தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வகரஈறு உருபேற்கையில் பெறும்சாரியைகள்

வகரஈற்றுச் சொற்கள் அவ் இவ் உவ் தெவ் – என்பன நான்கே. முதல்மூன்றும் வற்றுச்சாரியை பெற்று உருபொடு புணரும்.வருமாறு : அவற்றை, இவற்றை, உவற்றை; சிறுபான்மை வற்றோடுஇன்சாரியையும் பெறும்; அவற்றினை, இவற்றினை, உவற்றினை – என்றாற் போலவரும்.தெவ் என்ற உரிச்சொல் படுத்தல்ஓசையான் பெயராயவழி, தெவ்வினை,தெவ்வினொடு. என்றாற்போல இன்சாரியை ஒன்றுமே பெறும். (தொ. எ. 183, 184நச்.)

வகரஈறு பற்றிய கருத்துக்கள்

வகரஈறுடைய சொற்கள் அவ் இவ் உவ் தெவ் – என்ற நான்கே. வீரசோழியம் வகரஈற்றைக் குறிப்பிடவே இல்லை.லீலாதிலகம் என்னும் மலையாள மணிப்ரவாள இலக்கண நூலுள் பின்வருமாறுஎழுதப்பட்டுள்ளது: “உகரத்தின் முன் உயிரெழுத்து வந்தால் நியமமாகவகாரமே வரும். மரு + உண்டு = மருவுண்டு; வடுவுண்டு, காண்மூவது.‘போவுதோ வெ ன்ற வாறே’ என்று ஓகாரத்தின் முன்னரும் வகரம் வரும். ஆயின்,மருவ் வடுவ் – என்று வகரவீறாயுள்ள சொற்களே ‘உண்டு’ என்பதனொடு சேர்ந்துமருவுண்டு வடுவுண்டு – என்றாயின என்னலாகாதோ எனில், அவ்வாறன்று. அவ்இவ் தெவ் என்று வகரஈற்றுச் சொற்கள் மூன்றே உள. ’உவ்’ என்றது பாண்டியபாஷையில் (செந்தமிழில்) மட்டுமே உள்ளது: பொதுவான தன்று.”ஆதலின் பழைய மலையாள மொழியிலும் வகர ஈற்றுச் சொற்கள் உள்ளமைஅறியலாம். அவ் இவ் தெவ் – என்னும் சொற்கள் தமிழிலக்கியங்களில் இன்றும்வழங்குகின்றன. வீரசோழியம் வகரம் ஈற்றில் வாராது என்று கூறுதல்பொருத்தமன்று. (எ.ஆ.பக். 72, 73)

வகரஈற்றுச் சுட்டுப்பெயர்வேற்றுமைப் புணர்ச்சி

அவ் இவ் உவ் – என்ற அஃறிணைப் பன்மைச் சுட்டுப்பெயர்கள், வருமொழியாகஉருபுகள் புணருமிடத்து அற்றுச்சாரியை பெறும். (உடன் ‘இன்’சாரியைபெறுதலும் கொள்க. தனிக் குறில்முன் ஒற்று உயிர்முதல்சாரியை வருவழிஇரட்டாமையும் காண்க.)வருமாறு : அவ், இவ், உவ் + ஐ = அவற்றை, இவற்றை, உவற்றை;அவற்றினை, இவற்றினை, உவற்றினை.(வகர ஈற்று ஏனைய பெயராகிய தெவ் என்பது உருபு புணர்ச்சிக்கண்இன்சாரியை பெற்று, தெவ் + ஐ = தெவ்வினை – என்றாற் போல முடிதலும்கொள்க.) (நன். 250)

வகரஈற்றுப் புணர்ச்சி

வகரஈறு அல்வழிக்கண் வன்கணம் வரின் வகரம் கெட ஆய்தம் வர, அவ் +கடிய, சிறிய, தீய, பெரிய = அ ஃ கடிய, அ ஃ சிறிய, அ ஃ தீய, அ ஃ பெரிய – என்றாற் போலப் புணரும்; மென்கணம் வரின், அவ் + ஞாண் =அ ஞ் ஞாண் – என்றாற் போல வந்த மெல்லெழுத்தாகும்; இடைக்கணம் வரின்அவ்யாழ் – என இயல்பாயும், உயிர்க்கணம் வரின் அவ்வாடை அவ்வில் – எனஒற்றிரட்டியும் புணரும்.வேற்றுமைக்கண் அவ் இவ் உவ் – என்பன உருபு புணருமிடத் தும் பொருட்புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியையும் அதனோடு இன்னும் பெற்றுமுடியும்.வருமாறு : அவற்றை, அவற்றால்; அவற்றுக்கோடு, அவற்றுத் தோல் -‘வற்று’ப் பெற்றது. அவற்றினை; அவற்றின் கோடு – வற்றும் இன்னும்பெற்றது.தெவ் என்பது தொழிற்பெயர் போல, வன்கணம் வரின் உகரமும்வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம்வரின் இயல்பும், உயிர்வரின் இரட்டுதலும் பெற்றுப் புணரும்; மகரம்வரின் வகரம் மகரமாதலுமுண்டு.எ-டு : தெவ்வுக் கடிது; தெவ்வு ஞான்றது, தெவ்வு மாண்டது, தெவ்வுவலிது.தெவ் யாது, தெவ் வரிது; தெம் மாண்டது – என முறையே காண்க. (தொ.எ. 378- 382 நச்.)வகரஈற்றுச் சொற்கள் அவ், இவ், உவ், தெவ் – என்பன நான்கே. முதலனமூன்றும் அஃறிணைப்பன்மைச் சுட்டுப்பெயர். அவற்று ஈற்று வகரம்அல்வழிக்கண் வன்கணம் வருமிடத்தே ஆய்தமாகவும், மென்கணம் வருமிடத்தேவந்த மெல்லெழுத் தாகவும், இடைக்கணம் வருமிடத்தே இயல்பாகவும் புணரும்.தெவ் என்பது தொழிற்பெயர் போல இருவழியும் உகரச் சாரியை பெற்று வன்கணம்வரின் அவ் வல்லொற்று மிக்கும், ஏனைக் கணம் வரின் இயல்பாகவும் புணரும்.வருமொழி முதற்கண் மகரம் வரின் இருவழியும் வகரம் உகரச்சாரியை பெறாதுமகரமாகத் திரிதலுமுண்டு.எ-டு : அவ் + கடிய = அஃகடிய; அவ் + ஞான்றன = அஞ் ஞான்றன; அவ் +யாவை = அவ் யாவைஏனைய இரண்டற்கும் இவ்வாறே வருமொழிபுணர்த்து முடிக்க. (நன்.235)தெவ் + கடிது, நன்று, வலிது = தெவ்வுக் கடிது, தெவ்வு நன்று,தெவ்வு வலிது – அல்வழி; தெவ் + கடுமை, நன்மை வன்மை = தெவ்வுக்கடுமை,தெவ்வுநன்மை, தெவ்வுவன்மை – வேற்றுமை; தெவ் + மாண்டது = தெவ்வுமாண்டது, தெம் மாண்டது – அல்வழி; தெவ்+ மாட்சி = தெவ்வுமாட்சி, தெம்மாட்சி – வேற்றுமை; தெவ் + மன்னர் = தெம்மன்னர் – அல் வழி; தெவ் +முனை = தெம்முனை – வேற்றுமை . (நன். 236)

வகரம் உ ஊ ஒ ஓ வொடு வாராமை

உ ஊ ஒ ஓ – என்பன இரண்டு உதடும் குவியப் பிறப்பன ஆதலின்,மேற்பல்லும் கீழுதடும் இயையப் பிறக்கும் வகரத்தொடு சேர்த்து அவற்றைஒலித்தல் அரிதாம், வகரம் ஒளகாரத்தோடு இயையும்வழி ‘வவ்’ என்று வகரமாகஒலித்த லின், அஃது ஒரளவு ஒலித்தல் எளிதாதலின், வெள- மொழி முதற்கண்வருதல் கொள்ளப்பட்டது. (எ.ஆ. பக். 67)

வகுப்பு

சந்த ஓசை; வண்ணமாகப் பாடுவது.

வசந்தமாலை

தென்றலை வருணித்து அந்தாதியாகப் பாடும் பிரபந்தம்.(இ. வி. பாட். 76)

வசைக்கவி

வசையைப் பாடும் கவி. கவி-கவிபாடுவோனையும் குறிக்கும். ‘வசைகவி’ எனஇயல்பாகக் கூறினும் ஆம்.

வசைக்கூத்து

செம்பொருள் அங்கதம் கலிப்பாட்டினால் வருவன இந் நூலுள் காணப்படும்.இஃது ஒருநாடக நூல் போலும். (தொ. பொ. 437 பேரா.)

வசைப்பாட்டு

‘வசைக்கவி’ காண்க.

வச்சணந்தி மாலை

தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர் பெயரால் குணவீர பண்டிதர் என்றசமணர் வெண்பாயாப்பில் இயற்றிய பாட்டியல் நூல்; வெண்பாப் பாட்டியல்எனவும் பெயர் பெறும். நூல் இயற்றப்பட்ட காலம் 12ஆம் நூற்றாண்டு,முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என மூன் றாகப் பாகுபட்டுள்ளஇந்நூலுள் 103 வெண்பாக்கள் உள. இப்பாட்டியற்கண் பத்துப்பொருத்தங்களும், பிரபந்த வகைகளும், பா வருணம் முதலிய பலவும்சொல்லப்பட்டுள. இதன் பண்டையுரையாசிரியர் பெயர் தெரியவில்லை.

வச்சத் தொள்ளாயிரம்

உரிப்பொருட் செய்தியாகிய அகப்பொருளைப் பாடலுட் பயின்றகருப்பொருளால் தொகுத்து விளங்கச் சொல்லுவது தொகைமொழியாகிய சுருக்கம்ஆம். வச்சத் தொள்ளாயிரம் முழுதுமே இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால்வந்த தாக உரையாசிரியர் பெருந்தேவனார் குறிப்பர். (வீ. சோ. 153உரை)

வடக்கு என்ற திசைப் பெயர்

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு.தொல். வடக்கு என்ற சொல்லின் இறுதியெழுத்தாகிய குகரம் கெடும் என்றுகூறினாரன்றி, இடைநின்ற ககர ஒற்றுக் கெடும் என்று கூறினாரல்லர். எனவே,அவர் காலத்தில் பாகு (பாக்கு), பிறகு (பிறக்கு), காபு (காப்பு)-முதலிய சொற்கள் போல வடகு (வடக்கு) என்ற சொல்லே பயின்று வந்திருத்தல்வேண்டும். அது வடக்கு எனப் பிற்காலத்தில் மருவிற்றுப்போலும். (எ. ஆ.பக். 170)

வடநடைப் பகுபதம்

பகுதியாக நிற்கும் பகாப்பத முதற்கண் உயிராயினும் உயிர்மெய்யாயினும் வரின், நிலைமொழி முதற்கண் நிற்கும் இ ஈ – இரண்டும் ஐஎனத் திரிந்து பகுபதங்களாம். ஏகாரம் ஐயாகத் திரியும்; ஊவும் ஓவும்ஒளவாகத் திரியும்.எ-டு: இ ந்திரன் இருக்கும் திசை ஐ ந்திரி. கி ரியில் உள்ளன கை ரிகம். சி லையால் ஆகிய மலை சை லம். மி திலை யுள் பிறந்தாள் மை திலி. நி யாயநூல் உணர்ந்தோன் நை யாயிகன். வி யாகரணம் உணர்ந்தோன் வையா கரணன்.இவையெல்லாம் இகரம் ஐயாகத் திரிந்தன.கி ரியில் பிறந்தாள் கௌ ரி என ஒரோவிடத்து இகரம் ஒளகாரமாகத் திரிந்தது. வே தவழி நின்று ஒழுகுவார் வை திகர். ஏ காரம் ஐயாகத் திரிந்தது.சூ ரன் என்னும் சூரியன் மகனாம் சனி சௌ ரி – ஊ காரம் ஒள வாகத் திரிந்தது.சோ மன்மகனாம் புதன் சௌ மன் – ஓ காரம் ஒள வாகத் திரிந்தது. (தொ.வி. 86 உரை)

வடநூலுள் ஓரெழுத்துப் பதினெட்டாதல்

அ என்பதனை ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலிக்குங்கால் அது குற்றெழுத்து;இரு மாத்திரை அளவிற்றாக ஒலிக்குங்கால் அது நெட்டெழுத்து; மூன்றுமாத்திரை அளவிற்றாக ஒலிக் குங்கால் அஃது அளபெடை எழுத்து. அம்மூன்றும்எடுத்தல் – படுத்தல் – நலிதல் – என்ற ஓசைவேறுபாட்டால் ஒன்று மூன் றாய்ஒன்பது வகைப்படும். அவ்வொன்பது வகையும் மூக்கின் வளியொடு சார்த்தியும்சார்த்தாதும் ஒலிக்குமாற்றால் ஒவ் வொன்றும் இவ்விருவகைத்தாய்ப்பதினெட்டாம்; அவ்வாறு வேறுபடினும் உயிரெழுத்தாம் தன்மையில்திரியாவாய்ப் பதினெட்டும் ஓரினமாம். (சூ.வி.பக். 24)

வடமொழி விருத்தம்

நான்கடி அளவொத்து நடப்பது விருத்தமாம்; எழுத்தும் சீரும்மிகுந்தாலும் குறைந்தாலும் விருத்தப்போலியாம் என்ப வடநூலார். (தென்.இயற். 69)

வடமொழிச்சந்தம்

வடமொழியமைப்பில், சந்தமாவது, அடிதோறும் ஓரெ ழுத்து முதல்இருபத்தாறு வரை அமைந்து அடிநான்காக இசைக்கும். எழுத்து எண்ணுழி,ஒற்றும் ஆய்தமும் எண்ணப் பெறா. உத்தம், அதியுத்தம் முதலாக உத்கிருதிஈறாக, எழுத் தளவையினாலே சந்தம் பெயர் பெறும். (தென். இயற். 68)

வடமொழித் தண்டகம்

துண்டம் எனப்படும் சீர்களது தொகுதி நான்கு, எட்டு, பதினாறு,முப்பத்திரண்டு என இரட்டி வரும் முறையால் நான்கடியான் அமைவதுதண்டகமாம். (அத்துண்டங்கள் மிகினும் குறையினும் தண்டகப் போலியாம்.)துண்டம் அடிதோறும் சம அளவிற்றாதல் வேண்டும்; பிழைப்பின் அது போலியாம்என்க. (தென். இயற். 70)

வடமொழியாக்கச் சிறப்பு விதி

வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் தமிழெழுத்துக் களாகச்சிலவிதிகளையுட் கொண்டு திரித்துக் கொள்ளப்படும். அவை வருமாறு:வடமொழியாகிய ஆரியத்தின் ஏழாம் உயிர் இகரமாகவும் இருவாகவும்திரியும்எ-டு : ரி ஷபம் – இ டபம்; ரி ஷி – இரு டிக ச ட த ப – என்ற ஐந்து வருக்கங்களின் இடையிலுள்ளமூவெழுத்துக்களும் முதலிலுள்ள க ச ட த ப – க்களாகவே கொள்ளப்படும்.ஜ தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும் இடைக்கண் யகரமாகவும்திரியும்.எ-டு : ஜ யம் – ச யம்; பங்க ஜ ம் – பங்க ய ம்ஶ தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும், இடைக்கண் யகரமாகவும்திரியும்.எ-டு : ஶி வன் – சி வன்; தே ஶ ம் – தே ய ம்.ஷ தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும், இடைக்கண் டகரமாகவும்திரியும்.எ-டு : ஷ ண்முகம் – ச ண்முகம்; சஷ் டி – சட் டிஸ தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும், இடைக்கண் சகர தகரங்களாகவும்திரியும்.எ-டு : ஸாது – சா து; வா ஸ ம் – வா ச ம்; மா ஸ ம் – மா த ம்ஹ தமிழில் மொழிமுதற்கண் ஏறிநின்ற உயிராகவும் இடைக்கண் ககரமாகவும்திரியும்.எ-டு : ஹ ரி, ஹா ரம் – அரி, ஆரம்; மோ ஹ ம், மோ க ம்க்ஷ தமிழில் மொழிமுதற்கண் ககரமாகவும், இடைக்கண் இரண்டு ககரமாகவும்திரியும்.எ-டு : க்ஷ யம் – க யம்; ப க்ஷ ம் – ப க் கம்ஆகாரஈறும் ஈகாரஈறும் தமிழில் முறையே ஐகாரமாகவும் இகரமாகவும்திரியும்எ-டு : மா லா – மா லை ; குமா ரீ – குமா ரி (நன். 147)வடமொழியில் ரகர முதற்சொற்கள் தமிழில் அகரம் முதலியமுக்குறில்களையும் முன்னர்க்கொண்டும், லகர முதற் சொற்கள் இகர உகரங்களைமுன்னர்க் கொண்டும், யகர முதற்சொற்கள் இகரத்தை முன்னர்க் கொண்டும்வரும்.எ-டு : ரங்கம் – அ ரங்கம், ராமன் – இ ராமன், ரோமம் – உ ரோமம்; லாபம் – இ லாபம், லோபம் – உ லோபம்; யக்ஷன் – இயக்கன் (யுத்தம் – உயுத்தம் என உகரம்கொள்வதுண்டு) (நன். 148)ஆரியமொழியுள் இரண்டெழுத்து இணைந்து ஓரெழுத்தைப் போல நடக்குங்கால்,பின்நிற்கும் யகர ரகர லகரங்கள் மீது இகரமும், மகர வகரங்கள் மீதுஉகரமும், நகர மீது அகரமும் வந்து வடசொல்லாய்த் தமிழாகும்.ரகரத்திற்குப் பின் உகரமும் வரும்.எ-டு: வாக்யம் – வாக்கியம், வக்ரம் – வக்கிரம், சுக்லம்-சுக்கிலம்; பத்மம் – பதுமம், பக்வம் – பக்குவம்; ரத்நம் – அரதனம்;அர்க்கன் – அருக்கன், அர்த்தம்- அருத்தம், தர்மம் – தருமம் (நன்.149)

வடமொழியில் சந்தம் பற்றிய கணம்

வடமொழி விருத்தங்கள் இலகு, குரு என்பன பற்றி அட்சர கணம் எனவும்,மாத்திரையைக் கணக்கிட்டு மாத்ராகணம் எனவும் அமைக்கப்படுவன.அவ்விருத்தங்களில் பலவகை யுண்டு. தமிழில் சீர் அமைப்பது போல அங்குக்கணங்கள் என்று வகுப்பட்டுள்ளன. விருத்தங்களுக்கு எழுத்து, மாத்திரைஇவற்றைப் பற்றி யமைந்த பெயரேயன்றித் தமிழில் பாவினத் தொடர்பாக அமைந்தஆசிரிய விருத்தம், கலி நிலைத்துறை, கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம்என்பன போன்ற பெயர்கள் வடமொழியில் இல்லை.விருத்தப்பாவியல் ஆசிரியர் வடமொழி மாத்திரையையும் அட்சரங்களையும்ஒருபுடை கணக்கிட்டுத் தமிழிலுள்ள ஆசிரிய கலி வஞ்சி விருத்தங்களில்ஒப்பனவற்றிற்கு அவ்வட மொழிப் பெயர்களை அமைத்துள்ளார். வடமொழி விருத்தஇலக்கணம் முழுமையும் அப்பெயரிடப்பட்ட தமிழிலுள்ள விருத்தங்களில்இருக்கும் என்று எதிர்பாராது ஒருபுடை ஒப்புமையே கோடல் வேண்டும்.வடமொழியிலுள்ள மாத்ரா, கணம் என்ற பாகுபாட்டைத் தமிழில் சீர்களிடைக்காண விரும்புகிறார், விருத்தப்பா ஆசிரியர். அட்சரம்பற்றி வடமொழியில்எட்டுக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.முதற்கண் குரு, இடைக்கண் குரு, கடைக்கண் குரு; முதற்கண் இலகு,இடைக்கண் இலகு, கடைக்கண் இலகு; முற்றும் குரு, முற்றும் இலகு; எனஎண்கணங்கள் அமையும்.1. முதற்கண் குரு – ‘ ’ கணம் – மா தவ, மன் வை.2. இடைக்கண் குரு – ‘ஜ’ கணம் – ப தா தி, சு கந் தி.3. கடைக்கண் குரு – ‘ஸ’ கணம் – இது வோ , வரு வோன் .4. முதற்கண் இலகு – ‘ய’ கணம் – க ணேசா, உ வந்தே, உ வந்தும்.5. இடைக்கண் இலகு ‘ர’ கணம் – ஈ ச னே, தூ ய வன்.6. கடைக்கண்இலகு ‘த’ கணம் – வாரா த வந்தீ க வந்தைக் க .7. முழுதும் குரு. ‘ம’ கணம் – மாயோனே , வந்தானே, வந்தன்றே, யாதானும்.8. முழுதும் இலகு – ‘ந’ கணம் – அதல.இலகு – ஒரு மாத்திரைக் குறில் – அ; இதன் வடிவு ‘ I ’ என்பது.குரு – இரண்டு மாத்திரை நெடில், நெடிலொற்று, இரண்டு மாத்திரைபெறும் குற்றொற்று – ஆ, ஆல், கல்.நெடிலுக்கும், நெட்டொற்றுக்கும் இருமாத்திரையே. குருவின் வடிவு‘ ’ என்பது.

