ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மஃகான் புள்ளியீறு பெறும் சாரியைகள் | மகரஈறு அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வருமொழியாகும்உருபுகளொடும் பெயர்களொடும் புணரும்.எ-டு : மரம்+ஐ > மரம்+அத்து+ஐ=மரத்தை; மரம் + அத்து + இன் + ஐ =மரத்தினை.மரம்+கோடு > மரம் + அத்து + கோடு = மரத்துக்கோடு; மரம் + அத்து + இன் + கோடு= மரத்துக்கோடு. (தொ.எ. 185, 186 நச்.) |
மக என்ற பெயர் புணருமாறு | மக என்ற இளமைப் பெயர் இன்சாரியையும் அத்துச் சாரியை யும் பெற்றுப்புணரும். இன்சாரியை பெறுதல் பெரும் பான்மை.எ-டு : மக+இன்+கை,ஞாண்,வட்டு,ஆடை=மகவின் கை,மகவின் ஞாண்;மகவின்வட்டு, மகவினாடை ; மக+அத்து+கை=மகத்துக்கை;மக+பால்+யாடு= மகப்பால்யாடு, மகம்பால்யாடு-என வலித்தலும்மெலித்தலும் பெற்று வருதலு முண்டு. (தொ. எ. 218, 219 நச். உரை) |
மகன், மகள், மக்கள்: திணைவிளக்கம் | மகன், மகள், மக்கள் – என்பன மக்கட்கதியிலுள்ளாரை உணர்த்திநிற்பின், உயர்திணைப் பெயர்களாம்; முறையை உணர்த்தி நிற்பின்பொதுப்பெயர்களாம். (நன். 158 மயிலை.) |
மகர ஈற்று அல்வழிப் புணர்ச்சி | மகரஇறுதிப் பெயர் அல்வழிக்கண் ஈற்றுமகரம் கெட்டு வருமொழிவல்லெழுத்துக்கு ஏற்ப இனமெல்லெழுத்து மிக்கு முடியும்.எ-டு : மரங் குறிது, மரஞ் சிறிது,மரந் தீது, மரம் பெரிது-எனக்காண்க. மரம் பெரிது என்புழித் திரிபுஇன்று என்பது ஆணை கூறலாம். (தொ.எ. 314 நச். உரை)வட்டத்தடுக்கு, சதுரப்பலகை, ஆய்தப்புள்ளி, வேழக்கரும்பு,நீலக்கண்-என்னும் பண்புத்தொகைக்கண் நிலைமொழியீற்று மகரம் கெட்டுவருமொழிமுதல் வல்லெழுத்து மிக்கு முடிந்தன.ஆய்த உ(வு)லக்கை, அகர முதல – இவை இயல்புகணத்தின் கண் மகரம் கெட்டுமுடிந்தன.செல்லுங் கொற்றன், உண்ணுஞ் சோறு; கவளமாந்து மலைநாடன், பொரு மாரன்,தாவு பரி, பறக்கு நாரை, அடு போர், வருகாலம்;கொல்லும் யானை, பாடும்பாணன் – இவை முறையே மகரம் திரிந்தும், கெட்டும், நிலைபெற்றும் வந்தபெயரெச்சம் (பெயரெச்சத் தொடர்).கலக்கொள், கலச்சுக்கு, கலத்தோரை கலப்பயறு – இவை அளவுப் பெயர்க்கண்மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கன.எல்லாக் கொல்லரும், எல்லாப் பார்ப்பாரும் – என இவை மகரம் கெட்டுவலிமிக்கன.பவளவாய் – என உவமத்தொகைக்கண்ணும், நிலநீர் என எண் ணிடத்தும் மகரம்கெட்டது.மர ஞான்றது, மர நீண்டது, மர மாண்டது ‘உரையசைக் கிளவியு ஞாங்கர்’(எ.204 நச்.),அதன்குண நுதலி’ (சொ. 416)- என இயல்புகணத்துக்கண் மகரம்கெட்டது. (314 நச்.)மரம் யாது, மரம் வலிது, மரமடைந்தது – என இயல்பு கணத்துக்கண் மகரம்கெடாது நின்றது. (தொ.எ. 314)அகம்+ கை – ககரம் கெட்டு மகரமும் கெட்டு, மெல்லெழுத்து மிக்குஅங்கை – என முடிந்தது. – 315இலம்+படு = இலம்படு – என இயல்பாகப் புணர்ந்தது – 316ஆயிரம் + ஒன்று = ஆயிரத்தொன்று – என ஆயிரம் அத்துப் பெற்றது. -317அஃது அடையடுத்த இடத்தும் பதினாயிரத்தொன்று – என்றாற் போல அத்துப்பெற்றது. – 318ஆயிரம் + கலம், சாடி = ஆயிரக்கலம், ஆயிரச் சாடி – என மகரம் கெட்டுவலி மிக்கது. – 319நும் என்பது அல்வழிக்கண் நீஇர் – எனத் திரிந்தது. -326மகர ஈற்றுத் தொழிற்பெயர் செம்முக் கடிது, செம்மு ஞான்றது – என்றாற்போல உகரம் பெற்றது. -327ஈம், கம், உரும் – என்ற பெயர்கள் உகரம் பெற்று ஈமுக்கடிது என்றாற்போல வந்தன. – 328 |
மகர ஈற்று நாட்பெயர்ப் புணர்ச்சி | மகர ஈற்று நாட்பெயர் ஆன்சாரியை பெறுவதற்கு முன் அத்துச் சாரியையும்பெற்று வருமொழி வினை நாற்கணத் தொடும் புணரும்.எ-டு : மக+ அத்து+ ஆன் – மகத்தாற் கொண்டான், மகத் தான்ஞாற்றினான், மகத்தான் வந்தான், மகத்தா னடைந்தான்இதற்கு ஏழனுருபு விரித்து மகத்தின்கண் என்று பொருள் செய்யப்படும்.(தொ.எ.331 நச்.)மகர ஈற்றில் அமைந்த நாள்களின் பெயர்கள் மிருகசீரிடம், புனர்பூசம்,பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், விசாகம், அனுடம்,மூலம், பூராடம், உத்தராடம், திரு வோணம், அவிட்டம், சதயம் எனப்பதினாறாம்.இப்பெயர்கள் நிலைமொழிகளாக வருமொழிக்கண் வினைச் சொல்வரின், இடையேஅத்துச்சாரியையும் ஆன்சாரியையும் வரும். வருமொழி வன்கணம் வரின்,ஆன்சாரியையின் னகரம் றகரமாகும். |
மகர ஈற்றுச் சிறப்பு விதி | மகர ஈற்று நிலைமொழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வருமிடத்தேமகரஈறு கெட, வருமொழி வல்லெழுத்தோ அதன் இன மெல்லெழுத்தோ மிக்குமுடியும். அல்வழிக்கண் உயிரும் இடைக்கணமும் வரின், நிலைமொழி ஈற்றுமகரம் கெடாது இயல்பாக முடிதலுமுண்டு.எ-டு : குளம்+ கரை= குளக்கரை, குளங்கரை – வேற்றுமைகுளம் +அழகிது, யாது = குளமழகிது, குளம் யாது – அல்வழி (நன்.220)நும் தம் எம் நம் – என்பவற்று ஈற்று மகரம் வருமொழி முதலில் ஞகரமோநகரமோ வருமிடத்து அவ்வம் மெய்யாகத் திரியும்.நும், தம், எம், நம் +ஞாண் = நுஞ்ஞாண், தஞ்ஞாண், எஞ்ஞாண்,நஞ்ஞாண்+ நாண் = நுந்நாண், தந்நாண்,எந்நாண், நந்நாண்வருமொழி முதலில் மகரம் வருமிடத்து நிலைமொழியீற்று மகரம் இயல்பாகப்புணரும்.நும் +மணி = நும்மணி; பிறவும் கொள்க. (நன். 221)அகம் என்னும் நிலைமொழி முன்னர் வருமொழியாகச் செவி – கை – என்பனவரின், அகங்கை – அகஞ்செவி – எனப் பொது விதியால் முடிதலே அன்றி,நிலைமொழியிடையேயுள்ள ககர உயிர்மெய் கெட, அம்+ செவி = அஞ்செவி, அம்+கை= அங்கை – என முடியும்.அஞ்செவி, அங்கை – என்பன இலக்கணப்போலியாய்த் தழாஅத் தொடராம்.அகம்+சிறை = அஞ்சிறை – எனப் புணர்த்தலும் ஈண்டுக் கொள்ளப்படும்.(நன். 222 சங்.)ஈம், கம், உரும் – என்பன, தொழிற்பெயர் போல, யகரம் அல்லாத ஏனையமெய்கள் வருமொழி முதற்கண் வரின் உகரச் சாரியை பெறும். ஈமும் கம்மும்வேற்றுமைக்கண் உகரச் சாரியையே அன்றி அகரச்சாரியையும் பெறும்.எ-டு : ஈமுக் கடிது, ஈமு நீண்டது, ஈமு வலிது; கம்முக் கடிது,கம்மு நீண்டது, கம்மு வலிது; உருமுக் கடிது, உருமு நீண்டது, உருமுவலிது – இவை அல்வழி.ஈமுக்கடுமை, ஈமுநீட்சி, ஈமுவன்மை; கம்முக்கடுமை, கம்முநீட்சி,கம்முவன்மை; உருமுக்கடுமை, உருமு நீட்சி, உருமுவன்மை – இவைவேற்றுமை.ஈமக்குடம், கம்மக்குடம்- வேற்றுமையில் அகரச்சாரியைப் பேறு.(ஈமத்துக்குரிய குடம், கம்மியரது தொழிலால் சமைத்த குடம் – எனப்பொருள் செய்க.) (நன். 223) |
மகர ஈற்றுப் பொதுவிதி | மகரஈற்றுச் சொற்கள் வருமொழியொடு புணருமிடத்து, இறுதி மகரம் கெட்டுவிதி உயிரீறாய் நின்று, இயல்பு உயிரீறு போல், வருமொழி முதற்கண்உயிர்வரின் உடம்படுமெய் பெற்றும், வன்கணம் வரின் அவ்வல்லினமெய்மிக்கும், மென் கணமும் இடைக்கணமும் வரின் இயல்பாகவும் புணரும்;வன்கணம் வருமிடத்தே கெடாது வந்த வல்லினத்துக்கு இனமான மெல்லினமெய்யாகத் திரிதலும் ஆம்.எ-டு : வட்டம் +ஆழி > வட்ட +ஆழி > வட்ட+ வ் +ஆழி = வட்டவாழி; வட்டம் + கடல் > வட்ட +கடல் > வட்ட+க் + கடல் = வட்டக்கடல்; வட்டம் + நேமி > வட்ட + நேமி = வட்டநேமி; வட்டம் + வாரி > வட்ட + வாரி = வட்டவாரிஇவை அல்வழிப் புணர்ச்சிமரம்+ அடி > மர + அடி > மர + வ் + அடி = மரவடி; மரம் + கால் > மர + கால் > மர + க் + கால் = மரக்கால்; மரம்+ நார் > மர + நார் = மரநார்; மரம் + வேர் > மர + வேர் = மரவேர்இவை வேற்றுமைப் புணர்ச்சி.நாம் + கடியம்= நாங் கடியம் ; அடும் + களிறு= அடுங் களிறு -அல்வழி; நம் + கை = நங்கை – வேற்றுமை. (நன். 219) |
மகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி | வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வரின், மகர ஈறு கெட வருமொழிமுதலில் வந்த வல்லொற்று இடையே மிகும்.எ-டு: மரக்கோடு, மரப்பூ, முண்டகக் கோதைஇயல்புகணத்துக்கண்ணும் உயர்திணைப்பெயர்க்கண்ணும்விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்ளப்படும்.எ-டு: மரஞாண், மரநூல் – மகரம் கெட்டது. இவை நான்கன்தொகை. மரமணி,மரயாழ், மரவட்டு, மரவுரல் – மகரம் கெட்டது. நங்கை, எங்கை, தங்கை – நம்எம் தம் – என்பனவற்றின் மகரம் கெட்டு இன மெல்லெழுத்து மிக்கது. (தொ.எ. 310 நச்.)வருமொழியில் அகரமும் ஆகாரமும் முதலில் வருமிடத்து மகர ஒற்றுக்கெட்டு ஈற்றில் நின்ற அகரம் நீண்டு முடிதலும் நீடாமையும் உரியது.ஆகாரம் அகரமாகிவிடும்.எ-டு:மரம் +அடி= மராஅடி, மரவடி; குளம் + ஆம்பல் =குளாஅம்பல்,குளவாம்பல் (தொ.எ.311 நச்.)கோணம் +கோணம் =கோணாகோணம்; கோணம் + வட்டம் = கோணா வட்டம்இவை ஏழன்தொகை.மகர ஈற்றுப் பெயர் மகரம் கெடுதலொடு வலிமெலி மிகுதலும் உரித்து.எ-டு : குளக்கரை, குளங்கரை – வலிமெலி உறழ்வு.குளத்துக் கொண்டான், ஈழத்துச் சென்றான், குடத்து வாய்,பிலத்துவாய் – என மகரம் கெட்டு அத்துப் பெறுதலுமுண்டு.‘புலம் புக்கனனே, ‘கலம் பெறு கண்ணுளர்’ – என இயல்பாதலு முண்டு.(312 நச். உரை)இல்லம் என்ற மரப்பெயர் மகரம் கெட்டு மெல்லெழுத்துப் பெறும்.எ-டு: இல்லங்கோடு, இல்லஞ்செதிள் (312 நச். உரை)தாம் யாம் நாம் – என்பன தம் எம் நம் – என முதல் குறுகி ஈறு கெட்டுஇனமெல்லெழுத்து மிகும்.எ-டு : தங்கை, எங்கை, நங்கை, தஞ்செவி… தந்தலை…..எல்லாரும் எல்லீரும் என்பனவும் எல்லார்தங்கையும்,எல்லீர்நுங்கையும் – என முடியும். இஃது எல்லார்தம் மணியும் என்புழிமகரம் கெடாது உம்முப் பெற்றது. எல்லீர்நும்மணியும் என்புழியும்அது.தமகாணம், நுமகாணம், எமகாணம் – என அகரச்சாரியை பெறுதலும், நும்என்பதும் நுங்கை, நுஞ்செவி – என்றாற் போல மகரம் கெட்டு இனமெல்லெழுத்துமிகுதலும் கொள்க. (320, 325 நச். உரை)எல்லாம் என்பது, எல்லாநங்கையும் எல்லாநஞ்செவியும் – என மகரம்கெட்டு நம்முச்சாரியை ஈறு வருமொழி வன்கணத்துக்கு ஏற்பஇனமெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். (324 நச். உரை)ஈம் கம் – என்பன வேற்றுமைப்புணர்ச்சிக்கண் அக்குச்சாரியை பெற்றுப்புணரும்.எ-டு : ஈமக்குடம், கம்மக்குடம் (329 நச்.)தொழிற்பெயர்கள், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழிஉகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வந்துழிஉகரமும், யகரமும் உயிரும் வந்துழி இயல்பும் பெற்றுப் புணரும்.எ-டு : தும்முக் கடிது; தும்மு நீண்டது,தும்மு வலிது, தும்யாது, தும் மிது. (327 நச்.)(தனிக்குறில் முன் ஒற்று இரட்டுதல் இயல்பாம்.)நாட்டக்கடுமை, ஆட்டக்கடுமை – தொழிற்பெயர் மகரம் கெட்டுவல்லெழுத்து மிக்கது.(327 நச். உரை)நாட்பெயர்கள் அத்தும் ஆனும் பெற்றுப் புணரும்.எ-டு : மகம்+ அத்து+ஆன்+ கொண்டான் = மகத்தாற் கொண்டான் (மகம்என்ற நாளின்கண் கொண்டான் – என்பது பொருள்.) (331 நச்.) |
மகரக் குறுக்க வரிவடிவம் | ஒவ்வோர் எழுத்தும் பெற்ற மாத்திரையைப் பாதியாக்க, அதன் மேல்புள்ளியிடுவது பண்டை வழக்கம், பண்டைக் காலத்தில் ஏகார ஓகாரங்களுக்கும்எகர ஒகரங்களுக்கும் வரி வடிவு ஒன்றே. ஏகார ஓகாரங்களிலிருந்து எகரஒகரங்களைப் பிரித்துக் காட்ட, அவற்றின் வரிவடிவுமேல் புள்ளியிடப்பட்டன.எ – நெடில்:இரு மாத்திரை; எ ) – குறில் : ஒரு மாத்திரைஒ – நெடில்:இரு மாத்திரை; ஒ ) – குறில் : ஒரு மாத்திரைக – ஒரு மாத்திரை; க் – அரை மாத்திரைந கு – ஒருமாத்திரை; நா கு ) – அரை மாத்திரைம் – அரை மாத்திரை; ம் {{special_puLLi}} – கால் மாத்திரைஇவ்வாறு, மகரக்குறுக்கம் வரிவடிவில் மேலே பெறும் புள்ளியோடுஉள்ளேயும் ஒரு புள்ளி பெற்றது. “மகரம் குறுகிக் கால்மாத்திரையாய்உட்புள்ளி பெறும்” என்று வீரசோழிய உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.(சந்திப். 19) (எ.ஆ.பக்.20) |
