ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
வேணவா:சொல்லமைப்பு | வேட்கை என்ற நிலைமொழி அவா என்ற வருமொழியொடு புணரும்வழி இறுதிக்ககரஐகாரம் கெட்டு டகரஒற்று ணகர ஒற்றாகி, வேண் +அவா =வேணவா- என்றுபுணரும். வேட்கை யாவது ஒருபொருளின்மேல் தோன்றும் பற்றுள்ளம்; அவா -அப்பொருளைப் பெறல் வேண்டும் என மேன்மேல் நிகழ் கின்ற ஆசை. வேணவா-வேட்கையான் உளதாகிய அவா – என மூன்றன் தொகை. வேட்கையும் அவாவும் எனஉம்மைத் தொகையுமாம். (தொ. எ. 288 நச்.)ஆள்- ஆண்; எள் – எண்- என இவ்வாறு ளகரமெய் ணகர மெய்யாகத் திரிதல்கூடும். வேட்கை என்பதன் முதனிலை யாகிய வேள் என்பதன் ளகரமெய்ணகரமெய்யாகத் திரிந்து நின்று அவா என்ற சொல்லொடு புணர்ந்து’ ‘வேணவா’என்றாயிற்று எனல் பொருந்தும். (எ. ஆ. பக். 148) |
வேண்டா கூறி வேண்டியது முடித்தல் | தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி, அதனால் நூற்பாக்களில்கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்.எட்டு என்ற நிலைமொழி நிறை அளவுப் பெயர்களாகிய வருமொழி வன்கணத்தொடுபுணரும்வழி, எட்டு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யொடும் கெட்டுஈற்றயல் டகரம் ணகரமாக வன்கணத்தொடு புணரும்.எ-டு : எண் கழஞ்சு, சீரகம், தொடி, பலம்வருமொழி இயல்புகணத்தின்கண்ணும் எட்டு இவ்வாறே முடிந்துபுணரும்.எ-டு : எண்மண்டை, எண்மா; எண்வட்டி, எண்வரை; எண்ணகல்,எண்ணந்தை.எ. 144ஆம் நாற்பாவால் முன்னரே பெறப்பட்ட இதனைக் குறிப்பிட வேண்டா;குறிப்பிட்ட இவ்வேண்டா கூறலான், எண் என்பது தனிக்குறில் முன்ஒற்றாதலின், வருமொழி நிறை அளவுப் பெயர்கள் உயிர் முதலவாக வரின், எண் +அகல் = எண்ணகல், எண் + அந்தை = எண்ணந்தை – என ணகர ஒற்று இரட்டிப்புணர்தல் கொள்ளப்படுகிறது. (தொ. எ. 450 நச். உரை)உயர்திணைக்கண் ‘இ உ ஐ ஓ’ என்ற நான்கு ஈற்றுப் பெயர்களேவிளியேற்கும் என்று கூறி, அவை விளியேற்கு மாறும் கூறிப் பிறகு‘உயர்தினை மருங்கின் ஏனை உயிரே தாம்விளி கொள்ளா’ (தொ.சொ. 126 நச்.)எனவும், அஃறிணைக் கண் னரலள- என்ற நான்கு ஈற்றுப் பெயர்களேவிளியேற்கும் என்று கூறிப் பின் ‘ஏனைப் புள்ளி யீறு விளிகொள்ளா’ (தொ.சொ. 131) எனவும் கூறுவது வேண்டாகூறி வேண்டியது முடித்தல். அஃதாவதுஉயர்திணைப் பெயர்களும் விரவுப் பெயர்களும் குறிப்பிட்ட முறையானன்றிபிறவாற்றானும் விளியேற்கும் என்ற செய்தியைக் கொள்ள வைப்பதாம். மேலும்கூறிய ஈறுகளன்றி ஏனைய ஈறுகள் இருதிணைப் பெயர் களிலும்விளியேற்பனவற்றையும் கொள்ளச் செய்வதாம்.எ-டு : கணி – கணியே, கரி – கரியே; மக – மகவே; ஆடூ – ஆடூவே; மகன்- மகனே, மன்னவன் – மன்னவனே; நம்பன் – நம்பான்; வாயிலோன் – வாயிலோயே;இறைவர் – இறைவரே, திருமால் – திருமாலே, தம்முன் – தம்முனே; நம்முன் -நம்முனா; அடிகள் -அடிகேள்; பெண்டிர்- பெண்டிரோ; கேளிர் – கேளீர்; ஆய்- ஆயே; கிழவோன் – கிழவோயே; மாயோன் – மாயோயே. (தொ. சொ. 126, 131நச்.) |