வடமொழியில் சீர்

வடமொழியில் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சீர்களைக் கணம்என்பர். எழுத்து இலகு என்றும், குரு என்றும் இருவகைப்படும். மூன்றுஎழுத்துக்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். இலகுவும் குருவுமானஎழுத்துக்களை மாறிமாறி அமைக்குங்கால், எட்டுக் கணங்கள் அமையும். அவைஒவ்வொன்றையும் குறிக்கத் தனித்தனிப் பெயர் உண்டு.‘வடமொழியில் சந்தம் பற்றிய கணம்’ பிற்பகுதி காண்க.இலகுவை ‘மால்’ (-திருமால்) என்றும், குருவை ‘ஈசன்’ என்றும்பெயரிட்டு வழங்குப. இவ்வெட்டுக் கணங்கட்கும் பின் வருமாறு வேறுபெயரும் கூறுப.1. முதற்கண் குரு, பின் இரண்டும் இலகு – மதி (‘ப’ கணம்)2. முதற்கண் இலகு, பின் இரண்டும் குரு – நீர் (‘ய’ கணம்)3. முதற்கண் இலகு, இடையே குரு, ஈற்றில் இலகு – இரவி (‘ஜ’கணம்)4. முதற்கண் குரு, இடையே இலகு, ஈற்றில் குரு – கனல் (‘ர’கணம்)5. முதற்கண் இலகு, இடையே இலகு, ஈற்றில் குரு – காற்று (‘ஸ’கணம்)6. முதற்கண் குரு, இடையே குரு, ஈற்றில் இலகு – ஆகாயம் (‘த’கணம்)7. மூன்றும் குரு – நிலம் (‘ம’ கணம்)8. மூன்றும் இலகு – இயமானன் (‘ந’ கணம்)

வடிவு ஒளித்தல்

வரி வடிவில் உயிர்மெய் எழுத்துக்கள் அவ்வுயிரின் வடிவினைத்தம்முள்ளே மறைத்தல், (’ஒளித்து’ என்பது இவர் பாடம். (நன். 89இராமா.)

வடுகச் சந்தம்

சந்தம் என்ற அமைப்புடைய வடமொழி விருத்த வகைகள் தெலுங்கு மொழியில்வாஞ்சியார் என்பவர் இயற்றிய வடுகச் சந்தம் என்ற நூலுள் விளக்கமாகக்கூறப்பட்டுள. (யா. வி. பக். 523)

வட்டச்சக்கரம்

சித்திரகவி வகைகளுள் ஒன்று; நான்கா(i)ரச் சக்கரம், ஆற(i)ரச்சக்கரம், எட்டா(i)ரச் சக்கரம் எனப் பலவகைப் படும். ‘சக்கரம்’ எனஅடைமொழியின்றிக் கூறுவதே பெரும்பான்மை. (யா. வி. பக். 527)

வணிகர் இயல்

வைசியன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறுமாறு. (இ. வி. பாட்.166)

வணிகர் வருணம்

லவறன என்னும் நான்கு மெய்யும் வணிகர்க்குரிய எழுத் துக்கள்.(வருணம் – எழுத்து). (இ. வி. பாட். 16)

வண்டு, பெண்டு என்ற சொற்கள்புணருமாறு

வண்டு பெண்டு – என்ற குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் இன் சாரியை பெறும்.இரண்டன் தொகைக்கண் சாரியையின்றி இயல்பாகப் புணரும்; அல்வழிப்புணர்ச்சியிலும் இயல்பாகப் புணரும்.எ-டு : வண்டினை, வண்டின் கால்; பெண்டினை, பெண்டின் கால்; வண்டுகொணர்ந்தான், பெண்டு கொணர்ந்தான்; வண்டு கடித்தது,பெண்டுசிறந்தாள்.பெண்டு என்பது வேற்றுமையுருபு புணர்ச்சிக்கண் அன்சாரி யையும்பெறும்.எ-டு : பெண்டனை, பெண்டன்கால் (தொ. எ. 420,421)

வண்ண அளவடி

நாற்சீரடி ‘தானத்-தானன – தானத் – தானன என்ற சந்தம்பட நிகழ்வது’எ-டு : ‘தேனைப் போல்கவி மாலைச் சீரியர்வானைச் சீயென வாழ்விட் டாள்பவள்மானைச் சீறுகண் மாதர்க் கோரிறையானைக் காவுடை யானிற் பாதியே.’ (செய்யு. செய்.)

வண்ண இயல்பு

வண்ணமாவது சந்தம். தத்த, தத்தா; தாத்த, தாத்தா; தந்த, தந்தா;தாந்த, தாந்தா; தன, தனா; தான, தானா; தன்ன, தன்னா, தய்ய, தய்யா – எனப்பலவகைப்பட்ட சந்தங்களது இயல்பு. இதனைக் கூறும் நூல் வண்ணத்தியல்பு.அது காண்க.

வண்ணக் கழிநெடிலடி

இஃது அறுசீர், எழுசீர் முதலாகப் பலவாம். 1) ‘தனதன – தனதன – தய்யன -தய்யன – தனதன – தனதனனா’ என அறுசீர்க் கழிநெடிலடி வரும்; 2) ‘தானதன -தானதந்த – தானதன – தானதந்த – தானதன – தானதந்த – தனதானா’ எனஎழுசீர்க்கழி நெடிலடி வரும்.எ-டு : ‘முதலிடை கடையன இல்லவர் உள்ளவர் முழுவதும்நிறைபவராம்இதமுறு மிசைவளர் தய்யலை மெய்யினில் இயலுடன்அணைபவராம்நுதலினில் ஒருசுதன் இவ்வுல குய்வகை நொடியினில்அருள்பவராம்விதபிர மபுரியின் நல்லவர் நள்ளிட விழைவுடன்உறைபவரே’‘பாவையரை யேவிரும்பி நாளுமவ ரோடுறைந்து பாழுமன மேமெலிந்து -நலியாதேபூவலய மேலனந்த லோபிகளை யேபுகழ்ந்து போதவறி வேயிகழ்ந்து -மெலியாதேநாவலர்க ளோடுகந்து பூதிமணி யேயணிந்து ஞானசிவ யோகமென்று -புரிவேனோஆவலுடன் மாமுகுந்த னோடுமய னார்வணங்கும் ஆதிபுரி வாழவந்த-பெருமானே.’(இதன்கண், ‘நலியாதே’ போன்ற தனிச் சொற்கள் சந்தப் பாக்களில்‘தொங்கல்’ எனப்படும்.)

வண்ணக் குறளடி

‘தானா – தனதன’ என்ற சந்தத்தோடு வரும் இருசீரடி.எ-டு : ‘பாணார் மொழிநிறைசோணா சலரடிபேணா தவனுறும்மாணா நரகமே.’ (செய்யு. செய்.)

வண்ணக் குழிப்பு

வண்ணச் செய்யுளின் சந்த வாய்பாடு.

வண்ணக்களஞ்சியம்

வண்ணக்கவி பாடுதலில் வல்லுநன்; வண்ணக்களஞ்சியப் புலவன்.

வண்ணக்குனிப்பு

வண்ணக்குழிப்பு; அது காண்க.

வண்ணங்களை அறியாதாரின் புலமையியல்பு

வண்ணங்களின் இயல்பினை அறியாதாரது தமிழ்ப்புலமை மனுமுதலிய (அரசியல்)நீதிநூல்களைக் கல்லாத அரசர்தம் கோலினையும், சத்தியம் பயிலாதாரதுதவத்தினையும் போலும். எவ்வகைப் புலமைத்திறம் பெற்றோரேனும், வண்ணம்கூறும் வலிமையிலராயின், கற்றாரவை நடுவண் கள்வரைப் போலத் தடுமாறும்நிலையினராவர். (வண்ணத். 95, 96)

வண்ணச் சிந்தடி

‘தனன – தானன – தந்தனா’ என வரும் சந்தத்தால் இயன்ற முச்சீரடி.எ-டு : ‘நரக வாதையில் வன்பிறார்தரணி மீதொரு கொன்பெறார்சுரரு லோகமு மின்புறார்அருணை நாயகர் அன்புறார்!’ (செய்யு. செய்)

வண்ணத் தரு

ஒருவகைப் பாடல் (யாழ். அக.)

வண்ணத்தின் சிறப்பியல்பு

சந்தக்குழிப்பில் மோனை அமைந்திருத்தல் வேண்டும். இருகலைகள்சேர்ந்து ஒரு நீண்ட அடியாகும். அவை ஒரே மோனை உடைய வாதல் வேண்டும்.எதுகை நான்காகும். வண்ணப்பா இரண்டாகப் பகுக்கப்படும். வண்ணப்பாவின்நான்கடிகளும் இரு பகுப்பாக வரு மெனவே, முதலிரண்டடி ஒரு பகுப்பு.அவ்விரண்டடிகளுக்கு நான்கு கலைகள். அவற்றுள் மூன்று கலையால் தலைவன்புகழ் கூறி, அடுத்த கலையால் அவன் மலை நாடு இவற்றின் அழகைக் கூறி,மூன்று நான்காம் அடிகளாகிய நான்கு கலைகளால் கவிதான் சொல்லக் கருதும்அகப்பொருள் புறப்பொருள் துறைச் செய்திகளைக் குறிப்பிடுவதுவண்ணப்பாவின் வழக்காகும்.தொங்கலும் தாழிசையும் எண்வகைத் துள்ளலும் கவி கூறும் அகப்பொருள்புறப்பொருள் துறைகளுக்கு உபகாரமாக வாராவிடினும், தமிழ்ப்புலவர் அவற்றைநீக்காது கொள்வர். தம்முடைய வேட்கையையும் தன்மையையும் தாம் விரும்பும்தெய்வத்தின் சிறப்பையும் செந்தமிழ்க்கு அழகு தரும் வண்ணப்பாவினால்குறிப்பிடுவது நன்மக்கள் மரபே.எல்லாப் பாக்களையும் பாவினங்களையும் வண்ணத்தொடு கூடிய துறைச்செய்திகள் உடையனவாக அமைப்பதும் சான்றோர் வழக்கே. (வண்ணத். 89 -94)

வண்ணத்தின் தொடர்ச்சி இயல்பு

இரண்டு சந்தங்கள் கூடி ஒன்றாதல்; தத்தன, தந்தத்த, தனத்தா போல்வன.(அறுவகை. வண்ணஇயல்பு 13)

வண்ணத்தின் நாற்குலம்

‘தத்த’ சந்தம் அந்தணர் குலத்தது; ‘தன்ன’ சந்தம் அரசர் குலத்தது;‘தய்ய’ சந்தம் வணிகர் குலத்தது; ‘தன’ சந்தம் வேளாளர் குலத்தது.(அறுவகை.வண்ணஇயல்பு. 2)

வண்ணத்தின் நீள்வன நீளாதன

தத்த – தாத்த; தந்த – தாந்த; தன – தான – இவை நீள்வன.தன்ன, தய்ய – இவை நீளாதன.(அறுவகை. வண்ணஇயல்பு 14)

வண்ணத்தின் பால் பாகுபாடு

தத்த, தந்த, தாத்த, தாந்த – இவை ஆண்பாலாம்; தன்ன, தய்ய, தன, தான -இவை பெண்பாலாம்; தன, தய்ய, தன்ன – இவை பிறழ்வன எல்லாம் அலிப்பாலாம்.(அறுவகை. வண்ணஇயல்பு 4 – 6)

வண்ணத்தியல்பு

சென்ற நுற்றாண்டினராம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்டசந்தங்களைப் பற்றிய இலக்கணநூல். இதன்கண் 100 நூற்பாக்கள் உள.பொதுப்பாயிரம், நூல் மாட்சி, நூல் பிறப்பிடம், காலம் முதலியன என இவைபற்றிப் பத்துப் பாக்கள் உள (100 நீங்கலாக). தொகையிலக்கணம் வகையிலக்கணம் என 7 நூற்பாக்கள் அமைந்துள. தத்தச் சந்தம் முதலாகத் தய்யாச்சந்தம் ஈறாகச் சந்தங்கள் 72 நூற் பாக்களில் சொல்லப்படுவன.பிறழச்சியியல்பு, மெலித்தல் இயல்பு, தொடர்ச்சியியல்பு, மதிப்பியல்பு,புணர்ச்சியியல்பு, சிறப்பியல்பு, தழூஉம் இயல்பு, புலமையியல்பு என்பனபற்றி எஞ்சிய 21 நூற்பாக்கள் விளக்குகின்றன. இயம்பாதன பிறவும் மேலோர்நூல் நெறியாற் கொள்க என இறுதி வெண்பாப் புறனடையொன்று அமைக்கிறது.

வண்ணத்திற்கு ஆகாதன

கொடுந்தமிழ்ப்புணர்ச்சி அருகியே வரல் வேண்டும்; சந்தக் குழிப்புக்குளறிடல் கூடாது; பெரும்பாலும் அளபெடை வருதலும் ஆகாது. வடமொழி மரூஉச்சொற்கள் புகலாகாது. (அறுவகை. வண்ணஇயல்பு 19, 20, 21)

வண்ணத்தில் எளியன, வலியன

‘தன’,‘தான’- இவ்விரண்டு வண்ணமும் எளிதினும் எளியன; ‘தத்த’, ‘தந்த’- இவ்விரண்டும் எளியன.‘தாத்த’, ‘தாந்த’ – இவ்விரண்டும் வலியன;‘தய்ய,’ ‘தன்ன’ – இவ்விரண்டும் வலிதினும் வலியன.(அறுவகை. வண்ண இயல்பு 16)

வண்ணத்தில் சந்தி

ஒரே வகையினவாகிய இரண்டு வண்ணம் ஒன்றோடொன்று இசைவுறும் இடம்சந்தியாம்.எ-டு : தத்த + தத்த = தத்தத்த; தன்ன + தன்ன = தன்தன்ன.(அறுவகை. வண்ணஇயல்பு. 10)

வண்ணநெடிலடி

‘தனதத்தத் – தனதத்தத் – தனதத்தத் – தனதத்தத் – தனதானா’ என்றசந்தப்பட நிகழும் ஐஞ்சீரடி.எ-டு : ‘பொலிவற்றுத் தினமற்பக் கலைகற்றுத் தெருளற்றுப்பொருள்மாலேசொலிவைத்துப் புகழ்கெட்டுப் புவனத்திற் றளர்வுற்றுச்சுழலாமேபுலியக்கத் ததனைச்சுற் றரைபொற்பத் திருவொற்றிப்புணர்வார்பால்ஒலிமுற்றுத் துதிசொற்றுக் கதிபெற்றுப் பயன்மிக்குற் றுயர்வாயே.’(செய்யு. செய்.)

வண்ணப்பா

மூன்று சந்தக் குழிப்புக்களின் பின்னர் ஒருதொங்கல், ஒரு தாழிசை,ஒரு துள்ளல். இவற்றைப்பாடுதல் ஒரு கலை எனப் படும். இவ்வாறுஎட்டுக்கலைகள் சேர்ந்தது ஒருவண்ணப்பா (சந்தங்களில் சில பல சேர்ந்துஒரு துள்ளலாம்; துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பாம்.) (வண்ணத்து.85 – 88)சந்தக்குழிப்பு சிறிதும் தவறாமல் பாடப்படும் இசைப்பாடல்வல்லினமும், மெல்லினமும் இடையினமும் ஆகிய எழுத்துக் களைக் கொண்டு,ஓரின எழுத்து உள்ள இடத்தில் மற்றோர் இன எழுத்துச் செல்லாமல் அமையப்பெற்று, குறில் வந்த இடத்தில் குறிலும் நெடில் வந்த இடத்தில் நெடிலுமேபொருந்தப் பெற்று இயலும். 4 அல்லது 8 கலைகளைக் கொண்டது ஓரடி.நான்கடியும் ஓரொலியை உடைத்தாய் வரும் சந்தப்பாடல் வண்ணப்பா ஆகும்.சந்தங்களில் சில சேர்ந்தது ஒரு துள்ளல் (தந்தன, தந்தன); துள்ளல்மூன்று கொண்டது ஒரு குழிப்பு (தந்தன – தந்தன, தந்தன – தந்தன, தந்தன -தந்தன); ஒரு குழிப்பும் ஒரு சிறு தொங்கல்துள்ளலும் ஒரு கலை.(தந்தன-தந்தன, தந்தன – தந்தன, தந்தன – தந்தன, தனதான) தொங்கல்துள்ளல்முன் வந்த துள்ளல்களினும் ஓசையில் வேறுபட்டிருக்கும். இத்த கைய கலைகள்4 அல்லது 8 கொண்ட அடி நான்காய் வருவது வண்ணப்பா.இத்தகைய வண்ணப்பாக்கள் ஒலிஅந்தாதி, கலிஅந்தாதி என்ற பிரபந்தங்களில்வரும். (பன். பாட். 267, 265)

வண்ணம் (1)

ஒரு பாவின்கண் நிகழும் ஓசைவிகற்பம். (தொ. செய். 1 நச்.)வண்ணம் – ஒசைநடை. இயற்றமிழுள் அமையும் ஓசை நடையை வண்ணம் என்றல்மரபு.இவ்வண்ணங்கள், எழுத்துப் பற்றியும் தொடை பற்றியும் இசைபற்றியும்சொல்பற்றியும் வருதலின், சொற் சீரடி முதலாக எழுசீரடியளவும் எல்லாஅடிக்கண்ணும் கொள்ளப்பெறும். நாற்சீரடிக்கண் வருவன சிறப்புடையன வாம்.தொடைபற்றி வரும் வண்ணம் நாற்சீரடிக்கண்ணேயே கொள்ளப்படும். (தொ. செய்.211, 212 ச. பால.)

வண்ணம் (2)

தலைவனுக்கு நான்கு கலைகளும் எடுத்துக்கொண்ட பொருளுக்கு நான்குகலைகளும்ஆகச் சந்தங்கள் அமைத்துத் துள்ளலும் தொங்கலும் மும்மூன்றாகஅமைய எட்டுக்கலை களால் பாடுவது வண்ணம். (சாமி. 172)

வனப்பு (2)

திருட்டுபு என்னும் சந்தம்; உயிரும் உயிர்மெய்யுமாக அடிதோறும் 11எழுத்து வருவது.எ-டு : ‘பற்றொன் றோவில ராகி யொழுகுதல்அற்றன் றேலறி விற்றெளிந் தாற்றுதல்எற்றொன் றானு மிலர்தாம் பிரிவரேமற்றொன் றென்னை மயக்குவ தேகொலோ’ (வீ. சோ. 139 உரை.)