மகரக் குறுக்கம் | பத்துச் சார்பெழுத்துக்களுள் ஒன்று. லகர ளகரங்கள் திரிந்த னகர ணகரமெய்களை அடுத்து வரும் மகரம் தன் இயல்பான அரைமாத்திரையிற் குறுகிக்கால்மாத்திரையாக ஒலிக்கும். நிலைமொழி ஈற்று மகர மெய்யின் முன்னர் வகரமுதல் மொழி வருமாயினும் அவ்விருமொழிப் புணர்ச்சிக்கண் நிலைமொழி ஈற்றுமகரம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாம்.இவ்வாறுஇடவகையால் மகரக்குறுக்கம் மூன்றாயிற்று.வருமாறு : ‘திசையறி மீகானும் போன்ம்’ (போலும் > போல்ம் = போன்ம்) ‘மயிலியல் மாதர் மருண்ம்’ (மருளும் > மருண்ம்= மருண்ம்)தரும் வளவன் (செய்யுமென்னும் வாய்பாட்டது நிலைமொழி என்க.)(நன்.96) |
மகரக் குறுக்கம் சார்பெழுத்து ஆகாமை | ‘அரையளவு குறுகல்’ என்பதன் பொருள், (மகரம்) தன் இயற்கை (அரை)மாத்திரையின் அரையளவாகக் குறுகுதல் என்பது. (எ.கு.பக். 22)வேறோர் எழுத்தினது ஓசையால் மகரம் குறுகுதல். மகரம் குறுகுதல்இயற்றமிழுக்கும் உரியதாதலின், இது பிறன்கோட் கூறல் ஆகாது.சார்பெழுத்தாவது மற்றொரு முதலெழுத்தைச் சார்ந்து அதன் பிறப்பிடமே தன்பிறப்பிடமாகக் கொள்வ தாம். குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் – என்றமூன்றுமே அந் நிலையின ஆதலின், தமக்கெனத் தனிப் பிறப்பிடத்தை யுடையஉயிர்மெய் முதலியன சார்பெழுத்தாகா. (எ.கு. பக். 23) |
மகரக்குறுக்கம் சார்பெழுத்து ஆதல் | (அரைமாத்திரை மகரமெய் கால்மாத்திரையாக ஒலிக்கும்) அளவு குறுகலானமகரக்குறுக்கம் சார்பெழுத்து என மெய்யின் வேறாயிற்று. (இ. வி. 22உரை) |
மகரக்குறுக்கம் பிறன்கோட் கூறல்ஆகாமை | ‘மகரக்குறுக்கம் இசையிடன் அருகும்’ (தொ. எ. 13). என்றுகூறப்பட்டுள்ளது. ‘இசையிடன்’ என்பதற்கு வேறோர் எழுத்தின் ஓசையின்கண்’என்பதே பொருள். பேராசிரியர் இசை நூலின்கண் என்று பொருள் கொண்டு,இதனைப் பிறன்கோட்கூறல் என்னும் உத்திக்கு உதாரணமாகக் காட்டி னார்.ஆசிரியர் இசைநூலிடத்தின்கண் – எனத் தெளிவாகக் கூறாமையானும்,மகரக்குறுக்கம் இயற்றமிழின் கண் வருவ தோர் இலக்கணம் ஆகையானும்,மகரக்குறுக்கம் பற்றிய செய்தி பிறன்கோட் கூறல் ஆகாது. (எ.ஆ. பக்.19) |
மகரம் த வ ய ஆதல் | பண்பான சொற்களின் இடையே நின்ற மகரம் திரிந்து தகர வகர யகரமாகவும்பெறும் என்றார் நேமிநாத ஆசிரியர்.வரலாறு: செம்மை என நிறுத்தி ஆம்பல் என வருவித்து, ‘ஆங்கு உயிர்மெய்போம்’ என்பதனால் மகர ஐகாரத்தை அழித்து, ‘மகரம் தவய ஆம்’ என்பதனால் மகரஒற்றைத் தகரமாக்கி, முதல் உயிரை நீட்டி, ‘செம்மை உயிர் ஏறும்செறிந்து’ என்பதனால் தகர ஒற்றிலே உயிரை (ஆ)ஏற்றிச் சேதாம்பல் – எனமுடிக்க.செம்மை என நிறுத்தி அலரி – ஆடை – என வருவித்து, மகர ஐகாரத்தைஅழித்து, முன்நின்ற மகரஒற்றை வகரம் ஆக்கிக் ‘குற்றொற்று இரட்டும்’என்பதனால் வகர ஒற்றை இரட்டித்து, ‘ஒற்றுண்டேல் செம்மை உயிர் ஏறும்செறிந்து’ என்பதனால் வகர ஒற்றில் உயிரை ஏற்றிச் செவ்வலரி- செவ்வாடை -என முடிக்க.ஐம்மை என நிறுத்தி அரி என வருவித்து, மகர ஐகாரத்தைக் கெடுத்து, மகரஒற்றை யகரம் ஆக்கி யகர ஒற்றில் உயிரை (அ) ஏற்றி, ஐயரி – எனமுடிக்க.பண்பீற்று நிலைமொழியில் மகரம் தகர வகர யகரம் ஆவது வருமொழிக்குமுதலாக உயிர்வரின் – என அறிக.(நேமி. எழுத். 18 உரை) |
மகரம் னகரத்தோடு ஒத்தல் | ‘மகர இறுதி’ என்றதனான் பால் பகா அஃறிணைப்பெயர் என்பது பெற்றாம்.மகரம் னகரத்தோடு ஒத்தலாவது, பெய ரிறுதிக்கண் மகரம் நின்ற நிலைக்களத்துனகரம் நிற்பினும் வேற்றுமை இன்றி ஒத்தல்.எ-டு : ‘அகன் அமர்ந்து….முகன் அமர்ந்து’ (குறள் 84) (நன். 122சங்கர.) |
மகரம் னகரமோடு உறழாது நடப்பன | ‘உறழா நடப்பன உளவே’ எனவே, உறழாதன பெரும் பான்மையவாம். அவை வட்டம்பட்டம் குட்டம் மாடம் கூடம் கடாம் படாம் கடகம் சடகம் நுகம் மகம் ஆரம்பூரம் உத்தரம் வீக்கம் நோக்கம் ஊக்கம் – என்றல் தொடக்கத்தன. (நன். 121மயிலை.)உறழாதன பெரும்பால என்க. அவை வட்டம், குட்டம், மாடம், கூடம்-முதலாயின. (நன். 122 சங்கர.) |
மகரம் மயங்காத னகர ஈறு ஒன்பதுஎன்றல் பொருந்தாமை | ‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்தனகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்பபுகரறக் கிளந்த அஃறிணை மேன’ (தொ. மொழிமரபு 49)என்று எகின் – செகின் – எயின் – வயின் – குயின்- அழன்- புழன்-புலான்- கடான்- என வரும் ஒன்பதும் மயங்காதன எனக் கொள்ளின், பலியன் -வலியன்- வயான் – கயவன்- அலவன்- கலவன்- கலுழன் – மறையவன்- செகிலன்-முதலாயினவும் மயங்கப்பெறா – என மறுக்க. (நன். 121 மயிலை.)இம்மயக்கம் ஏற்புழிக்கோடலான் குறிலிணையை அடுத்த னகரம் பற்றியதே.(இல. சூறா. ப. 65.) |
மகளிர் பருவம் | 1. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்என்னும் எழுவகைப் பெண் பருவம். (திவா. பக். 38)2. வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம்.(பிங். 939) |
மக்கட் கதி (யெழுத்து) | ஆ ஈ ஊ ஏ என்ற நெடிலும், ங் ஞ் ண் ந் ம் என்ற ஐந்து மெல்லொற்றும்ஆம். ஒற்றெழுத்து என்பது ஈண்டு உயிர் மெய்யினையே குறிக்கும். ஙகரம்ணகர மிரண்டும் மொழி முதலாகாமையின் ஏனைய மூன்றும் கொள்ளப்படும். (இ.வி. பாட். 38) |
மக்கள் என்ற பொதுப்பெயர் புணருமாறு | மக்கள் என்ற பொதுப்பெயர் இருவழியும் இயல்பாதலே யன்றிச் சிலவிடங்களில் வருமொழி முதலில் வன்கணம் வந்துழி ளகரம் டகரமாகத் திரிதலும்உரித்து.எ-கு: மக்கள்+தலை=மக்கட்டலை-வேற்றுமைமக்கள்+சுட்டு=மக்கட்சுட் (தொ.சொ. 1) – அல்வழி(தொ.எ.404.நச்.) |
மங்கல மொழி | மங்கலமொழி பெயரின் முதலெழுத்துசீர் – க, கா, கி, கீ; சொ, சோ;ந, நா, நி, நீ; யா; வ, வா, வி, வீ.எழுத்து – நு, நூ; யூ.பொன் – கு, கூ; சௌ; து, தூ, தெ, தே; நெ, நே; பு, பூ;மெ, மே, மொ, மோ, மௌ.பூ – கௌ; சை; ம, மா, மி, மீ, மு, மூ; வை, வெள.திரு, திங்கள் – கொ, கோ.மணி – கெ, கே.நீர் – கை; சி, சீ; தி, தீ, தை; நொ, நோ; பை.சொல் – ஒள; சு, சூ, செ, சே; தௌ; நௌ.கங்கை – அ, ஆ, ஒ, ஓ; த, தா, தொ, தோ, யோ.வாரணம் – ஞெ, ஞொ.குஞ்சரம் – இ, ஈ; ஞா.உலகம் – ப, பா.பார் – ச, சா; பெ, பே, பொ, போ; வெ, வே.தேர் – உ, ஊ, எ, ஏ, ஐ; நை, மை. |
மங்கல வள்ளை | உயர்குலத்து உதித்த மடவரலை வெண்பா ஒன்பதனால் வகுப்புறப் பாடுவதொருபிரபந்தம். (வகுப்பு – சந்தப் பொலிவு.)(இ. வி. பாட். 68)வெண்பா ஒன்பதனாலும் வகுப்பு ஒன்பதனாலும் என இரு வகையாகப் பாடுதலைச்சதுரகராதி சுட்டுகிறது. அக்கருத் துக்கு வகுப்புச் சந்தவிருத்தத்தைக்குறித்தல் அமையும். (இ. வி. பாட். 68) |
மங்கல வெள்ளை | சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலாவது, ஒருகலிவெண்பாவாலாவது, ஒன்பது வெண்பாக்களா லாவது, ஒன்பது சந்தங்களாலாவதுஉயர்குடிப் பிறந்த கற்புடைய மடவரலைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம்.(பன்.பாட். 302 – 304) |
மங்கலச் சொற்கள் | சீர், பொன், பூ, மணி, திங்கள், பரிதி, கார், திரு, எழுத்து, கங்கை,யானை, கடல், நிலை, மா, உலகம், சொல், நீர், தேர், அமுதம், புகழ்,நிலம், ஆரணம், கடவுள், திகிரி என்பனவும் பிறவும் அகலக்கவியின்முதற்கண் நிற்கும் மங்கலச் சொற் களாம்.‘பிற’ என்றதனால், வாழி, மாலை, சங்கு, தார், விசும்பு, கவி, கயல்,சுடர், முரசு, கவரி, தோகை, நன்று, தாமரை, விளக்கு, மலர், பழனம், இடபம்என்பனவும், செல்வம், சீர்த்தி, கீர்த்தி, ஞாயிறு, புயல், புனம்,வேழம், களிறு, பரி, மதியம், தீபம் முதலிய பரியாயச் சொற்களும்கொள்ளப்படும். (இ. வி. பாட். 11)எவ்வெம் மங்கலச்சொற்கள் எவ்வெம் முதலெழுத்துக்களை யுடையசொற்களுக்கு உரிய என்பது வரையறுத்த பாட்டியல் குறிப்பிடும்.க, கா, கி, கீ, சொ, சோ, ந, நா, நி, நீ, யா, வ, வா, வி, வீ -என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்குஏற்ற மங்கலச்சொல் ‘சீர்’ என்பது. நு, நூ, யூ – இவற்றை முதலாகக் கொண்டதலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘எழுத்து’ என்பது. (சூ. 4).கு, கூ, சௌ, து, தூ, தெ, தே, நெ, நே, பு, பூ, மெ, மே, மொ, மோ, மௌ-என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்குஏற்ற மங்கலச் சொல் ‘பொன்’ என்பது. கௌ, சை, ம, மா, மி, மீ, மு, மூ, வை,வெள – இவற்றை முதலாகக் கொண்ட தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல்‘பூ’ என்பது (சூ. 5).கொ, கோ – எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர்களுக்குத் ‘திரு’என்பதும் ‘திங்கள்’ என்பதும், கெ, கே, எனும் எழுத்தால் தொடங்கும்தலைவர் பெயர்களுக்கு ‘மணி’ என்பதும், கை, சி, சீ, தி, தீ, தை, நொ, பை- எனும் எழுத்தால் தொடங்கும் பெயர்களுக்கு ‘நீர்’ என்பதும் மங்கலச்சொற்களாம். (சூ. 6).ஓள, சு, சூ, செ, சே, தௌ, நௌ – எனும் எழுத்தால் தொடங் கும் தலைவர்பெயர்களுக்குக் ‘கங்கை’ என்பதும், ஞெ, ஞொ எனும் எழுத்தால்தொடங்குவனவற்றிற்கு ‘வாரணம்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 7)இ, ஈ, ஞா – எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர் களுக்குக்‘குஞ்சரம்’ என்பதும், ப, பா எனும் எழுத்தால் தொடங்குவனவற்றிற்கு‘உலகு’ என்பதும், ச, சா, பெ, பே, பொ, போ, வெ, வே எனும் எழுத்தால்தொடங்குவனவற் றிற்குப் ‘பார்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ.8)உ, ஊ, எ, ஏ, ஐ, நை, மை – எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர்பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘தேர்’ என்பது (சூ. 9).சீர், மணி, பரிதி, யானை, திரு, நிலம், உலகு, திங்கள், கார், மலை,சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன் என்னும் இவைபதினெட்டும் இவற்றின் பரியாயப் பெயர்களும் ஆம். (ஆ.நி. xii – 18) |
மங்கலச் சொற்குச் சிறப்பு விதி | தலைவன் இயற்பெயரைக் குறித்து மங்கலச் சொற்குக் குற்றப்பாடுஉளதாயின், அம்மங்கலச்சொற்கு அடை கொடுத் துக் கூறுதலும் பரியாயச் சொற்கூறுதலும் உரியனவாம். அம்மங்கலச் சொல் முதற்கண் அன்றி நடுவிலும் இறுதியிலும் நிற்கவும் பெறும். (இ. வி. பாட். 41) |
மங்கலப் பாடல் | திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சியின்போது இசைக்கப் படும் இன்னிசை(‘(இ) லாலி’ என்று வழங்குப.) மங்கலப் பாட்டு, மங்கல கீதம் எனவும்வழங்கப் பெறும். |
மங்கலப் பொருத்தம் | செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் முதலாவது; சொற்பொருத்தம்எழுத்துப்பொருத்தம் உண்டிப் பொருத் தம் என்னும் இவற்றினும் சிறந்தது.மங்கலத்தைக் குறித்துச் சொல் முதலிய மூன்றும் வேறுபடினும் அமையும்.(இ. வி. பாட். 10) |
மங்கை | பன்னிரண்டு பதின்மூன்று வயதுடைய பெண்; எழுவகைப் பருவமகளிருள்மூன்றாவது பருவத்தவள். (இ. வி.பாட். 101) |
மஞ்சரிப்பா | பிரபந்த விசேடம். (தொண்டை. சத. 95) |
மடக்கிற்கு அடிவரையறை | மடக்கு நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுத லாகஈரடிக்கண்ணும் மூவடிக்கண்ணும் நான்கடிக்கண்ணும் நடைபெறும். (மா. அ.254) |
மடக்கு | ஓரெழுத்தொருமொழியோ பல எழுத்தொரு மொழியோ செய்யுளில் தொடர்ந்தும்இடையிட்டும், முதலிலோ நடுவிலோ இறுதியிலோ மடங்கி வந்து வேறொரு பொருள்தருமாயின், அவ்வனப்பு மடக்கு என்னும் சொல்லணியாகக் கூறப்படும்.(தண்டி. 92)முதலெழுத்தொன்று மாத்திரம் மாற, ஏனைய எழுத்துக்கள் அவையேயாய்மேற்கூறியவாறு மடக்கி வருவது ‘திரிபு மடக்கு’ எனப்படும்; ‘திரிபு’என்பதுமது. |
