அஃறிணைக்கண் சேவல் என்றல் தொடக்கத்து ஆண்பாலும் பெடை என்றல்தொடக்கத்துப் பெண்பாலும் உளவேனும், அவ்வாண்பாலும் பெண்பாலும்உயிருள்ளனவற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின்அப்பகுப்பு ஒழித்து எல்லாவற்றிற்கும் பொருந்த ‘ஒன்று’ எனப்பட்டது.(நன். 263. சங்.)