இனமுடைய பலபொருள்களைச் சாதி என்பர். அத்தகைய பல பொருள்களையும்சுட்டும் வகையில் ஒருமையில் வரும் சொல் சாதி ஒருமை (சாதி ஏகவசனம்)எனப்படும். இஃது ஈறு தோன் றியதும், தோன்றாததும் என இருவகைத்து.‘நூல்எனப் படுவ து நுவலுங் காலை’ (தொ. பொ. 478), ‘உலகத்தார் உண்டு என்ப து ’ (குறள் 850) என்பன போன்றவை ஈறு தோன்றிய சாதி ஒருமை. ‘ குணம் என்னும் குன்றேறி நின்றார்’ (குறள் 29) ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் ’ (குறள் 43) என்பன போன்றவை ஈறு தோன்றாத சாதி ஒருமை. இவைவருமொழி நோக்காமலேயே தமக்குரிய ஒருமைப் பாலை விட்டுப் பன்மைப்பாலையேவிளக்குதலின், அஃறிணைக் கண் சாதி யொருமை ஆயின.‘எண்என்ப ஏனை எழுத்துஎன்ப’ (குறள் 392) என்றாற் போல்வன அஃறிணைப்பெயரில் சாதிப்பன்மை. (இ. கொ. 130, பி. வி. 50)