ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ய ர ழ ஈற்றுப் புணர்ச்சி | நிலைமொழியீற்றில் யகர ரகர ழகர மெய்கள் நிற்ப, அல் வழிக்கண் வன்கணம்வருமாயின் இயல்பும், சிறுபான்மை வல்லினமெய் மிகுதலும் ஆம். வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வருமிடத்து வல்லினம் மிகுதலும், வல்லினமாவதுமெல்லினமாவது மிகுந்து விகற்பித்தலும் விதியாம்.எ-டு : வேய் கடிது, வேர் சிறிது, வீழ் தீது (எழுவாய்த் தொடர்) -இயல்பு; மெய்க்கீர்த்தி, கார்ப்பருவம், யாழ்க்கருவி (இருபெயரொட்டுப்பண்புத்தொகை); போய்ச் சேர்ந்தான் (வினையெச்சத் தொடர்) – வலி மிகுதல்.இவை அல்வழிப் புணர்ச்சி.நாய்க்கால், தேர்த்தட்டு, யாழ்ப்பத்தர் – வேற்றுமைப் புணர்ச்சியில் வலி மிகுதல்; வேய் க் குழல் வேய் ங் குழல், ஆர் க் கோடு ஆர் ங் கோடு, பாழ் க் கிணறு பாழ் ங் கிணறு – வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் இனத்தோடுஉறழ்ந்தது.பாழ்க்கிணறு : பாழுட்கிணறு என ஏழன்தொகையாகப் பொருள்படும். பாழாகியகிணறு எனில் பண்புத்தொகையாய் அல்வழி முடிபாம். (நன். 224) |
யகரஇறுதிப் பொதுப்புணர்ச்சி | யகரஈற்றுப் பெயர் அல்வழிக்கண் எழுவாய்த்தொடரில் இயல்பாகப்புணரும்.எ-டு: நாய் கடிது, சிறிது, தீது, பெரிதுஏழன் உருபின் பொருள்பட முடிவன, அவ்வாய்க் கொண் டான் – இவ்வாய்க்கொண்டான் – உவ்வாய்க் கொண்டான் – எவ்வாய்க் கொண்டான் – என வல்லெழுத்துமிக்குமுடியும். அவ்வாய் முதலியன இடப்பெயர்கள்.யகரஈற்று வினையெச்சமும், தாய்க் கொண்டான் -தூய்ப் பெய்தான் – எனவல்லெழுத்து மிக்கு முடியும்.இருபெயரொட்டுப் பண்புத்தொகை, பொய்ச்சொல்-மெய்ச்சொல் – எய்ப்பன்றி -என வல்லெழுத்து மிக்கு முடியும்.வேய் கடிது, வேய்க் கடிது – என எழுவாய்த்தொடருள் உறழ்ந்துமுடிவனவும் உள.யகரஈற்றுப் பெயர் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்மிக்கும், ஏனைக் கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.எ-டு : நாய்க்கால், நாய்ச்செவி, நாய்நலம், நாய்வால், நாயருமைதாய் என்னும் பொதுப்பெயர் உயர்திணைக்கண் வன்கணம் வரினும்இயல்பாம்.எ-டு : தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம்தாய் என்பதற்கு அடையாக வந்த மகன் செயல் கூறுமிடத்து,மகன்றாய்க்கலாம், மகன்றாய்ச்செரு, மகன்தாய்த்துறத்தல்,மகன்தாய்ப்பகைத்தல் – என வலி மிகும்.வேய்க்குறை, வேய்ங்குறை – என வலி மெலி உறழ்ந்து முடிதலு முண்டு.(தொ. எ. 357 – 361 நச்.) |