வேற்றுநிலை மெய்ம்மயக்கம் | மொழியிடையே மெய்யுடன் மெய் மயங்கும்போது க ச த ப என்ற நான்குமெய்யும் பிற மெய்யொடு மயங்காமல் தம் மொடு தாமே மயங்கும். ர ழ – என்றஇரண்டு மெய்யும் தம்மொடு தாம் மயங்காமல் தம்மொடு பிறவே மயங்கும். ஏனையபன்னிரண்டுமெய்களும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும். கசதபநீங்கலான பதினான்கு மெய்களும் பிறமெய் களொடு கூடும் கூட்டம்வேற்றுநிலை மெய்மயக்க மாம். ஒரு மொழி புணர்மொழி இரண்டும்கொள்ளப்படும். அவை வருமாறு:-ஙகரத்தின் முன் ககரமும், வகரத்தின் முன் யகரமும் மயங்கும்.எ-டு : பங்கு, தெவ் யாதுஞகரநகரங்களின் முன் அவற்றுக்கு இனமாகிய சகரதகரங் களும் யகரமும்மயங்கும்.எ-டு : பஞ்சு, உரிஞ் யாது; பந்து, பொருந் யாதுடகர றகரங்களின் முன் கசப என்னும் மெய்கள் மயங்கும்.எ-டு : வெட்கம், மாட்சி, திட்பம்; கற்க, பயிற்சி, கற்பு.ணகரனகரங்களின் முன் அவற்றின் இனமாகிய டகரறகரங் களும், க ச ஞ ப ம யவ – என்னும் மெய்களும் மயங்கும்.எ-டு : விண்டு, உண்கு, வெண்சோறு, வெண்ஞமலி, பண்பு, வெண்மை, மண்யாது, மண் வலிது.கன்று, புன்கு, நன்செய், புன்ஞமலி, இன்பம், நன்மை, பொன் யாது,பொன் வலிது.மகரத்தின் முன் ப ய வ – என்னும் மூன்று மெய்களும் மயங்கும்.எ-டு : நம்பன், கலம் யாது, கலம் வலிது.ய ர ழ – என்னும் மெய்களின் முன் மொழிக்கு முதலாம் என்ற பத்துமெய்களும் மயங்கும்.எ-டு : பொய்கை, கொய்சகம், எய்து, செய்நர், செய்ப, சேய்மை,ஆய்வு, பாய்ஞெகிழி, (வேய்ங்குழல்)(யகரத்தின் முன் யகரம் மயங்குதல் உடனிலை மெய் மயக்கம்.)சேர்க, வார்சிலை, ஓர்தும், சேர்நர், மார்பு, சீர்மை, ஆர்வம்,போர்யானை, நேர்ஞெகிழி, (ஆர்ங்கோடு)மூழ்கி, வீழ்சிலை, வாழ்தல் வாழ்நன்,சூழ்ப, கீழ்மை, வாழ்வு,வீழ்யானை, வாழ்ஞெண்டு, (பாழ்ங்கிணறு)லகரளகரங்களின் முன் க ச ப வ ய – என்னும் இவ்வைந்து மெய்களும்மயங்கும்.எ-டு : நல்கி, வல்சி, சால்பு, செல்வம், கல்யாணம் (கொல் யானை);வெள்கி, நீள்சிலை, கொள்ப, கேள்வி, வெள்யானை (நன். 110- 117)க ச த ப- என்ற நான்கனையும் ஒழித்த ஏனைய பதினான்கு மெய்களும்சொற்களையுண்டாக்குமிடத்துத் தம்மொடு தாமே இணைந்து வாராமல்பிறமெய்களோடு இணைந்து வரும் சேர்க்கை வேற்றுநிலை மெய் மயக்கமாம்.எ-டு : அங்கு, மஞ்சள், கட்சி, கண்டு, பந்து, கம்பம், வெய்து,பார்த்து, செல்வம், தெவ் யாது, போழ்து, தெள்கு, ஒற்கம், கன்று. (தொ.எ. 22 நச்.) |