மடந்தை | பதினான்கு முதல் பத்தொன்பது வரை வயதுடைய பெண்; எழுவகைப்பருவமகளிருள் நான்காம் பருவத்தவள்.(இ. வி. பாட். 102) |
மணிமாலை | 96 பிரபந்தங்களுள் ஒன்று; வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும்விரவிவரப் பாடப்பெறுவது. (சது.) |
மணிமாலை விருத்தம் (1) | எழுசீர்ச் சந்த விருத்தம்; 1, 3, 5ஆம் சீர்கள் குறிலீற்றுப்புளிமாங்காய், 2, 4, 6ஆம் சீர்கள் குறிலீற்றுத் தேமா; 7ஆம் சீர்புளிமா என்றமைந்த எழுசீரடி நான்கான் நிகழ்வது.அ) நேரசையில் தொடங்குவது :எ-டு : ‘இத்தன்மை யெய்தும் அளவின்க ணின்ற இமையோர்க ளஞ்சிஇதுபோய்எத்தன்மை யெய்தி முடியுங்கொ லென்று குலைகின்ற எல்லை இதன்வாய்அத்தன்மை கண்டு புடைநின்ற அண்ணல் கலுழன்த னன்பின் மிகையால்சித்தங்க லங்கு மிதுதீர மெள்ள இருளூடு வந்து தெரிவான்!’(கம்பரா. 8244) (வீ. பா. பக். 81)ஆ) நிரையசையில் தொடங்குவது :எ-டு : துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னுசுடரோன் ஒளிமண்டி யும்பர் உலகங்க டந்த உமைபங்க னெங்க ளரனூர்களிமண்டு சோலை கழனிக்க லந்த கமலங்கள் தங்கு மதுவின்தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.(தே. II 88-1) (வி. பா. பக். 70)இ) புளிமாவும் கருவிளமும் மும்முறை அடுக்கிவர இறுதியில் நீண்டகருவிளம் (அல்லது புளிமாங்காய்) வரும் எழுசீரடிகள் நான்கான் நிகழ்வது:எ-டு : ‘இனியின் றொழிமினிவ் வெறியு மறியடு தொழிலு மிகுகுரவையுமெலாம்நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர் நசையுண் டதுநரைமுதுபெண்டீர்புனிதன் புகலிய ரதிபன் புனைதமிழ் விரகன் புயமுறு மரவிந்தம்பனிமென் குழலியை அணிமின் துயரொடு மயலும் கெடுவதுசரதம்மே’.(ஆளுடை : திருக். 22)ஈ) இத்தகைய பாடலில் இறுதிச்சீர் தேமா ஆவது.எ-டு : ‘சயமி குத்தகு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் கீதன்கயலு டைப்புனல் வயல்வ ளந்தரு கழும லப்பதி நாதன்இயலு டைக்கழ றொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே!’ (ஆளுடை.திருக் பக். 72)2) தேமா, கூவிளங்காய், தேமா, கூவிளங்காய், தேமா கூவிளங்காய்,கூவிளம் எனவரும் எழுசீரடி நான்கான் நிகழ்வது.எ-டு : நீல நின்றதொரு நீல மால்வரைநெ டுந்த டக்கையினிடந்துநேர்மேலெ ழுந்தரிவி சும்பு செல்வதொரு வெம்மையொடு வரவீசலும்சூல மந்தகனெ றிந்த தன்னதுது ணிந்து சிந்தவிடைசொல்லுறும்கால மொன்றுமறி யாம லம்புகொடு கல்லி னானெடிய வில்லினான். (வி.பா.ப. 84) |
மணிமாலை விருத்தம் (2) | அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்.இதன் அமைப்பு : 1, இறுதிக்கண் இலகுவான கணம், 2. முதற்கண் இலகுவானகணம், 3. இறுதிக்கண் இலகுவான கணம், 4. முதற்கண் இலகுவான கணம் வருதல்;எடுத்துக்காட் டுச் செய்யுளில் சில எழுத்துக்கள் நெட்டோசை பெறுதலால்இலக்கணம் பொருந்தும்.3, 4, 9, 10ஆம் உயிர் குறிலாக நிற்கும் அடிகள் நான்கனை உடையதுஇது.எ-டு : ‘அங்கோல் வளைமங்கை காண அனலேந்திகொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாகவெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்நங்கோ நமையாள்வான் நல்ல நகரானே!’ (தே. I 85 – 7)முதலடியில், மங்கை, காண – என்ற சீர்களின் ஈற்றெழுத்தும், இரண்டாம்அடியில், சூடி, காக – என்ற சீர்களின் ஈற்றெழுத் தும், மூன்றாமடியில்,‘மாக’ – என்ற சீரின் ஈற்றெழுத்தும் நெட்டோசை பெறும். (வி. பா. பக்.50) |
மணிரங்கம் | இது வடமொழி விருத்தங்களுள் ஒன்று. இதன் அமைப்பு : முதலில் குருவும்இடையில் இலகுவும் ஈற்றில் குருவும் கொண்ட ஒரு கணமும், அடுத்து,முதற்கண் இலகுவும் இடைக்கண் குருவும் இறுதிக்கண் குருவும் கொண்டகணமும், அடுத்தும் அதே கணமும், இறுதியில் ஒரு குருவும் நிற்பது.எ-டு : ‘வீரத் திண்டிறல் மார்பினில் வெண்கோடாரக் குத்திய ழுந்திட நாகம்வாரத் தன்குலை வாழை மடற்சூழ்ஈரத் தண்டென இற்றன வெல்லாம்’ (கம்பரா. 6285) (வி. பா. பக்.42) |
மதங்கியார் | கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள்ஒன்று. மதங்கர் என்பார் இசைக்கும் கூத்திற்கும் உரிய ஒரு சாதியார்.அச்சாதியைச் சார்ந்த பெண் ஒருத்தி இரு கைகளிலும் இரண்டு வாள்களை ஏந்திவீசிப் பாடி ஆடும் அக்காட்சியைக் கண்ட காமுகன் ஒருவன் அவளது பேரழகில்ஈடுபட்டு மனத்தைப் பறிகொடுத்து அவள்அழகு தன்னை வருத்திற்றாகக் கூறும்செய்தி அமைந்த அகப்புறக் கைக்கிளைத்துறைப் பாடல் இது.(மதங்கி – ஆடல் பாடல்களில் வல்ல பதினாறு வயதுப் பெண்) (மதுரைக் கல.16) |
மதனார்த்தை விருத்தம் | குற்றெழுத் தீற்றுத் தேமாங்கனிச்சீர் மூன்றினோடு, இரண்டுநெட்டெழுத்தானாகிய தேமாச்சீர் கொண்ட அடிநான்கான் அமைவது.எ-டு : ‘ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே’ (தே. I – 11-2)(வி. பா. பக். 48) |
மதம் | மதம் என்பது மனத்தின் கொள்கை. நூல் தழுவிய மதங்கள் பலவா யிருக்கத்தலைமை நோக்கி மதம் ஏழு என்பது நூல்வழக்கு. (நன். 11 இராமா.) |
மதிக்கணம் | நூலின் முதற்சீர்க்குக் கொள்ளப்படும் பொருந்திய கணங் களுள் ஒன்று;சந்திரகணம் எனவும் படும். இதற்கமைந்த சீர் புளிமாங்காய்; நாள்மிருகசீரிடம்; பயன் வாழ்நாள் தருதல். (இ. வி. பாட். 40 உரை) |
மதிவாணனார் | இடைச்சங்க காலத்தவராகக் கருதப்படும் இப்புலவர் இயற்றிய நாடக நூல்,இவர் பெயரால் மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் எனப்படும். அடியார்க்குநல்லார் உரையியற்ற உதவிய நாடகநூல்களுள் இதுவும் ஒன்று. (சிலப்.உரைப்பாயிரம்) |
மதுரகவி | 1. ஆசு முதலிய நால்வகைக் கவியுள் ஒன்று; சொல்லும் பொருளும் ஆகியஇலக்கணத்திற் சிதையாமல், மெய்ப்பாடு தோன்றக் கூறி, தொடையும் விகற்பத்தொடையும் செறிந்து, உய்த்துணர்வோர் மனத்தினுள் ஊறும் அமுதம் போல,தன்மை உவமை உருவகம் முதலிய அணிகளால் அலங்கரிக் கப்பட்டுக் கேட்போர்செவிக்கு இனிய ஓசை பொலிவுறப் பாடுவது. (இ. வி. பாட். 5)2. இன்கவி பாடும் புலவன்.3. திவ்விய பிரபந்தத்துள் ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்றபாசுரப்பதிகம் அருளிய ஆழ்வார்; நம்மாழ்வாரைத் தம் வழிபடு ஆசானாகக்கொண்டவர். |
மத்த கோகில விருத்தம் | அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் பெற்று வரும் வடமொழி விருத்தம்.இதன் அமைப்பு : 1. முற்றிலும் இலகு கணம், 2. முதற்கண் குரு பெற்றகணம், 3. இடையில் குரு வரும் கணம், 4. இடையில் இலகு பெற்ற கணம் எனவருதல். இது ‘பிரியம்வதா’ எனவும்படும்.எழுசீர் மத்தகோகில விருத்தம் : குறிலீற்றுத் தேமா கூவிளம் ஆகியவைமும்முறை அடுக்கி வரப்பெற்று, இறுதியில் நெடிலீற்றுக் கூவிளம் அமையப்பெறுவதாகிய அடி நான்கனையுடையது.அ) நேரசையில் தொடங்குவது :எ-டு : ‘வாயி டைம்மறை யோதி மங்கையர் வந்தி டப்பலி கொண்டு போய்மேயி டம்மெரி கானி டைப்புரி நாட கம்மினி தாடினான்பேயொ டுங்குடி வாழ்வி னான்பிர மாபு ரத்துறை பிஞ்ஞகன்தாயி டைப்பொருள் தந்தை யாகுமென் றோது வார்க்கருள்தன்மையே’(தே. III 37 -5 ) (வி.பா. பக். 71)ஆ) நிரையசையில் தொடங்குவது :எ-டு : மறைது ளங்கினும் மதிது ளங்கினும் வானு மாழ்கடல் வையமும்நிறைது ளங்கினும் நிலைது ளங்கினு நிலைமை நின்வயி னிற்குமோபிறைது ளங்கிய வனைய பேரெயி றுடைய பேதையர் பெருமை – நின்,குறைது ளங்குறு புருவ வெஞ்சிலை யிடைது ளங்குற இசையுமோ! (கம்பரா.4213) (வி. பா. பக். 80)இ) எழுசீர் மத்தகோகில விருத்தம் ஒருசீர் குறைந்து, தேமா கூவிளம் -தேமா – கூவிளம் – தேமா – நெடிலீற்றுக் கூவிளங் காய் – என்ற அறுசீரடிநான்கான் அமைவது :எ-டு : ‘திங்க ளைத்தலை யாக மன்னவர் செப்பு மாமரவோர்தங்க ளிற்பகை யாகி வானவர் தான வர்க்கெதிராயெங்க ளுக்கெழு பார டங்கலு மென்று போர்புரியும்வெங்க ளத்தினி யற்கை யெங்கண்வி யந்து கூறுவதே’ (நல்லாப். கன்ன.49) (வி. பா. பக். 71) |
மத்த மயூர விருத்தம் | அடிக்குப் பதின்மூன்று எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம். இதன்அமைப்பு : 1. முற்றிலும் குருவான கணம், 2. இறுதி இலகுவான கணம், 3.முதற்கண் இலகுக் கணம், 4. ஈற்றில் குருக்கணம், அடுத்து ஒரு குருவருதல், அடிக்கு இருபத்திரண்டு மாத்திரைகள், முதல் நான்கெழுத்தில் ஒருநிறுத்தம், பின்னர் அடியிறுதியில் நிறுத்தம் என அமையும். பின்வரும்செய்யுளில் கண அமைப்பு இல்லை; ஆயினும் மாத்திரையளவும் நிறுத்தமும்முற்றிலும் பொருந்துகின்றன.அ) தேமா தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் – என வரும் ஐஞ்சீரடிநான்காக அமைவது. தேமா கூவிளம் என்பன நான்கு மாத்திரை அளவின.புளிமாங்காய் ஆறு மாத்திரை அளவிற்று.எ-டு : ‘காறோய் மேனிக் கண்டகர் கண்டப் படுகாலைஆறோ வென்ன விண்படர் செஞ்சோ ரியதாகிவேறோர் நின்ற வெண்மணி செங்கேழ் நிறம்விம்மிமாறோர் வெய்யோன் மண்டில மொக்கின் றதுகாணீர்’ (கம்பரா.9601)படுகாலை, ரியதாகி – ஈற்று நின்ற குறில் இரண்டு மாத்திரை அளவின.ஆ) புளிமா தேமா தேமா தேமா புளிமாங்காய் என அமைந்த ஐஞ்சீரடிநான்காகி வருவது. மாச்சீர் நான்கு மாத்திரை; காய்ச்சீர் ஆறுமாத்திரை.எ-டு : ‘மழுவின் கூர்வாய் வன்பலி டுக்கின் வயவீரர்குழுவின் கொண்டந் நாடிதொ டக்கப் பொறிகூட்டித்தழுவிக் கொள்ளக் கள்ளம னப்பே யவைதம்மைநழுவிச் செல்லு மியல்பின காண்மின் நமரங்காள்’22 மாத்திரை என்ற அளவில் பொருந்தும். (கம்பரா. 9592)இ) கூவிளம் தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் என அமைந்த ஐஞ்சீரடிநான்காகி வருவது. மாவும் விளமும் நான்கு மாத்திரை; காய்ச்சீர்ஆறுமாத்திரை.எ-டு : ‘மந்தர மன்னன் திண்புயன் வைவேல் மதிமன்னன்இந்திர துய்மன் னென்பவ னுலகீ ரேழுந்தன்சிந்தையி னுஞ்சந் தம்பெற வேசெங் கோலோச்சிக்கந்தர வாகன் தன்புவி கண்டான் கடைநாளில்’இதுவும் மாத்திரை அளவில் பொருந்துவதே.(நல்லாப்.) (வி.பா.பக். 54) |
மத்திமம் (1) | எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு மூன்றாக வருவது.எ-டு : ‘வேரம் போய்மாரன் சீர்சேருங் கால்நேர்வன் யான்’(அடிதோறும் இரண்டாம்சீர் நேரசைச் சீராம்.) (வீ. சோ. 139 உரை) |
மந்திரவாதம் | அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நூல்களுக்குச் சார்பாக வந்தநூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க்கேட்டே உணரப்படும்.(யா. வி. பக். 491) |
மனோரமா | அடிக்குப் பத்தெழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்; இதன் அமைப்பு;1) முற்றிலும் இலகுவான கணம், 2) இடைக்கண் இலகு பெற்ற கணம், 3)இடையியல் குரு பெற்ற கணம், 4) ஈற்றில் ஒரு குரு வருதல் என்பன.எழுத்துக்களின் எண்ணிக்கையிலும் மாத்திரை எண்ணிக்கையிலும் கீழேகாட்டப்படினும், கணங்கள் அவ்வாறு அமைந்தில.எ-டு : ‘வாம தேவன் என்று மாமுனிகாம ரன்னை கருவு வைகுநாள்பேமு றுக்கு பிறவி யஞ்சினான்ஏமு றாமை யிதுநி னைக்குமால்.’மா முனி – னி ‘னீ’ என ஒலித்து இரண்டு மாத்திரை பெறும். இப்பாடலடிகளில், முதல் மூன்று சீர்களும் மும்மூன்று மாத்திரை,இறுதிச்சீர்கள் ஐந்து மாத்திரை அளவினவாதல் காணப்படும்.(இறுதிச் சீர்கள் கூவிளச்சீர் ஆகும்; நெடிலும் குறிலும் மாறி மாறிவந்து இறுதியில் நெட்டெழுத்தால் முடியும்.(வி. பா. பக். 36) |
மன்:புணருமாறு | மன் என்னும் னகர ஈற்று இடைச்சொல், வேற்றுமைப் புணர்ச்சி போல்,ஈற்று னகரம் றகரமாய்த்திரிந்து வன்கணத் தொடு புணரும். எ-டு: ‘அதுமற்கொண்கன் தேரே’ (தொ. எ. 333 நச்.) |
