அஃறிணைக்கண் தன்மைவினை இன்றாதல்

கிளியும் பூவையும் தன்வினையான் உரைக்கும் ஆதலின், அஃறிணைக்கண்தன்மைவினை இன்று என்பது என்னை யெனின், கிளியும் பூவையும் ஆகியசாதியெல்லாம் உரையா டும் என்னும் வழக்கு இன்மையானும், அவ்வகைஉரைக்குங் கால் ஒருவன் உரைத்ததைக்கொண்டு உரைக்கும் ஆகலானும், ஒருவன்பாடின பாட்டை நரப்புக்கருவியின் கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக்கருவியும் உரையாடிற்றாதல் வேண்டும் ஆகலானும், அவ்வாறு வருவனமக்கள்வினை ஆகலான் தன்மைவினை இன்று என்பதே தொல்காப்பிய முடிபு. (தொ.சொ. 210 தெய். உரை)