அஃறிணைப்பெயர் விளி ஏற்றல்

அஃறிணைப்பெயர்கள் உயிரீற்றனவாயினும் புள்ளியீற்றன வாயினும்விளியேற்குமிடத்து ஏகாரம் பெற்று விளியேற்றலே பெரும்பான்மை.எ-டு : கிளி – கிளியே ; மரம் – மரமே – ஏகாரம் பெற்றுவிளியேற்றன. முயல் – முயால்; நாரை- நாராய் – சிறுபான்மை பிறவாற்றான்விளியேற்றன‘நெஞ்சம்! வருந்தினை’‘வெண்குருகு! கேண்மதி’ சிறுபான்மை அண்மைக்கண் இயல்பாய்விளியேற்றன. (தொ. சொ. 153 நச். உரை)