மயிலைநாதர் | நன்னூற்குக் காண்டிகையுரை முதற்கண் வரைந்த சமண சமயப் புலவர். இவர்இளம்பூரணர், அவிநயவுரையாசிரியர், அமிதசாகரர் இவர்கள்தம் காலத்திற்குப்பிற்பட்டவர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சிந்தாமணி,மணிமேகலை, முத்தொள்ளாயிரம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணையெழுபது, களவழிநாற்பது, கார் நாற்பது, திணை மாலை நூற்றைம்பது, திரிகடுகம்,திருக்குறள், பழமொழி, முதுமொழிக்காஞ்சி, சூளாமணி முதலிய இலக்கியங்களையும், அகத்தியம், தொல்காப்பியம், பனம்பாரம், அவிநயம், புறப்பொருள்வெண்பா மாலை, யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணங்களையும் இவர்தம்முரையில் எடுத் தாண்டுள்ளார். இவர்காலம் 13ஆம் நூற்றாண்டாயிருத்தல்கூடும். இவரது உரை பல அரிய நுணுக்கங்களையுடையது. |
மயில்பாட்டு | முருகப்பெருமான் வாகனமாகிய மயிலைச் சிறப்பித்துப் பாடும்பிரபந்தம்.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறானது. (இ. வி. பாட். பக். 506) |
மயூர இயல் வெண்பா | ஈற்றடி எழுத்து மிக்கு ஏனையடி எழுத்துக் குறைந்து தம்முள் ஒவ்வாதுவரும் வெண்பா. (எழுத்தெண்ணுகையில் புள்ளி யெழுத்துவிலக்கப்படும்.)எ-டு : ‘குருந்து குளிர்ந்து மயங்கு குவட்டு (8)மருந்து கொணர்ந்து மகிழ்ந்து நமது (8)பெரும்பிணியை நீக்குவதாம் பீடு.’ (10) (யா. வி. பக்.499) |
மயூரத் திரிசந்தம் | வடமொழியில் பண்டிருந்த யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இது பலவகைவிருத்த வகைகளையும் அவ்விருத்த வகை இலக்கணங்களுள் சிறிது திரிந்தசெய்யுள்களையும் எடுத்தியம்பியது. (யா. வி. பக். 486) |
மயேச்சுரனாருடைய வேறு பெயர்கள் | 1. பிறை நெடுமுடிக் கறைமிடற்று அரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்,2. நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர், 3. வாமமேகலைமாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர், 4. உயரும் புரம் நகரச்செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 5. திரிபுரம் எரித்த விரிசடைநிருத்தர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 6. பெண்ணொரு பாகர் பெயர்மகிழ்ந்த பேராசிரியர், 7. காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கியநல்லாசிரியர், 8. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் திருப்பெயர்மகிழ்ந்த தொன்னூற் கவிஞர் – முதலியன. (யா. வி. பக். 117 முதலியன) |
மயேச்சுரம் | பண்டை யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மயேச்சுரனார்.இவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரிய ரால் பெரிதும் புகழப்படுபவர்.இந்நூற் சூத்திரங்களாக இதுபோது 64 கிட்டியுள. தொடைகள் சில,வெண்செந்துறை, குறட்டாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா,வஞ்சிவிருத்தம் எஞ்சிய யாப்பிலக்கணச் செய்திகள்யாவும் இந்த 64சூத்திரங்களில் சுட்டப்பட்டுள. இலக்கணங்களுக்கு உதாரணங்களும்இவ்வாசிரியராலேயே எடுத்தோதப்பட் டிருந்தன. (யா. வி. பக். 45முதலியன) |
மரபு என்பதன் ஒருபொருட்கிளவிகள் | இலக்கணம், முறைமை, தன்மை – என்பன மரபு என்பதனோடு ஒருபொருட்கிளவிகள். (தொ. எ. 1 நச். உரை) |
மரப்பெயர்ப் புணர்ச்சி ஐ வகை | அ) மெல்லெழுத்து மிக்கு முடிவனவும்(எ-டு: விளங்கோடு, அதங்கோடு, மாங்கோடு)ஆ) வல்லெழுத்து மிக்கு முடிவனவும்(எ-டு: பலாஅக்காய், அத்திக்காய், புன்னைக்காய்)இ) அம்முச்சாரியை இடையே பெற்று முடிவனவும்(எ-டு: புளியங்கோடு, அரையங்கோடு, தேக்கங்கோடு)ஈ) ஒருகால் மெல்லெழுத்துப் பெற்றும், ஒருகால் வல் லெழுத்துப்பெற்றும் உறழ்ந்து முடிவனவும்(எ-டு: யாஅங் கோடு, யாஅக்கோடு; பிடாஅங் கோடு; பிடாஅக்கோடு;தளாஅங்கோடு, தளாஅக் கோடு)ஒருகால் மெல்லெழுத்துப் பெற்றும் ஒருகால் அம்முப் பெற்றும்உறழ்ந்து முடிவனவும்(எ-டு: உதிங்கோடு, உதியங்கோடு: ஒடுங்கோடு, ஒடுவங்கோடு)உ) ஒருகால் அம்முப் பெற்றும், ஒருகால் அம்முப் பெறாதுவல்லெழுத்துப் பெற்றும் உறழ்ந்து முடிவனவும்(எ-டு: புன்னையங்கானல், புன்னைக்கானல்; முல்லையந் தொடையல்,முல்லைத் தொடையல் )-என மரப்பெயர்ப் புணர்ச்சி ஐவகையாம். (இ.வி.எழுத். 83 உரை) |
மரம் அல்லாத எகின்முன் வல்லினம் | எகின் என்ற பெயர் அன்னப்பறவையைக் குறிக்கும்வழி வேற்றுமைக்கண்ணும்வன்கணம் வருமிடத்தே இயல்பாத லும், இருவழியும் அகரச் சாரியை பொருந்தவல்லெழுத்தோ இனமெல்லெழுத்தோ மிகுதலும் ஆம்.எ-டு : எகின்கால், எகின்செவி, எகின்றலை, எகின்புறம் எனவேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பு. எகினப்புள், எகினம்புள் எனஅல்வழியில் அகரம் மருவ வலி மெலி மிக்கன. எகினக்கால், எகினங்கால் எனவேற்றுமையில் அகரம் மருவ வலிமெலி மிக்கன. எகின மாட்சி, எகின வாழ்க்கை,எகின வழகு என வேற்றுமையில் பிறகணம் வரினும் அகரச்சாரியை மருவிற்று.(நன். 215) |
மராஅடி: சொல்லமைப்பு | மரம்+ அடி > மர + அடி > மராடி > மராஅடி.மகரஇறுதி கெட, மர அடி என நிலைமொழி இறுதியும் வருமொழி முதலுமாகியஇரண்டு அகரங்கள் ஆகாரமாகி ‘மராடி’ என்று முடிய, வருமொழி அடி என்ற சொல்என்ப தனை அறிவிக்க அறிகுறியாக அகரம் இடப்பட, மராஅடி என்றாயிற்று. (எ.ஆ. பக். 151) |
மருத்துவ நூல் | அறம் பொருள் இன்பம் வீடு இவற்றைக் குறிப்பிடும் நூல் களின்சார்பாகத் தோன்றி, மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுஉணரத்தக்கனவாய் அமைந்த நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 491) |
மருவின் தொகுதியும் மயங்கியல்மொழியும் | வேற்றுமை முதலான பொருள்படச் சொற்கள் தொக்குத் திரிந்து ஒருசொல்லாய் மருவி நிற்கும் சொற்களும், இடம் மாறித் திரிந்து நிற்கும்சொற்களும் என இவை. இவ்விருதிறச் சொற்களும்புணர்நிலையைக் கருதுமிடத்து,நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய் நின்று புணர்தற் குரியன.இழிசினர் வழக்கும் பிழைபடுசொற்களும் கவர் பொருள்படு வனவும் அவ்வாறுநின்று புணரப்பெறா.எ-டு:சோணாடு, மலாடு, தெனாது, வடாது – இவை மரூஉ மொழிகள்.மீகண், முன்றில், நுனிநா, புறநகர் – இவை மயங்கியல்மொழிகள்.வந்திச்சி, போச்சு, ஆகச்சே, தங்கச்சி முதலியன – இவை இழிசினர்வழக்கு.சோழன்நாடு, மலையமான்நாடு, தெற்கின்கண்ணது, வடக்கின் கண்ணது – என்பனமுறையே சோணாடு முதலிய வாகத் திரிந்து ஒரு சொல்லாய் மருவிநின்றன.கண்மீ, இல்முன், நாநுனி, நகர்ப்புறம் – என்பன முறையே மீகண்முதலியவாகச் சொற்கள் பின்முன் இடமாறி நின்றன. (தொ. எ. 111 ச.பால.) |
மருவின் பாத்தி | மருமுடிபின் பகுதி. மருமுடிபு இலக்கணத்தொடு பொருந்திய மரு,இலக்கணத்தொடு பொருந்தா மரு – என இருபகுதிப் படும்.யாவர் என்னும் பலர்பால் படர்க்கைப் பெயர் இடையே வகரம் கெட்டுஉயர்திணை முப்பாற்கும் பொதுவான ‘யார்’ என்ற வினைக்குறிப்புப் போலவடிவு கொண்டு வருதல், யாது என்னும் அஃறிணை ஒருமை வினாப்பெயர் இடையேவகர உயிர்மெய் வர ‘யாவது’ என வருதல் – போல்வன உலக வழக் கினும்செய்யுள் வழக்கினும் மருவி வந்த இலக்கணத்தொடு பொருந்திய மருவாம். முன்+ இல் = முன்றில், மேல் + கண் = மீகண்- முதலியனவும் இலக்கணத்தொடுபொருந்திய மருவாம்.அருமருந்தன்ன – அருமந்த, சோழனாடு- சோணாடு, ஆற்றூர் – ஆறை முதலியனஇலக்கணத்தொடு பொருந்தா மரு. (தொ. எ. 172, 250, 355; 483 நச். உரை)மரூஉச் சொற்களின் பகுதிகள் புணரும்போது இடம் மாறும்.எ-டு : நுனிநா, முன்றில் (எ. கு. பக். 118) |
மரூஉ, மயங்கியல் மொழி தழாத்தொடர் | மருவிய சொற்களும், மயங்குதல் இயன்ற சொற்களும் புணரும் நிலைமைக்கண்உரியன உளவாம்.எ-டு: முன்றில், மீகண் (இவை மரூஉ);‘தெய்வ மால் வரை’ (மயங்கியல் மொழி)இவை நிலைமொழி வருமொழிகள் தழாஅத் தொடராகப் புணர்ந்தன. (மு. வீ. புண.5) |
மரூஉமொழி | ‘மருவின் பாத்தி’ காண்க. |
மறம் | தமது குடும்பத்தில் தோன்றிய மகளை மணம் பேசும்படி அரசனால்விடுக்கப்பட்ட தூதனை நோக்கி மறவர்கள் மகட் கொடுக்க மறுத்து அவ்வரசனைஇகழ்ந்து பேசியதாக அமையும் செய்யுளாகிய ‘மறம்’ என்பது கலம்பகம்என்னும் பிரபந்த உறுப்புகளுள் ஒன்று.“அரிச்சந்திரன் மனைவியை விற்றான். நளன் தன் மனை யாளை நடுக்காட்டில்பாதியாடையொடு நீத்துச் சென்றான். இராமன் சீதையைச் சிறை புகுமாறுவிட்டான். பாண்டவர் திரௌபதியை மாற்றார் துகில் உரிவதைப் பார்த்துக்கொண்டு வாளா இருந்தனர். இத்தகையவர் தோன்றிய மன்னர் பரம்பரையினர்,மறவராகிய எம் இல்லத்துப் பெண்ணை மணம் பேச வரலாமா? ‘மணம் என்ற சொன்னவாயெச்சிலை உமிழ்; மணவோலையைக் கிழித்துக் காற்றில் பறக்க விடு. முத்திகொடுக்கும் திருவெங்கை நாதர்தம் மலை வேடுவர் யாம். சிவபெருமான் எமைஅன்போடு அடுத்து எம் மூதாதையான கண்ணப்பன் எச்சிலையும் உண்டதனால்,இரக்கப்பட்டு யாங்கள் வளர்த்த பெண்ணை அவன்மகன் வேலனுக்கு மணம்செய்வித்தோம். பெற்ற பெண்ணை அரசனுக்கு ஒருகாலும் கொடுக்க மாட்டோம்”.என்று மறவர் மணவோலை கொண்டு வந்த தூதுவனிடம் கூறியது (‘விற்றதார்’எனத்தொடங்கும் பாடல்) (வெங்கைக். – பிற்சேர்க்கைப் பாடல்) |
மலைபடுகடாம் | இது கடைச்சங்கத் தொகுப்பாகிய பத்துப்பாட்டில் இறுதிப் பாடல்.இதன்கண், பாட்டுடைத்தலைவனது நாட்டின் யாதானு மொன்றனைச் சிறப்பித்துச்சொல்லலுற்ற இடத்தே அத்திணைக்குரிய இறைச்சிப்பொருளை ஊறுபடச் சாவவும்கெடவும் சொல்லுவதும் (313, 314 ஆம் அடிகள்), புகழ்தலுற்ற இடத்தே ஆகாதபெற்றியின் மங்கலம் அழியச் சொல்லுவ தும் (44 – 46ஆம் அடிகள்)இறப்பஇழிந்த பொருளுக்கு இறப்ப உயர்ந்த பொருளை உவமமாகக் குறிப்பிடும்இறப்ப உயர்ந்த ஆனந்தஉவமை கூறுவதும் (99-101ஆம் அடிகள்), கருப் பொருள்செயல்களில் நினைந்தது கிட்டாமையைக் குறிப்பி டும் பரிசிற்பொருள்ஆனந்தம் கூறுவதும் (145 – 150ஆம் அடிகள்) ஆகிய ‘பொருளானந்தம்’ என்றகுற்றங்கள் அமைந் திருக்கின்றன என்று யாப்பருங்கல விருத்தியுரை குறிப்பிடுகிறது. (யா. வி. பக். 559 – 561) |
மழை என்ற சொல் புணருமாறு | மழை என்ற ஐகார ஈற்றுச் சொல், வன்கணம் வருவழி அல்வழிப்புணர்ச்சிக்கண் இயல்பாகவும், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அத்தும்இன்னும் பெற்றும் புணரும்.எ-டு : மழை கடிது, சிறிது தீது, பெரிது – அல்வழி; மழையத்துச்சென்றான், மழையிற் சென்றான் -வேற்றுமை; மழையின்கண் சென்றான் – என்பதுபொருள். (தொ. எ. 287 நச்.) |
மா என்ற பெயர்ச்சொல் புணருமாறு | மா என்ற பெயர் விலங்குகளையும் மாமரத்தையும் உணர்த்தும். இஃதுஅல்வழிக்கண் வன்கணம் வந்துழியும் இயல்பாம்.எ-டு : மா +குறிது, சிறிது தீது பெரிது = மா குறிது, மா சிறிது,மா தீது, மா பெரிது,வேற்றுமைக்கண், மா என்பது மரமாயின், அகர எழுத்துப் பேறளபெடையும்இனமெல்லெழுத்தும் பெற்று முடியும்; விலங்கைக் குறிக்குமாயின் னகரச்சாரியை பெற்று வருமொழி வன்கணத்தோடு இயல்பாக முடியும்.எ-டு: மாஅந்தளிர், மாஅங்கோடு; மான்கோடுமாங்கோடு என, மாமரத்தைக் குறிக்கும் சொல் அகரம் பெறாதுமெல்லெழுத்து மிகுதலுமுண்டு; மாவின் கோடு – எனச் சிறுபான்மை இன்சாரியைபெறுதலுமாம். (தொ.எ.231 நச். உரை) |
மாங்காய்ச் சீர்ச் சந்த விருத்தம் | ஐந்து மாங்காய்ச்சீர் பெற்ற அடி நான்கான் அமைவது; இறுதியில்நெட்டெழுத் தொன்று மிகுவது.எ-டு : ‘பூபால ரவையத்து முற்பூசை பெறுவார்பு றங்கானில்வாழ்கோபால ரோவென்று ருத்தங்க திர்த்துக்கொ தித்தோதினான்காபாலி முனியாத வெங்காம னிகரான கவினெய்தியேழ்தீபால டங்காத புகழ்வீர கயமன்ன சிசுபாலனே’ (2:1: 116)ஐந்தாம்சீர் தண்பூவாகவும் வரலாம்; முதலடியிற் காண்க. (வி. பா. பக்.56) |