வனப்பு வண்ணம்

இசைவகைகளுள் ஒன்று. (பெரியபு. ஆனாயர். 28)

வனமயூர விருத்தம்

இஃது அடிக்குப் பதினான்கு எழுத்துக்கள் கொண்ட வட மொழி விருத்தம்.இதன் அமைப்பு முதற்குருக்கணம் இடைக் குருக்கணம் கடைக்குருக்கணம்முற்றும் இலகுவான கணம், ஈற்றில் இரண்டு குருக்கள் வருதல். இதன்எடுத்துக்காட்டாக வருவனவற்றில் நேரசையால் தொடங்குவதன்கண் அப்பொருத்தம் இல்லை. இவ்விருத்தம் ‘இந்துவதனா விருத்தம்’ எனவும் படும்.ஈற்றயலெழுத்து இலகு ஆவதே இந்துவதனா’ என்பர் ஒருசாரார்.எ-டு : ‘சொன்றிமலை துய்த்துமுத ரத்தெழுசு டுந்தீ யன்றைவடவைக்கனலெ னப்பெரித லைப்பக் குன்றினைநி கர்த்திடுகு றட்டனுவ ருந்தாநின்றுசிவ னைப்பரவி நேர்படவு ரைக்கும்.’ (ஆறழைத்த திருவிளை. 1)இது நேரசையால் தொடங்குவது (வி. பா. பக். 44)

வன்தொடர்க் குற்றியலுகரம்

ஈற்றெழுத்து வல்லினப்புள்ளி ஆறனுள் ஒன்றை ஊர்ந்துநிற்க (கு சு டுது பு று – க்களுள் ஒன்றாக,) அயலெழுத்து வல்லினப் புள்ளியாய் மூன்றுமுதலிய எழுத்துக்களால் நிகழும் சொல் லின் ஈற்றுகரம் வன்தொடர்க்குற்றியலுகரமாம்.எ-டு : பாக் கு தச் சு பாட் டு முத் து காப் பு காற் றுஈற்றயல் வல்லினப்புள்ளி ஆறாதலின் வன்றொடர்க் குற்றிய லுகரம்ஆறாயிற்று. (நன். 94)அக்குற்றியலுகரம் நிலைமொழியீற்றில் நிற்ப, அல்வழிப்புணர்ச்சியிலும், வருமொழி முதல் வன்கணமாயின் மிக்கு முடியும்.எ-டு : கொக்கு ப் பறந்தது.சில மென்தொடர்க்குற்றியலுகரம் வன்தொடர்க்குற்றிய லுகரம்ஆகியக்காலும் வல்லெழுத்து மிகப் பெறும்.எ-டு : மருந்து + பை > மருத்து + பை = மருத்துப்பை (நன். 181, 184)

வன்தொடர்க்குற்றியலுகர ஈறுபுணருமாறு

வன்தொடர்க்குற்றியலுகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து வரு மொழி முதலில்வருமாயின், அவ்வந்த வல்லெழுத்தே மிகும்.எ-டு : கொக்குக் கடிது, தச்சுக் கடிது, பொற்புப் பெரிதுவேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் கொக்குக்கால், கொக்குச் சிறகு -என்றாற் போல வல்லொற்று மிகும். (தொ. எ. 414, 426 நச்.)சிறுபான்மை அம்முச்சாரியை பெற்று, வட்டு + அம் + போர் = வட்டம்போர், புற்று + அம் + பழஞ்சோறு = புற்றம்பழஞ் சோறு – என்றாற் போலவரும். (தொ. எ. 417)‘வன்தொடர்மொழிக் குற்றியலுகரஈற்று வினையெச்சம், செத்துக் கிடந்தான்- செற்றுச் செய்தான் – நட்டுப் போனான் – என்றாற் போல மிக்கே முடியும்.(தொ. எ. 427)எட்டு என்ற எண்ணுப்பெயர் அன்சாரியை பெற்று எட்டன் காயம் – என்றாற்போலப் புணரும். (தொ. எ. 149)இரண்டு சாரியை தொடர்ந்து பார்ப்பு+அன்+அக்கு+குழவி =பார்ப்பனக்குழவி என முடிதலுமுண்டு. (தொ. எ. 418)

வன்ன ஆகமம்

இடையே ஓரெழுத்து வந்து சேர்வது. யாது என்ற ஒன்றன்பால்வினாப்பெயரின் இடையிலே வகரஉயிர்மெய் வந்து புணர, அஃது யாவது என்றுவழங்குவது போல்வன. (தொ. எ. 172 நச்.)

வன்ன நாசம்

ஒரு சொல்லின் இடையே ஓரெழுத்து நீங்கவும் அச்சொல் அப் பொருளையேபயந்து நிற்பது. யாவர் என்ற பலர்பால் பெயரிடையே வகரம் கெட, அஃது‘யார்’ என நின்றவழியும், பலர்பால் பெயராகவே வழங்குவது போல்வன. (தொ. எ.172 நச்.)

வன்முதல் தொழில்

வல்லெழுத்தை முதலாக உடைய வினைச்சொல். இது வருமொழியாய்,நிலைமொழிக்கு முடிக்கும் சொல்லாய் வரும்.எ-டு : பரணியாற் கொண்டான்.கொண்டான் என்ற வருமொழியே முடிக்கும் சொல்லாக வந்த வன்முதல்தொழிற்சொல்லாம். (தொ. எ. 124)

வன்மை, மென்மை, இடைமை முறைவைப்பு

வல்லினத்துள் க ச த ப – என்ற நான்கும், மெல்லினத்துள் ஞ ந ம – என்றமூன்றும், இடையினத்துள் ய வ – என்ற இரண்டும் மொழிக்கு முதலாதல்நோக்கி, வன்மை மென்மை இடைமை – என்பன முறையே வைக்கப்பட்டன. (தொ. எ. 21நச். உரை)

வன்மைமிக்கு வருதல்

வல்லெழுத்து மிக்கு வருதல்எ-டு : ‘தெறுக தெறுக தெறுக பகை தெற்றாற்பெறுக பெறுக பிறப்பு’அகர உகர இகர எகர, ஆகார ஐகாரங்களாக உயிர்களால் ஊரப்பட்ட வல்லினஉயிர்மெய்களும் வல்லின மெய்களுமே இப்பாடற்கண் வந்தன. (யா. க. 2உரை)

வயிர மேகவிருத்தி

தக்க யாகப்பரணி (16) உரையிற் குறிக்கப்பட்ட இது, நேமிநாத உரையினைக்குறிப்பது என்பது மு. இராகவையங்கார் ஆராய்ச்சியாற்கண்ட செய்தி.(ஆராய்ச்சித் தொகுதி : கட்டுரையெண் : 32)

வயிரபம்

இது துறைக் கவிகளுள் ஒன்றாக வீரசோழியத்தில் கூறப்பட் டுள்ளது.‘பிச்சியார்’ என்ற கலம்பக உறுப்பைக் குறிப்பது போலும்.இது ‘பயிரவம்’ என்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ‘பைரவம்’ என்றஒருவகைச் சிவவழிபாடு கொண்ட பிச்சியார் பற்றியதாகக் கோடல்பொருந்தலாம்போலும். (வீ. சோ. 183 – 1)

வரருசி

பாணினி வியாகரணத்துக்கு வார்த்திகம் செய்த முனிவர். வார்த்திகம் -காண்டிகையுரை.

வரலாற்று வஞ்சி

அகவல் ஓசையிற் பிறழாது, ஆசிரியப் பாவால், போர்க்களத் திற் செல்லும்படையெழுச்சியைக் கூறும் சிறு பிரபந்தம்.(இ. வி. பாட். 109)

வரிதகம்

முப்பத்திரண்டடியான் வரும் இசைப்பாட்டு. (சிலப். 3 : 13அடியார்க்)

வருக்கக் கோவை (1)

மொழி முதலில் வரும் எழுத்துக்களை அகர முதலாகக் கிடந்த எழுத்துமுறையே அமைத்துக் கலித்துறைப் பாடல்க ளாகப் புனையும் பிரபந்தவகை.(சது.)எ-டு : நெல்லை வருக்கக் கோவை.

வருக்கக் கோவை (2)

அகப்பொருளில் ஏற்பனவற்றைக் கொண்டு அகர வரிசைப் படி வருக்கத்தால்பாடுவது வருக்கக் கோவை. (சாமி. 167)

வருக்கத்தொற்று

கவ்வுக்கு ஙவ்வும், சவ்வுக்கு ஞவ்வும், டவ்வுக்கு ணவ்வும்,தவ்வுக்கு நவ்வும், பவ்வுக்கு மவ்வும், றவ்வுக்கு னவ்வும் வருக்கத்தொற்றாம். (வல்லினமெய்க்கு இனமான மெல்லொற்றுக் களை ‘வருக்கத்து ஒற்று’என்றார்.) (நேமி. எழுத். 3 உரை)

வருக்கமாலை

மொழிக்கு முதலாம் வருக்கஎழுத்தினுக்கு ஒவ்வொரு கவி கூறுதல்என்னும் பிரபந்தம்; அவ்வெழுத்தை முதலாகக் கொண்டு கூறுதல் என்க.(ஒளவையார் பாடிய ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போல்வன எனலாம்). இனி,உயிரானும், கதசநபமவ – என்னும் உயிரொடு கூடிய மெய் ஏழானுமாக எட்டுஆசிரியப்பா வந்தால் அவை வருக்கமாலை எனவும் கூறுவாரு முளர். (அப்பர்பெருமாளது தேவாரத்துள் ( V -97) சித்தத் தொகைத் திருக்குறுந்தொகையுள் பாடல்கள். 2 – 13ஆகிய பன்னிரண்டும் உயிரெழுத்தால் வந்த வருக்க மாலை.) (இ. வி. பாட்.66)

வருக்கம் பற்றி வீரசோழியத்தில்வரும் குறிப்பு

வல்லினமெய்யும் அதனைச் சார்ந்த மெல்லின மெய்யும் வருக்கமாம்.இடையினத்துக்கு வருக்கம் அஃதாவது இன வெழுத்து இல்லை. கங சஞ, டண, தந,பம, றன – எனப் பிறப்பிடத்தான் ஒத்து முயற்சியில் சிறிது மூக்கொலியான்வேறுபடும் மெல்லினங்கள் அவ்வவ் வல்லெழுத்துக்கு இனமாகி வருக்க எழுத்துஎனப்பட்டன. (வீ.சோ.சந்திப். 2)(ககர மெய்யினை ஊர்ந்துவரும் பன்னீருயிரெழுத்துக்களும் ககரவருக்கமாம். இவ்வாறே ஏனைய மெய்யினை ஊர்ந்து வரும் பன்னீருயிரெழுத்துக்களும் அவ்வம் மெய்வருக்கமாம். இவ்வாறு வருக்கம்அவ்வம்மெய்யெழுத்துக்களைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துக்களைக் குறித்துவருதல் உரையுள் பிற விடத்துக் காணப்படும்.) (சந்திப். 7)

வருணப் பொருத்தம்

பன்னீருயிரும், கஙசஞடண என்னும் ஆறு ஒற்றும் மறையோர்வருணத்திற்குரிய எழுத்தாம். தநபமயர என்னும் ஆறு ஒற்றும்அரசர்க்குரியன. லவறன என்னும் நான்கு ஒற்றும் வணிகர்க் குரியன. ழ, ளஎன்னும் இரண்டு ஒற்றும் வேளாளர்க் குரியன.‘ஒற்று’ எனப் பொதுப்படக் கூறினும், உயிரொடு கூடிய மெய் என்றேகொள்ளப்படும். (இ. வி. பாட். 14 – 17)

வருணம்

அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என நால்வகைப்பட்ட சாதி; நால்வேறுவருணப் பால்வேறு காட்டி’ (மணி. 6 : 56)

வருணர்ப்பாட்டியல்

பாட்டியல் நூல்களில் ஒன்றான இதன் நூற்பாவொன்று இலக்கணவிளக்கப்பாட்டியலுரையில் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளது. ஆதலின், சிறந்தபாட்டியல் நூலாக இது 17ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருத்தல்வேண்டும் என அறிகிறோம்.

வருமொழித் தகர நகரங்களின் திரிபு

நிலைமொழியீற்றில் னகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் றகரம்ஆகும். நிலைமொழியீற்றில் னகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம்னகரம் ஆகும்.நிலைமொழியீற்றில் லகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் றகரம்ஆகும். நிலைமொழியீற்றில் லகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம்னகரம் ஆகும்.நிலைமொழியீற்றில் ணகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் டகரம்ஆகும். நிலைமொழியீற்றில் ணகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம்ணகரம் ஆகும்.நிலைமொழியீற்றில் ளகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் டகரம்ஆகும். நிலைமொழியீற்றில் ளகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம்ணகரம் ஆகும்.அல்வழி வேற்றுமையென ஈரிடத்தும் இவ்விதி பொருந்தும்.எ-டு : பொன் + தீது = பொன் றீ து; பொன் + நன்று = பொன் ன ன்றுகல் + தீது = கற் றீ து, கஃறீது; கல் + நன்று = கன் ன ன்றுமண் + தீது = மண் டீ து; மண் + நன்று = மண் ண ன்றுமுள் + தீது =முட் டீ து, முஃடீது; முள் + நன்று = முண் ண ன்று.இவை அல்வழி.இனி வேற்றுமைக்கண்ணும் பொன் றீ மை, பொன் ன ன்மை; கற் றீ மை, கன் ன ன்மை; மட் டீ மை, மண் ண ன்மை; முட் டீ மை, முண் ண ன்மை – என வருமொழிமுதல் தகர நகரங்கள் திரியு மாறு காண்க. (நன்.237)

வரையறுத்த பாட்டியல்

இப்பாட்டியல் நூல் மங்கலப் பொருத்தத்தினை மாத்திரம் தனதுநூற்பொருளாக வரையறுத்துக் கொண்டமையால் இப்பெயர்த்தாயிற்று. சூத்திரம்கட்டளைக் கலித்துறை யாப்புப் பெறுகிறது. சம்பந்த முனிவரால்இயற்றப்பட்டமை யின் இது சம்பந்தர்பாட்டியல் எனவும் படும். இப்பெயர்பெற்றது என்ப. அன்றி ஞான சம்பந்தப் பெருமான் இவருடைய வழிபாட்டுக்குரவராதலும் கூடும். நூலாசிரியர் பெயர் துணியக் கூடவில்லை. காலம்14ஆம் நூற்றாண்டு எனலாம். இன்ன இன்ன மங்கலமொழிகள் இன்ன இன்னமுதலெழுத்தில் தொடங்கும் பெயரையுடைய பாட்டுடைத் தலைவனுக்கு உரியன என்றசெய்தியை 9 பாடல் களிலும், ஏனைய பொருத்தங்களைப் பொதுவாக இறுதிப்பாடலாகிய பத்தாம் பாட்டிலும் இந்நூல் குறிப்பிடுகிறது.இனி, வரையறுத்த பாட்டியல் சுட்டும் மங்கலமொழிகளும், அவற்றுக்குஏற்ற, பாட்டுரைத் தலைவனுடைய பெயரின் முதலெழுத்துக்களும் வருமாறு :(கா. 4 – 9)

வரையார் என்ற சொல்லமைப்பு

‘வரையார்’ என்று கூறப்படும் இடங்களில் எல்லாம் “இவ் விதி தவறாதுகொள்ளப்படவேண்டும் என்ற நியதி இல்லை; ஏற்ற பெற்றி இடம் நோக்கிக்கொள்ளலாம்” என்று விதி நெகிழ்க்கப்பட்டுள்ளது. எனவே, ‘வரையார்’ என்றுகூறும் விதிகள் “எல்லாம் வேண்டும்” என்பது போல நியமிக்கும் விதி ஆகாஎன்பது பெறப்படும்.எ-டு : ‘உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்’ (தொ. எ. 140 நச்.)‘மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்’ (145)‘உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்’ (212)‘பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்’ (421)‘வினையெஞ்சு…… அவ்வகை வரையார்’ (265)‘இறுதியும் இடையும்……. நிலவுதல் வரையார்’ (சொ. 103 சேனா.)

வர்த்த மானம்

கணிதத்தின் பகுதிகளாகிய பதினாறுவரி கருமமும், அறு கலாச வண்ணமும்,இரண்டு பிரகரணச் சாதியும், முதகுப்பை யும் ஐங்குப்பையும் என்றஇப்பரிகருமமும், மிச்சிரகம் முதலிய எட்டதிகாரமும் ஆகிய இவற்றைக்குறிப்பிடும் நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 569)

வலித்தல்

செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளுள் தொடைநலம் கருதிமெல்லினஒற்று இனமான வல்லினஒற்றாகத் திரிதல்.எ-டு : ‘முத்தை வரூஉம் காலம் தோன்றின்ஒத்த தென்ப ஏஎன் சாரியை’ (தொ. எ. 164 நச்.)முந்தை என்ற சொல் அடுத்த அடிக்கண் முதற்சீராய் நிகழும் ‘ஒத்தது’என்றதன் எதுகை கருதி நகரம் தகரமாக வலித்தது. இஃது ஒரு சொற்கண்ணேயேநிகழ்வது. (நன். 155)

வலித்தல் முதலியன தோன்றல் முதலியவிகாரங்களுள் அடங்குதல்

விகாரம் அதிகாரப்பட்டமையானும், மேலிற் பகுபத முடி விற்கும்சிறுபான்மை வேண்டுதலானும், யாப்பிற்கே உரிய பிறவும் இவ்வதிகாரத்துள்ளேசொல்லப்படுதலானும், விரித்தல் தோன்றலாகவும், வலித்தலும் மெலித்தலும்நீட்ட லும் குறுக்கலும் திரிபாகவும், தொகுத்தலும் மூவிடத்துக்குறைதலும் கெடுதலாகவும் அடக்கிச் செய்யுள்விகாரம் இம்மூன்றுமாம்எனவும் அமையும் என்பது போதருதற்கும் யாப்பிற்கே உரிய இவ்வொன்பது வகைவிகாரத்தை ஈண்டே வைத்தார் என்க. (நன். 155 மயிலை.)

வலிப்பு

மெல்லொற்று வல்லொற்றாதல்; இரண்டாம் வேற்றுமைத் திரிபுகளுள்ஒன்று.எ-டு : விள + காய் = விளங்காய் – என விள என்னும் அகர ஈற்றுமரப்பெயர் வருமொழி முதல் வன்கணம் வந்துழி, இன மெல்லெழுத்து இடையேமிகும் என்ற விதிக்கு மாறாக, விள + குறைத்தான் = விளக் குறைத் தான் -என வல்லொற்று மிக்கு வந்தது. வலிப்பாவது வல்லொற்று. (தொ. எ. 157 நச்.உரை)

வலைச் சியார்

கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும். அகத்துறைப்பாடல்களுள் இஃது ஒன்று. தெருவில் மீன் விற்கும் வலையர் குல மகளின்வனப்புமிகுதி தனது உள்ளத்தை வருத்திய செய்தியைக் காமுகன் ஒருவன்எடுத்துக் கூறுவதாக அமையும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல்.(மதுரைக் கல. 67)

வல் என்ற பெயர் புணருமாறு

வல் என்னும் பொருட்பெயர் தொழிற்பெயர் போல வன் கணம் வரின் உகரமும்வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும்,யகரமும் உயிரெழுத்தும் வரின் இயல்பும் பெற்றுப் புணரும். உயிர் வருவழிவல் என்பதன் ஈற்று லகரம் தனிக்குறிலொற்று ஆதலின் இரட்டும்.எ-டு : வல்லுக் கடிது; வல்லு ஞான்றது, வல்லு வலிது; வல் யாது,வல்லரிது – அல்வழி. வல்லுக்கடுமை; வல்லு ஞாற்சி, வல்லுவலிமை;வல்யாப்பு; வல்லருமை – வேற்றுமை (தொ. எ. 373 நச்.)

வல்லாறு

வல்லின மெய்கள் ஆறு. அவை க் ச்ட் த் ப் ற் – என்பன. (தொ. எ. 36நச்.)

