ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
வைதாளியை (விருத்தம்) | வடமொழியில் இது வைதாளீயம் எனப்படும். இதன் அமைப்பு: முதலடியும்மூன்றாமடியும் முதற்கண் ஆறு மாத்திரையும், பின் இடையில் இலகு பெற்றஒரு மாத்திரைக் கணமும், பின் ஓர் இலகுவும் குருவுமாகக் கொண்டுநடக்கும். இரண்டாமடியும் நான்காமடியும் முதற்கண் எட்டு மாத்திரை யும்,பின் இடையில் இலகு பெற்ற ஒரு மாத்திரைக் கணமும், பின் ஓர்இலகுவும்குருவும் பெற்று நடக்கும். ஆகவே, இந்த வைதாளியை என்னும் சந்தத்தில்,முதலாம் அடியிலும் மூன்றாம் அடியிலும் 14 மாத்திரைகளும், இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் 16 மாத்திரைகளும் இருக்கும் என்பதுபோதரும். மேலும் ஓர் அமைப்பு முறை வடமொழி யாப்பு நூலில்கூறப்படுகிறது. அஃதாவது இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும்அமையும் 8 மாத்திரைகள் முற்றிலும் இலகுவான நான்கெழுத்துக்களைக் கொண்டனவாகவோ, இரண்டு குருக்களால் ஆனவையாகவோ இருத் தல் கூடாது என்பது.இவ்விலக்கணமும் கீழே காட்டப்படும் வீரசோழிய உரை உதாரணச் செய்யுட்களில்அமைந்துள் ளது.எ-டு : ‘கருவே யேறூர்வ னாளிலேவருவே னென்றே போந்த மன்னவன்திருவே றாய்த்தூர வெய்தினார்மருவா ரெனினென் னின்னு யிர்நிலா.’(கருவேயே றூர்வனா ளிலேவருவேனென்றே போந்த மன் னவன்திரு வே றாய்த் தூர வெய் தினார்மருவாரெனினென் இன்னுயிர் நி லா)வேறொருவகை :‘கொன்றைப் புதுவேரி கொண்டிதோமன்றற் றண்ணிள வாடை வந்ததால்ஒன்றிப் பலகோப முள்ளினான்வென்றிக் கார்முக வேந்து மாரவேள்.’(கொன்றைப் புது வேரிகொண் டிதோமன் றற்றண்ணிள வாடைவந் த தால்ஒன்றிப்பல கோபமுள் ளினான்வென்றிக் கார்முக வேந்துமா ரவேள்)மற்றொருவகை :‘கானத்தண் கொன்றை மாலைதாமான த்தின்றென் கொம்பு வாடுமால்ஊனத்திங் கட்கு மாறுகொல் நானித்தாற் றிலனாரி பாகனே.’(கானத்தண் கொன்றைமா லைதாமான த்தின்றென் கொம்புவா டுமால்வானத்திங் கட்குமா று கொல்நானித்தாற்றில னாரிபா கனே.)அடைப்புக் குறியுள் குறிப்பிட்டவாறு சீர்பிரித்துக்கொள்க. பிறவாறு வருவனவும் கண்டுகொள்க. (வீ.சோ.பக். 192,193) |