மாணிக்கவாசகர் குவலயானந்தம் | இக்குவலயானந்த அணிநூலை இயற்றியவர் மாணிக்க வாசகர் என்ற சைவர். இவர்அகத்தியர் வரைந்த சிவவியா கரணம் என்ற நூலை முதனூலாகக் கொண்டு இந்நூலைஇயற்றினார் என்று இதன் சிறப்புப்பாயிரம் குறிக்கிறது. நூலாசிரியரேவரைந்ததோர் உரையும் இந்நூற்கு உள்ளது. நூலைப் பதிப்பித்தவர் அதனைஉரையுடன் பதிப்பிக்க வில்லை. இந்நூல் உறுப்பியல் அணியியல்சித்திரவியல் என்ற மூன்று பகுப்புக்களையும், அவற்றுள் முறையே 150 12029 நூற்பாக்களையும் கொண்டு அமைந்து உள்ளது. இந்நூலின் இறுதியில் சிலபகுதிகள் கிட்டாமல் போயிருக்கலாம் என்பது உணரப்படுகிறது. உறுப்பியலில்சொல்லிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது; அவ்வியலின் இறுதியில் யாப்புப்பற்றிய சில செய்திகள் உள்ளன. அணியியலில் 87 அணிகள் கூறப்பட்டுள.இறுதியியலில் சித்திரகவிகள், நூற்குற்றங்கள் முதலியனகுறிக்கப்பட்டுள்ளன.இந்நூல் குறிப்பிடும் சில அணிகள் உண்மையில் அணிகள் தாமா என்றே ஐயம்எழுகிறது. பேராசிரியர், பிற்காலத்தார் தாம்தாம் நினைத்தவற்றை யெல்லாம்அணியென்று பெய ரிட்டு வழங்கத் தலைப்பட்டனர் என்றுரைத்த செய்திக்குஇந்நூல் இலக்கியமாக உள்ளது. எனலாம்!இந்நூல் குறிப்பிடும் 87 அணிகளுள் ஏறத்தாழ 40 அணிகள் இவ்வாசிரியரேபடைத்துக் கூறுவன. அவற்றுட் பல உவமை, அதிசயம், தற்குறிப்பேற்றம்என்பவற்றுள் அடங்கிவிடுவன.இந்நூலின் மூலத்தை டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தி னின்று பெற்றுஅம்மூலமாத்திரமே வெளியிட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை),உரையையும் சேர்த்து வெளியிட்டிருப்பின் இதனை நன்குணரலாம். |
மாத்திரை | இஃது ஒரு காலஅளவின் பெயராம். இயல்பாகக் கண்ணை இமைத்தல் நேரமும்,கையை நொடித்தல் நேரமும் ஒரு மாத்திரையாம். கை நொடித்தலின்கண், நினைத்தஅளவில் கால்மாத்திரையும், கை நொடித்தற்குக் கட்டைவிரலை நடு விரலொடுசேர்த்த அளவில் அரைமாத்திரையும், அவ்விரு விரல்களையும் முறுக்கும்அளவில் முக்கால்மாத்திரையும், விடுத்து ஒலித்த அளவில் ஒருமாத்திரையும்ஆகிய காலம் கழியும் என்பர்.எழுத்தொலியை மாத்திரை என்ற காலஅளவு கொண்டு கணக்கிடுவர். (தொ. எ. 7நச். மு. வீ. எழுத். 98) |
மாத்திரை அளவுகள் | கண்ணிமைத்தல் நேரமும் கைநொடித்தல் நேரமும் ஒரு மாத்திரை நேரத்தைப்பொதுவாகக் குறிப்பன. ஓர் அகங் கைக்கு மேல் நான்கு அங்குலம் இடைகிடப்பமற்றோர் அகங்கையை வைத்துக் கொண்டு மெல்லவும் விரையவும் இன்றிஅடித்தல், விரைதலும் நீட்டித்தலு மின்றி முழங் காலைக் கையால்சுற்றுதல் – முதலியனவும் ஒரு மாத்திரை அளவின. குருவி கூவுதல் ஒருமாத்திரைக்கும், காகம் கரைதல் இரண்டு மாத்திரைக்கும், மயில் அகவுதல்மூன்று மாத்திரைக் கும், கீரியின் குரல் அரை மாத்திரைக்கும் அளவு.நோயில்லாத இளையோன் குற்றெழுத்தினைக் குறைந்த அளவில் எத்துணை நேரம்ஒலிப்பானோ அத்துணை நேரம் ஒரு மாத்திரை எனப்படும். (எ. ஆ. பக். 18) |
மாத்திரை அளவுகள் பற்றிய விரிவானஅட்டவணை | அறுவகை இலக்கண நூலார் ஆ ஈ ஊ ஏ ஓ – என்பன நெடில் என்றும், ஐ ஒள-என்பன இரண்டும் தனித்தனி ஒன்றரை மாத்திரை பெறுவன என்றும், ஆகவேஅவற்றைக் குறில் நெடில் என்றும் கொள்வர்.நூல்கள்தொல்காப்பியம் 1 2 1 ½ ½ ½ ½ – ¼ 1 1வீரசோழியம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ – ¼ 3 1நேமிநாதம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 1நன்னூல் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1இலக்கணவிளக்கம் 1 2 1 1 ½ ½ ½ ½ – ¼ 3 1தொன்னூல்விளக்கம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1சுவாமிநாதம் 1 2 1 ½ ,1 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 1முத்துவீரியம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1அறுவகைஇலக்கணம் 1 2 1 ½ 1 ½ ½ ½ – – – – – – |
மாத்திரைக்கு இமை, நொடி ஈரளவு கோடல் | கட்புலனாகிய இமைக்காலமும், செவிப்புலனாகிய நொடிக் காலமும் கருதிக்கோடற்கு இரண்டு ஓதினார். (நன். 99 மயிலை.) |
மாத்திரைச் சுருக்கம் | மிறைக் கவிகளுள் ஒன்று; ஒரு சொல்லின் முதல் நெட்டுயிர்மாத்திரையைக் குறைத்தால் வேறொரு சொல்லாகிப் பிறிதொரு பொருள் தரஅமைப்பது. (பண்டைக் காலத்தில், எ, ஒ (இன்றைய ஏ, ஓ) என்ற நெடில்களைக்குறிலாக்க ஏடுகளில் எ ஒ – இவற்றின் மேல் புள்ளி யிட்டு (எ ) ஒ ) என்று) எழுதுவது மரபு.)எ-டு : ‘நேரிழையார் கூந்தலின்ஒர் புள்ளிபெறின் நீள்மரமாம்;நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்; – சீரளவுகாட்டொன்(று) ஒழிப்ப இசையாம்; கவின் அளவும்மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு.’ஓதி (பண்டு ‘ஒதி’ என்று எழுதப்பட்டது) என்பது கூந்தல்;நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், ஒதி – மரவிசேடம்.ஏரி (பண்டு ‘எரி’ என்று எழுதப்பட்டது) என்பது நீர்நிலை;நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், எரி – நெருப்பு.காந்தாரம் – காடு; முதல் நெட்டுயிர்மெய் குறிலானால், காந்தாரம் -கந்தாரப்பண்.கந்தாரம் என்ற சொல்லின் இடைநின்ற நெட்டுயிர்மெய் குறிலானால்,கந்தரம் – கழுத்துமாத்திரை குறைத்து ஒரு மாத்திரைத்தாகிய குறிலாக்கி வெவ்வேறு பொருள்காணும் சித்திரம் அமைதலின், இது மாத்திரைச் சுருக்கம் (சுதகம்)ஆயிற்று. (தண்டி. 98 உரை) |
மாத்திரைப் பெருக்கம் | மிறைக் கவிகளுள் ஒன்று; ‘மாத்திரை வருத்தனம்’ எனவும் படும்.மாத்திரைச் சுருக்கத்தில் கூறிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும்மறுதலையாகக் கொண்டு பாடல் அமைப்பது. அஃதாவது ஒரு மாத்திரை அளவுடையகுறில் களை இரண்டு மாத்திரை அளவுடைய நெடில்களாக்கிப் பிறிதொரு பொருள்வரப் பாடுவது.எ-டு : ‘தருவொன்றை நீட்டிடத் தருணி கூந்தலாம்;மருவுதீ நீட்டிட மாண்புறும் நீர்நிலை;திருவுறு கழுத்தினை நீட்டத் தீம்பணாம்;உருவமேல் நீட்டிடின் உயர்ந்த காடுமாம்.’தரு – ஒதி; மங்கை கூந்தல் – ஓதிதீ – எரி; நீர்நிலை – ஏரிகழுத்து – கந்தரம்; தீம்பண் – கந்தாரம்‘கந்தாரம்’ மேலும் நீளின் காந்தாரம் (- காடு)எ-டு : ‘அளபொன் றேறிய வண்டதின் ஆர்ப்பினால்அளபொன் றேறிய மண்அதிர்ந் துக்குமால்;அளபொன் றேறிய பாடல் அருஞ்சுனைஅளபொன் றேறழ (கு) ஊடலைந் தாடுமால்’ (தண்டி. 98 உரை)அளபு (- மாத்திரை) ஒன்று ஏறிய வண்டு : (வண்டு – அளி) ஆளி;அளவு ஒன்று ஏறிய மண் : (மண் – தரை) தாரை;அளபு ஒன்று ஏறிய பாடல் : (பாடல் – கவி) காவி;அளபு ஒன்று ஏறிய அழகு : (அழகு – வனப்பு) வானப்பு.(வான்அப்பு – மழைநீர்)தன் மகள் உடன்போயவழி, தாய் புலம்புவதாக அமைந்தது இது.“காட்டில் ஆளி முழங்குவதால் என் மகளுடைய காவி (நீலோற்பலப்பூப்)போன்ற கண்கள், அச்சத்தால் மனம் நடுக்குறவே, தாரையாகக் கண்ணீர்பெருக்கும். அருஞ்சுனை நீர் மழைநீர்ப் பொழிவினால் அலைவுற்றுஅசையாநிற்கும்.”‘உகுமால்’ என்பது ககரம் விரித்தல் விகாரம் பெற்றது. காவி -உவமையாகுபெயரால், கண்.) (இ. வி. 690 – 5 உரை) |
மானினீ விருத்தம் | ஏழு கூவிளச்சீர்கள் அழகாகப் புணர இறுதியில் நெடிலைக் கொள்ளும் அடிநான்காய் அமைவது. வரும் காரிகையே இதற்கு எடுத்துக்காட்டாம்.எ-டு : கூவிள மேழுகு லாவநெ டிற்கடை கொள்வது மானனிநேரசைசேராவிள மாதிந டப்பது பேர்கவி ராசவி ராசித மென்றனரால்கூவிள மேகரு வார்விள மேயிவை கூடுவ சாத்துவி காசுலவும்பூவிள மென்முலை யாமமு தாரிரு பொற்குட மேந்துபொ லங்குழையே. (வி.பா.பக். 69) |
மாபாடியம் | பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை; கி.மு. முதல்நூற்றாண்டில் வரையப்பட்ட இப்பேருரை இப்பொழுது 1713 சூத்திரங்கட்கேகிடைத்துள்ளது. (பி.வி. பிற்சேர்க்கை பக். 435) |
மாபிங்கலம் | வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. பல வகை யாகத் திரிந்த நான்கடிவிருத்த விகற்பங்களும் மாராச்சையும் மித்தியா விருத்தியும் முதலாகியசாதியும், ஆரிடமும், பிரத் தாரம் முதலிய அறுவகைப் பிரத்தியமும்இதன்கண் குறிப் பிடப்பட்டுள்ளன. (யா. வி. பக்.) |
மாபுராணம் | தமிழில் அகத்தியத்தின் பின்னர்த்தோன்றிய பேரிலக்கண நூல். இதன்சூத்திரங்கள் ஆசிரியத்தானும் வெண்பாவானும் ஆகியவை. இவை இக்காலத்துமிகச் சிலவே கிட்டியுள. இந் நூலில் மகரக்குறுக்கத்தின் பயனைஎடுத்தோதிய நூற்பா ஒன்று யாப்பருங்கல விருத்தியுள் மேற்கோளாக இடம்பெறு கிறது. (பக். 33) வஞ்சிப்பா அகப்பொருள் பற்றிய பாடல்களில்சிறுபான்மை வரினும் சிறப்பின்று என்பது குறிக்கப் பெற்றுள் ளது (பக்.128). உயிரளபெடையும் மகரக் குறுக்கமும் தலைவன் பெயருக்கும் அவன்பெயருக்கு அடையாகிய சொற்கும் புணர்ப்பது குற்றம் எனவும்சொல்லப்பட்டுள்ளது. (பக். 564)இடைச்சங்க காலத்து வழங்கிய இலக்கண நூலாக இதனை இறையனார் களவியலுரை(சூத்திரம் 1) குறிக்கிறது.(யா. வி. பக். 564) |
மாராச்சை | வடமொழிச் செய்யுள் வகைகளுள் ஒன்று. இது மாத்ராகணம் பற்றி அமைவதுஎன்பர் ஒரு சாரார். (யா. வி. பக். 456) |
மாருத கணம் | தேமாங்கனி எனும் வாய்பாடு பற்றி வருவதும், நூல் முதற் பாடல்முதற்சீராக அன்றிச் சொல்லாக வருதலாகாது என விலக்கப்பட்டஅமங்கலமானதுமான செய்யுட் கணம். இதனை வாயுகணம் என இலக்கண விளக்கம்கூறுமாறு காண்க (இ. வி. பாட். 40). மாமூலனார் ‘மாருத கணம்’ என்றார்என்பதும் அவ்வுரைச் செய்தி. இதற்குரிய நாள் சுவாதி; இதன் பயன்சீர்சிறப்பு நீக்கம் எனச் சொல்லப்பட்டுள்ளது. |
மார், அல், ஐ விகுதிகள் | ‘காணன்மார் எமர்’ என மாரீறு எதிர்மறை வியங்கோ ளிடத்தும், டு து று- என்பன ஒன்றன் படர்க்கையிடத்தும், அல்விகுதி ‘மகன்எனல் மக்கட்பதடிஎனல்’ (குறள் 196) என வியங்கோள் எதிர்மறையிலும் உடன்பாட்டிலும், ஐஈறு ‘அஞ்சாமை அஞ்சுவ தொன்றின்’ என வியங்கோள் எதிர்மறையிலும் வரும்.(நன். 140 இராமா.) |
மார்க்கண்டேயனார் காஞ்சி | மார்க்கண்டேயனார் என்ற பழம்புலவர் நிலையாமையாகிய காஞ்சித் திணையைப்பற்றிப் பாடிய ஆசிரியப்பா ஒன்று இழுமென் மொழியால் விழுமியதுநுவல்வதாகிய ‘தோல்’ என்ற வனப்புக்கு எடுத்துக்காட்டாகத்தரப்பெற்றுள்ளது. (யா. வி. பக். 399) |
மாறனலங்காரம் | பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள்கவிராயரால் இயற்றப்பட்ட அணியிலக்கணநூல். இவ்வரும்பேரணிநூற்குவிருத்தியுரையருளிச் செய்தவர் தென்திருப்பேரைக் காரிரத்தின கவிராயர்.இந்நூலுள் பாயிரமாக அமைந்த நூற்பாக்கள் – 64; பொதுவணியியல்நூற்பாக்கள் 21; பொருளணியியல் நூற்பாக்கள் – 166; சொல் லணியியல்நூற்பாக்கள் 48; எச்சவியல் நூற்பாக்கள் – 28. உதாரணப் பாடல் என்.844.இதன்கண், வைதருப்பம் கௌடம் என்னும் இருநடைக்கும் இடைப்பட்டதாகப்பாஞ்சாலம் என, மூவகைச் செய்யுள் நெறி சொல்லப்படும். பொதுப்பாயிரமும்சிறப்புப்பாயிரமும் நன்னூல் போன்ற பிறநூல்கள் கூறுவதினும் சிறப்ப உள.64 பொருளணிகள் விளக்கப்பட்டுள. மடக்கணியின் (சொல் லணி) விரிவானதிறங்கள் 18 நூற்பாக்களால் பல எடுத்துக் காட்டுக்களுடன் திகழ்கின்றன.வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாக இருப்பத்தாறுசித்திரகவிகள் சிறப்புற இடம் பெற்றுள.சூத்திரங்கள், பாயிரத்திலும் பொதுவணியியலிலும் வெண்பhக் களாகவேநிகழ்கின்றன. பிறவற்றில் ஆசிரிய நடையாக இயலுகின்றன.மானிடப் பாடலையே மறக்குமாறு வழிபடுதெய்வத்தை ஏத்துதலால்,செங்கண்மால் கோயில் கொண்டருளிய திருப்பதிகளைப் பற்றியும், மாறன்எனப்படும் நம்மாழ்வாரைப் பற்றியும் நூலாசிரியர் உதாரணப் பாடல்களைத்தாமே புனைந்து சடகோபராம் மாறன் பெயரால் இவ்வலங்கார நூலை அருளினார்.இன்று நிலவும் அணியிலக்கண நூல்க ளிடை இதனை ஒப்பதும் மிக்கது மில்லை.ஆயின் பயிலுதற் கண் கடுமை நோக்கி இவ்வரிய நூலை விரும்பிப் பயில்வார்அருகியே உளர்.இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கம்பெருமுயற்சியால் அரிதாகப் பதிப்பித்த இந்நூற்கு இன்று காறும்மறுபதிப்பில்லை. என்ற குறை நல்க அண்மையில் புதுவை-பிரஞ்சுப்பள்ளிவிளக்கங்களுடன் வெளியிட் டுள்ளது. இது திருவரங்க ஆண்டவன் ஆசிரமவெளியீடு. |