வேற்றுமை இயற்கை | வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வந்துழி, இடையேவல்லொற்று மிகுதல் வேற்றுமை இயல் பாகும்.எ-டு : உரி + குறை = உரிக் குறை; உரியும் அதில் குறைந்ததும் -என உம்மைத் தொகை.உரிக்கூறு, தொடிக்கூறு, காணிக்கூறு – முதலியனவும் இடையே வல்லொற்றுமிக்க உம்மைத்தொகைகளாம். சில அல்வழித்தொடர்கள் ‘வேற்றுமை இயற்கையாம்’என்று கூறப்படவே, அவை வேற்றுமைப்புணர்ச்சி அல்ல என்பது தெளிவாகும்.(தொ. எ. 166 நச். உரை) |
வேற்றுமை உருபு ஆறு | ஐ ஒடு கு இன் அது கண் – என்பன இரண்டு முதல் ஏழ் ஈறான வேற்றுமையுருபுகளாம். இவை விரிந்தும் தொக்கும் புணரும் புணர்ச்சியே வேற்றுமைப்புணர்ச்சியாம். எழுவாய்வேற்- றுமைப்புணர்ச்சியும்விளிவேற்றுமைப்புணர்ச்சியும் அல் வழிப் புணர்ச்சியாம். (தொ. எ. 113நச்.) |
வேற்றுமை எட்டு, ஆறு எனல் | பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலால் வேற்றுமை எட்டு என்பார், இங்கேஎழுவாய்க்கும் விளிக்கும் உருபு பெயரும் பெயரின் விகாரமுமே அன்றிவேறில்லாமையால், அந்த இரண்டையும் நீக்கி, தமக்கென உருபுடையன இடை நின்றஆறு வேற்றுமையுமே ஆதலால், அவற்றின் உருபு ஆறும் தொக்கும் விரிந்தும்இடைநிற்க, அந்த ஆறோடும் பதங்கள் புணரும் புணர்ச்சியை வேற்றுமைப்புணர்ச்சி என்றார். (நன். 152 இராமா.) |
வேற்றுமை நயமின்றி ஒற்றுமைநயம் | உயிர்மெய்யான ககரஙகரங்கள் முதலியவற்றுக்கும் தனி மெய்யானககரஙகரங்கள் முதலியவற்றிற்கும் வடிவு ஒன்றாக எழுதப்படும் இடமும்உண்டு. மெய்களை அகரத்தொடு புணர்த்து எழுதுவது வேற்றுமை நயமாகும். அதனைவிடுத்து மெய்களுக்கு இயற்கையான புள்ளிகளோடு அவற்றை வரிவடிவில்எழுதுதல் ஒற்றுமை நயமாகும். அப்பொழுது அவை ஒவ்வொன்றற்கும் மாத்திரைஅரையாகும். (தொ. எ. 11 இள.உரை)அவ் வரைமாத்திரையுடைய மெய் ஒவ்வொன்றனையும் தனித்துக் கூறிக்காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயரும் தன்மையாய் நிற்றலின். இனிஅதனைச் சில மொழிமேல் பெய்து, காக்கை – கோங்கு – கவ்வை – எனக் காட்டுப.மெய் என்பது அஃறிணைஇயற்பெயர் ஆதலின் மெய் என்னும் ஒற்றுமை பற்றி ‘அரை’என்றார். (தொ. எ. நச். உரை)நூல்மரபினகத்து மெய்மயக்கம் வேற்றுமைநயம் கொண்டது. அஃதாவதுமெய்யோடு உயிர்மெய் மயங்குமேனும் அவ்வுயிர் மெய்யில் மெய்யைப்பிரித்துக்கொண்டு மெய்மயக்கம் எனப் பட்டது. மொழிமரபில் கூறும்ஈரொற்றுடனிலை இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்து வரும் ஒற்றுமைநயம்பற்றியது.எ-டு : தஞ்சம் – ஞகரமெய் சகரமெய்யொடு மயங்கிய மயக்கம்வாழ்ந்தனம் – ழகரமெய் நகரமெய்யொடு மயங்கிய ஈரொற்றுடனிலை. (தொ.எ. 48. இள. உரை) |