யகரத்தின் பிறப்பு | தைத்திரிய பிராதிசாக்கியத்தில், நடுநாவின் விளிம்பு அண்ணத்தை நன்குபொருந்துதலால் யகரம்பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மிடற்றெழுவளியிசை, அண்ணத்தை நாச்சேர்ந்த இடத்து, அவ்வண்ணத்தை அணைந்து செறியயகரம் பிறக்கும் என்பர் இள. மிடற்றில் எழும் வளி அண்ணத்தை நாப்பொருந்துவதால் உரலாணி இட்டாற் போல் செறிய யகரம் பிறக்கும் என்பர்நச்.அடிநா அடியண்ணத்தை உற, யத் தோன்றும் என்று நன்னூலார் கூறுவது,யகரம் கண்ட்யம் ஆகிவிடும். தாலவ்யம் ஆகிய யகரத்தை இங்ஙனம் கூறுவதுபொருந்தாது. இதனை இலக்கணவிளக்க நூலாரும் மறுத்துள்ளார். நன்னூல்கூறும் முறையில் பிறக்கும் ஒலி ஒருவகையான கனைப்புப் போறலின், அங்ஙனம்தோன்றுவதனை யகரஎழுத்தாகக் கொள்ளல் கூடாது. (ஈண்டு யகரம் என்றது யகரமெய்யினை.) (எ. ஆ. பக். 83,84) |
யகரமும் வகரமும் உடம்படுமெய் ஆதல் | நிலைமொழி உயிரீற்றதாய் வருமொழி உயிர்முதலதாய் நிகழின், உயிரோடுஉயிர்க்கு மயக்கம் இன்மையின், இரு மொழிகளையும் இணைப்பதற்கு இடையே அவ்வீருயிர் களையும் உடம்படுவிக்கும் மெய்யொன்று வருதல்வேண்டும். வரும்மெய் உயிர்தோற்றுமிடத்திலேயே தோன்றுவதாய் இருத்தல் வேண்டும். உயிர்தோன்றும் மிடற்றொலியில் தோன்றும் மெய்கள் இடையினமெய்களே. அவற்றுள்ளும்உயிர் போல மொழிக்கு முதலில் வரும் ஆற்றலுடையன யகர வகரங்களே. யகரத்தொலிஇ ஈ ஐ – இவற்றின்ஒலியோடு ஒத்ததாயிருத்தலின் இம்மூன்றுஉயிர்ஈறுகளுக்கும் யகரமும், ஏனைய உயிர்கள்ஈற்றுக்கு வகரமும்உடம்படுமெய்களாய் வரும். ஏகாரத்துக்கு இவ்விரண்டு உடம்படுமெய்களும்வந்து பொருந்தும். சிறுபான்மை அளபெடைக்கண் வரும் எகர ஈற்றுக்கும் இஃதுஒக்கும்.எ-டு: விள + வ் +அழகியது – விளவழகியது; கிளி + ய் + அழகியது -கிளியழகியது; சே + அழகியது -சே ய ழகியது, சே வ ழகியது(அவனே ய ழகன் – என ஏகாரஇடைச்சொற்கு யகர உடம்படு மெய்யேவரும்)சேஎ + அழகியது – சேஎயழகியது, சேஎவழகியது(தொ. எ. 140 நச்.), (சூ. வி. பக். 42)‘ளகார வி றுவாய்’ – (தொ. எ. 9 நச்); ‘அவ் வி யல் நிலை யும்’ – 12; ‘ஆ யி ரு திணையின்’ – சொ. 1; ‘ஆ யி ரண் டென்ப’ – எ.117; ‘ஆ வி ன் இறுதி’ – 120; ‘புள்ளியில்லா வெ ல்லாமெய்யும்’ – 17; ‘நொடி யெ ன’ – 7; ‘கூட்டி யெ ழூஉதல்’ – 6; ‘ஈ யா கும்’ – (சொ. 121 சேனா.); ‘உரு வு ரு வாகி’ – (தொ. எ. 17 நச்.); ‘அம் மூ வா றும்’ – 22; ‘ஆ எ ஒ வெ னும்’ – 64; ‘உளவே ய வ்வும்’ – (சொ. 67 சேனா.); ‘மூப்பே ய டிமை’ – 56; ‘உயர்தினைப் பெயரே ய ஃறிணை’ – (எ. 117)இவ்வாற்றால், அ உ ஊ ஒ ஓ ஒள – என்பன வகரமும், இ ஈ ஏ ஐ என்பனயகரமும், ஆ – அவ்விரண்டும் உடம்படுமெய்யாகப் பெறும் என்றறியலாம்.(நிலைமொழியீற்று ஏகாரம் இடைச்சொல்லாயின் யகர உடம்படுமெய்யும்பெயரீற்று ஏகாரமாயின் வகர உடம்படு மெய்யும் பெறும் என்பது ஆன்றோர்வழக்கிற்கண்டது. எ-டு: அவரே ய ரியர், சே வி ன் கோடு; சே – இடபம்) |