மாறனலங்காரம் கூறும் மிறைக்கவிகள் | வல்லினப்பாட்டு, மெல்லினப்பாட்டு, இடையினப்பாட்டு, நிரோட்டியம்,ஓட்டியம், ஓட்டிய நிரோட்டியம், அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை,வக்கிர உத்தி, வினா உத்தரம், சக்கர (நாலாரம், ஆறாரம், எட்டாரம்)பெந்தம், பதும பெந்தம், முரசபெந்தம், மாலை மாற்று, கரந்துறை செய்யுள்,காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள், பிறிதுபடு பாட்டு, சருப்பதோபத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், திரிபங்கி,எழுகூற்றிருக்கை என இருபத்தாறு. (மா. அ. 270)சதுரங்கபந்தம், கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரைவருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபதாதி – என்பவற்றுடன் 32ஆகும். |
மாறன் அகப்பொருள் | இந்நூல் 16ஆம் நூற்றாண்டில் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்ததிருக்குருகைப்பெருமாள் கவிராயர் குடும்பத்தில் தோன்றிய சடையன்என்பவரால் இயற்றப்பட்டது. இவரே மாறன் அலங்காரம்,திருக்குருகாமான்மியம் முதலியவற்றை இயற் றியவர். மாறனகப் பொருள்அகத்திணை இயலும் ஒழிபிய லும் விரிவாக உள்ளன. அவை தொல்காப்பியத்தையும்நச்சினார்க்கினியர் உரையையும் உட்கொண்டு அகப் பொருட்குச் சிறந்தவிளக்கமாக அமைந்தவை. இக்காலத்துக் கிட்டும் களவியல் வரைவியல்கற்பியல்களில் நம்பியகப் பொருளில் கூறப்படாத 30 துறைகள்காணப்படுகின்றன. களவு வெளிப்படற்குரிய கிளவித்தொகைகளில் வரைந்து கோடல்என்ற கிளவியை அமைத்து ஒன்பது துறைகளில் விளக்கியுள்ள இந்நூலில்காணப்படும் சிறப்புச் செய்தியாம். இதற்கு இலக்கியமான 527 பாடல்கள்கொண்ட திருப்பதிக் கோவை அமைந்துள்ளது. அண்மையில் நூல் முழுவதும்உரையுடன் வெளிவந்து உள்ளது. புதுவை ஃபிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியின்பதிப்பு அது. |
மாறன் அலங்காரத்துள் காணப்படும்புதுமை | தண்டிஅலங்காரம் குறிப்பிடும் அணிகளுள் நுட்பம் என்பதனைக் குறைத்து,பிற முதனூல்களில் கூறப்பட்ட அணிகளையும் திரட்டி, முந்து நூல்களுள்கூறப்பெறாத பூட்டுவில் அணி – இறைச்சிப் பொருள்கோளணி – பொருள் மொழி அணி- என்பவற்றொடு வகைமுதல் அடுக்கணி – இணைஎதுகை அணி – உபாய அணி – உறுசுவைஅணி – புகழ்வதின் இகழ்தல் அணி என்னும் அணிகளையும் கூட்டிப் பொருளணிகளை64 ஆக மிகுத்து இந்நூல் கூறும். நுட்ப அணி ‘பரிகரம்’ என்ற அணியுள்அடக்கப்பட்டது. அடுத்த மூன்றும் சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும்புறத் திணையியலிலும் கூறியபடியே செய்யுட்கு அழகாதலின் கொள்ளப்பட்டன.ஏனைய ஐந்தும் அழகு எய்துவதால் இலக்கியம் கண்டு இவ்வணியிலக்கணத்துள்கொள்ளப் பட்டன. (மா.அ. 87) |
மாறன் அலங்காரம் கூறும்சொல்லணிகள் | மடக்கு அணி வகைகள் (சூ. 252-269) வல்லினப் பாட்டு, மெல்லினப்பாட்டு, இடையினப் பாட்டு, நிரோட்டியம், ஓட்டியம், நிரோட்டிய ஓட்டியம்,அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை, வக்கிர உத்தி, வினா உத்தரம்,சக்கரபந்தம், பதும பந்தம், முரசபந்தம், நாகபந்தம், இரத பந்தம், மாலைமாற்று, கரந்துறை செய்யுள், காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள்,பிறிதுபடுபாட்டு, சருப்பதோபத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி,சுழிகுளம், திரிபங்கி, எழுகூற்றிருக்கை என்பன வும் சதுரங்க பந்தம்,கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபதாதி என்பனவும்கூட 32 வகைச் சித்திரகவிகள் மாறன்அலங்காரத்தில் இடம்பெறுவன. |
மாறன் பாப்பாவினம் | பாக்களையும் பாவினங்களையும் நூற்பாக்களால் விளக்கா மல்இலக்கியங்களைக் கூறியே இந்நூல் விரிவாக விளக்கு கிறது. (குமர குருபரர்அருளிய சிதம்பர செய்யுட் கோவை யை இஃது இவ்வகையால் ஒக்கும்எனலாம்.)வெண்பா முதலான நூற்பாக்களும் அவற்றின் பாவினங் களும், மருட்பாவும்,பரிபாடலும் இதன்கண் இலக்கியமாகத் தரப்பட்டுள. நூலுள் 140 பாடல்கள்உள.இந் நூலாசிரியர் 16ஆம் நூற்றாண்டுப் புலவரான திருக்குரு கைப்பெருமாள் கவிராயர் என்ப. பாடல்கள் இன்ன யாப்பின என்று திட்ப நுட்பமுறவிளக்கும் சிறு குறிப்புக்கள் திருப் பேரைக் காரிரத்தினக் கவிராயரால்இயற்றப்பட்டன என்ப. |
மாலை | பிரபந்த வகை. இது கட்டளைக் கலித்துறையாகவோ, வெண்பாவாகவோநூறுபாடல்கள் அந்தாதித் தொடையில் மண்டலித்து வருதல் சிறப்பு.எ-டு : திருவரங்கத்து மாலை. இது கட்டளைக் கலித்துறை யால்வந்தது. |
மாலை மாற்று | மிறைக்கவிகளுள் ஒன்று; ஒரு பாட்டினை ஈற்றெழுத்தை முதலாகக் கொண்டு(-தலைகீழாகப்) படிப்பினும் அப்பாட் டாகவே மீளவருவது.எ-டு : ‘நீவாத மாதவா தாமோக ராகமோதாவாத மாதவா நீ.’நீவாத மாதவா – நீங்காத மாதவத்தை உடையவனே! தா மோக ராகமோ – வலியஅறியாமையாகிய ஆசைகள்; தாவா – நீங்க மாட்டா; (ஆதலின்) மாதவா (மாது அவா)- இப் பெண்ணின் ஆசையை; நீ – நீக்குவாயாக.திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய ஒரு பதிகம் பதினொரு பாடல்களுமே(மூன்றாம் திருமுறை 117ஆம் பதிகம்) மாலை மாற்றாக அமைந்தவை. அவையேஇச்சித்திர கவிக்கு மூலகவியாம். (தண்டி. 98 – 3) |
மிகற்கை | மிகற்கை – மிகுதல்; இயல்பாகப் புணர வேண்டிய இடத்தில் வல்லெழுத்துமிகுதலாகிய நிலை தோன்றுதல்.தாய் என்பது வன்கணம் வந்துழி இயல்பாகப் புணரும் என்றவிதிக்கு மாறாகஇரண்டாம் வேற்றுமைத் தொகையில், தாய்+ கொலை = தாய்க் கொலை – என்றுமிகுதலை ‘மிகற்கை’ என்றார். (தொ.எ.157. நச்.) |
மிக்குப் புணரும் புணர்ச்சியின்இருவகை | மிக்குப் புணரும் புணர்ச்சி, எழுத்து மிகுதலும், சாரியை மிகுதலும்என இரு வகைத்து.எ-டு : விள+கோடு = விளங்கோடு – ஙகரமெய் மிக்கது.மக+ கை = மகவின்கை – இன்சாரியை மிக்கது.(தொ.எ. 112 நச்.) |
மிச்சா கிருதி | வடமொழிச் செய்யுள் வகைகளுள் ஒன்று; மாராச்சை போல மாத்ராகணம் பற்றிஇதுவும் அமையும் என்பர் ஒருசாரார்.(யா. வி. பக். 486) |
மின் பின் பன் கன்:புணர்ச்சி | மின் முதலிய இந்நான்கு சொற்களும், தொழிற்பெயர் போல, யகரம் நீங்கியபிறமெய்கள் வருமொழி முதற்கண் வரின் உகரச் சாரியை பெறும். கன்என்பதொன்றும் அகரச்சாரியை பெற்று வருமொழி வல்லெழுத்தும்இனமெல்லெழுத்தும் மிக்கு உறழும்.எ-டு: மின்னுக் கடிது, மின்னு நீண்டது, மின்னு வலிது; மின்னுக்கடுமை, மின்னுநீட்சி, மின்னுவலிமை – என அல்வழி வேற்றுமை இருவழியும்உகரச்சாரியை பெற்றது. ஏனைய மூன்றொடும் இவ்வாறே பொருந்த ஓட்டுக.கன்னுக் கடிது, கன்னுக் கடுமை – மேற்கூறிய பொதுவான முடிபு. கன்னத்தட்டு, கன்னந் தட்டு – ‘கன்’ அகரம் பெற்று மெல்லினத்தோடுஉறழ்ந்தது.(கன் – சிறுதராசுத் தட்டு) (நன். 217) |
மின்: புணருமாறு | மின் என்ற சொல் மின்னுதல் தொழிலையும் மின்னலையும் குறிக்கும். இஃதுஅல்வழியிலும் வேற்றுமையிலும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல வன்கணத்துஉகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும்,யகரம் வருவழி இயல்பும், உயிர் வருவழி ஈற்று ஒற்று இரட்டுதலும்பெற்றுப் புணரும்.எ-டு : மின்னுக் கடிது; மின்னு நன்று, மின்னு வலிது, மின் யாது;மின்னரிது -அல்வழி. மின்னுக்கடுமை; மின்னு நன்மை, மின்யாப்பு,மின்னுவலிமை; மின்னருமை – வேற்றுமை (தொ.எ.345 நச்.) |
மிறைக்கவி இருபது | மிறைக்கவி சித்திரகவி எனவும்படும். இலக்கண விளக்கம் கூறும்மிறைக்கவி இருபதாம். அவையாவன : கோமூத்திரிகை, கூடசதுக்கம்,மாலைமாற்று, மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், எழுத்துவருத்தனம், ஒற்றுப் பெயர்த்தல், வினாவுத்தரம், நாகபந்தம், முரசபந்தம், திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடுபாட்டு, காதை கரப்பு, கரந்துறைசெய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச்சுதகம்,நிரோட்டம் என்பன. (இ. வி. 690) |
மீ : புணருமாறு | மீ என்பது மேல் என்ற சொல்லின் மரூஉ. அது வருமொழி வன்கணம் வரின்இயல்பாகவும், வருமொழி வல்லெழுத்து மிக்கும், வருமொழி வல்லெழுத்துக்குஇனமான மெல் லெழுத்துப் பெற்றும் புணரும். இஃது அல்வழி முடிவு. (எ.ஆ.பக். 142)எ-டு : மீகண், மீசெவி, மீதலை, மீபுறம்;மீக்கோள்,மீப்பல்;மீங்குழி, மீந்தோல் – மேலாகிய கண் முதலாகப் பொருள்செய்க.மீகண் என்பதற்கு மேலிடத்துக்கண் என்று வேற்றுமைப் பொருள்பட உரைகூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினி யரும். கண் என்பதனைஇடப்பெயராகக் கொண்டு மீ ஆகிய கண் – மேலிடம்- என்று பொருள்கொள்வாருமுளர். (எ.கு.பக். 229) |
மீகண், மீக்கூற்று, மீக்கோள்,மீந்தோல் சொல் முடிவு | மீகண் என்பது கண்ணினது மேலிடம் எனப் பொருள் தந்து நிற்குமேனும்,ஆறனுருபின் பயனிலையாம் மீ என்னும் வருமொழி நிலைமொழியாய் நின்றுவல்லெழுத்து மிகாது புணர்ந்தமையின் இலக்கணப் போலியாய்அல்வழியாயிற்று.மீக்கூற்று என்பது புகழ். அது மேலாய சொல்லான் பிறந்த புகழ் என்னும்மேம்பாடு எனப் பொருள் தந்து நிற்றலின், பண்புத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.மீக்கோள் என்பது மேற்போர்வை. அது யாக்கையின்மேல் கொள்ளுதலையுடையபோர்வை – எனப் பொருள் தந்து நிற்றலின், ஏழாம் வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஈண்டு மீ என்றது இடப்பொருளோடு ஏழாம்வேற்றுமையுருபின் பொருள் பட நின்றதேனும், கண்ஆதி உருபு வேண்டாமையின்,வேற்றுமைத் தொகை யாயிற்று.மீந்தோல் என்பது மேற்றோல். அது மேலாய தோல் – எனப் பொருள் தந்துநிற்றலின் பண்புத்தொகை. இஃது இக் காலத்துப் பீந்தோல் என மரீஇயிற்று.(நன். 178 சங்கர.) |
மீன் புணருமாறு | மீன் என்ற சொல் அல்வழிப் புணர்ச்சியில் வன்கணம் வரினும் இயல்பாகப்புணரும்; வேற்றுமைப் பொருட்புணர்ச்கிக்கண் வல்லெழுத்தினோடு உறழ்ந்துமுடியும்.எ-டு : மீன் கரிது, சிறிது, தீது, பெரிது : அல்வழி; மீன்கண்,மீற்கண்; மீன்சினை, மீற்சினை; மீன்றலை, மீற்றலை; மீன்புறம், மீற்புறம்- வேற்றுமை உறழ்ச்சி முடிபு. (தொ.எ.339 நச்.) |
முகவைப் பாட்டு | களத்தில் நெற்சூடுகள்மீது கடாவிட்டு நெல்லைப் பிரிக்கும் போதுஅவ்வினைஞர் பாடும் பொலிப்பாட்டு. (சிலப். 10 : 136, 137) |
முச்சொல்லலங்காரம் | ஒரு தொடர் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள் கொண்டுநிற்கும் சொல்லணிவகை; இது சிலேடை அணியின்பாற்படும். ‘மூன்று பொருள்சிலேடை இணை மடக்கு’ எனும் தலைப்பில் இச்சிலேடைவகை காண்க.முத்துவீரியம் கூறும் சொல்லணிகள்: |
முடிவிடம் கூறல் | ஆசிரியன் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதியுள்ள இடத்தைச்சொல்லுதல் முடிவிடங்கூறல் என்னும் உத்தி. ‘ லளஈற்று இயைபினாம் ஆய்தம்அஃகும் ’ என்னும் இச் சூத்திரம், ‘ குறில்வழி லள-த்தவ் வணையின்ஆய்தம், ஆகவு ம் பெறூஉம் அல்வழி யானே ’ (நன். 228) என்னும் சூத்திரத்தை நோக்கிக் கூறலின்,முடிவிடங்கூறல் என்னும் உத்தியின் பாற்படும். (நன். 97சங்கர.) |
