அஃறிணைப் பொருள்களில், பழக்கப்பட்ட விலங்குகளும் பறவைகளும் தவிரஏனைய விளித்தலை உணராதன. ஆயின் புனைந்துரை கலந்த செய்யுட்கண்,‘முன்னிலை யாக்கலும் சொல்வழிப் படுத்தலும்’ (தொ. பொ. 101)வேண்டுமிடத்தேயே அஃறிணைப் பொருள்கள் விளிநிலை பெறும்.(‘தும்பி!……. கண்டது மொழிமோ’ குறுந். 2) (தொ. சொ. 153 நச்.உரை)