வேற்றுமை வரும் இடம் | வேற்றுமையுருபுகள் தம் பொருளைத் தரப் பெயர்களை அடுத்து வரும்; ஏனைவினை இடை உரிகளை அடுத்து வாரா. (வினைமுற்றை யடுத்து வருமிடத்தேமுற்றுப் பெயர்த் தன்மை பெற்று வினையாலணையும் பெயராம். வந்தானை என்பதுவந்தவனை எனப் பொருள்படும்) (நன். 241) |
வேற்றுமைத்தொகைகளுள் இயைந்து வருவன | ஐம்முதல் ஆறு உருபு தொக்கு நிற்பத் தொடர்ந்து வரு மொழிகள் இயல்பும்திரிபும் குறைதலும் மிகுதலுமாக வரும்.எ-டு : மணிகொடுத்தான் – இயல்பு; க ற் கடாவினான் – திரிபு; திண்கொண்ட (தோள்) – குறைதல் (திண் மை + கொண்ட = திண்கொண்ட); பலாக்குறைத்தான் – மிகுதல். (தொ. வி. 91உரை) |
வேற்றுமைப்புணர்ச்சி | வேற்றுமையுருபு தொக நிலைமொழியும் வருமொழியும் புணரும் புணர்ச்சிவேற்றுமைப் புணர்ச்சியாம். வேற்றுமைப் பொருள்பட நிலைவருமொழிகள் இயைவதுஇது. வேற்றுமை யுருபு பெயரொடு புணரும் புணர்ச்சியும் வேற்றுமைப்புணர்ச்சியாம். வேற்றுமை யுருபுகள் விரிந்த நிலையில் உருபீற்றுநிலைமொழி வருமொழியோடு புணர்வதும் வேற்றுமைப் புணர்ச்சியே.எ-டு : கல்லெறிந்தான் – அவ் + ஐ = அவற்றை – கல்லா லெறிந்தான் -என முறையே காண்க. |
வேற்றுமைப்பொருட்புணர்ச்சிசிறப்புவிதி | உருபு புணர்ச்சிக்குக் கூறியன எல்லாம் பொருட் புணர்ச்சிக்கும்ஒக்கும். உருபு தொக நிலைவருமொழிகள் வேற்றுமைப் பொருள்படப் புணர்தலின்வேற்றுமைப் பொருட்புணர்ச்சி எனப்பட்டது. அவ் இவ் உவ் – என்பனஉருபேற்குமிடத்து அற்றுச்சாரியை பெறுதல்போலப் பொருட்புணர்ச்சிக்கும்பெறும் என்றல் போல்வன. (வேற்றுமைப் பொருட்புணர்ச்சி வருமொழிபெயராயவழியே கொள்ளப்படும்.)வருமாறு : அவ் + ஐ > அவ் + அற்று + ஐ = அவற்றைஅவ் + கோடு > அவ் + அற்று + கோடு = அவற்றுக் கோடு ( ஆறன் தொகை) (நன்.238)தொல்காப்பிய வற்று நன்னூலில் அற்று எனப்படும். |
வேல் என்ற மரப்பெயர் புணருமாறு | வேல் என்ற மரப்பெயர் அல்வழிக்கண் பெரும்பாலும் இயல்பாகப் புணரும்.(வன்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் இம்மூன்றும் கொள்க. மென்கணத்துள் ஞகரமகரங்கள் வருவழி லகரம் னகர மாகும்; நகரம் வருவழி லகரம் கெட நகரம்னகரமாகத் திரியும்)எ-டு : வேல்கடிது, சிறிது, தீது, பெரிது; யாது, வலிது, அழகிது;வேன் ஞான்றது, வேன் மாண்டது, வேனீண்டது.உருபுபுணர்ச்சிக்கண் அத்துச்சாரியை பெறும்.எ-டு : வேலத்தை, வேலத்தால், வேலத்துக்கண்(தொ. எ. 405, 202 நச்.)வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் நாற்கணம் வரினும் அம்முச்சாரியைபெற்றுப் புணரும்.எ-டு : வேலங்கோடு, வேலஞ்செதிள், வேலந்தோல், வேலம் பூ; வேலஞெரி,வேலநுனி, வேலமுரி; வேலவிறகு; வேலவழகு (வகரம் உடம்படுமெய்) (தொ. எ.375) |