வல்லின மெல்லின இடையின இயல்பு

வல்லினம் கல்மேல் விரலிட்டாற் போலவும், மெல்லினம் மணல்மேல்விரலிட்டாற் போலவும், இடையினம் மண்மேல் விரலிட்டாற் போலவும் எனக்கொள்ளப்படும். (நேமி. எழுத். 2 உரை)

வல்லின மெல்லின இடையின மெய்களின்இயல்பு

வல்லினம் கல்மேல் விரலிட்டாற்போலவும், மெல்லினம் மணல்மேல்விரலிட்டாற்போலவும், இடையினம் மண்மேல் விரலிட்டாற் போலவும் எனக்கொள்க. (நேமி. எழுத். 2 உரை)

வல்லினப்பாடல்

வல்லின மெய்களும் உயிர்மெய்களுமே வந்துள்ள பாடல்.எ-டு : ‘துடித்தடித்துத் தோற்றத் துடுப்பெடுத்த கோடறொடுத்த தொடைக்கடுக்கை பொற்போற் – பொடித்துத்தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு’தடித்து – மின்னல்; துடுப்பு – பூக்குலை; கடுக்கை – கொன்றை; துடி -துடித்தல், நடுங்குதல்.“நடுங்குதலையுடைய மின்னல் தோன்றவே, காந்தள் பூக் குலைகளைவெளிப்படுத்தின. தொடுத்த மாலைகள் போலக் கொன்றை பொன் போன்ற பூக்களைமலரச் செய்தன. தொடி அணிந்த தோள்களும் இடப்புறம் துடித்தன. மயில்கள்ஆடக் கானகம் புதிய தளிர்களைத் தோற்றுவித்துக் காட்டு கின்றது.” என்றுகார்காலம் கண்டு தலைவன் வருகை குறித்துத் தலைவி கூறியது. இப்பாடல்.(தண்டி. 97)

வல்லினம்

க் ச் ட் த் ப் ற் – என்னும் ஆறுமெய்களும் வல்லென்ற நெஞ்சுவளியால்பிறத்தலின் வல்லினத்தன ஆயின. (நன். 68)

வல்லெழுத்து இயற்கை உறழ்தல்

வல்லெழுத்து நிலைவருமொழிகளிடையே மிகுதலும் மிகாமையும் ஆகியஇயல்பு.எ-டு : பல + பல = பல ப் பல, பலபல (தொ. எ. 215 நச்.)சிறுபான்மை அகரம் கெட, லகரம் ஆய்தமாகவும் மெல் லெழுத்தாகவும்திரிந்து முடிதல். பல, சில – ஈற்று அகரம் கெடப் பல் – சில் – எனநின்று முடியுமாறு:எ-டு : பல் + தானை = ப ஃ றானை; சில் + தாழிசை = சி ஃ றாழிசை; சில் + நூல் = சி ன் னூல்சிறுபான்மை அகரம் கெட லகரம் திரிந்தும், திரியாதும் முடிதல்.எ-டு : பல + பல = ப ற் பல, பலபல; சில + சில = சி ற் சில, சிலசில (தொ. எ. 215 நச். உரை)

வல்லெழுத்து முதலியவேற்றுமையுருபின் புணர்ச்சி

வல்லெழுத்து முதலாகிய வேற்றுமையுருபுகள் கு, கண் – என்பன. இவைவருமொழியாக நிலைமொழிப் பெயரொடு புணருமிடத்து,1. மணிக்கு மணிக்கண், தீக்கு தீக்கண், மனைக்கு மனைக்கண் – எனஇகர ஈகார ஐகார ஈறுகள் முன்னும், வேய்க்கு வேய்க்கண், ஊர்க்குஊர்க்கண், பூழ்க்கு பூழ்க்கண் – என யகர ரகர ழகர ஈறுகள் முன்னும்வல்லெழுத்து மிக்குப் புணரும்.2. தங்கண், நங்கண், நுங்கண், எங்கண் – என மகரம் கெட்டு ஙகரமாகியமெல்லொற்று மிக்கது.3. அ+கண்= ஆங்கண், இ +கண் = ஈங்கண் – எனக் குற்றெழுத்து நீண்டுஇடையே மெல்லொற்று மிக்கது.நான்கன் உருபிற்கு மெல்லொற்று மிகாது.4. நம்பிகண் நங்கைகண் அரசர்கண்-என உயர்திணைப் பெயர்களும்,தாய்கண் – என விரவுப்பெயரும் கண்உருபு வரும்வழி வல்லொற்றுமிகாவாயின.5. நம்பிக்கு, நங்கைக்கு, அரசர்க்கு, தாய்க்கு – என நான்கன்உருபிற்கு வல்லொற்று மிக்கது.6. அவன்கண், அவள்கண் – என உயர்திணைப் பெயர்க்கண் கண்உருபுஇயல்பாகப் புணர்ந்தது.7. பொற்கு பொற்கண், வேற்கு வேற்கண், வாட்கு வாட்கண் – என (னகரலகர ளகரங்கள்) முறையே (றகரமாகவும் டகரமாகவும்) திரிதலுமுண்டு.8. கொற்றிக்கு கொற்றிகண், கோதைக்கு கோதைகண் – என விரவுப்பெயர்முன் குகரம் வருவழி வல்லொற்று மிக்கும், கண்உருபு வருவழி இயல்பாகவும்புணர்தலும் கொள்ளப் படும். (தொ. எ. 114 நச். உரை)

வல்லெழுத்துஆட்சியும் காரணமும்நோக்கிய குறியாதல்

க் ச் ட் த் ப் ற் – என்ற மெய்யெழுத்துக்களை ‘வல்லெழுத்துமிகினும்’ (230), ‘வல்லெழுத் தியற்கை’ (215) என்று பின்னர் ஆள்வர்.வல்லென்ற தலைவளியால் பிறப்பது கொண்டு வல்லெழுத்து எனப்பட்டன (19).ஆகவே இப்பெயர் ஆட்சி யும் காரணமும் நோக்கியது. (தொ. எ. 19 நச்.உரை)

வல்லெழுத்துவேறு பெயர்கள்

வன்மை எனினும், வன்கணம் எனினும், வலி எனினும், வல் லெழுத்துஎன்றும் ஒரு பொருட்கிளவி.(மு. வீ. எழுத்து 15)

வளமடல்

அறனும் பொருளும் வீடும் என்று கூறும் இம்மூன்று பகுதி யின் பயனைஇகழ்ந்து, மங்கையரைச் சேர்தலான் உளதாகிய மெல்லிய காமவின்பத்தினையேபயன் எனக் கொண்டு, தனிச்சொல்லின்றி, இன்னிசைக்கலிவெண்பாவால் தலைவ னதுஇயற்பெயரமைந்த அவ்வெதுகையில் அப்பொருள் முற்றப் பாடும் பிரபந்தம்.இன்பமடல் எனவும் பெறும். (இ. வி. பாட். 96)

வளி:புணருமாறு

வளி என்னும் காற்றின் பெயர் அத்துச்சாரியையும் இன்சாரி யையும்பெற்றுப் புணரும்.எ-டு : வளியத்துக் கொண்டான், வளியத்து நின்றான், வளியத்துவந்தான், வளியத் தடைந்தான்; வளியிற் கொண்டான், வளியினின்றான், வளியின்வந்தான், வளியினடைந்தான்என நாற்கணத்தும் வந்தவாறு. இவை வேற்றுமைப் புணர்ச்சி;ஏழாம்வேற்றுமைத் தொகையாகக் கொள்க. (தொ. எ. 242 நச்.)

வளியிசை

வளியிசை ‘மெய்தெரி வளியிசை’ எனவும், ‘அகத்தெழு வளியிசை’ எனவும்இருவகைப்படும். அகத்தெழு வளியிசை யாவது, புறச்செவிக்குப் புலனாகாமல்அகத்தே இயங்கும் மந்திர எழுத்துக்கள். மெய்தெரி வளியிசை, இசை எனவும்ஒலி எனவும் ஓசை எனவும் கலப்பிசை எனவும் நால்வகைத் தாம். அவற்றுள்இசையானது உயிர் பன்னிரண்டும் குற்றிகர குற்றுகரங்களும் ஆம்; ஒலியானதுபுள்ளி யுற்று ஒலிக்கும் மெய் பதினெட்டுமாம்; ஓசையானது ஆய்தமாம்;கலப்பிசை யானது உயிர்ப்புடையனவாய் வரும் உயிர்மெய்யாம். (தொ. எ.பக். XL ச.பால.)

வள் : புணருமாறு

வள் என்ற பெயர் தொழிற்பெயர் போல இருவழிக்கண்ணும் வன்கணம் வந்துழிஉகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும்வந்துழி உகரம் பெற்றும், யகரம் வருவழி இயல்பாயும், உயிர் வருவழி ளகரஒற்று இரட்டியும் புணரும்.எ-டு : வள்ளுக் கடிது;வள்ளு ஞான்றது, வள்ளு வலிது; வள் யாது,வள் ளரிது – அல்வழி. வள்ளுக்கடுமை; வள்ளுஞாற்சி, வள்ளுவலிமை;வள்யாப்பு, வள் ளருமை – வேற்றுமை.சிறுபான்மை இருவழியும் வன்கணம் வருவழி ளகரம் டகரமாகி வட்கடிது,வட்கடுமை- என வருதலும், மென்கணம் வரின் ளகரம் ணகரமாகத் திரிந்து வண்ஞான்றது, வண் ஞாற்சி – என வருதலும், இடையினத்து வகரத்தின் முன் வள்வலிது, வள்ளு வலிது – என உகரம் பெறாதும் பெற்றும் வருதலும்கொள்ளப்படும். (தொ. எ. 403 நச். உரை)

வள்ளலார் பாடல் யாப்பு

இராமலிங்க அடிகளார் அருளிய ஆறு திருமுறைப் பாடல்கள் எண்ணிக்கை5818; பலவகைத் தனிப்பாடல்களின் எண்ணிக்கை 152. வள்ளலாரது ‘அருட்பெருஞ்சோதி அகவல்’ 1596 அடிகளாலியன்ற நிலை மண்டில ஆசிரியம்;இவ்விரண்டடியெதுகையாக இகர ஈற்றால் (ஜோதி என) அமைவது.‘திருவடிப் புகழ்ச்சி’ என்ற ஆசிரிய விருத்தம் 192 சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். வள்ளலார் தாண்டவராயத் தம்பிரானார்க்குவரைந்த ‘திருமுகப் பாசுரம்’ 102 சீர்க்கழி நெடிலடிஆசிரியவிருத்தம்.பிரசாதப் பதிகம் தரிசனப் பதிகம் போன்ற பதிக அமைப்புக் களும்,குறையிரந்த பத்து, முறையிட்ட பத்துப் போன்ற பத்துப்பாடல்அமைப்புக்களும் முறையே தேவார திருவாசக மரபுகளைப் பின்பற்றியன. ஒருபொருள் பற்றிப் பல பாடல்கள் எழும் ‘மாலை’களால் ஐந்தாம் திருமுறைஅமைந்துள்ளது.தேவ ஆசிரியம், போற்றித் திருவிருத்தம், நெஞ்சுறுத்த திருநேரிசைமுதலாக அமைந்தவை யாப்பின் பெயரால் எழுந்தவை.அருட்பாவில் நிகழும் உள்ளப் பஞ்சகம், நாரையும் கிளியும் நாட்டுறுதூது, ஞானசிகாமணி திருச்சீர் அட்டகம் முதலி யன பிரபந்தங்களை யொட்டிஎழுந்தவை; நடேசர் கொம்மி, சல்லாப லகரி என்பன நாட்டுப் புறஇலக்கியங்களை நினைவூட்டுவன. கண்ணி, தாழிசை, சிந்து, கீர்த்தனை என்றவடிவு கொண்டு இசைக்கப்படும் பாடல்கள் பல உள; பண் வகுப்புப் பெறுவனவும்உள.வருக்கமாலை வருக்கக் கோவைப் பிரபந்தங்களையொட்டி, பாங்கிமார் கண்ணிஅமைகிறது.திருவருட்பாவில் குறள் வெண்பா 3, குறள் வெண் செந்துறை 3,குறட்டாழிசை 1, நேரிசை வெண்பா 306, வெண்டுறை 1, நிலைமண்டில ஆசிரியப்பா3, ஆசிரியத்துறை 5, அறுசீர் விருத்தம் 1034, எழுசீர் விருத்தம் 765,எண்சீர் விருத்தம் 1526, பன்னிருசீர் விருத்தம் 125, பதினான்குசீர்விருத்தம் 10, நாற்பத்தெட்டுச்சீர் விருத்தம் 1, 192 சீர் விருத்தம்1, 102 சீர்விருத்தம் 1, வண்ணவிருத்தம், 1, சந்தவிருத்தம் 8,கலிவெண்பா 2, கொச்சகக் கலிப்பா 190, கட்டளைக்கலிப்பா 15, கலித்தாழிசை31, கலித்துறை 23, கலிநிலைத்துறை 16, கலிநிலை வண்ணத்துறை 14, கட்டளைக்கலித்துறை 571, கலிவிருத்தம் 208, வண்ணக்கலிவிருத்தம் 10, வஞ்சித்துறை11, தாழிசை 191, சிந்து 748 எனப் பாவும் பாவினமும் அமைந்துள.(இலக்கணத். முன். பக். 108 – 110)

வள்ளை

மகளிர் நெற்குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு.சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையுள் வரும் ‘வள்ளைப் பாட்டு’க்காண்க.

வழக்கு உணர்த்துவது

சில சொல் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளைஉணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த் திற்று, இது வீட்டை உணர்த்திற்று-என உணர்விப்பது. (தொ.எ.1. நச்.)

வழிநடைப்பதம்

வழியில் நடந்து செல்லும்போது கண்ட காட்சியை வருணித்துப் பாடும்பாடல். சிலப்பதிகாரத்துள் நாடு காண் காதையுள் இவ்வருணனைப் பகுதி நெடியஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது.

வழிமடக்கு

மடக்கணியில் சீர்தோறும் தொடர்ந்து வரும் ஒருவகை.எ-டு : ‘அனைய காவலர் காவலர் காவலர்இனைய மாலைய மாலைய மாலையஎனைய வாவிய வாவிய வாவியவினைய மாதர மாதர மாதரம்’1. அனைய கா அலர் காவலர் காஅலர் – அத்தன்மைய வாகிய (காமன்அம்புகளாகிய) சோலையின் மலர்களை நம் தலைவர் காத்தல் இலர்;2. இனைய மாலைய மாலை அ மாலைய – இத்தன்மைத் தாகிய மயக்கத்தைத்தருகிற மாலைப்பொழுதுகள் அத்தன்மையை யுடையன;3. எனை அவாவிய ஆவிய – என்னை நீங்காது பற்றிக் கொண்டுள்ளஉயிரினைப் போன்ற; வாவிய – என் எண்ணத்தைத் தாண்டிச்செயற்படுகின்ற,4. வினைய – வருத்தும் தொழிலையுடையமாது – தோழியானவள்அரம் – அரத்தினைப் போன்றுள்ளாள்;ஆதரம் மா தரம் – (தலைவர் பால் யான் கொண்டுள்ள)ஆசைமிக்க எல்லையுடையதாயுள்ளது.இப்பாடலில் அடிதோறும் முதற்சீர் நீங்கலாகத் தொடர்ந்து சீர்மடக்கியவாறு (தண்டி. 95)

வழிமொழி (2)

ஒரு வகைச் சந்தப்பாட்டு -எ-டு : சம்பந்தர் அருளிய மூன்றாம் திருமுறை 67ஆம்பதிகம்.‘சுரருலகு நரர்கள்பயில் தரணிதல முரணழிய அரணமதில்முப்புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்வரமருள வரன்முறையின் நிரைநிறைகொள் வருசுருதிசிரவுரையினால்பிரமனுயர் அரனெழில்கொள் சரணஇணை பரவவளர் – பிரமபுரமே’இப்பதிக முதற்பாசுரத்தின்கண், வழியெதுகை நான்கடியி லும்எல்லாச்சீர்களிலும் வந்தவாறு. ‘வழிமொழித்திரு விராகம்’ என்றுஞானசம்பந்தர் அருளிய பதிகப்பாடல் இது. இதனைப் பதிகம் முழுதும்காணலாம்.

வஸ்து நிர்த்தேசம்

காப்புச் செய்யுளின்றியே பொருளைச் சொல்லலுறும் நெறிஎ-டு : குமாரசம்பவம் மங்களச் செய்யுளின்றியேஇமயமலை வருணனையொடு தொடங்குவது.

வாகன மாலை

இறைவன் வீதி உலா வருங்கால் பயன்படுத்தப்படும் இடபம், கருடன் முதலியவாகனங்களின் சிறப்பை எடுத்துப் பல பாடல்களில் நுவலும் பிற்காலப்பிரபந்த வகை. (நவ. பாட். பிற்சேர்க்கை)

வாகை மாலை

வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம்; ஆசிரியப் பாவால்நிகழ்வது (சது)

வாக்கி

அறமும் பொருளும் இன்பமும் இவற்றின் நிலையின்மையான் எய்தும் வீடும்எனப்பட்ட உறுதிப்பொருள் நான்கனையும் மிகுதி குறைவு கூறாமல், கேட்போர்விரும்ப, செஞ்சொல் இலக்கணச் சொல் குறிப்புச் சொல் என்ற மூன்றனுள்செஞ்சொல் மிகுதி தோன்ற, உலகம் தவம் செய்து வீடுபெற, உயிர்களிடம் கருணைகொண்டு கூறுபவன் வாக்கி ஆவான்.சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீட்டினை, அதற்குஏதுவாகிய கேள்வி விமரிசம் பாவனை என்னும் உபாயங்கள் வாயிலாக வாக்கிகூறுவானாம். ஆகவே, ஞானாசிரியனே வாக்கி எனப்படுவான். (இ. வி. பாட்173)

வாசுதேவனார் சிந்தம்

குடமூக்கிற் பகவரால் செய்யப்பட்ட பாடல் நூல். இது செய்யுள் இலக்கணமரபுக்குச் சிறிதே அப்பாலமைந்த ஆரிடச் செய்யுள் தொகையாகும். (யா. வி.பக். 369) குடமூக்கிற்பகவர் திருமழிசை யாழ்வார் எனவும், வாசுதேவனார்சிந்தம் அவர் அருளிய திருச்சந்த விருத்தம் எனவும் மு. இராகவஐயங்கார்கருதுகிறார். (ஆழ்வார்கள் கால நிலை பக். 43)

வாதி

ஏதுவும், ஏதுவினாற் சாதிக்கும் பொருளும் ஆகிய அவ் விரண்டற்கும்எடுத்துக்காட்டு முதலியன கொண்டு தன் கோட்பாட்டினை நிறுவிப் பிறர்கோட்பாட்டினை மறுக்கும் திண்ணிய அறிவுடையோன். (இ. வி. பாட். 172)

வாதோரணமஞ்சரி

கொலை புரி மதயானையை வசப்படுத்தி அடக்கினவர் களுக்கும், பற்றிப்பிடித்துச் சேர்த்தவர்கட்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால்தொடுத்துப் பாடுவது.(சதுரகராதி)

வாய்ப்பியம்

வாய்ப்பியர் என்பவரால் இயற்றப்பட்ட பண்டைய இலக்கண நூல். பாக்களின்வருணம் பற்றிய நூற்பாக்கள் நான்கு இந் நூலினின்று மேற்கோளாகயாப்பருங்கல விருத்தியில் காணப்படுகின்றன. மாவாழ் சுரம், புலிவாழ்சுரம் என்ற வாய் பாடுகள் நேர்நேர்நிரை, நிரைநேர்நிரை என்ற சீர்களுக்குரியன; இவை இருப்பவும், இடையே உயிரள பெடை அமைந்த தூஉமணி, கெழூஉமணிஎன்ற வேறிரண்டு வாய்பாடு களையும் வாய்ப்பியனார்குறிப்பிட்டுள்ளார்.சந்தம், தாண்டகம் என்ற விருத்த வகைகளை வாய்ப்பிய நூல்பாவினங்களாகக் குறிப்பிடுகிறது.’சீரினும் தளையினும் சட்டக மரபினும், பேரா மரபின பாட் டெனப்படும்’எனவும், ’அவை திரிபாகின் விசாதி யாகும்’ எனவும் வாய்ப்பியம்குறிப்பிடுகிறது.பண் நால்வகைத்து என்றற்கு வாய்ப்பிய நூற்பா மேற் கோளாகும்.வாகையும் பாடாணும் பொதுவியலும் (புறப்) புறமாகும் என்பதற்குவாய்ப்பிய நூற்பா மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. சொல்லானது பெயர்,தொழில், இடை,உரி என நால்வகைப்படும் என்பதற்கு வாய்ப்பிய நூற்பாக்கள்மேற்கோளாகக் காட்டப்பட்டுள.செந்துறை, வெண்டுறை என்பன இவையிவை என வாய்ப்பிய நூற்பாவால்விளங்கச் சுட்டப்பட்டுள்ளன.இந்நூற்பாக்களை நோக்க, வாய்ப்பியம் என்பது இறந்துபட்ட பண்டையமுத்தமிழிலக்கண நூலோ என்று கருத வேண்டி யுள்ளது. (யா. வி. பக்.219,358, 226, 486, 488, 567, 571, 578, 579.)

