தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ர, ழ குற்றொற்று ஆகாமை

ர், ழ் – குற்றெழுத்தின் பின்னர் உயிர்மெய் எழுத்தாகவே வரப்பெறும்; குற்றெழுத்தின் பின்னர் ஒற்றாக வரப்பெறா.எ-டு : மருங்கு, மருந்து, அரும்பு, ஒருங்கு; ஒழுங்கு, கொழுஞ்சி,உழுந்து, தழும்பு – என வருமாறு காண்க. மர்ங்கு, மர்ந்து, ஒழ்ங்கு,கொழ்ஞ்சி – முதலாகக் குற்றொற் றாக வாராமையும் காண்க.கன்னடத்தில் இர், விழ் – என வருதல் போலத் தமிழில் வாராது; உகரம்கூடி இரு, விழு – என்றே வரும் (கார், வீழ் – என நெடிற்கீழ் ஒற்றாய்வருதல் காண்க.) (தொ. எ.49 நச்.)‘அர்’ என்பது விகுதியாய், வந்தனர் என்றாற் போல மொழிக்கு உறுப்பாய்வருதலன்றிப் பகுதியாய் வாராது.

ர, ழ, ற பிறப்பு

ர, ற – பிறப்பிடம் ஒன்றே. முயற்சியிலே வேறுபாடுள்ளது.“றகாரத்திற்கு நுனிநா அண்ணத்தை நன்கு தாக்கும். ரகாரத் திற்கு நுனிநாஅண்ணத்தைப் பட்டும் படாமலும் தடவும். ரகாரம் பிறக்குமிடத்தில் நன்குஒற்றின் றகாரம் பிறக்கும்” என்று கன்னடமொழியில் கூறப்பட்டுள்ளது.(எ.ஆ.பக். 82)ரகாரம் போன்றே ழகாரமும் நுனிநா மேல்நோக்கிச் சென்று மேல்வாயைப்பட்டும் படாமலும் தடவுதலால் பிறக்கும்.ற் ன், ர் ழ் – நான்கன் பிறப்பிடமும் ஒன்றாக இருப்பினும், ற் ன் -உண்டாகும்போது பட்டும் படாமலும் நாநுனி அண்ணத்தை ஒற்றுகிறது; ர் ழ் -உண்டாகும்போது அண்ணத்தைத் தடவுகிறது. ஆயின் ரகாரத்தை ஒலிக்கும் போதுகாற்றிற்கு வாயை விட்டு வெளியே செல்ல எவ்வளவு இடன் இருக்கிறதோ,அவ்வளவு இடன் ழகாரத்தை ஒலிக்கும் போது இல்லை. (எ.கு.பக். 99)

ரகாரஈற்றுப்பெயர்ப் புணர்ச்சி

ரகாரஈறு வேற்றுமைக்கண் வல்லெழுத்து வரின் அவ்வல் லெழுத்து மிக்குமுடியும்.எ-டு : தேர்க்கால், தேர்ச்செலவுசிறுபான்மை வேர்ங்குறை, வேர்க்குறை – என்ற உறழ்ச்சி முடிவும்பெறும். (தொ. எ. 362 நச்.)ஆர், வெதிர், சார், பீர் – என்பன மெல்லெழுத்து மிக்கு,ஆர் ங் கோடு, வெதிர் ங் கோடு, சார் ங் கோடு, பீர் ங் கோடு – என்றாற்போல வரும். ஆ ரங் கண்ணி – என ஆர் அம்முப் பெறுதலும், பீர த்த லர் எனப் பீர் அத்துப் பெறுதலும் கொள்க.கூர் ங் கதிர்வேல், ஈர் ங் கோதை, குதிர் ங் கோடு, விலர் ங் கோடு, அயிர் ங் கோடு, துவர் ங் கோடு, சிலிர் ங் கோடு – என்றாற் போல்வன மெல்லெழுத்து மிக்குப்புணர்ந்தனசார் + காழ் = சார்க்காழ் – என வல்லெழுத்து மிகும்.பீர் என்பது அம்முப்பெற்று ‘பீரமொடு பூத்த புதன்மலர்’ என்றாற்போலவும் வரும். (தொ.எ.362-365 நச்.)இனி, அல்வழிக்கண், நீர் குறிது (இயல்பு), வேர் குறிது, வேர்க்குறிது (உறழ்ச்சி);வடசார்க் கூரை, மேல்சார்க் கூரை (வல் லெழுத்துமிக்க மரூஉமுடிவு)- என வருமாறு காண்க.அம்பர் க் கொண்டான், இம்பர் க் கொண்டான், உம்பர் க் கொண் டான், எம்பர் க் கொண்டான் – என ரகரஈற்றுள் ஏழன் பொருள்பட வந்தன வல்லொற்றுப்பெற்றன.தகர் க் குட்டி, புகர் ப் போத்து – என்ற பண்புத்தொகைகள் வல்லெழுத்து மிக்கன. (தொ. எ. 405.நச்.)

ரத பந்தம்

இரத பந்தம்; ‘இரத பெந்தம்’ காண்க.