலும் பெண்பாலும் உயிருள்ளன வற்றுள்சிலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின், எல்லாவற்றிற்கும்பொருந்த, அவ்வாண் பெண் பகுப்பினை ஒழித்து, ஒன்று எனப்பட்டது என்க.”(நன். 263. சங்.)