வாரம்பாடுதல்

பின்பாட்டுப் பாடுதல். ‘வாரம் பாடுந் தோரிய மடந்தையும்’ (சிலப். 14: 155)

வாழிய என்பது புணருமாறு

வாழிய என்னும் அகர ஈற்று வியங்கோள் வினைமுற்றுச் சொல் ‘வாழும்காலம் நெடுங்காலம் ஆகுக’ என்னும் பொருளதாய், வன்கணம் வரினும்இயல்பாகப் புணரும். அஃது ஈறுகெட்டு வாழி என்று ஆகியவழியும்நாற்கணத்தோடும் இயல்பாகப் புணரும்.எ-டு : வாழிய கொற்றா, நாகா, மாடா, வளவா, யவனா, அரசே; வாழிகொற்றா, நாகா, மாடா, வளவா, யவனா, அரசே (தொ. எ. 211 நச்.)வாழிய என்பது வாழும் பொருட்டு என்ற பொருளில் செய்யிய என்னும்வாய்பாட்டு வினையெச்சமாயின், ஈறு கெடாது நாற்கணத்தோடும் இயல்பாகப்புணரும்.எ-டு : வாழிய சென்றான், நடந்தான், வந்தான், அடைந்தான். (தொ. எ.210)வாழிய என்னும் சேய் என் கிளவி – சேய்மையிலுள்ள வாழுங் காலத்தைஉணர்த்தும் சொல். (எ.கு.பக். 203)வாழிய என்று சொல்லப்படுகின்ற, அவ்வாழுங்காலம் அண்மைய அன்றிச்சேய்மைய என்றுணர்த்தும் சொல். அது ஏவல் கண்ணாத வியங்கோள். (212 இள.உரை)வாழிய என்பது வாழ்த்தப்படும் பொருள் வாழவேண்டும் என்னும்கருத்தினனாகக் கூறுதலின் அஃது ஏவல் கண் ணிற்றே யாம். (211 நச்.உரை)

வாவல் ஞாற்று

முதலிற் கொடுத்த எழுத்துக்கு ஈற்றடி பாடி; பின்னர்க் கொடுத்தஎழுத்துக்கு ஈற்றயலடி பாடி, அதன் பின் கொடுத்த எழுத்திற்கு இரண்டாமடிபாடி, இறுதியாகக் கொடுத்த எழுத்துக்கு முதலடி பாடி முடிக்கும்சித்திரகவி.வெளவால் தலைகீழாகத் தொங்குவது போல, ஈற்றினின்று தொடங்கி முதலடிமுடியப் பாடும்வகை பாடல் அமைத லின், வாவல்ஞாற்று என்றபெயர்த்தாயிற்று. வாவல்- வெளவால்; ஞாற்று-தொங்குதல். (வீ. சோ. 181உரை)இனி யாப்பருங்கல விருத்தியுரையுள்(பக்.539) காணப்படு மாறு:“வாவல் நாற்றி என்பது ஓர் எழுத்துக் கொடுத்தால் அது முதலாக ஈற்றடிபாடி, பின்னு மோரெழுத்துக் கொடுத்தால் எருத்தடி பாடி, மற்றோர்எழுத்துக் கொடுத்தால் இரண்டா மடி பாடி, பின்னுமோர் எழுத்துக்கொடுத்தால் முதலடி பாடிப் பொருள் முடிய எதுகை வழுவாமல் பாடுவது.”

வி,பி இணையாப் பிறவினை

போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, பயிற்று – என்பனகாண்க. உரையிற் கோடலால், இறுகு, இறு க் கு, ஆடு – ஆ ட் டு, வருந்து – வரு த் து, எழும்பு, எழு ப் பு, தேறு – தே ற் று – என வருதலும் காண்க. (நன். 138 இராமா.)

வி,பி பொருளில் வரும் விகுதிகள்

வா – தன்வினை, வருவி – பிறவினை; உண்- தன்வினை, உண்பி-பிறவினை.இங்ஙனமே தன்வினையைப் பிறவினை ஆக்குதற்கண் குற்றிய லுகரங்கள் ஆறும்பயன்படுத்தப்படுகின்றன.தன்வினை:போ, பாய், உண், நட, எழு, தின்;பிறவினை;போக் கு , பாய்ச் சு , ஊட் டு , நடத் து , எழுப் பு , தீற் று(சூ. வி. பக். 41)

விகரணி

இடைநிலை விகரணி எனப்படும். அறிஞன் என்பதன்கண் உள்ள ஞகர இடைநிலைபோல்வன விகரணியாம். வட மொழியில் வினைச்சொற்களில் உள்ள விகுதியே காலம்காட்டுதலின், இடைநிலைகள் வினைமுதற்பொருண்மை முதலியன பற்றி வரும்.(சூ.வி.பக். 55)

விகற்ப நடை (1)

‘வினாவிற்கு விடையிறுக்கும்போது இருபொருள்படும் வகையில்இருவகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளுமாறு தொடர்மொழியில்விடையிறுத்தல் முதலியன. வழக்காற்றில் விடையிறுக்கும்போது தெளிவு படவிடையிறுக்காமல், ‘இவ்வாறு இரட்டுற மொழிதலாக அமைத்தல் வேறுபட்டநடையுடைத்து ஆதலின் விகற்ப நடை எனப்பட்டது. (வீ. சோ. 181 உரை)எ-டு : தன்னையும் உடன் கொண்டு செல்லுமாறு வேண்டிய தாய்கோசலைக்கு மறுமொழி கூறும் இராமன்,‘சித்தம் நீதி கைக்கின்றதென்?’ என்ற கூற்றில், ‘சித்தம் நீதிகைக்கின்றது என்’ (நீ எதற்காக மனம் தடுமாறுவது? எனவும், ‘சித்தம்நீதி கைக்கின்றது என்?’ (நின் உள்ளம் நீதியை வெறுப்பது எதற்கு?)எனவும் இருபொருள்பட விகற்ப நடைவந்தவாறு. (கம்பரா. 1626)

விகற்ப நடை (2)

இதனைச் சித்திர கவி வகைகளுள் ஒன்றாகக் கூறுவர். ‘வேறுபட்டநடையுடைத்தாவது’ என வீரசோழிய உரை கூறும் (181)எ-டு : ‘தமர நூபுர ஆதார சரணீ ஆரணா காரிதருண வாள்நிலா வீசு சடில மோலி மாகாளிஅமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாகஅருளு மோகினீ யாகி அமுதபானம் ஈவாளே’ (தக்க. 107)இதன்கண், முதலடி பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் அச்சந்திகளோடு புணர(நூபுராதார’ என்பது பிரித்துக் காட்டப்பட்டுள்ளது), அடுத்தஅடி தமிழ்நடையால் அமைந்தவாறு. இதுவும் வேறுநடைத்து ஆதல் கூடும்.யாப்பருங்கல விருத்தியில், விகற்ப நடை என்பது ‘வினாவுத் தரம்’ என்றமிறைக்கவிக்கு அடையாக ‘விகற்ப நடைய வினாவுத்தரமே’ என்று வினாவியதற்குஒரு மொழியும் தொடர்மொழியுமாக விடையிறுப்பது என்று விளக்கம்கூறப்பட்டுள்ளது. (பக். 545)

விகாரப்பட்ட சொற்கள்

அறுவகைச் செய்யுள் விகாரத்தாலும் மூவகைக் குறைகளா லும் உண்டானசொற்கள் விகாரப்பட்ட சொற்களாம்.எ-டு : குறுந்தாள், தட்டை, பொத்து (அறார்), தீயேன், விளையுமே,சிறிய இலை, தாமரை, ஆரல், நீலம் – என்ற இயற்கைச்சொற்கள் முறையேகுறுத்தாள், தண்டை, போத்து (அறார்), தியேன், விளையும்மே, சிறியிலை,மரை, ஆல், நீல் – என விகாரப்பட்டு வந்தன. (நன். 155)

விகாரம் மூன்று

புணர்ச்சிக்கண் தோன்றல், திரிதல், கெடுதல் – என்ற மூன்றுவிகாரங்கள் அமையும்.எ-டு : நாய் + கால் = நாய் க் கால் – ககரம் தோன்றல்விகாரம். நெல் + கதிர் = நெ ற் கதிர் – லகரம் றகரமாதல் திரிதல். மரம்+ வேர் = மரவேர் – மகரம்கெடுதல் விகாரம். (நன். 154)விகாரம் எனினும், செயல் எனினும், செயற்கை எனினும், விதி எனினும்ஒக்கும்.

விகுருதி

இது பகுபதத்தின் இடைநிலை விகுதி ஆகியவற்றைக் குறிக்கும் வடசொல்.படர்க்கை வினைமுற்றுக்களில் திணை பால் எண் இடங்களை விகுதி காட்டும்;தன்மை முன்னிலை வினை முற்றுக்களில் ஒருமைப்பால், பன்மைப்பால், இடம் -இவற் றையே விகுதி காட்டும். ஏனைய எச்சவினைகள் இருதிணை ஐம்பால்மூவிடங்களுக்கும் பொதுவான விகுதியை ஏற்று வரும். நடவாய் – உண்ணாய் -என்பவற்றில் விகுதிகுன்றி நட – வா – என வருதலுமுண்டு. இவையன்றித்தொழிற் பெயர் விகுதிகள், பகுதிப்பொருள் விகுதி, ஒருதலை என்னும்பொருட்கண் வரும்விகுதி, (விடு, ஒழி), தற்பொருட்டுப் பொருட்கண் வரும்விகுதி (கொள்) – முதலியன உளவேனும், அவை வினைமுற்று விகுதிகளைப் போலச்சிறவா. (சூ. வி. பக். 41)

விசித்திரப்பா

எங்கும் – ஏழறையாகக் கீறி, மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாகியஎழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி; அவ்வெழுத் துக்களை ஒழுங்கும்கண்ணறையும் படாமே நிறுவி, ஓரெழுத் துக்கு ஓர்அடியாகவாயினும் ஒரு சீர்ஆகவாயினும் முற்றுப் பெறப் பாடுவது. (இதன் பொருள் புலப்பட்டிலது.)(வீ. சோ. 181 உரை)

விசேடம்

விசேடமாவது சூத்திரத்து உட்பொருளன்றி ஆண்டைக்கு வேண்டுவனதந்துரைக்கும் உரை வகை. (நன். 21 சங்.)

விசை என்ற மரப்பெயர் புணருமாறு

விசை என்ற மரப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சே என்றமரப்பெயர் போல, வருமொழி வன்கணம் வரின், இடையே இனமெல்லெழுத்து மிக்குப்புணரும். எ-டு : விசை ங் கோடு, விசை ஞ் செதிள், விசை ந் தோல், விசை ம் பூ.அல்வழிப் புணர்ச்சிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு: விசை கடிது, நெடிது, வலிது, அணித்து (தொ. எ. 282 நச்.)

விடு, ஒழி என்ற விகுதிகள்

விடு, ஒழி – என்பன செயல்நிகழ்ச்சி ஒருதலை என்னும் பொருட்கண் வரும்விகுதிகளாம். எ-டு : செய்துவிட்டான், செய்தொழிந்தான். (சூ. வி. பக்.41)

விண் என்ற பெயர் புணருமாறு

விண் என்னும் ஆகாயத்தை உணர்த்தும் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் அத்துச்சாரியை பெறுதலுமுண்டு; இயல்பாக வருமொழியொடுபுணர்தலுமுண்டு. அல்வழிக் கண் அது நாற்கணம் வரினும் இயல்பாகப்புணரும். அவற்றுள், உயிர்முதல் மொழி வரின் ணகரம் இரட்டும்.எ-டு : விண் +கொட்கும் =விண் ண த்துக் கொட்கும் என வும், வகர எழுத்துப்பேறு பெற்றுவிண்வ த் து க் கொட்கும் எனவும் வரும்.விண்குத்து (நீள்வரை வெற்ப) – எனச் சாரியை எதுவும் பெறாதும்வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வரும்.விண்கடிது, மாண்டது, வலிது, அரிது – என அல்வழிக்கண் வருமாறுகாண்க. (தொ.எ.305 நச்.)

விதத்தல்

விதத்தலாவது இன்னது இன்னவிடத்து இன்னதாம் என எடுத்து விதித்தலாம்.(நன். 164 மயிலை.)

விதானம்

இரண்டு குருவும் இரண்டு லகுவுமாய் முறையானே வரினும், இரண்டுஇலகுவும் இரண்டு குருவுமாய் முறையானே வரினும் விதானம் எனப்படும்.எ-டு : ‘துங்கக் கனகச் சோதி வளாகத் (துங், கக்; க, ன, கச்; சோ,திவ; ளா, கத்;)தங்கப் பெருநூல் ஆதியை ஆளும்செங்கட் சினவேள் சேவடி சேர்வார்தங்கட் கமரும் தண்கடல் நாடே’இப்பாடல், இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே வந்தது.‘பொருளாளிற் புகழாமென் (பொ, ரு; ளா, ளிற்; பு, க; ழா,மென்)றருளாளர்க் குரையாயுந்திருமார்பிற் சினனேயொன்றருளாய்நின் அடியேற்கே’இப்பாடல், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறை யானே வந்தது.இவ்வாறு கூறுதல் வடநூல்வழித் தமிழா சிரியர் ஒரு சாரார் கருத்து. (யா.வி. பக். 524)விதானம் – ஒரு பண் (யாழ். அக.)

விதி ஈறு

முன்னைய உயிரீறும் மெய்யீறும் ஒழிய உயிரீறாய் நிற்பன வும்,யாதானும் ஓருயிர் இறுதிக்கண் தோன்றி நிற்பனவும் ஆம்.எ-டு : மரம் + பலகை > ம ர + பலகை = மரப்பலகை: விதிஉயிரீறு; பொன் + குடம் > பொற் + குடம் = பொற்குடம் : விதி மெய்யீறு; உவா +பதினான்கு > உவாஅ + பதினான்கு = உவாஅப்பதினான்கு : (விதி உயிரீறாகிய) அகரப்பேறு; ஆ + ஐ > ஆ ன் + ஐ = ஆனை (விதி மெய்யீறாகிய) னகரப் பேறு (நன். 165சங்கர.)

விதிருதி

எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு 23 எழுத்து வரப்பாடும் பாடற்கண் இது காணப்படும். ‘விக்கிருதி’ என்றலும் அமையும். (வீ.சோ. 139 உரை)எ-டு : ‘வன்போர்புரி வெங்கணை யங்கர்பிரான் //மறனாலுயர் பேரற னார்குமரன் // தன்போலவி ளங்கின னாதலினென் //தனுவுங்குனி யாதுச ரங்கள்செலா // அன்போடிய துள்ளமெ னக்கினிமேல் //அவனோடமர் செய்தலு மிங்கரிதால் // வென்போகுவ னென்றலு மேயிறைவன்//விசையோடிர தத்தினை மீளவிடா’ (வில்லி. 17ஆம் போர்ச். 204)

வித்யுந்மாலா

நாற்சீரடி நான்காய் நிகழும் சந்த விருத்தம். இஃது அடிக்கு எட்டுஎழுத்துக்கள் கொண்ட வடமொழிவிருத்தம். இதன் அமைப்பு’ நான்கடிகளிலும்தொடர்ந்து (8 x 4=) 32 எழுத்துக் களும் உட்பட வந்து, தேமா தேமா தேமாதேமா என்ற வாய்பாட்டான் நிகழ்வது.எ-டு : ‘வீயா வாமா மாவா யாவீயாவா யாரா ராயா வாயாவாயா டேமா மாடே யாவாமாரா மாதோ தோமா ராமா’ (காஞ்சிப். சுரேசப். 20) (வி. பா.பக்.4)

வினா

ஆ ஏ ஓ- என்பன மூன்றும் வினா இடைச்சொற்களாம். இவை வினாப்பொருள்உணர்த்தும்வழி இவற்றை வினாஎழுத் துக்கள் என்றுரைத்தல் சாலாது;வினாஇடைச்சொற்கள் என்றே கூறல் வேண்டும். இவை எழுத்தாம் தன்மையொடுமொழியாம் தன்மையும் எய்துதலின், மொழிமரபை யொட்டி நூன்மரபின்இறுதிக்கண் வைக்கப்பட்டன.‘ எ ப்பொருளாயினும்’ (தொ.சொ.35 சேனா.), ‘யாது யா யாவை’ (தொ. சொ. 167சேனா.) என்ற நுற்பாக்களை நோக்க, எகரமும் யகரஆகாரமும் வினாஇடைச்சொற்களாம்.வருமாறு : அவ னா , அவ னே , அவ னோ ; எ ப்பொருள், யா வை (தொ. எ. 32 நச்.)

வினா இடைச்சொற்கள்

எ யா – என்பன மொழி முதலிலும், ஆ ஓ – என்பன மொழி யீற்றிலும், ஏ-மொழி முதல் ஈறு என ஈரிடத்தும் வினாப் பொருளை உணர்த்தி வரும். மொழிமுதல்வினா மொழி யொடு பிரிக்கமுடியாத தொடர்புடையது; ஈற்றுவினாமொழிக்குச் சிதைவின்றிப் பிரிக்கப்படும் நிலையது.வருமாறு : எவன், யாவன், ஏவன்; அவனா, அவனோ, அவனே. மொழிக்குஉறுப்பாக வரும் வினா இடைச்சொல்லை அகவினா என்றும், மொழி யின்புறத்ததாய்த் தன்னை வேறு பிரித்துழியும் நின்ற சொல் பொருள் தருவதாய்வரும் வினா இடைச்சொல்லைப் புறவினா என்றும் கூறுப.எ-டு : எ வன் – அகவினா; எ க்குதிரை – புறவினா (நன். 67)

வினா:வேறு பெயர்கள்

வினவல் எனினும், கடாவல் எனினும் வினா என்னும் ஒரு பொருட்கிளவியாம்.(மு. வீ. எழுத். 30)

வினாவுத்தரம்

மிறைக்கவிகளுள் ஒன்று; பாட்டின் இறுதியில் நிற்கும் ஒருசொற்றொடரின் எழுத்துக்களை ஓரெழுத்தோ இரண்டு மூன்றெழுத்துக்களோ கொண்டசொற்களாகப் பிரித்து அவை விடையாகும் வகையில் தொடக்கத்திலிருந்துவினாக் களை அமைத்துக் கடைசியில் அத்தொடர் முழுதுமே விடையாமாறு இறுதிவினாவை அமைத்துப் பாடும் சித்திரகவி. (உத்தரம் – விடை)எ-டு : ‘பூமகள்யார்? போவானை ஏவுவான்என்னுரைக்கும்? // நாமம் பொருசரத்திற்(கு) என் என்ப? – தாம் அழகின் //பேர் என்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும் // சேர்வென்? திருவேகம்பம்’சொற்றொடர் ‘திருவேகம்பம்’ என்பது. வினாக்களும் விடை யும் ஆமாறு :பூ மகள் யார்? – திரு; போவானை ஏவுகின்றவன் என் உரைக்கும்? – ஏகு;சரத்திற்கு நாமம் என் என்பர்? – அம்பு; அழகின் பேர் என்? – அம்;பெருமான் உவந்துறையும் இருப்பிடம் என்? – திருவேகம்பம். இவ்வாறுமுறையே காணப்படும். (தண்டி. 98 உரை)

வினைக்குறிப்பு, வினைக்குறிப்புப்பெயர்:வேறுபாடு

வினைக்குறிப்புச் சொல்லெல்லாம் தெரிநிலைவினை போல முதனிலையில்பொருள் சிறந்து நிற்கும்; வினைக்குறிப்புப் பெயர்ச்சொல் அவ்வாறன்றிவிகுதியில் பொருள் சிறந்து நிற்கும். எனவே, பொருளாதி ஆறும் காரணமாகவரும் வினைகுறிப்புச் சொற்கள் (பெயரும் வினையும் ஆதலின்) முதனிலைவிகுதி ஆகிய அவ்விரண்டிலும் பொருள் சிறந்து நிற்கும் எனஉய்த்துணர்ந்து கொள்க. (நன். 132 சிவஞா.)

வினைத்தொகை முதலியன ஒருமொழி ஆகாமை

வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித் தொகை – என்னும்அல்வழிப்புணர்ச்சியவாகிய தொகைநிலைத் தொடர்மொழிகளை ஒருமொழிகள்என்பாருமுளர். அவர் கூற்றுத் தாய்மலடி என்றாற் போலும்! (நன். 152சங்கர.)

வினைத்தொகை முதலியன விரியுமாறு

வினைத்தொகை முதலிய ஐந்தும் விரிந்தவழி, வினைத்தொகை பெயரெச்சமாயும்,பண்புத்தொகை இரண்டும் பெயரெச்சக் குறிப்பாயும், உவமைத்தொகை இரண்டாம்வேற்றுமையொடு பயனிலையாயும், உம்மைத்தொகை இடைச்சொற் சந்தியாயும்,அன்மொழித்தொகை சொற்களும் சந்திகளும் பலவாயும் விரியும்.எ-டு : கொல்யானை : கொன்ற யானை – எனவும், கருங் குதிரை :கரிதாகிய குதிரை – எனவும், ஆயன்சாத்தன்: ஆயனாகிய சாத்தன்- எனவும்,பொற்சுணங்கு : பொன்னைப் போன்ற சுணங்கு – எனவும், இராப் பகல்: இரவும்பகலும் – எனவும், பொற்றொடி : பொன்னாலாகிய தொடியினை யுடையாள் – எனவும்விரியும். (நன். 152 சங்கர.)