யகரம் ஆவோடு மாத்திரம் முதலாதல் | இ – ஈ – எ – ஏ – க்-களுக்குப் பிறப்பிடமாகிய இடையண்ணமேயகரத்துக்கும் பிறப்பிடம் ஆதலின், மொழி முதற்கண்யி யீ யெ யே – என்பனஒலித்தல் அரிதாகும்போலும். உ ஊ ஒ ஓ ஒள – இதழ் குவியப் பிறப்பன ஆதலின்,இடையண்ணத்தில் பிறக்கும் யகரத்தொடு மொழிமுதற்கண் அவை வருதல்அரிதாயிற்று. யகரஒலி, மிடற்றுச் சேர்ந்த வளி அண்ணம் கண்ணுற்றடையப்பிறப்பதாகலின், யகரத்தை மொழி முதலாக ஒலித்தல் சற்றுக் கடினம் ஆதலின்,யகரம் மொழி முதற்கண் வரும் என்று தொல். கூறவில்லை. யா என்பதன்கண் யகரஒலியினும் வாயை நன்கு அங்காத்தல் செய்யும் ஆகார ஒலியே விஞ்சியிருத்தலின், அது மொழி முதற்கண் வந்தது. எனினும், பிற்காலத்தில்அதுவும் ஒலித்தல் அரிதெனக்கருதி ஆகார மாகவே ஒலிக்கப்பட்டது. யானை யாடுயாண்டு யாறு- என்பன ஆனை ஆடு ஆண்டு ஆறு எனவே பிற்காலத்துப் பயின்றுவருகின்றன. (எ.ஆ.பக்.68) |
யதோத்தேச பக்கம் | இஃதுஅதிகாரம் என்பதன் இருவகைகளில்ஒன்று. வேந்தன் ஒருவன் இருந்துழிஇருந்து தன் நிலம் முழுவதும் தன் ஆணையின் நடப்பச் செய்வது போல, ஒருசொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன்பொருளேநுதலிவரச் செய்வது யதோத்தேச பக்கமாம். எழுத்தை நுதலி வரும் பலஓத்தினினது தொகுதியை எழுத்ததிகாரம் என்பது யதோத்தேச பக்கமாம் (சூ. வி.பக். 17) |
யமகம் | தமிழ்நூலார் மடக்கு என்பதனை வடநூலார் யமகம் என்றனர். ‘மடக்கு’நோக்குக. |
யமாயமகம் | ஒரு சொல்லே நான்கடி முற்றும் மடக்கி வருவது. ‘இயமாவியமகம்’காண்க.எ-டு : ‘உமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரன்’ |
யவமத்திமம் | அளவழிச் சந்தங்களுள், நாலடியும் சீர்ஒத்து முதலடியும்நான்காமடியும் எழுத்துக் குறைந்து நடு இரண்டடியும் எழுத்து மிக்குவருவதொரு வகை.எ-டு : ‘மல்லல்மா மழையார்ப்பக்கொல்லைவாய்க் குருந்திளகினமுல்லைவாய் முறுவலித்தனசெல்வர்தேர் வரவுண்டாம்.இவ்வஞ்சித்துறை, முதலடியும் நான்காமடியும் 7 எழுத் துக்கள் வர,இடையிரண்டடியும் 9 எழுத்துக்களாக மிக்கு வந்து, நாலடியும் சீரொத்துவந்தவாறு. (யா. வி. 95 உரை. பக். 515) |
யவமத்தியயதி | ‘யவ மத்திமம்’ எனப்பட்ட அளவழிச் சந்தவகை அதுகாண்க.(யா. வி. பக். 515 அடிக்குறிப்பு) |
யா என் சினை | ஒருசொல்லின் உறுப்பாகும் எழுத்துச் சினையெழுத்து எனப்படும். அதுவேசொல்லின் முதலெழுத்தாக வரின், முதலெழுத்து எனவும் முதனிலை எனவும்முதல் எனவும் கூறப்படும். ஈற்றெழுத்தாக வருவது இறுதி எனப்படும்.குறில் நெடிலாக நீளுதல் சினை நீடல் எனப்படும்.‘யா என்சினைமிசை’ – ‘மியா’ என்பதன்கண் உள்ள யா என்ற எழுத்து. (தொ.எ. 34 நச்.)‘ஐ என் நெடுஞ்சினை’ – ஐ என்ற உறுப்பெழுத்து (தொ.எ.56நச்.)‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’ – அ ‘ஆ’ ஆதல் (தொ.எ. 159)‘சுட்டுச்சினை நீடிய மென்றொடர்மொழி’ – அ ‘ஆ’ ஆதல். (தொ. எ. -427) |