முதனிலை இறுதிநிலை இடைநிலைகளுக்குப்புறனடை | எழுத்துக்கள் தம் பெயரைச் சொல்லி நிலைமொழி வருமொழி களாய்ப்புணருமிடத்தே, தமக்குக் கூறப்பட்ட விதியைக் கடந்து, மொழி முதலாகாஎழுத்துக்கள் முதலாகியும் மொழி யிடை மயங்க லாகா எழுத்துக்கள்மயங்கியும் இயலும்.எ-டு:‘அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்’(தொ. எ. 24 நச்.)இதன்கண், தன் பெயரை மொழிதலின் லகரம் மொழிமுத லாயும் ‘அவற்றுள்’என்பதன் ஈற்று ளகரத்தொடு மயங்கியும் வந்தவாறு.‘கெப் பெரிது’ என்புழி’ என்புழி, ‘கெ’ தன் பெயர் மொழி தலின் ‘எகரம்மெய்யோடு ஏலாது’ என்ற விதி யிறந்து மெய்யோடு ஈறாய் நின்றவாறு. (நன்.121) |
முதனிலை காலம் காட்டல் | தொட்டான், விட்டான், உற்றான், பெற்றான், புக்கான், நட்டான்-என்பனவற்றுள் இடைநிலை இன்றி முதனிலை விகாரமாய் இறந்த காலம் காட்டின.இவற்றுள் முறையே தொடு விடு உறு பெறு புகு நகு – என்பன முதனிலைகள்.(நன். 145 சங்கர.) |
முதனிலைத் தொழிற்பெயர், ஏவல் வினைபுணருமாறு | யரழ-க்களை ஒழிந்த எட்டு மெய்யெழுத்துக்களையும் (ஞ் ண் ந் ம் ல் வ்ள் ன்) இறுதியாகவுடைய முதனிலைத் தொழிற் பெயர்களும் ஏவல்வினைகளும்,வருமொழியாக யகரமெய் ஒழிந்த பிறமெய்களை (க் ச் த் ப் ஞ் ந் ம் வ்)முதலாகவுடைய சொற்கள் வருமாயின், பெரும்பான்மையும் உகரச்சாரியைபெற்றுப் புணரும். சில ஏவல்வினைகள் அவ்வுகரச் சாரியை பொருந்தா.இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர்களும் ஏவல்வினைகளும்முறையே உரிஞ், உண், பொருந், திரும், வெல், வவ், துள், தின் – என்பன. கச த ப முதலிய எட்டு மெய்களை முதலாகக் கொண்ட வருமொழி முறையே கடிது,சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது, என்பவற்றைமுதனிலைத் தொழிற்பெயரொடு புணர்க்க இடையே உகரச்சாரியை நிகழ்ந்துமுடியுமாறு காண்க.உரிஞுக் கடிது, உரிஞுச் சிறிது, உரிஞுத் தீது, உரிஞுப் பெரிது,உரிஞு ஞான்றது, உரிஞு நீண்டது, உரிஞு மாண்டது, உரிஞு வலிது -எனவரும்.உண், பொருந் – முதலியவற்றுக்கு உகரச்சாரியை கொடுத்து முடிக்க.வன்கணம் வருவழிச் சாரியைப் பேற்றினைஅடுத்து வல்லெழுத்து மிகுதலும்,பிறகணம் வருவழி உகரப் பேற் றோடு இயல்பாக முடிதலும் கொள்க.இனி, இவ்வெட்டு ஏவல்வினைகளும் நிலைமொழியாக நிற்ப, க ச த ப முதலியஎட்டுமெய்களை முதலாகவுடைய வரு மொழிகள் முறையே கொற்றா, சாத்தா, தேவா,பூதா, ஞெள்ளா, நாகா, மாடா, வளவா – எனக் கொண்டு சாரியைப் பேற்றினைத்தந்து முடிக்க. வன்கணம் வருமிடத்து வலிமிகு தல் இல்லை.வருமாறு: உரிஞு கொற்றா, உரிஞு சாத்தா, உரிஞு தேவா, உரிஞு பூதா;உரிஞு ஞெள்ளா, உரிஞு நாகா, உரிஞு மாடா, உரிஞு வளவா.இவ்வாறே உண், பொருந் – முதலியவற்றுக்கு உகரச்சாரியை கொடுத்துமுடிக்க.உகரச்சாரியை பெற்றும் பெறாமலும் வரும் ஏவல்வினைகள் ண் ன் ல் ள்என்னும் நான்குமெய் ஈற்றனவாம். ஏனைய நான்கு ஈறுகளும் உகரம் பெற்றேவரும் எ-டு: உண் கொற்றா, தின் சாத்தா, வெல் பூதா, துள் வளவா – இவைஉகரம் பெறாமல் வந்தன. (நன். 207) |
முதற்சீர் ஒழித்து நான்கடியும்முற்று மடக்கு | எ-டு : ‘அனைய காவலர் காவலர் காவலர்இனைய மாலைய மாலைய மாலையஎனைய வாவிய வாவிய வாவியஇனைய மாதர மாதர மாதரம்.’அனைய கா அலர் காவலர் காவலர்; இனைய – (வருந்த) மாலைய (மயக்கம்தரும்) மாலைய (- இயல்பின) மாலைய (மாலைக் காலங்கள்); என்னை அவாவிய ஆவிய(-உயிர் போன்ற) வாவிய (- தாவிய) இனைய மாது அரம்; ஆதரம் (-ஆசை) மா தரம்(- பேரளவிற்று) – என்று பிரித்துப் பொருள் செய்க.“அத்தன்மைத்தாகிய சோலையில் மலர்களாகிய மன்மத பாணங்களை நம் தலைவர்விரும்பவில்லை; நாம் வருந்து வதற்குரிய மயக்கத்தைத் தரும்இயல்பினையுடையன, மாலைப் பொழுதுகள்; என்னை விரும்பிய உயிர் போன்ற, என்விருப்பத்திற்கு மாறாக மனம் தாவிய இந்தத் தோழி, அரத்தை ஒத்தவள்; ஆசையோஎனக்கு மிக்குளது” என்று தலைவி மாலையிற் புலம்பியவாறாக நிகழும்இப்பாடற்கண், நான்கடியும் முதற்சீர் ஒழிய முற்றும் மயக்கியவாறு.(தண்டி. 95) |
முதற்சூத்திர விருத்தி | மாதவச் சிவஞான முனிவரால் ‘வடவேங்கடம்’ என்ற சிறப்புப்பாயிரத்திற்கும் ‘எழுத்தெனப் படுப’ எனும் தொல்காப்பியமுதற்சூத்திரத்திற்கும் எழுதப்பட்ட விருத்தியுரை. அவ் வுரையே நூலாகக்கருதப்படும். சிறப்புப் பாயிரப் பகுதிக்குச் சோழ வந்தான் அரசஞ்சண்முகனார் எழுதிய மறுப்பு நூலொன்றுண்டு. அம்மறுப்புக்கு மறுப்பாகச்சூத்திரவிருத் திக்கு அரணாகச் செப்பறை விருத்தி என ஒன்றுண்டு. இவ்வாறுபலரும் கருத்து வேறுபாடும் ஒற்றுமையும் காட்டு மாறு அமைந்த சிறந்தநற்றமிழ் நடையிலமைந்த விருத்தியுரை இம்முதற் சூத்திர விருத்தி.இவ்விருத்தி யுரையுள் தொல் காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரானசேனாவரை யரும் திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகரும் முனிவரால்பாராட்டப்படுவர். இவ் விருவரையும் அவர் மறுக்கு மிடங்களும் உள.சிவஞானமுனிவர் எடுத்தாண்ட பல வடமொழிக் கருத்துக்கள் பிரயோக விவேகம்எனும் நூலினின்று ஏற்றுக்கொண்டவை; அந்நூற் கருத்துக்களுள் முனிவர்மறுக்குமிடமும் உள. இவ்விருத்தி யுரையுள் முனிவ ருடைய இருமொழிப்புலமையும் கண்டு மகிழலாம். |
முதற்போலி சில | ‘மண் யா த்த கோட்ட மழகளிறு’ – ‘மண் ஞா த்த கோட்ட மழகளிறு’. ‘பொன் யா த்த தார்’ – ‘பொன் ஞா த்த தார்’ என ‘யா’நின்ற இடத்து ‘ஞா’ நிற்பினும் அமையும் என்றார்தொல்காப்பியனார்.‘ணனஎன் புள்ளிமுன் யாவும் ஞாவும்வினையோ ரனைய என்மனார் புலவர்’ (தொ.எ.146 நச்.) (ந ன். 124 இராமா.) |
முதலடி ஆதி மடக்கு | நான்கடிச் செய்யுளுள் முதலடி முதல் இருசீர்கள் மடக்கி வரத்தொடுப்பது.எ-டு : ‘துறைவா துறைவார் பொழில்துணைவர் நீங்கஉறைவார்க்கும் உண்டாங்கொல், சேவல் – சிறைவாங்கிப்பேடைக் குரு(கு) ஆரப் புல்லும் பிறங்கிருள்வாய்வாடைக்(கு) உருகா மனம்?’“நெய்தல் நிலத் தலைவ! துறைக்கண் நேரிதாக அமைந்த பொழிலிடத்துத்துணைவர் பிரிதலாலே, சேவல் தன் பெடையைச் சிறகுகளால் ஆரப் புல்லும்இருளிடத்து, வாடைக்கு உருகாத மனம் அப் பிரியப்பட்ட மகளிருக்கும்உண்டோ?” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடி யில் ‘துறைவா’ என்றமுதற்சீர் மடங்கி வந்தவாறு. (தண்டி. 95 உரை.) |
முதலடி ஒழிந்த மடக்கு | ‘இரண்டாமடி, மூன்றாமடி, நான்காமடி மடக்கு’ நோக்குக. |
முதலடி மூன்றாமடி நான்காம்அடிகளாக மடக்கியது | ‘இரண்டாமடி ஒழிந்த மூவடி மடக்கு’ நோக்குக. |
முதலடி, நான்காமடியாகமடக்கியது. | எ-டு : ‘மறைநுவல் கங்கை தாங்கினார்நிறைதவ மங்கை காந்தனார்குறைஎன அண்டர் வேண்டவேமறைநுவல் கங்கை தாங்கினார்.’கங்கை – தேவகங்கையாம் ஆறு; கம் – தலை.நிறைந்த தவத்தையுடைய பார்வதியின் துணைவராம் சிவபெருமான் வேதங்கள்புகழும் கங்கையைச் சடையிலே தாங்கினார்; உதவிவேண்டித் தேவர்கள்வேண்டவே, இரகசி யங்களைப் பிறர்க்கு உபதேசித்த பிரமனுடைய தலையை (-பிரமகபாலத்தை)த் தம் கையின்கண் தாங்கினார் – என்ற பொருளமைந்த இப்பாடற்கண்,முதலாம் நான்காம் அடிகள் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.) |
முதலடியும் மூன்றாமடியும்மடக்கியது | எ-டு : ‘கடன்மேவு கழிகாதல் மிகநாளு மகிழ்வார்கள்உடன்மேவு நிறைசோர மெலிவாள்தன் உயிர்சோர்வுகடன்மேவு கழிகாதல் மிகநாளும் மகிழ்வார்கள்உடன்மேவு பெடை கூடும் அறுகாலும் உரையாகொல்!’அடி 3, 4 கடன் மேவு கழிகாதல் மிக நாளும் மகிழ்வார்கள் உடன் மேவும்பெடை (யொடு) கூடும் அறுகாலும் உரையாகொல் என்று பிரித்துப் பொருள்செய்க.“முறையாகப் பொருந்தும் மிக்க காதல் சிறக்க நாடோறும் மகிழ்வார்பலர்; ஆயின், தலைவி தன்னொடு பொருந்திய நிறை என்ற பண்பு சோரமெலிகிறாள். இவளுடைய உயிர் தளர்வதனை, கடலை அடுத்த உப்பங்கழிகளில்மகிழ்ச்சி மிக நாடோறும் களிப்பு மிக்க பூக்களிலுள்ள தேன்களைப்பெடையொடு கூடி அருந்தும் வண்டுகளும் தலைவற்கு உரையாபோலும்” என்று,தோழி, தலைவன் சிறைப்புறமாகக் கூறிய இப்பாடற்கண், முதலடியும்மூன்றாமடியும் மடக்கிய வாறு. (தண்டி. 96 உரை.) |
முதலடியொடு நான்காமடி ஆதி மடக்கு | எ-டு : ‘மானவா மானவா நோக்கின் மதுகரம் சூழ்கான்அவாம் கூந்தல் என் காரிகைக்குத் – தேனேபொழிஆரத் தார்மேலும் நின்புயத்தின் மேலும்கழியா கழியா தரவு.’மானவா, மான் அவாம் நோக்கின்; கழியா, கழி, ஆதரவு – என்று பிரித்துப்பொருள் செய்க.“மனுகுலத்தில் தோன்றியவனே! மான் விரும்பும் நோக்கினை யும் வண்டுசூழும் மணம் நாறும் கூந்தலையும் உடைய என் மகளுக்கு, தேனைப் பொழியும்உன் ஆத்திமாலைமேலும் உன் புயங்களின்மேலும் உள்ள மிக்க ஆசை நீங்காது”என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடியும் நான்காமடியும் முதலில்மடக்கி வந்தவாறு. (தண்டி. 95) |
முதலடியொடு மூன்றாமடி ஆதி மடக்கு | எ-டு : “அடையார் அடையார் அரண்அழித்தற்(கு) இன்னல்இடையாடு நெஞ்சமே ஏழை – யுடை ஏர்மயிலா மயிலா மதர்நெடுங்கண் மாற்றம்குயிலாமென் றெண்ணல் குழைந்து.”அடையார் அடை ஆர் அரண்; ஏர் மயிலாம், அயிலாம் கண் என்று பிரித்துப்பொருள் செய்க.“பகைவர் அடையும் அரிய அரணை அழித்தற்கு முயல்வார் படும் இன்னல்போன்ற இன்னலுற்றுத் தடுமாறும் மனமே! நீ இவ்வேழை (-தலைவி) யினுடைய ஏர்,மயில் போன்றது; மதர் நெடுங்கண், அயில் (-வேல்) போன்றன; மாற்றம்(-சொல்), குயில் போன்றது என்று உருகி நினைத்தலைத் தவிர்” – எனத்தலைவியது அருமை நினைந்து தலைவன் நெஞ்சிற்குக் கூறிய இப்பாடற்கண்,முதலடியும் மூன்றாமடியும் அடிமுத லில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.) |
முதலடியொடு மூன்றாமடி நான்காமடிஆதி மடக்கு | இஃது இரண்டாமடி ஒழிந்த மூவடி ஆதி மடக்கு எனவும் படும்.எ-டு : ‘கொடியார் கொடியார் மதில்மூன்றும் கொன்றபடியார் பனைத்தடக்கை நால்வாய்க் – கடியார்உரியார் உரியார் எனைஆள ஓதற்கரியார் கரியார் களம்.’கொடியார், கொடி ஆர் மதில்; (நால்வாய்) உரியார், (எனை ஆள) உரியார்;ஓதற்கு அரியார், களம் கரியார் – என்று பிரித்துப் பொருள் செய்க.கொடியவராகிய முப்புர அசுரரின் கொடிகள் ஆர்ந்த மூன்று மதில்களையும்அழித்த இயல்பினர்; பருத்த பெரிய கையையும், தொங்கும் வாயினையும் உடையயானையின் அஞ்சத்தக்க தோலைப் போர்த்தவர்; என்னை ஆட்கொள்ளு தற்குஉரியவர்; தம் பெருமை கூறுதற்கு அரியவர்; கழுத்துக் கறுத்தவர் என்றபொருளமைந்த இப்பாடற்கண், முதலாம் மூன்றாம் நாலாம் அடிகள் முதலில்மடக்கியவாறு. (தண்டி. 95 உரை) |
முதலடியோடு இரண்டாமடி நான்காமடிஆதி மடக்கு | இது மூன்றாமடியொழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும்.எ-டு : ‘மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயும்கலையும் கலையும் கடவும் – தொலைவில்அமரில் எமக்கரணாம் என்னுமவர் முன்னிற்குமரி குமரிமேற் கொண்டு.’குமரி, மலையும் அலையும் மகிழ்ந்து உறையும்; கலையும் வேயும்;கலையும் கடவும்; அரணாம் என்னுமவர்க்கு அரிமேல் கொண்டு முன் நிற்கும்என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.குமரியாகிய கொற்றவை, மலையையும் கடலையும் தனக்கு இருப்பிடமாகக்கொண்டு, பிறைச்சந்திரனை வேய்ந்து, ஆண்மானை வாகனமாகக் கொண்டுவிளங்குவாள்; அழிவற்ற போரில் தமக்குப் பாதுகாவலாக வேண்டும் என்றுஇறைஞ்சுபவர்க்குச் சிங்கத்தின்மேல் ஏறிக்கொண்டு வந்து முன் நிற்பாள்என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலாம் இரண்டாம் நான்காமடிகள்மடக்கியவாறு.(தண்டி. 95 உரை.) |