வினைத்தொகை, பண்புத்தொகை,அன்மொழித்தொகை இவை அல்வழி ஆகாமை

வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை – என்பனவற்றை அல்வழிச்சந்தியாக எடுத்தோதாராயினார். என்னையெனில், வினைத்தொகையும்பண்புத்தொகையும் அல்வழிப் பொருள ஆயினும், விரித்தவழி, முறையே முக்காலம் உணர்த்தும் தன்மையவாயும் ஐம்பாலும் உணர்த்தும் தன்மையவாயும்நிற்கும் தத்தம் தொகைப்பொருள் சிதைதலின் பிரிக்கப்படாமையால் பிரிவுஇல் ஒட்டுக்களாம் ஆதலின், ஈண்டு நிலைமொழி வருமொழி செய்துபிரிக்கப்படாது ‘மருவின் பாத்தி’யவாய்க் கொல்யானை அரிவாள் ஆடரங்குசெல்செலவு புணர்பொழுது செய்குன்று- எனவும், கருங் குதிரை நெடுங்கோல்பாசிலை பைங்கண் சேதா – எனவும் வருவன போல்வன முடிந்தாங்கு முடியும்ஆகலானும், அன்மொழித் தொகையானது வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைநிலைக்களங்களிலும் பிறந்து, பொற்றொடி பவளவாய் திரிதாடி வெள்ளாடைதகரஞாழல் – என ஒரு சொல் நீர்மைத்தாய்ப் பெயர்த்தன்மை எய்தி, ‘பொற்றொடிதந்த புனைமடல்’ எனப் பயனிலையொடு புணர்ந்துழி எழுவா யாயும்,‘சுடர்த்தொடி கேளாய் (கலி. 51) என முடிக்கும் சொல்லொடு புணர்ந்துழிவிளியாயும் அல்வழிப் புணர்ச்சி யாதலும், தகரஞாழல்பூசினாள் – தகரஞாழலைப்பூசினாள் – என வேற்றுமையுருபு தொக்கும் விரிந்தும் முடிக்கும்சொல்லொடு புணர்ந்துழி வேற்றுமைப் புணர்ச்சியாதலும் உடைய ஆகலானும்ஓதாராயினார் என்க.(எச்சத்தை முற்றினைச் சாரக் கூறாத முறையல கூற்றினானே,) வட்டப் பலகை- சாரைப்பாம்பு – என்பனபோலும் இரு பெய ரொட்டுப் பண்புத்தொகைகள்அல்வழிப் பொருளவாய்ப் புணர்ச்சி எய்தல் கொள்க. (இ. வி. 54 உரை)

வினைப்பகுதி வேறாதல்

நடந்தான் என்புழி வினைப் பகுதி நட என்பது. நடத்தினான் என்புழிவினைப்பகுதி நடத்து என்பது. உண்பித்தான் என்புழி வினைப்பகுதி உண்பிஎன்பது. எழுந்திருந்தான் என்புழி வினைப்பகுதி எழுந்திரு என்பது.இவ்வாறு சொல்லமைப்பிற்கேற்ப, வினைப்பகுதியை (விகுதி முதலியஉறுப்பொடு கூட)க் கொள்ள வேண்டும். வினைப் பகுதி சொல்லாகுமிடத்துத்திரிந்து விகாரப்படுதலுண்டு.எ-டு : வா – வந்தான்; தொடு – தொட்டான்; கொணா – கொணர்ந்தான்,(நன். 139)

வினைப்பகுதிகள் தொழிற்பெயர் ஆமாறு

ஆசிரியர் தொல்காப்பியனார் வினைப்பகுதிகளைப் பெயர் என்கிறார்.தொழிற்பெயராவன முதனிலைத்தொழிற்பெயர் களேயாம். தொல். கூறும்தொழிற்பெயர்கள் எல்லாம் முதனிலைத்தொழிற்பெயர்களையே சுட்டும். தும் -செம் – திரும் – என்பன போன்ற தொழிற்பெயர்களே அவரால் குறிப்பிடப்படுவன.நாட்டம்-ஆட்டம் – என்பனவற்றை மகர ஈற்றுத் தொழிற்பெயராகக் கொள்ளின்,தும் – செம் – என்பவை, தும்மல் – செம்மல் – என வழங்குதலின் அவற்றைலகரஈற்றுத் தொழிற்பெயராகக்கொள்ள நேரிடும். முதனிலைத்தொழிற் பெயர்களொடுவிகுதி பெற்ற தொழிற்பெயர்களையும் கோடல் ஆசிரியர் கருத்தன்று.வினைப்பகுதிகளைத் தொழிற் பெயர் என்னும் தொல்காப்பியனார் அங்ஙனம்பகுதியாதற்கு ஏலாத விகுதி பெற்ற தொழிற்பெயர்களை வினைப்பகுதியாகக்கொள்ள வில்லை; கொள்ளவும் இயலாது. (எ. ஆ. பக். 155)

வினைப்பகுபதம்

நடந்தான், நடக்கின்றான், நடப்பான் – என முக்கால வினை முற்றுப்பகுபதம் வந்தன. நடந்த, நடக்கின்ற, நடக்கும் – என முக்காலப் பெயரெச்சப்பகுபதம் வந்தன. நடந்து, நடக்க, நடக்கின் – என முக்காலவினையெச்சப்பகுபதம் வந்தன. இவையெல்லாம் உடன்பாடு.நடவான், நடவாத, நடவாது- இவை எதிர்மறை. இவை முறையே வினைமுற்றும்பெயரெச்ச வினையெச்சங்களும் ஆகிய தெரிநிலை வினைப்பகுபதங்கள்.பொன்னன், அகத்தன், ஆதிரையன், கரியன், கண்ணன், ஊணன், அற்று,இற்று,எற்று – என இவை குறிப்பு வினை முற்று. கரிய, பெரிய – என இவைகுறிப்புப் பெயரெச்சம். இவை உடன்பாடு.அல்லன், இல்லன், அன்று, இன்று- என இவை முற்று. அல்லாத, இல்லாத எனஇவை பெயரெச்சம். அன்றி, இன்றி, அல்லாமல், இல்லாமல் – என இவைவினையெச்சம். இவை முறையே எதிர்மறைமுற்றும், எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்களுமாகிய குறிப்புவினைப் பகுபதங்கள். (நன். 132 இராமா.)

வினைப்பெயர்ப் பகுபதம்

ஒரு தொழிற்சொல் எட்டு வேற்றுமையுருபும் ஏற்கின் வினைப் பெயராம்;அன்றித் தன் எச்சமான பெயர் கொண்டு முடியின் முற்றுவினைச்சொல்லாம்.உதாரணம் உண்டான் என்பது.உண்டானை, உண்டானொடு – எனவும், உண்டான் சாத்தன், உண்டான் தேவன்-எனவும் வரும்.அன்றியும் எடுத்தலோசையால் சொல்ல வினைப்பெயராம்; படுத்தலோசையால்சொல்ல முற்றுவினைப் பதமாம். (நன். 131 மயிலை.)

வினைமுதற்பொருள் விகுதி புணர்ந்துகெட்டு முடிந்தவை

திரை, அலை, நுரை, தளிர், பூ, காய், கனி – என்றாற் போல்வனவினைமுதற்பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டன. திரை அலைநுரை தளிர் – போன்றவை விகுதி குன்றி முதனிலை மாத்திரையாய்நிற்றல்பற்றி இவற்றை முதனிலை வினைப்பெயர் என வழங்குப.இகரவிகுதி வினைமுதற்பொருளை யுணர்த்தல் சேர்ந்தாரைக் கொல்லி,நுற்றுவரைக்கொல் லி , நாளோ தி , நூலோதி – போல்வனவற்றுள் காணப்படும். (சூ. வி. பக்.33)

வினைமுற்று விகுதிகள்

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ – இவை படர்க்கைவினைமுற்று விகுதிகள்.கு,டு,து,று, என், ஏல், அல், அன், அம், ஆம், எம், ஏம், ஓம், கும்,டும், தும், றும் – இவை தன்மை வினைமுற்று விகுதிகள்.ஐ, ஆய், இ, மின், இர், ஈர் – இவை முன்னிலை வினைமுற்றுவிகுதிகள்.ஈயர், க, ய – இவை வியங்கோள் விகுதிகள்.உம்- செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுவிகுதி. பிறவும் சில உள.(நன். 140)

வினையின் விகுதி பெயர்க்கண்ணும்வருதல்

வில்லி, வாளி, உருவிலி, திருவிலி, பொறியிலி, செவியிலி, அரசி,பார்ப்பனி, செட்டிச்சி, உழத்தி, கிழத்தி, கணவாட்டி, வண்ணாத்தி, காதறை,செவியறை- என ‘வினையின் விகுதி பெயரினும் சிலவே’ என அறிக. (நன். 139மயிலை.)

வியம விருத்தம்

‘வியமம்’ காண்க. நான்கடியும் தம்மில் எழுத்தும் எழுத்தல கும்ஒவ்வாது வரும் விருத்தம்.எ-டு : ‘கொற்றவா வளவி னுளவா வெனுந்தடத் (13)திற்றவா யில்லதெஞ் ஞான்று முள்ளது (11)சொற்றவாள் மனத்தினா லுருவிப் பின்னரே (13)மற்றவா னோக்கினான் மடங்கல் மொய்ம்பினான்.’ (12)இவ்வடிகளுள் முறையே எழுத்துக்கள் 13, 11, 13, 12 என ஒவ்வாதுவந்தவாறும், முதற்சீர்கள் நீங்கலாக ஏனைய சீர்கள் அலகு ஒவ்வாமையும்காணப்படும். (வீ. சோ. 139 உரை)

வியமம்

விஷமம்; சமமில்லாதது. ஓரடியும் எழுத்தும் எழுத்தலகும் ஒவ்வாமல்வரக்கூடிய விருத்தம் வியமம் எனப்படும். ஏனை யன சமம், பாதிச்சமம் எனஇரண்டாம். (வீ. சோ. 139 உரை)

வியாகரணம்

ஒரு வாக்கியத்தின் பகுதியவான சொற்களை வேறாக்கி மற்றைப்பகுதியோடுள்ள தொடர்பினைத் தெளிவாகக் காட்டுவது ‘வியாகரணம்’ என்றுபதஞ்சலியார் கூறியுள்ளார். ஓர்ப்பு, ஆகமம், எளிமை, ஐயம் தீர்த்தல் -என்பன இலக் கணத்தின் பயன். எனவே, இலக்கணம் சொற்றொடரமைதியைஆராய்ந்தறிந்து (ஓர்ப்பு), வழுவில்லாத சொற்களையும் அவற்றின்தொடர்பையும் (ஆகமம்) எளிய முறையில் ஐயமறக் கூறுதலையே நோக்கமாகக்கொண்டது. சொற்களின் பொருட்காரணமும் வரலாறும் கூறும் நோக்கம் அதற்குஇல்லை. (எ.ஆ.முன்னுரை பக். 11)

விரலும் விரலும் சேர நிற்றல்

உயிர்மெய்யெழுத்தில் மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் விரலும் விரலும்சேர நின்றாற்போல மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாய் இணைந்துநிற்கும். (தொ.எ.18 நச். உரை)

விரல் நுனிகள் தலைப்பெய்தாற் போல

புணர்ச்சிக்கண் நிறுத்த சொல்லின் ஈற்றெழுத்தும் குறித்துவருகிளவியின் முதலெழுத்தும் விரல்நுனிகள் தலைப்பெய் தாற் போல வேறுநின்று கலந்தனவாம். (தொ. எ. 18 இள. உரை)

விரவுப்பெயர்ப் புணர்ச்சி

விரவுப்பெயர், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வரினும்பெரும்பாலும் இயல்பாகப் புணரும்.எ-டு : சாத்தி குறியள், சாத்தன் குறியன் – அல்வழிசாத்தி செவி, சாத்தன் செவி – வேற்றுமை(தொ. எ. 155 நச். உரை)னகார ஈற்று இயற்பெயர்கள் சாத்தன் + தந்தை = சாத்தந்தை – என்றாற்போல விகாரப்பட்டுப் புணரும். (347 நச். உரை)

விராட்டு

அளவழிச் சந்தங்களில் சீர் ஒத்து ஓரடியில் ஈரெழுத்துக் குறைந்துவருவதாம்.எ-டு : ‘கொல்லைக் கொன்றைக் கொழுநன் தன்னைமல்லற் பொழில்வாய் மணியேர் முறுவல்முல்லைக் குறமா மடவாள் முறுகப்புல்லிக் குளிரப் பொழியாய் புயலே.’இதன்கண், முதலடியில் 9 எழுத்தும், ஏனைய அடிகளில் 11 எழுத்தும்வந்தவாறு. (யா. வி. பக். 513, 514)

விரித்தல்

செய்யுள்விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளில் ஓசைநலன் கருதி இடையே ஓர்ஒற்று விரிக்கப்படுவது இவ்விகாரம்; பிற எழுத்தும் சாரியையும்விரியினும் ஆம். இவ்விரித்தல் யாப்பு நலனேயன்றித் தொடைநயம் பற்றியும்நிகழும்.எ-டு : ‘சிறியிலை வெதிரின் நெல்விளை யு ம் மே’ – யாப்பு நலன் கருதி மகரம் விரிந்தது.‘தண்துறைவன்’ எனற்பாலது ‘தண்ணந்துறைவன்’ என அம்சாரியைவிரிந்தது.‘மனி த் தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே’ – எதுகைநலம் கருதித்தகரம் விரிந்தது. (நன். 155)

விரிவு, அதிகாரம், துணிவு

இவை சில உரை வகைகள். விரிவாவது, வேற்றுமை முதலிய தொக்குநின்றவற்றைவிரிக்க வேண்டுழி விரித்தல். அதிகார மாவது, எடுத்துக்கொண்ட அதிகாரம்இதுவாதலின் இச் சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத் தொடுபொருந்த உரைக்க வேண்டுழி உரைத்தல். துணிவாவது, ஐயுறக் கிடந்தவழிஇதற்கு இதுவே பொருளென உரைத்தல். (நன். 21 சங்கர.)

விருத்தமும் தண்டகமும் ஆமாறு

வடமொழி மரபில் விருத்தமும் தண்டகமும் அமையும் வகை கூறப்படுகிறது.நான்கடிகள் கொண்டதே விருத்தம். வட மொழியில் அடி ‘பாதம்’ எனப்படும்.அளவு ஒத்து வரும் விருத்தங்களை, அடி ஒன்றுக்கு ஓர் எழுத்து முதல்இருபத்தாறு எழுத்துக்கள் வரை கொண்டனவாகக் கூறுவர். ஓர் எழுத்துஇரண்டெழுத்து மூன்றெழுத்துக்களைப் பெற்ற அடிகளுக்கு ஓசை உண்டாகாதுஎன்று கூறி, நான்கெழுத்து முதல் இருபத்தாறு எழுத்து வரை கொண்டநான்கடிகளைப் பெற்று வருவதே விருத்தம் என்பாருமுளர். இருபத்தாறுஎழுத்துக்கு மேற்பட்டன எல்லாம் விருத்தம் ஆகா; விருத்தப் போலியே யாம்.இது வடநூல் மரபு. தமிழில் முப்பத்து மூன்று வரை வரும். அடி இரட்டித்தவிருத்தங்களில் அவ்வெண் ணிக்கையின் மேலும் வரும்.தண்டகம் நான்கு கட்டளை முதலாக வரும். (வீ. சோ. 134)

விருத்தி சந்தி

நிலைப்பத ஈற்று அகரஆகாரங்களில் ஒன்றன்முன், வரும் பத ஏகாரஐகாரங்களில் ஒன்று வந்தால் ஐகாரமும், அவ்விரண் டில் ஒன்றன்முன் ஓகாரஒளகாரங்களில் ஒன்று வந்தால் ஒளகாரமும், முறையே நிலைப்பத ஈறும் வரும்பதமுதலும் ஆகிய உயிர்கள் கெடத் தோன்றுதல் விருத்தி சந்தியாம்.எ-டு : சிவ + ஏகம் = சிவைகம்; சிவ + ஐக்கியம் = சிவைக்கியம்;தரா + ஏகவீரன் = தரைகவீரன்; ஏக + ஏகன் = ஏகைகன். கலச + ஓதனம் =கலசௌதனம்; மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்; கோமள + ஓடதி = கோமளௌடதி;திவ்விய + ஒளடதம் = திவ்வியௌடதம்; மகா + ஓடதி = மகௌடதி; மகா + ஒளடதம்= மகௌடதம்(தொ. வி. 38 உரை)அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்குமுன் ஏகார ஐகாரங்களை முதலிலேயுடையசொல் வரின், நிலைமொழி யிறுதியும் வருமொழி முதலும் கெட்டு ஐகாரம்வரும். அகர ஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்குமுன் ஓகார ஒளகாரங் களைமுதலிலேயுடைய சொல் வரின், நிலைமொழியிறுதியும் வருமொழி முதலும் கெட்டுஒளகாரம் வரும்.வருமாறு : சிவ + ஏகநாதன் = சிவைகநாதன், சிவ + ஐக்கியம் =சிவைக்கியம், மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்;கலச + ஓதனம் = கலசௌதனம், மந்திர + ஒளடதம் = மந்திரௌடதம், (மு.வீ. மொழி. 41, 42)

விளம்பிய பகுதி வேறாதல்

136ஆம் சூத்திரத்துச் சொல்லப்பட்ட எனைவகைப் பகுதி யுள்ளும் சிலபொருளான் வேறுபட்டும், சில மிக்கும். சில திரிந்தும், சில ஈறுகெட்டும் நிற்கையும் குற்றமாகா.எ-டு : வா என்னும் பகுதி, வந்தான் – வருகின்றான் – என்புழி,ருகரம் மிக்கும் திரிந்தும் வரும்.கொள் என்னும் பகுதி, கொண்டான் – கோடு – கோடும் – என்புழி,ளகரம், ணகரமாகியும் கெட்டும் ஆதி நீண்டும் வந்தது.வலைச்சி, புலைச்சி – என்றல் தொடக்கத்துப் பெயர்ப் பகுபதம்எல்லாம் வலைமை புலைமை – முதலான பெயர்ப்பகுபதத்து ஈறு கெட்டு ‘இ’ ஏற்றுவந்தன.(நன். 138 மயிலை.)வேறுபடாதது பிரகிருதியாமன்றி வேறுபட்டது பிரகிருதி யாகாதேனும்,தந்தையைக் குறிக்க மகன் எனப்பட்டா னொருவன் தன் மகனைக் குறிக்கத்தந்தையானாற் போலப் பிறவினைப்படுத்த வரும் இவ்விகுதிகளும் (வி, பி.)மேல்வரும் அன் ஆன் முதலிய விகுதிகளைக் குறிக்கப் பகுதியாம் ஆதலின்,‘விதியே’ எனப் புறனடை தந்தார்.இச்சூத்திரத்திற்கு வா என்னும் பகுதி முதலியன வந்தான் -வருகின்றான் – முதலாக விகாரப்படுதலைப் பொருளாகக் கூறுவாருமுளர்.இவ்விகாரங்கள் பகுபத உறுப்பாய் மாட் டெறிந்து கொள்ளப்பட்ட மூன்றுசந்தியுள்ளும் ஒன்பது விகாரத்துள்ளும் அமைந்துகிடத்தலின் அதுபொருந்தாது என்க. (நன். 139 சங்கர.)

விளிப்பெயர்ப் புணர்ச்சி

உயிரீறும் மெய்யீறுமாகிய விளிவேற்றுமைப்பெயர் வன்கணம் முதலாகியவருமொழி புணருமிடத்து இயல்பாக முடியும்.எ-டு : கொற்றா கேள், மடவாய் சொல் (நன். 160)

வீரசோழியச் சந்திப்படல அமைப்பு

28 காரிகைகளையுடைய சந்திப்படலமாகிய வீரசோழிய எழுத்ததிகாரத்துள்,தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்கள், அவற்றின் பிறப்பு, மொழி முதல்ஈறு இடை யெழுத்துக்கள், சந்தியில் இயல்புபுணர்ச்சி விகாரப்புணர்ச்சி,வடமொழியில் நகர உபசர்க்கமாகிய எதிர்மறைச்சொற்புணர்ச்சி, வடமொழி யில்தத்திதப் பெயர்ப்புணர்ச்சி, தமிழில் இயல்பு விகாரப் புணர்ச்சிகள்,சிறப்பாக ழகரம் ளகரம்போல் புணர்ச்சிக்கண் அமையும் தன்மை, நகரம்ஞகரமாகத் திரியும் இடங்கள்- முதலியவை இடம் பெறுகின்றன.

