‘அன் ஆன் இறுமொழி ஆண்பால் படர்க்கை’ என்பது சூத்திரம். ஆண் பெண்என்ற விகற்பம் அஃறிணைப் பெயர்க்கண் அன்றி அவ்வினைக்கண் இன்மையின்‘ஆண்’ என்றமையான் உயர்திணை என்பதும் ‘பால்’ என்றமையான் முற்று என்பதும், மேலைச் சூத்திரத்து ‘முற்று வினைப்பதம் ஒன்றே’ என விதந்தாற்போலஇதனுள் விதவாமையின், இருவகை முற்றிற்கும் பொது என்பதும் பெற்றாம்.(நன். 325 சங்.)