அஃறிணை இயற்பெயர்கள் ஒருமைக்கும் பன்மைக்கும் பொது ஆவன. அவை கள்விகுதியொடு கூடியவழியே பன்மைப்பால் உணர்த்துவன.எ-டு : ஆக்கள், குதிரைகள்.‘கற்பனகள்’ (சீவக. 1795) என்ற சொல்லில் ‘கற்பன’ என்பதே பலவின்பாலைஉணர்த்துதலின், ஆண்டுக் கள்ஈறு இசை நிறைத்து நின்றதாம். (இதனைப்பிற்காலத்தார் விகுதிமேல் விகுதி என்ப.)வேந்தர்கள் (யா. க. 67 உரை), பிறந்தவர்கள் (சீவக. 2622), எங்கள்(சீவக. 1793) எனக் ‘கள்’ உயர்திணைக்கண்ணும் இசை நிறைத்து நின்றவாறு.(தொ. சொ. 171 நச். உரை.)