வீரசோழியத்தில் காணப்படும் சில அரியபுணர்ச்சி முடிவுகள்

இகர ஈகார ஐகார உயிரீற்று நிலைமொழி முன்னர் வருமொழி முதல் நகாரம்புணருமிடத்து, வந்த நகாரம் ஞகாரம் ஆகும்எ-டு : கவி + நன்று = கவி ஞன்று; தீ + நன்று = தீ ஞன்று; பனை +நன்று = பனை ஞன்றுழகார ளகார ஒற்றீற்று நிலைமொழி முன்னர் வருமொழி முதல் தகாரம்புணருமிடத்து, நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் திரிந்து தனித்தனியேஇரண்டும் டகாரம் ஆம்; நிலைமொழி ஈறுகெட, வருமொழி முதலில் வரும் தகரம்மாத்திரம் டகரம் ஆதலுமுண்டு. இம்முடிபு வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணது.எ-டு : பாழ் + தீமை = பாட்டீமை, பாடீமைநாள் + தீமை = நாட்டீமை, நாடீமை (சந்திப். 15)லகார ஒற்றீற்று நிலைமொழி முன்னர் வருமொழி முதல் யகாரம்புணருமிடத்து, இடையே ஓர் இகரம் தோன்றும். யகார ஒற்றீற்று நிலைமொழிமுன்னர் வருமொழி முதல் நகாரம் புணருமிடத்து, வந்த நகாரம் ஞகாரம்ஆகும்.எ-டு : அ) கல் + யாது = கல்லியாது – அல்வழிகல் + யாப்பு = கல்லியாப்பு – வேற்றுமைஆ) செய் + நின்ற = செய்(ஞ்)ஞின்ற(அ) நன்னூலார் ‘தன்னொழி மெய்முன்’ (மெய். 3 மயிலை.) என்றநுற்பாவில் லகரஈற்றுக்கு மாத்திரமன்றி யகரமெய் அல்லாத எல்லாஈற்றுக்கும் பிறன்கோட் கூறலாக இவ்விகா ரத்தைச் சுட்டியுள்ளார். (ஆ)அவர் ஐகாரமும் யகரமும் ஆகிய இவை நிலைமொழி இறுதியில் நிற்க, வருமொழிமுதற்கண் நகரம் வரின், நகரம் ஞகரம் ஆகும் என (நகரத்துக்கு ஞகரம்மொழியிடைப் போலியாக வருமாற்றை) இரண்டு ஈறுகளை யும் இணைத்துக்கூறியுள்ளார்.) (சந்திப். 17)ழகாரஈறு, வருமொழி முதலில் வன்கணம்வரின், டகார மாகவோ ணகாரமாகவோதிரியும்.எ-டு : தமிழ் +சொல் = தமிட்சொல்; பாழ் + செய = பாண் செயழகாரஈறு, வருமொழி முதலில் நகாரம் வரின், தான் அழிய, நகாரம்ணகாரமாகத் திரியும்.எ-டு : பாழ் + நன்று > பா + நன்று = பாணன்றுழகார ஈறு, மகாரம் வருமிடத்தே ணகாரம் ஆகும்.எ-டு : பாழ் + மேலது = பாண்மேலது (சந்திப். 18)ஒரோவழி, அ) நிலைமொழி டகாரம் ணகாரம் ஆதலும், ஆ) நிலைமொழிவருமொழியொடு புணருமிடத்தே ஒற்று வந்து தோன்றுதலும், இ) ஆகாரஈறு குறுகிஉகரம் பெறுதலும் கொள்க.வருமாறு : அ) வேட்கை + அவா > வேண் + அவா = வேணவா (தொ. எ. 289 இள.)ஆ) முன் + இல் > முன் +ற் + இல் = முன்றில்(தொ. எ. 356)இ) நிலா > நில > நில + உ = நிலவு (தொ. எ. 235)(சந்திப். 24)அ) வருமொழி முதற்கண் உயிரோ உயிர்மெய்யோ வரின், நிலைமொழிஈற்று மெய்கெட, ஈற்றயல் நீடலும், ஆ) வருமொழிமுதல் உயிர் கெடலும், இ)நிலைமொழியினது ஈற்றயல் உகரம் கெட அதனால் ஊரப்பட்ட லகரம் னகரமாக வும்ளகரம் ணகரமாகவும் திரிதலும் கொள்ளப்படும்.எ-டு : அ) மரம் + அடி > மர + அடி = மராடி குளம் + ஆம்பல் > குள + ஆம்பல் = குளாம்பல் கோணம் + கோணம் > கோண + கோணம் = கோணா கோணம். (தொ. எ. 312 இள. உரை)ஆ) மக + கை > மக + அத்து + கை = மகத்துக்கை – அத்துச் சாரியையினது அகரம்கெட்டது.ஆடி + கொண்டான் > ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான்; சித்திரை +கொண்டான் > சித்திரை+ இக்கு + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் -இக்குச்சாரியையினது இகரம் கெட்டது. (தொ. எ. 126, 127, 128)இ) போலும் > போல்ம் > போன்ம் (தொ. எ. 51)மருளும் > மருள்ம் > மருண்ம் (ந.எ.119 மயிலை.)(சந்திப். 25)

வீரசோழியம்

இவ்வைந்திலக்கண நூல் வீரராசேந்திரன் (கி.பி.1063-68) என்றசோழப்பேரரசன் ஆட்சியில், பொன்பற்றி என்ற சிற்றூரில் குறுநில மன்னராகவாழ்ந்த, புத்தமதத்தைப் பின்பற்றியவரான புத்தமித்திரனார் என்பவரால்தம்மன்னன் விருதுப்பெயர் தோன்ற ‘வீரசோழியம்’ என்னும் பெயர்த்தாகயாக்கப் பெற்றது. இதன்கண் 183 கட்டளைக் கலித்துறைச் சூத்திரங்கள் உள.இவற்றின் வேறாகப் பாயிரம் மூன்று கட்டளைக் கலித்துறைப் பாடல்களாகப்புனையப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்து, சொல், பொருள் – என மூன்றுஅதிகாரங்களை உடையது. எழுத்ததிகாரம் சந்திப்படலம் என்ற ஒரே படலத்தைஉடையது (28 காரிகைகள்). சொல்லதிகாரம், வேற்றுமைப்படலம் – காரகப் படலம்- தொகைப்படலம் – தத்திதப்படலம் – தாதுப்படலம் – கிரியாபதப் படலம் -என்ற ஆறு படலங்களையுடையது. (முறையே 9, 6, 8, 8, 11, 13 காரிகைகள். ஆக,கூடுதல் 55 காரிகைகள்; இறுதியில் இரண்டு வெண்பாக்கள்.)தொல்காப்பியத்தை அடுத்தமைந்த முழு முதனூல் இஃதெனினும், இதன்கண் வடமொழிமரபு பெரிதும் பின்பற்றப்பட்டுள்ளது. இதன் பொருளதிகாரம், பொருட் படலம்- யாப்புப்படலம் – அலங்காரப் படலம் – என்ற மூன்று பகுப்பினதாய்,முறையே 21 36 41 = 98 காரிகைகளையுடையது. பொருட் படலத்தில் அகத்திணைத்துறைகள் திணை அடிப்படையில் முல்லைநடையியல் குறிஞ்சிநடையியல் என்றாற்போல விரித்துக் கூறப்பட்டுள்ளன. புறத்திணையின் பாடாண் பகுதியில் நாடகஇலக்கணச் செய்திகள் பலவும் இடம் பெறுகின்றன. செய்யுள் பற்றிய யாப்புப்படலத்தில் தமிழ்ப்பாக்கள் – பாவினங்கள் – இவற்bறாடு, வடமொழி விருத்தங்கள் – தாண்டகங்கள் – மணிப்பிரவாளம் போன்றவற்றின் குறிப்பும் இடம்பெறுகின்றன. அலங்காரப் படலம் வட மொழித் தண்டியாசிரியர் வரைந்தகாவ்யாதர்சத்தைப் பெரும்பாலும் மொழிபெயர்த்து அமைக்கப்பட்டுள்ளது.சித்திரகவிகள் சில விளக்கப்பட்டுள. இந் நூலுக்குப் பெருந் தேவனார்என்பார் அரிய உரை இயற்றியுள்ளார். அவ்வுரை இந்நூலினைக் கற்கப்பெரிதும் உதவுகிறது.

வீரசோழியம் எண்ணுப்பெயர்த்திரிபுகளாகக் கூறுவன

ஒன்று ஒரு – ஓர் – எனவும், இரண்டு இரு – ஈர்- எனவும், மூன்றுமு மூ – எனவும், நால் நான்கு எனவும், ஐந்து ஐ எனவும் ஆறு அறுஎனவும், ஏழ் எழு எனவும், எட்டு எண் எனவும், ஒன்பது ஒன்பான் – தொண் -தொள் – எனவும், பத்து பான் – பன் – நூறு – பஃது – எனவும், நூறு ஆயிரம்எனவும் திரியப் பெறும்.வருமாறு : ஒருகல், ஓரரசு; இருகுடம், ஈராழாக்கு; முந்நீர்,மூவுழக்கு; நான்குகல்; ஐந்துகில்; அறுமுகம்; எழுகழஞ்சு;எண்கால்;ஒன்பது + செய்தி, பத்து, நூறு = ஒன்பான் செய்தி, தொண்ணூறு,தொள்ளாயிரம்; ஒன்று + பத்து; பத்து + இரண்டு; ஒன்பது + பத்து; ஒன்று +பத்து = ஒருபான், பன்னிரண்டு, தொண்ணூறு, ஒருபஃது; ஒன்பது + நூறு =தொள்ளாயிரம் (சந்திப். 23)(நான்கு என்பதே இயற்சொல்; ‘நால்’ அதன் திரிபு. ஆயின் உரையாசிரியர்பிறழக் கொண்டுள்ளார். அவர் கருத்துப் படியே திரிபுகுறிக்கப்பட்டுள்ளது)தொண்ணூறு, தொள்ளாயிரம் – என்பவற்றுக்குத் தொல்- காப்பியமும்,நேமிநாதமும், நன்னூலும் தனித்தனி விதி கூறும்.

வீரசோழியம் எழுத்தொலியாகக் கூறும்நால்வகையாவன

எடுத்தல், படுத்தல், நலிதல், உரப்பல் – என்ற நால்வகையால் மெய்கள்பிறக்கும் என்று வீரசோழியம் கூறுகிறது. (சந்திப். 4)

வீரசோழியம் குறிப்பிடும் நகாரஎதிர்மறை உபசருக்கப் புணர்ச்சி

வடமொழிக்கண் ஒரு சொல்லிற்குரிய பொருளை நீக்குதற் பொருட்டாக,அச்சொல்லின் முன்னர் ஒரு நகாரம் வரப் பெறும். அச்சொல் மெய்முதல்மொழியாயின், அச்சொல் முன் நகாரத்தின் மேலேறி நின்ற அகரவுயிர் நிற்கமெய் கெடும். வருமொழி உயிர்முதலாயின், நகாரத்தின் மேல்நின்ற உயிர்பிரிய அது முன்னும் ஒற்றுப் பின்னுமாக நிலைமாறி (ந > ந்அ > அந்) நிற்கும்.எ-டு : ந + சத்தியம் > அ + சத்தியம் = அசத்தியம்ந + அகன் > அந் + அகன் = அநகன் (அனகன்)(சந்திப். 11)(இச்செய்தி நேமிநாதத்திலும் உள்ளது.)

வீரசோழியம் குறிப்பிடும் மூன்றுவிகாரங்கள்

வடமொழிக்கண் ஒரு சொல்லினிடமாகவும் இருசொற்களி னிடமாகவும் ஆகமம் -ஆதேசம் – உலோபம் – என்ற மூன்று விகாரங்கள் நிகழும். அவை முறையேதமிழில் தோன்றல் – திரிதல் – கெடுதல் – எனப் பெயர்பெறும்.இவ்விகாரங்களை எழுத்து, சொல் என இரண்டன்கண்ணும் பொருத்தி, மொழி முதல்இடை கடை – என மூன்றானும் உறழப் பதினெட்டாம். (சந்திப். 10)இவ்வாறு பகுத்தல் தொல்காப்பியத்தில் இல்லை. தொல் காப்பியனார்ஒருமொழியில் நிகழும் மாற்றங்கள் பற்றிக் கூறாராயினார்.

வீரசோழியம் குறிப்பிடும்குறுக்கங்கள்

குற்றியலிகரம், குற்றியலுகரம், மகரக்குறுக்கம்- என்பனவே வீரசோழியம்குறிப்பிடும் குறுக்கங்கள். இவை முறையே அரையும் அரையும் காலும் ஆகியமாத்திரை பெறுவன. (சந்திப். 5, 19)

வீரசோழியம் குறிப்பிடும்விருத்திகுணசந்திகள்

வடமொழித் தனிச்சொல் அமைப்பினுள் இடையே நிகழும் திரிபுபற்றிவீரசோழியம் குறிப்பிடுகிறது. அகரத்திற்கு ஆகாரமும், இகரத்திற்குஐகாரமும், உகரத்திற்கு ஒளகாரமும், ‘இரு’ என்பதற்கு ‘ஆர்’ என்பதும்ஆதேசமாக வந்து விருத்தி எனப்படும். உகரத்திற்கு ஓகாரமும். இகரத்திற்குஏகாரமும் ஆதேசமாக வந்து குணம் எனப்படும்.(ஆதேசம் – திரிந்த எழுத்து) இந்த விருத்தியும் குணமும், தத்திதப்பெயர் முடிக்குமிடத்தும் தாதுப்பெயர் முடிக்கு மிடத்தும் வரப்பெறும்.இவற்றுள் முதல் நான்கு திரிபுகளும் ஆதிவிருத்தி எனவும், பின் இரண்டும்குணம் எனவும் வடநூலுள் கூறப்படும்.விருத்தி தத்திதப் பெயர்தாதுப்பெய ர்அ ‘ஆ’ ஆதல் தசரதன் மகன் தாசரதி வஸ் – வாஸம்இ ’ஐ’ஆதல் விதர்ப்பநாட்டு மன்னன் இஷ – ஐஷுவைதருப்பன்உ ‘ஒள’ஆதல் குருமரபில் பிறந்தவர் சுசி – சௌசம்கௌரவர்இரு‘ஆர்’ஆதல் இருடிகளால் செய்யப் கிரு – கார்யம்பட்டவை ஆரிடம்குணம்உ ‘ஓ’ஆதல் குசலத்தை யுடைய நாடு புத் – போதம்கோசலம்இ ‘ஏ’ ஆதல் சிபிமரபினன் செம்பியன் ஶ்ரு-ஶ்ரோத்ரம்ப்ரவிஶ்- ப்ரவேஶம்(தத்திதம் – பெயர்விகுதி;தாது – வினைப்பகுதி) (சந்திப். 12)

வீரசோழியம் கூறும் சொல்லணிகள்

மாலைமாற்று, சக்கரம், இனத்தாலும் எழுத்தாலும் கூறிய பாட்டு, வினாஉத்தரம், ஏகபாதம், காதை கரப்பு, சுழிகுளம், சித்திரப்பா, கோமூத்திரி,பலவகை மடக்குக்கள், என்பன காரிகையிலும், யாப்பருங்கலம் குறிப்பிடும்சித்திர கவிகள் உரையிலும் இடம் பெற்றுள்ளன. (வீ.சோ. 179, 181)

வீரசோழியம் மகரக்குறுக்கம் பற்றிக்குறிப்பது

மகரஈறு, வருமொழி முதலில் வகரம் வரின் மகரக் குறுக்கமாகி உட்பெறுபுள்ளி பெறும்.வருமாறு: வரும்+ வளவன் + வரும் @ வளவன் – நிலைமொழி யீற்று மகரம் குறுகிக் கால்மாத்திரை பெற்றுவந்தது.மகரக்குறுக்கம் மேலால் பெறும் புள்ளியோடு உள்ளும் புள்ளி பெறும்என்ற உரையாசிரியர் கருத்து மிகத் தெள்ளிது; ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ (தொ.எ. 14) என்ற நூற்பாவிற்கு உண்மையுரை காண உதவுகிறது.புள்ளியிடுவது மாத்திரை செம்பாதி குறைந்துள்ளது என்பதனைக் குறிப்பிடுவதாம். (‘ம’என்ற உயிர்மெய் பாதியாக மாத்திரை குறைந்தால் ‘ம்’ என்றுவரிவடிவில் மேலே புள்ளி பெறுகிறது. அது தானும் கால்மாத்திரையாக மேலும்குறைந்தால் ‘ம் {{special_puLLi}} ’ என்று உட் புள்ளியும் உடன்பெறுகிறது) (சந்திப்.19)

வெதிர்: புணருமாறு

வெதிர் என்ற சொல் அல்வழிப்புணர்ச்சியில் வன்கணம் வந்துழியும்இயல்பாகப் புணரும்.எ-டு : வெதிர் கடிது, நன்று, வலிது, அரிது (தொ. எ. 405நச்.)உருபுபுணர்ச்சிக்கண் சாரியை பெறாதும் பெற்றும் வரும்.எ-டு : வெதிர் + ஐ = வெதிரை, வெதிரினை (தொ. எ. 202)வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி முதலில் வன்கணம் வந்துழிஇனமெல்லெழுத்து மிக்குப் புணரும்.எ-டு : வெதிர் ங் கோடு, வெதிர் ஞ் செதிள், வெதிர் ந் தோல், வெதிர் ம் பூ‘வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை’ (நற். 62.) என வெதிர்அத்துச்சாரியை பெறுதலு முண்டு. (தொ. எ. 363 நச். உரை)

வெயில் : புணருமாறு

வெயில் என்ற சொல் அல்வழிக்கண் வன்மை இடைமை உயிர்க்கணங்கள் வரின்இயல்பாகப் புணரும்.எ-டு : வெயில் கடிது, சிறிது, தீது, பெரிது; வெயில் யாது,வலிது; வெயிலடைந்தது.மென்கணத்துள் ஞகரமும் மகரமும் வருவழி நிலைமொழி யீற்று லகரம் னகரம்ஆகும்; நகரம் வருவழி லகரம் கெட, நகரம் னகரமாகத் திரியும்.எ-டு : வெயில் + ஞான்றது, மாண்டது, நீண்டது= வெயின் ஞான்றது,வெயின் மாண்டது, வெயினீண்டது. (தொ. எ. 367)உருபேற்றற்கண் வெயில் இன்சாரியை பெறாதும் பெற்றும் வரும்.எ-டு : வெயில் + ஐ = வெயிலை, வெயிலினை(தொ. எ. 202 நச். உரை)வேற்றுமைப்புணர்ச்சிக்கண், வெயில் மழை என்ற சொல் போல,அத்துச்சாரியை பெறுதலோடு இன்சாரியை பெறுதலு முண்டு.எ-டு : வெயிலத்துக் கொண்டான், வெயிலத்து ஞான்றான், வெயிலத்துவந்தான், வெயிலத்தடைந்தான்; வெயி லிற் கொண்டான், வெயிலின் ஞான்றான்,வெயிலின் வந்தான், வெயிலினடைந்தான். (தொ. எ. 377)

வெரிந்:புணருமாறு

வெரிந் என்ற சொல் அல்வழிக்கண் இயல்பாகப் புணரும்.எ-டு : வெரிந் கடிது சிறிது, தீது, பெரிது; ஞான்றது, மாண்டது,யாது, வலிது, அழகிது.வெரிந் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.எ-டு : வெரிநினை, வெரிநினான், வெரிநிற்குவேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழி ஈறுகெட்டு வருமொழிவல்லெழுத்தும் அதன் இனமாகிய மெல்லெழுத்தும் மிக்குப் புணரும்.எ-டு : வெரி க் குறை, வெரி ச் சிறை, வெரி த் தலை, வெரி ப் புறம்; வெரி ங் குறை, வெரி ஞ் சிறை, வெரி ந் தலை, வெரி ம் புறம்.வெரிந் + நிறுத்த = வெரிநிறுத்த (அக. 37) வெரிந் + நிறம் =வெரிநிறம் – இருவழியும் மென்கணத்துள் நகரம் வருவழி நிலைமொழி யீற்றுநகரம் கெட்டது. (தொ. எ. 300, 301 நச்.)