யா என்ற சொல் புணருமாறு | யா என்பது வினாப்பெயராகவும், அசைநிலை இடைச் சொல்லாகவும், ஒருமரத்தின் பெயராகவும் வரும்.யா, வினாப்பெயராகவோ மூவிடங்களுக்கும் பொதுவான அசைநிலைஇடைச்சொல்லாகவோ வருங்கால், வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப்புணரும்.‘யாது யா யாவை என்னும் பெயரும்’ (சொ.169 நச்.) என, யா – என்றவினாப்பெயரைத் தொல். சுட்டியுள்ளார். ‘யாகா பிற பிறக்கு…அசைநிலைக்கிளவி’ (தொ. பொ. 281 நச்.) என, யா என்ற அசைச்சொல்சுட்டப்பட்டுள்ளது.எ-டு : யா குற்றமுடையன? – வினாச்சொல்யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியற்கு – அசை நிலைஇடைச்சொல்இவை வன்கணம் வரினும் இயல்பாகப் புணர்ந்தன.யா என்ற மரப்பெயர் வருமொழி வன்கணத்தொடு புணரும் வழி, அகரமாகியஎழுத்துப்பேறளபெடையும், வருமொழி வல்லினத்துக்கு இனமான மெல்லெழுத்தும்பெற்றுப் புணரும்.எ-டு : யா அங் கோடு, யா அஞ் செதிள், யா அந் தோல், யா அம் பூஅகரப்பேற்றோடு, இனமெல்லெழுத்தேயன்றி வருமொழி வல் லெழுத்துமிகுதலுமுண்டு.எ-டு : யா அக் கோடு, யா அச் செதிள் யா அத் தோல், யா அப் பூஇனி, உருபேற்குமிடத்து அகரமும் மெல்லெழுத்து வல் லெழுத்துஎன்பனவும் பெறாது யாவினை, யாவினொடு – என்றாற் போலப் பெறும்.இன்சாரியையை வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் பெறுவதுண்டு.எ-டு : யாவின்கோடு, செதிள், தோல், பூஅகரப்பேற்றோடு அத்துச்சாரியை பெறுதலுமுண்டு.எ-டு : யாஅத்துக்கோடு, யாஅத்துச்செதிள், யாஅத்துத் தோல்,யாஅத்துப்பூஎழுவாய்த்தொடரில் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : யா கிடந்தது, செறிந்தது, தகர்ந்தது, பிளந்தது, (தொ. எ.229,230 நச். உரை)யா என்ற அஃறிணைப் பலவின்பால் வினாப்பெயர் வன்கணம் வரினும்இயல்பாகப் புணரும். அல்வழி வேற்றுமை என இருவழியும் கொள்க.எ-டு : யா குறிய, சிறிய, தீய, பெரியயா கொணர்ந்தான், சேர்ந்தான், தந்தான், பார்த்தான் (நன்.160) |
யா வினா புணருமாறு | யா என்பது அஃறிணைப் பலவின்பால் வினாப்பெயர். அஃது அல்வழிக்கண்இயல்பாயும், வேற்றுமையுருபு ஏற்குமிடத்தும் பொருட்புணர்ச்சிக்கண்ணும்வற்றுச் சாரியை பெற்றும் புணரும்.எ-டு : யா குறிய, சிறிய, தீய, பெரிய; யாவற்றொடு, யாவற் றுக்கு;யாவற்றுக்கோடு, யாவற்றுச் செதிள், யாவற்றுத்தோல், யாவற்றுப்பூ (தொ. எ.224, 175 நச்.) |
