அஃறிணைச் சொல்

அஃறிணை உயிருடையதும் உயிரில்லதும் என இரண்டாம். அவற்றுள்உயிருடையது ஆணும் பெண்ணும், ஆண்சிலவும் பெண்சிலவும், ஆண்பன்மையும்பெண்பன்மையும், அவ் விரண்டும் தொக்க சிலவும், அவ்விரண்டும் தொக்கபலவும், உயிரில்லது ஒருமையும் சிலவும் பலவும் – என இவ்வாற்றான் பலபகுதிப்படுமேனும், சொல்வகை நோக்க இரண்டல்லது இன்மையின் இரண்டே ஆயினஎன்பது. (தொ. சொ. 4 கல். உரை)