வெள்யாறு: இலக்கணக்குறிப்பு

வெள்யாறு என்பது பண்புத் தொகை. இதனை வெள் + யாறு- எனப் பிரிப்ப,வெள் என்பது வெளியனாகிய – வெளியளாகிய, வெளியராகிய – வெளியதாகிய -வெளியவாகிய – என்ற ஐம்பாற்கு முரிய பண்புப்பகுதி. இதனை யாறு என்ற வருமொழிக்கேற்ப ‘வெளியதாகிய’ என ஒன்றன்பால் விகுதி யுடைய சொல்லாகவிரித்துக் காண்டல், ஐம்பாலுக்கும் உரிய விகுதி முதலியன பெற்றுவிரியும் அதன் முழுத்தகுதிக்கு ஏலாது. ஏலாமையின், பண்புத்தொகையைப்பகுக்காமல் ஒரு சொல்லாகவே கோடல் தொல். கருத்தாதலின், நச்சினார்க்கினியர் பண்புத்தொகையை ஒரு சொல்லாகவே கொண்டார். (தொ. எ. 24, 482 நச்.உரை)

வேணவா:சொல்லமைப்பு

வேட்கை என்ற நிலைமொழி அவா என்ற வருமொழியொடு புணரும்வழி இறுதிக்ககரஐகாரம் கெட்டு டகரஒற்று ணகர ஒற்றாகி, வேண் +அவா =வேணவா- என்றுபுணரும். வேட்கை யாவது ஒருபொருளின்மேல் தோன்றும் பற்றுள்ளம்; அவா -அப்பொருளைப் பெறல் வேண்டும் என மேன்மேல் நிகழ் கின்ற ஆசை. வேணவா-வேட்கையான் உளதாகிய அவா – என மூன்றன் தொகை. வேட்கையும் அவாவும் எனஉம்மைத் தொகையுமாம். (தொ. எ. 288 நச்.)ஆள்- ஆண்; எள் – எண்- என இவ்வாறு ளகரமெய் ணகர மெய்யாகத் திரிதல்கூடும். வேட்கை என்பதன் முதனிலை யாகிய வேள் என்பதன் ளகரமெய்ணகரமெய்யாகத் திரிந்து நின்று அவா என்ற சொல்லொடு புணர்ந்து’ ‘வேணவா’என்றாயிற்று எனல் பொருந்தும். (எ. ஆ. பக். 148)

வேண்டா கூறி வேண்டியது முடித்தல்

தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி, அதனால் நூற்பாக்களில்கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்.எட்டு என்ற நிலைமொழி நிறை அளவுப் பெயர்களாகிய வருமொழி வன்கணத்தொடுபுணரும்வழி, எட்டு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யொடும் கெட்டுஈற்றயல் டகரம் ணகரமாக வன்கணத்தொடு புணரும்.எ-டு : எண் கழஞ்சு, சீரகம், தொடி, பலம்வருமொழி இயல்புகணத்தின்கண்ணும் எட்டு இவ்வாறே முடிந்துபுணரும்.எ-டு : எண்மண்டை, எண்மா; எண்வட்டி, எண்வரை; எண்ணகல்,எண்ணந்தை.எ. 144ஆம் நாற்பாவால் முன்னரே பெறப்பட்ட இதனைக் குறிப்பிட வேண்டா;குறிப்பிட்ட இவ்வேண்டா கூறலான், எண் என்பது தனிக்குறில் முன்ஒற்றாதலின், வருமொழி நிறை அளவுப் பெயர்கள் உயிர் முதலவாக வரின், எண் +அகல் = எண்ணகல், எண் + அந்தை = எண்ணந்தை – என ணகர ஒற்று இரட்டிப்புணர்தல் கொள்ளப்படுகிறது. (தொ. எ. 450 நச். உரை)உயர்திணைக்கண் ‘இ உ ஐ ஓ’ என்ற நான்கு ஈற்றுப் பெயர்களேவிளியேற்கும் என்று கூறி, அவை விளியேற்கு மாறும் கூறிப் பிறகு‘உயர்தினை மருங்கின் ஏனை உயிரே தாம்விளி கொள்ளா’ (தொ.சொ. 126 நச்.)எனவும், அஃறிணைக் கண் னரலள- என்ற நான்கு ஈற்றுப் பெயர்களேவிளியேற்கும் என்று கூறிப் பின் ‘ஏனைப் புள்ளி யீறு விளிகொள்ளா’ (தொ.சொ. 131) எனவும் கூறுவது வேண்டாகூறி வேண்டியது முடித்தல். அஃதாவதுஉயர்திணைப் பெயர்களும் விரவுப் பெயர்களும் குறிப்பிட்ட முறையானன்றிபிறவாற்றானும் விளியேற்கும் என்ற செய்தியைக் கொள்ள வைப்பதாம். மேலும்கூறிய ஈறுகளன்றி ஏனைய ஈறுகள் இருதிணைப் பெயர் களிலும்விளியேற்பனவற்றையும் கொள்ளச் செய்வதாம்.எ-டு : கணி – கணியே, கரி – கரியே; மக – மகவே; ஆடூ – ஆடூவே; மகன்- மகனே, மன்னவன் – மன்னவனே; நம்பன் – நம்பான்; வாயிலோன் – வாயிலோயே;இறைவர் – இறைவரே, திருமால் – திருமாலே, தம்முன் – தம்முனே; நம்முன் -நம்முனா; அடிகள் -அடிகேள்; பெண்டிர்- பெண்டிரோ; கேளிர் – கேளீர்; ஆய்- ஆயே; கிழவோன் – கிழவோயே; மாயோன் – மாயோயே. (தொ. சொ. 126, 131நச்.)

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

மொழியிடையே மெய்யுடன் மெய் மயங்கும்போது க ச த ப என்ற நான்குமெய்யும் பிற மெய்யொடு மயங்காமல் தம் மொடு தாமே மயங்கும். ர ழ – என்றஇரண்டு மெய்யும் தம்மொடு தாம் மயங்காமல் தம்மொடு பிறவே மயங்கும். ஏனையபன்னிரண்டுமெய்களும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும். கசதபநீங்கலான பதினான்கு மெய்களும் பிறமெய் களொடு கூடும் கூட்டம்வேற்றுநிலை மெய்மயக்க மாம். ஒரு மொழி புணர்மொழி இரண்டும்கொள்ளப்படும். அவை வருமாறு:-ஙகரத்தின் முன் ககரமும், வகரத்தின் முன் யகரமும் மயங்கும்.எ-டு : பங்கு, தெவ் யாதுஞகரநகரங்களின் முன் அவற்றுக்கு இனமாகிய சகரதகரங் களும் யகரமும்மயங்கும்.எ-டு : பஞ்சு, உரிஞ் யாது; பந்து, பொருந் யாதுடகர றகரங்களின் முன் கசப என்னும் மெய்கள் மயங்கும்.எ-டு : வெட்கம், மாட்சி, திட்பம்; கற்க, பயிற்சி, கற்பு.ணகரனகரங்களின் முன் அவற்றின் இனமாகிய டகரறகரங் களும், க ச ஞ ப ம யவ – என்னும் மெய்களும் மயங்கும்.எ-டு : விண்டு, உண்கு, வெண்சோறு, வெண்ஞமலி, பண்பு, வெண்மை, மண்யாது, மண் வலிது.கன்று, புன்கு, நன்செய், புன்ஞமலி, இன்பம், நன்மை, பொன் யாது,பொன் வலிது.மகரத்தின் முன் ப ய வ – என்னும் மூன்று மெய்களும் மயங்கும்.எ-டு : நம்பன், கலம் யாது, கலம் வலிது.ய ர ழ – என்னும் மெய்களின் முன் மொழிக்கு முதலாம் என்ற பத்துமெய்களும் மயங்கும்.எ-டு : பொய்கை, கொய்சகம், எய்து, செய்நர், செய்ப, சேய்மை,ஆய்வு, பாய்ஞெகிழி, (வேய்ங்குழல்)(யகரத்தின் முன் யகரம் மயங்குதல் உடனிலை மெய் மயக்கம்.)சேர்க, வார்சிலை, ஓர்தும், சேர்நர், மார்பு, சீர்மை, ஆர்வம்,போர்யானை, நேர்ஞெகிழி, (ஆர்ங்கோடு)மூழ்கி, வீழ்சிலை, வாழ்தல் வாழ்நன்,சூழ்ப, கீழ்மை, வாழ்வு,வீழ்யானை, வாழ்ஞெண்டு, (பாழ்ங்கிணறு)லகரளகரங்களின் முன் க ச ப வ ய – என்னும் இவ்வைந்து மெய்களும்மயங்கும்.எ-டு : நல்கி, வல்சி, சால்பு, செல்வம், கல்யாணம் (கொல் யானை);வெள்கி, நீள்சிலை, கொள்ப, கேள்வி, வெள்யானை (நன். 110- 117)க ச த ப- என்ற நான்கனையும் ஒழித்த ஏனைய பதினான்கு மெய்களும்சொற்களையுண்டாக்குமிடத்துத் தம்மொடு தாமே இணைந்து வாராமல்பிறமெய்களோடு இணைந்து வரும் சேர்க்கை வேற்றுநிலை மெய் மயக்கமாம்.எ-டு : அங்கு, மஞ்சள், கட்சி, கண்டு, பந்து, கம்பம், வெய்து,பார்த்து, செல்வம், தெவ் யாது, போழ்து, தெள்கு, ஒற்கம், கன்று. (தொ.எ. 22 நச்.)

வேற்றுமை இயற்கை

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வந்துழி, இடையேவல்லொற்று மிகுதல் வேற்றுமை இயல் பாகும்.எ-டு : உரி + குறை = உரிக் குறை; உரியும் அதில் குறைந்ததும் -என உம்மைத் தொகை.உரிக்கூறு, தொடிக்கூறு, காணிக்கூறு – முதலியனவும் இடையே வல்லொற்றுமிக்க உம்மைத்தொகைகளாம். சில அல்வழித்தொடர்கள் ‘வேற்றுமை இயற்கையாம்’என்று கூறப்படவே, அவை வேற்றுமைப்புணர்ச்சி அல்ல என்பது தெளிவாகும்.(தொ. எ. 166 நச். உரை)

வேற்றுமை உருபு ஆறு

ஐ ஒடு கு இன் அது கண் – என்பன இரண்டு முதல் ஏழ் ஈறான வேற்றுமையுருபுகளாம். இவை விரிந்தும் தொக்கும் புணரும் புணர்ச்சியே வேற்றுமைப்புணர்ச்சியாம். எழுவாய்வேற்- றுமைப்புணர்ச்சியும்விளிவேற்றுமைப்புணர்ச்சியும் அல் வழிப் புணர்ச்சியாம். (தொ. எ. 113நச்.)

வேற்றுமை எட்டு, ஆறு எனல்

பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலால் வேற்றுமை எட்டு என்பார், இங்கேஎழுவாய்க்கும் விளிக்கும் உருபு பெயரும் பெயரின் விகாரமுமே அன்றிவேறில்லாமையால், அந்த இரண்டையும் நீக்கி, தமக்கென உருபுடையன இடை நின்றஆறு வேற்றுமையுமே ஆதலால், அவற்றின் உருபு ஆறும் தொக்கும் விரிந்தும்இடைநிற்க, அந்த ஆறோடும் பதங்கள் புணரும் புணர்ச்சியை வேற்றுமைப்புணர்ச்சி என்றார். (நன். 152 இராமா.)

வேற்றுமை நயமின்றி ஒற்றுமைநயம்

உயிர்மெய்யான ககரஙகரங்கள் முதலியவற்றுக்கும் தனி மெய்யானககரஙகரங்கள் முதலியவற்றிற்கும் வடிவு ஒன்றாக எழுதப்படும் இடமும்உண்டு. மெய்களை அகரத்தொடு புணர்த்து எழுதுவது வேற்றுமை நயமாகும். அதனைவிடுத்து மெய்களுக்கு இயற்கையான புள்ளிகளோடு அவற்றை வரிவடிவில்எழுதுதல் ஒற்றுமை நயமாகும். அப்பொழுது அவை ஒவ்வொன்றற்கும் மாத்திரைஅரையாகும். (தொ. எ. 11 இள.உரை)அவ் வரைமாத்திரையுடைய மெய் ஒவ்வொன்றனையும் தனித்துக் கூறிக்காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயரும் தன்மையாய் நிற்றலின். இனிஅதனைச் சில மொழிமேல் பெய்து, காக்கை – கோங்கு – கவ்வை – எனக் காட்டுப.மெய் என்பது அஃறிணைஇயற்பெயர் ஆதலின் மெய் என்னும் ஒற்றுமை பற்றி ‘அரை’என்றார். (தொ. எ. நச். உரை)நூல்மரபினகத்து மெய்மயக்கம் வேற்றுமைநயம் கொண்டது. அஃதாவதுமெய்யோடு உயிர்மெய் மயங்குமேனும் அவ்வுயிர் மெய்யில் மெய்யைப்பிரித்துக்கொண்டு மெய்மயக்கம் எனப் பட்டது. மொழிமரபில் கூறும்ஈரொற்றுடனிலை இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்து வரும் ஒற்றுமைநயம்பற்றியது.எ-டு : தஞ்சம் – ஞகரமெய் சகரமெய்யொடு மயங்கிய மயக்கம்வாழ்ந்தனம் – ழகரமெய் நகரமெய்யொடு மயங்கிய ஈரொற்றுடனிலை. (தொ.எ. 48. இள. உரை)

வேற்றுமை வரும் இடம்

வேற்றுமையுருபுகள் தம் பொருளைத் தரப் பெயர்களை அடுத்து வரும்; ஏனைவினை இடை உரிகளை அடுத்து வாரா. (வினைமுற்றை யடுத்து வருமிடத்தேமுற்றுப் பெயர்த் தன்மை பெற்று வினையாலணையும் பெயராம். வந்தானை என்பதுவந்தவனை எனப் பொருள்படும்) (நன். 241)

வேற்றுமைத்தொகைகளுள் இயைந்து வருவன

ஐம்முதல் ஆறு உருபு தொக்கு நிற்பத் தொடர்ந்து வரு மொழிகள் இயல்பும்திரிபும் குறைதலும் மிகுதலுமாக வரும்.எ-டு : மணிகொடுத்தான் – இயல்பு; க ற் கடாவினான் – திரிபு; திண்கொண்ட (தோள்) – குறைதல் (திண் மை + கொண்ட = திண்கொண்ட); பலாக்குறைத்தான் – மிகுதல். (தொ. வி. 91உரை)

வேற்றுமைப்புணர்ச்சி

வேற்றுமையுருபு தொக நிலைமொழியும் வருமொழியும் புணரும் புணர்ச்சிவேற்றுமைப் புணர்ச்சியாம். வேற்றுமைப் பொருள்பட நிலைவருமொழிகள் இயைவதுஇது. வேற்றுமை யுருபு பெயரொடு புணரும் புணர்ச்சியும் வேற்றுமைப்புணர்ச்சியாம். வேற்றுமை யுருபுகள் விரிந்த நிலையில் உருபீற்றுநிலைமொழி வருமொழியோடு புணர்வதும் வேற்றுமைப் புணர்ச்சியே.எ-டு : கல்லெறிந்தான் – அவ் + ஐ = அவற்றை – கல்லா லெறிந்தான் -என முறையே காண்க.

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிசிறப்புவிதி

உருபு புணர்ச்சிக்குக் கூறியன எல்லாம் பொருட் புணர்ச்சிக்கும்ஒக்கும். உருபு தொக நிலைவருமொழிகள் வேற்றுமைப் பொருள்படப் புணர்தலின்வேற்றுமைப் பொருட்புணர்ச்சி எனப்பட்டது. அவ் இவ் உவ் – என்பனஉருபேற்குமிடத்து அற்றுச்சாரியை பெறுதல்போலப் பொருட்புணர்ச்சிக்கும்பெறும் என்றல் போல்வன. (வேற்றுமைப் பொருட்புணர்ச்சி வருமொழிபெயராயவழியே கொள்ளப்படும்.)வருமாறு : அவ் + ஐ > அவ் + அற்று + ஐ = அவற்றைஅவ் + கோடு > அவ் + அற்று + கோடு = அவற்றுக் கோடு ( ஆறன் தொகை) (நன்.238)தொல்காப்பிய வற்று நன்னூலில் அற்று எனப்படும்.

வேல் என்ற மரப்பெயர் புணருமாறு

வேல் என்ற மரப்பெயர் அல்வழிக்கண் பெரும்பாலும் இயல்பாகப் புணரும்.(வன்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் இம்மூன்றும் கொள்க. மென்கணத்துள் ஞகரமகரங்கள் வருவழி லகரம் னகர மாகும்; நகரம் வருவழி லகரம் கெட நகரம்னகரமாகத் திரியும்)எ-டு : வேல்கடிது, சிறிது, தீது, பெரிது; யாது, வலிது, அழகிது;வேன் ஞான்றது, வேன் மாண்டது, வேனீண்டது.உருபுபுணர்ச்சிக்கண் அத்துச்சாரியை பெறும்.எ-டு : வேலத்தை, வேலத்தால், வேலத்துக்கண்(தொ. எ. 405, 202 நச்.)வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் நாற்கணம் வரினும் அம்முச்சாரியைபெற்றுப் புணரும்.எ-டு : வேலங்கோடு, வேலஞ்செதிள், வேலந்தோல், வேலம் பூ; வேலஞெரி,வேலநுனி, வேலமுரி; வேலவிறகு; வேலவழகு (வகரம் உடம்படுமெய்) (தொ. எ.375)

வைதாளியை (விருத்தம்)

வடமொழியில் இது வைதாளீயம் எனப்படும். இதன் அமைப்பு: முதலடியும்மூன்றாமடியும் முதற்கண் ஆறு மாத்திரையும், பின் இடையில் இலகு பெற்றஒரு மாத்திரைக் கணமும், பின் ஓர் இலகுவும் குருவுமாகக் கொண்டுநடக்கும். இரண்டாமடியும் நான்காமடியும் முதற்கண் எட்டு மாத்திரை யும்,பின் இடையில் இலகு பெற்ற ஒரு மாத்திரைக் கணமும், பின் ஓர்இலகுவும்குருவும் பெற்று நடக்கும். ஆகவே, இந்த வைதாளியை என்னும் சந்தத்தில்,முதலாம் அடியிலும் மூன்றாம் அடியிலும் 14 மாத்திரைகளும், இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் 16 மாத்திரைகளும் இருக்கும் என்பதுபோதரும். மேலும் ஓர் அமைப்பு முறை வடமொழி யாப்பு நூலில்கூறப்படுகிறது. அஃதாவது இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும்அமையும் 8 மாத்திரைகள் முற்றிலும் இலகுவான நான்கெழுத்துக்களைக் கொண்டனவாகவோ, இரண்டு குருக்களால் ஆனவையாகவோ இருத் தல் கூடாது என்பது.இவ்விலக்கணமும் கீழே காட்டப்படும் வீரசோழிய உரை உதாரணச் செய்யுட்களில்அமைந்துள் ளது.எ-டு : ‘கருவே யேறூர்வ னாளிலேவருவே னென்றே போந்த மன்னவன்திருவே றாய்த்தூர வெய்தினார்மருவா ரெனினென் னின்னு யிர்நிலா.’(கருவேயே றூர்வனா ளிலேவருவேனென்றே போந்த மன் னவன்திரு வே றாய்த் தூர வெய் தினார்மருவாரெனினென் இன்னுயிர் நி லா)வேறொருவகை :‘கொன்றைப் புதுவேரி கொண்டிதோமன்றற் றண்ணிள வாடை வந்ததால்ஒன்றிப் பலகோப முள்ளினான்வென்றிக் கார்முக வேந்து மாரவேள்.’(கொன்றைப் புது வேரிகொண் டிதோமன் றற்றண்ணிள வாடைவந் த தால்ஒன்றிப்பல கோபமுள் ளினான்வென்றிக் கார்முக வேந்துமா ரவேள்)மற்றொருவகை :‘கானத்தண் கொன்றை மாலைதாமான த்தின்றென் கொம்பு வாடுமால்ஊனத்திங் கட்கு மாறுகொல் நானித்தாற் றிலனாரி பாகனே.’(கானத்தண் கொன்றைமா லைதாமான த்தின்றென் கொம்புவா டுமால்வானத்திங் கட்குமா று கொல்நானித்தாற்றில னாரிபா கனே.)அடைப்புக் குறியுள் குறிப்பிட்டவாறு சீர்பிரித்துக்கொள்க. பிறவாறு வருவனவும் கண்டுகொள்க. (வீ.சோ.பக். 192,193)