யா, ஞா போலி | ணகரஈற்றுச் சொற்களையும் னகரஈற்றுச் சொற்களையும் அடுத்து வருமொழியாகயா என்னும் முதலையுடைய வினைச்சொல் வரின், யகரஆகாரத்துக்குப் போலியாகஞகரஆகாரம் (வினைச்சொல் முதலாக) வரும்.எ-டு : மண் யா த்த – மண் ஞா த்த; பொன் யா த்த – பொன் ஞா த்த; யாச் செல்லும்வழி ஞாச் செல்லும், ஞாச் செல்லும்வழியாச்செல்லாது.(மண் ஞான்றது – என்பது மண்யான்றது – என வாராமை காண்க) (தொ. எ. 146நச்.) |
யாண்டு நிலை | இப்பிரபந்த இலக்கணம் பன்னிருபாட்டியலில் மாத்திரம் காணப்படுகிறது.பல்லாண்டு பாடுவது இப்பிரபந்தத்தின் நோக்கம். பெரும்பான்மைநேரிசைவெண்பாவாலும், சிறுபான்மை அனைத்துப் பாவாலும் “மன்னன் பல்லாண்டுவாழ்க!” என்று ஏத்துவது இது. (பன். பாட். 328) |
யாது : புணருமாறு | யாது என்ற அஃறிணை ஒருமை வினாப்பெயர் அன்சாரியை பெற்று உருபொடுபுணரும். வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் இஃது ஒக்கும்.எ-டு : யாது + அன் + ஐ = யாதனை; யாது + அன் + கோடு = யாதன்கோடு(தொ .எ. 200, 422 நச்.)அல்வழியில் வன்கணம் வரினும் யாது என்பது இயல்பாகப் புணரும்.எ-டு : யாது கடிது, சிறிது, தீது, பெரிது (தொ. எ. 425நச்.) |
யானைத்தொழில் | யானையைப் பற்றிய கிரிசரம் நதிசரம் வனசரம் ஆகிய நிலம், அவயவங்களின்அளவு, ஏழுமுழ உயரம், தருணவயது, பிறந்த நிலத்தான் வீரம் பெறும்குலநன்மை, ஒன்பதுமுழநீளமும் முப்பத்திரண்டு முழச் சுற்றும் உடைத்தாயஇலக்கணம், மும்மதம் கோடல், அடுத்த பொழுதிற் கோறல், அரசனை அறிதல்என்னும் இவையிற்றை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தவகை. (இ.வி. பாட். 112) |
யாப்பருங்கலக் காரிகை | யாப்பருங்கல ஆசிரியர் அமிதசாகரர் அவ்யாப்பு நூலுக்கு அங்கமாகயாப்பருங்கலக் காரிகை இயற்றினார். அலங்கார முடைத்தாகச்செய்யப்பட்டமையால் இந்நூல் காரிகை எனப்பட்டது. இந்நூலின் சூத்திரங்கள்கட்டளைக் கலித் துறை யாப்பின.இவ்யாப்பு நூலின்கண் கடவுள் வாழ்த்தும் வருபொரு ளுரைத் தலுமாகியதற்சிறப்புப் பாயிரம் 1, அவையடக்கம் 2, உறுப்பியல் காரிகைகள் 18,செய்யுளியல் காரிகைகள் 16, ஒழிபியல் காரிகைகள் 10 – ஆக 47 காரிகைகள்காணப்படு கின்றன. முதல் மூன்றும் நீக்கப்படின், அவை 44 ஆம்.பல காரிகைகள் மகடூஉ முன்னிலை பெற்று நிகழ்கின்றன. சில காரிகைகள்முதல் நினைப்பு உணர்த்துவனவாக உள. ‘தூங்கேந் தடுக்கல்’ என்ற காரிகைஆசிரியராலே இயற்றப் பட்டது என்பர் சிலர். ஆயின் உரையாசிரியர்குணசாகரர் அக்காரிகையைக் கணக்கிடாமையாலேயே 44 என்ற எண் ணிக்கைகிட்டிற்று. அவர் கருத்துப்படி அக்காரிகையை ஆசிரியர் புனைந்திலாமைதெளிவு.உரையாசிரியராம் குணசாகரர் அமிதசாகரர்தம் மாணாக் கரே என்பதுபெரும்பான்மையோர் கருத்து. உரை இயற்றி யவர் குணசாகரரா அன்றிப்பிறரொருவரா என்பதன்கண் கருத்து வேறுபாடுண்டு. இந்நூலின் காலம் 11ஆம்நூற்றாண் டின் முற்பகுதி என்ப. |
