‘அஃகாக் காலையான’

(ஆய்தம்) சுருங்கி நில்லாது நீண்ட காலத்து என்பது பொருள். (தொ. எ.
40 இள.)
(ஆய்தம்) சுருங்காத இடத்து உள்ள சொற்கள் என்பது.
(தொ. எ. 40 நச்.)
(ஆய்தம்) தான் சுருங்கி நில்லாத இடத்து (தான் அரை மாத்திரையாய்
ஒலிக்காத இடத்து) (எ.கு. பக். 49)
ஆய்தம் அஃகாஇடத்து; அஃதாவது ஆய்தம் நீங்காவிடத்து (உருவினையும்
இசையினையும் உணர்த்தும் குறிப்புமொழிகள் ஆய்த எழுத்தாலேயே இயலும்
என்றவாறு). (எ. ஆ. பக். 40).