யாப்பருங்கலம் | யாப்பு என்னும் கடலைக் கடக்க அமைந்த அரிய மரக்கலம் என்ற காரணப்பெயரால் அமைந்த இந்நூல் (‘பெயர்க் காரணம்’ அடுத்துக் காண்க.)அமிதசாகரர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. காலம் பதினோராம்நூற்றாண்டின் முற்பகுதி; என்ப.இந்நூலுள் பொதுவும் சிறப்புமாகப் பாயிரச் செய்யுள் இரண்டும்,உறுப்பியல் முதலாக ஒழிபியல் ஈறாகச் சூத்தி ரங்கள் தொண்ணூற்றாறும்உள்ளன. சூத்திரம் ஆசிரிய நடைத்து.இதன்கண், உறுப்பியலும் செய்யுளியலும் ஒழிபியலும் என முப்பெரும்பாகுபாடுகள் உள. உறுப்பியலுள் எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்னும்இவ்வகை ஆறனையும் உணர்த்தும் நூற்பாக்கள் எழுத்தோத்து அசையோத்துமுதலாகப் பெயர் பெறுகின்றன. பிற இயல்களுள் இவ்வோத் துப் பாகுபாடுபெயர் பெற்றிலது.இவ்வாசிரியரே யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்க மாக யாத்தபிறிதொரு நூல் யாப்பருங்கலக் காரிகையாம்.இந்நூற்கு அரிய விருத்தியுரை வரைந்தவர் குணசாகரர் என்ப; மற்றொருவர்எனவும் கூறுப. இவ்வுரையின் பெருமை, இந்நூலே யாப்பருங்கல விருத்தி எனஉரைப்பெயரொடு பிற்காலத்தே வழங்கப்படும் சிறப்பால் போதரும். |
யாப்பருங்கலம் : பெயர்க் காரணம் | சுருங்கியும் விரிந்தும் கிடந்த தொன்னூல் யாப்புக்களது துணிவுநோக்கி, அரும்பொருட் பெருங்கேள்வி ஆசிரிய வசனங்களைப் பற்றுக்கோடாகக்கொண்டு, அருங்கலஅணி ஒருங்கு கோத்தாற்போலவும், அலைகடல் கடைந்து அமுதுகொண்டாற்போலவும், ஒருங்கு கோத்து ஒரு கோவைப் படுத்து எல்லார்க்கும்உணர்வு புலன்கொள்ளுமாற்றான் யாப்புச்செய்தியை உணர்த்தும் சார்புநூலாதலின் யாப்பருங் கலம் என்னும் பெயர்த்தாயிற்று. (யா. க. பாயிரஉரை) |
யாப்பருங்கலம் குறிப்பிடும்சித்திரகவிகள் | மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற் றிருக்கை,காதைகரப்பு, கரந்துறை பாட்டு, தூசம்கொளல், வாவல் ஞாற்று, கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்து இனத்தால் உயர்ந்த பாட்டு, பாதமயக்கு,பாவின்புணர்ப்பு, ஒற்றுப் பெயர்த்தல், ஒருபொருட்பாட்டு, சித்திரப்பா,விசித்திரப்பா, விகற்ப நடை, வினா உத்தரம், சருப்ப தோ பத்திரம்,எழுத்துவருத்தனை ஆதியனவும், வடதூற்கடலுள் ஒருங்குடன் வைத்த உதாரணம்நோக்கி விரித்து முடிக்கும் மிறைக்கவிப் பாடல்களுமாம். (யா. வி. சூ.96) |
யாமளேந்திரர் | இசைத்தமிழ் நூலாசிரியருள் ஒருவர் (சிலப். உரைப்பாயிரம்.) |