முதலடியோடு இரண்டாமடி மூன்றாமடிஆதிமடக்கு | இஃது ஈற்றடி ஒழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும்.எ-டு : ‘இறைவா இறைவால் வளைகாத்(து) இருந்துயார்உறைவார் உறைவார் புயலால் – நறைவாய்ந்தவண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக்கண்டளவில் நீர்பொழியும் கண்.’இறைவா, இறை வால் வளை; உறைவார் உறை வார் புயலால்; வண்தளவு, வண்டுஅளவு – எனப் பிரித்துப் பொருள் செய்க.“தலைவ! நீர்த்துளி மிக்க கார்மேகத்தால் தேன் பொருந்திய வளமானமுல்லைகளில் வண்டுகள் மொய்க்கும் கார்ப்பருவ நாள்களில் மயில்கள்ஆடுதலைக் கண்ட அவ்வளவில் கண்கள் கண்ணீரைச் சொரியும். முன்கையிலுள்ளவெள்ளிய வளையல்களைக் கழலாமல் அக்காலத்தில் பாதுகாத்துக் கொண்டிருந்துயாவர் உயிர் வாழ்தல் கூடும்?” என்று தோழி கார்ப்பருவத்தே தலைவிநிலையைக் கூறித் தலைவன் பிரிவு விலக்கிய இப்பாடற்கண், முதல்மூன்றடியும் முதலில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.) |
முதலீரடி மடக்கு | எ-டு : “விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாகவிரைமேவு மதமாய விடர்கூடு கடுநாகம்விரைமேவும் நெறியூடு தனிவாரல் மலைவாண!நிரை மேவும் வளை சோர இவளாவி நிலைசோரும்.“விரை மேவு மதம் ஆய இடர் கூடு கடு நாகங்களை இரை மேவும் மதம் ஆயவிடர் கூடும் கடு நாகம் விரை(தல்) மேவும் நெறி – என்று பிரித்துப்பொருள் செய்யப்படும்.’“மலைநாட! நறுமணம் கமழும் மதநீரையுடைய துன்பம் உறும் கொடிய யானைகளைஇரையாக விரும்பும் வலிய குகைகளில் தங்கும் கடிய பாந்தள்கள்விரைதலுறுகின்ற மலைவழியிலே தனியே வாராதே. வரிசையாக அணிந்த வளையல்கள்சோர இவள் உயிர் வாடுவாள்” எனத் தோழி தலைவனை ஏதம் கூறி இரவு வருதலைவிலக்கிய இப்பாட லில், முதல் இரண்டடியும் மடக்கியவாறு. (தண்டி. 96உரை) |
முதலீரடியும் கடையீரடியும் மடக்கு | எ-டு : ‘பணிபவ நந்தன தாக மன்னுவார்பணிபவ நந்தன தாக மன்னுவார்அணியென மேயது மன்ப ராகமேஅணியென மேயது மன்ப ராகமே.’பணி பவனம் தனது ஆகம் மன்னுவார், பணி (- கீழான) பவம் (-பிறப்பு)நந்து (-இறப்பு) அந் அது ஆக (-இல்லையாக) மன்னுவார்; அன்பர் ஆகம், மன்பராகம் – எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.பாம்புகளுக்கு இருப்பிடமாகத் தமது மார்பைக் கொடுப்பவர்; கீழானபிறப்புஇறப்புக்கள் இன்றி நிலைபெற்றிருப்பவர்; அழகு என்றுபொருந்தியதும் அன்பர் இதயமே; அலங்காரம் என்று தரித்துக்கொள்வதும்நிலைபெற்ற திருநீறே (பராகம் – பொடி) என்று பொருள்படும் இப்பாடலில்,முதலீரடியும் கடையீரடியும் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.) |
முதலெழுத்தின் தொகை வகை விரி | முதலெழுத்து – எனத் தொகையான் ஒன்றும், உயிரெழுத்து உடம்பெழுத்து -என வகையான் இரண்டும், உயிர் பன்னிரண் டும் உடம்பு பதினெட்டும் எனவிரியான் முப்பதும் ஆம் முதலெழுத்து. (நன். 58 மயிலை.) |
முதலெழுத்து, சார்பெழுத்து :பெயர்க்காரணம் | தாமே தமித்து நிற்கையின் முதலெழுத்து என்றாயின. அவையே தம்மொடு தாம்சார்ந்தும், இடம் சார்ந்தும், இடமும் பற்றுக்கோடும் சார்ந்தும்விகாரத்தான் வருதலின் சார்பெழுத்து என்றாயின. (நன்.60 மயிலை.) |
முதலெழுத்துக்களின் இடப்பிறப்பும்முயற்சிப்பிறப்பும் | உயிரும் இடையின மெய்யும் மிடறும், மெல்லினமெய் மூக்கும், வல்லினம்மார்பும் இடமாகக் கொண்டு பிறக்கும். இஃது இடப் பிறப்பு.முயற்சிப்பிறப்பு வருமாறு:அ, ஆ – அங்காத்தலானும், இ, ஈ, எ, ஏ, ஐ – அங்காப்பொடு,மேல்வாய்ப்பல்அடியை நாவிளிம்பு உறுதலானும், உ., ஊ, ஒ, ஓ, ஒள -அங்காப்போடு, இதழ் குவிதலானும் பிறக்கும். (அங்காப்பினைப்பிறவற்றுக்கும் கொள்க.)க், ங் – நாவின்அடி மேல்வாயடியை உறுதலானும், ச்,ஞ் – நாவின் நடுமேல்வாய்நடுவை உறுதலானும், ட், ண் – நாவின் நுனி மேல்வாய்நுனியைஉறுதலானும், த், ந் – முன்வாய்ப்பல் அடியை நாநுனி உறுதலானும், ப், ம்- கீழ்மேல் உதடுகள் உறுதலானும், ய் – நாவின்அடி மேல்வாயின் அடியைநன்றாக உறுதலானும், ர், ழ் – நாவின் நுனி மேல்வாயை வருடுதலானும், ல் -முன்வாய்ப்பல் அடியை நாவிளிம்பு வீங்கி ஒற்றுதலானும், ள் – மேல்வாயைநாவிளிம்பு வீங்கி வருடுதலானும், வ் – கீழுதடு மேற்பல்லை உறுதலானும்,ற், ன் – மேல்வாயை நாவின் நுனி மிக உறுதலானும் பிறக்கும்.(உறுதல் – பொருந்துதல்; வருடுதல் – தடவுதல்; ஒற்றுதல் – தட்டுதல்)(நன். 75 – 86) |
முதலொடு இடை மடக்கு | முதலடி முதலொடு இடை மடக்கு, இரண்டாமடி முத லொடு இடைமடக்கு,மூன்றாமடி முதலொடு இடைமடக்கு, நான்காமடி முதலொடு இடைமடக்கு,முதலிரண்டடியும் முதலொடு இடைமடக்கு, முதலடியும் மூன்றாமடியும் முதலொடுஇடைமடக்கு, முதலடியும் நான்காமடியும் முதலொடு இடை மடக்கு,கடையிரண்டடியும் முதலொடு இடை மடக்கு, இடையிரண்டடியும் முதலொடு இடைமடக்கு, இரண்டாமடியும் நான்காமடியும் முதலொடு இடை மடக்கு, முதல்மூன்றடியும் முதலொடு இடை மடக்கு, இரண்டா மடியொழிந்த ஏனை மூன்றடியும்முதலொடு இடை மடக்கு, முதலடி யொழித்த ஏனை மூன்றடியும் முதலொடுஇடைமடக்கு, ஈற்றடி ஒழித்த ஏனை மூன்றடியும் முதலொடு இடைமடக்கு,நான்கடியும் முதலொடு இடைமடக்கு என, முதலொடு இடைமடக்குப் பதினைந்துவகைப்படும். (மா.அ. 258, 259 உரை.) |
முதல் ஈரடி ஆதி மடக்கு | முதலடிக்கண் முதற்சீர் மடக்கி வருதல் போலவே, இரண் டாம் அடிக்கண்வந்த முதற்சீரும் மடக்கி வர அமைவது.எ-டு : ‘நினையா நினையா நிறைபோய் அகலவினையா வினையா மிலமால் – அனையாள்குரஆளும் கூந்தல் குமுதவாய்க் கொம்பின்புரவாள்! நீ பிரிந்த போது’“குரவம்பூச் சூடிய கூந்தலையும், குமுதம் போன்ற வாயையும் உடையகொம்பனைய தலைவியைப் பாதுகாக்கும் தொழிலைப் பூண்ட தலைவனே! நீபிரிந்தபோது நின்னை யாம் நினைத்து, எங்களது நிறை என்ற பண்பு எங்களைவிட்டு நீங்க வருந்தி எச்செயலும் யாம் செய்யும் ஆற்றல்இலேமாவேம்.”‘நி(ன்)னை யாம் நினையா, நிறை போய் அகலஇனையா வினையாம் இலமால்’ எனப் பிரிக்கநினையா நினையாவினையா வினையா முதலீரடி ஆதிமடக்கு . (தண்டி.95) |
முதல் ஈரெண்ணின்முன் உயிர்வருங்கால் புணர்ச்சி | ஒன்று இரண்டு- என்பனவற்றின் முன் உயிர்முதல் மொழி வரின், ஒன்றுஇரண்டு- என்பன ஒரு இரு- எனத் திரிந்து நின்ற நிலையில் உகரம் கெட, ஒர்இர் – என்றாகி, முதல் நீண்டு ஓர் ஈர் எனத் திரிந்து வருமொழியொடுபுணரும்.எ-டு: ஒன்று + அகல் = ஓரகல், ஒன்று + உழக்கு = ஓருழக்கு: இரண்டு+அகல்= ஈரகல், இரண்டு+ உழக்கு= ஈருழக்கு (தொ.எ.455நச்.) |
முதல் எழுத்து | மொழி தோன்றுதற்குக் காரணமான அடிப்படை எழுத்துக் களாகிய உயிர்பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முப்பது எழுத்துக்கள் முதலெழுத்துஎனப்படும். இனி, ஒருசொல்லின் முதலில் வரும் எழுத்து முதலெழுத்துஎனவும், முதனிலை எனவும் கூறப்படும்.எ-டு : ‘சுட்டுமுதல் ஆகிய இகர இறுதி’ – அதோளி (தொ.எ.159 நச்.)‘எகர முதல் வினாவின் இகர இறுதி’ -எதோளி (எ. 159)‘சுட்டு முதல் உகரம்’ – அது (எ . 176)‘சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி’ – அவை (எ. 177)‘சுட்டு முதல் வகரம்’ – அவ் (எ . 183)‘மூன்றன் முதனிலை நீடலும் உரித்தே’ – மூவுழக்கு (எ . 457)‘ஆறுஎன் கிளவி முதல் நீ டும்மே’ – ஆறகல் (எ . 458)‘அகம் என் கிளவிக்கு… முதல்நிலை ஒழிய’ – அங்கை (எ. 315) |
முதல் ஒன்பது உயிர்களின் நாள்கள் | அ ஆ இ ஈ என்னும் நான்கும் கார்த்திகை நாளாம்; உ ஊ எ ஏ ஐ என்னும்ஐந்தும் பூராட நாளாம். (இ. வி. பாட். 25) |
முதல் சீருக்கு ஒரு தனி இலக்கணம் | பாடப்படும் தலைமகனது பெயர்நாள் தொடங்கி எட்டாம் இராசிக்கண் உற்றஇரண்டே கால் நாளும், எண்பத்தெட் டாம் கால் பொருந்திய வைநாசிக நாளும்தள்ளிப் பொருத்த முடைய நாள்களைக் கொண்டு தலைவன் பெயர்க்கு முதற்சீர்எடுத்துக் கூறுதல் மரபு.இனிக் கணநாள்களில் விலக்கியன ஒழித்தே பொருத்த முடைய நாள்களேகொள்ளப்படும் என்பதும் உரையிற் கொள்ளப்படும். விளக்கம் வருமாறு :பாட்டுடைத் தலைவன் இராமன் என்க. அவன் பெயர் நாள் கார்த்திகை;அதற்குரிய இராசி இடபம்; அதனுடைய எட்டாம் இராசி தனு; அதற்குரிய நாள்கள்மூலம், பூராடம், உத்தராடம் முதற்கால்; அவற்றுக்குரிய எழுத்துக்கள்யூயோ – மூலம்; உ ஊ எ ஏ ஐ – பூராடம் ; ஓ உத்தராடம் முதல் கால்;இவ்வெழுத்துக்களால் முதல்சீர் முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.இனி, விநாசத்தை (-அழிவினை) த் தரும் வைநாசிகம் இயற் பெயருக்குரியநாளாகிய கார்த்திகைக்கு இருபத்திரண்டாம் நாளாகிய சதயத்தின் நான்காம்கால்; அதற்குரிய எழுத்து தொ என்பது. இதனானும் பாட்டின் முதற்சீர்முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.இனி, கணநாளில் விலக்கியன தீக்கணம் அந்தரகணம், சூரியக ணம்,மாருதகணம் என்பன; தீக்கணம் – கார்த்திகை; அந்தரகணம் – புனர்பூசம்;சூரிய கணம் – பூசம் ; வாயு கணம் – சுவாதி. இவற்றுக்குரிய எழுத்துக்கள்முறையே அ ஆ இ ஈ என்பனவும் ஆம். இவையும் புகுதல் கூடாது என்பது. (இ.வி. பாட். 37) |
முதல் மூவடி மடக்கியது | எ-டு : ‘காம ரம்பயில் நீர மதுகரம்காம ரம்பயில் நீர மதுகரம்காம ரம்பயில் நீர மதுகரம்நாம ரந்தை உறநினை யார்நமர்.’கா மரம் பயில் நீர மதுகரம், காமரம் பயில் நீர; மது கரம் காமர்அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உற நமர் நினையார் – என்றுபிரித்துப் பொருள் செய்யப்படும்.“சோலைகளிலுள்ள மரங்களில் நெருங்கிய வண்டுகள், காமரம் என்றபண்ணினைப் பாடும் நீர்மையுடையன. தேனைக் கொண்ட மன்மதனாருடைய அம்புகள்வேல் போன்று கூரியவாக உள்ளன. வேனிற்காலம் எதிர்ப்படவும் நாம்துன்புறுதலை நம்தலைவர் நினைக்கவில்லையே!” இப்பாடல், பிரிந்த தலைவிவேனிற்காலத்து வருந்துவதாக நிகழ்கிறது. இதன்கண், முதல் மூவடிகளும்மடக்கியவாறு . (மூன்றாமடிக்கண், மது – வேனிற் பருவம்; கரம் -எதிர்ப்படுதல்.) (தண்டி. 96 உரை.) |
முதல், சார்பு: தொகை வகை விரி | முதலெழுத்திற்கு ‘முதல்’ என்றது தொகையாகவும், ‘உயிரும் உடம்பும்’என்றது வகையாகவும், ‘முப்பது’ என்றதுவிரியாக வும்; சார்பெழுத்திற்குச்‘சார்பு’ என்றது தொகையாகவும். ‘பத்தும்’ என்றது வகையாகவும், ‘ஒன்றொழிமுந்நூற்றெழு பான்’ என்றது விரியாகவும்;இவ்விருதிறத்து எழுத்திற்கும் ‘எழுத்து’ என்றது தொகை யாகவும்,‘முதல்சார்பு’ என்றது வகையாகவும், இவ்விரு திறத்து எழுத்தின் விரியும்கூட்டி ‘ஒன்றொழி நானூறு’ என்பது விரியாகவும் கொள்க. (நன். 61.இராமா.) |
முதல், வழி, சார்பு: விளக்கம் | முதனூலுக்கு வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும்போலும் என்க. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கின் முதனூலாகவும், முதனூலைநோக்கின் வழிநூலாக வும், அயல்நூலை நோக்கச் சார்புநூலாகவும் நிற்கும்.எனவே, முதனூல் மாத்திரையாய் நிற்பது இறைவன்நூலும், வழிநூல்மாத்திரையாய் நிற்பது இறுதி நூலும் அன்றி, இடைநிற்கும் நூல்கள்எல்லாம் ஒருவற்கு மைந்தனாயினான் மற்றவற்குத் தந்தை ஆயினாற்போல,முதனூலாயும் வழிநூலாயும் நிற்கும். (நன். 8 சங்கர.) |
முதல்நிலை வினைப்பெயர் | திரை நுரை அலை தளிர் – என்றாற் போல்வன வினைமுதற் பொருண்மையுணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டு, முதனிலை மாத்திரையாய் நின்றுவினைப்பெயர் ஆதல் பற்றி, முதனிலை வினைப்பெயர்- முதனிலைத் தொழிற்பெயர்- என்று கூறப்பெறும். (சூ.வி.பக். 33) |
முதுகுருகு | தலைச்சங்கத்து இயற்றப்பட்டுக் காலப்போக்கில் இறந்து போன நூல்களுள்ஒன்று. முதுநாரை, முதுகுருகு என எண்ணப்படும் இவை இயற்றமிழ்நூலாயிருத்தல் கூடும். இறையனார் களவியல் உரையுள் (சூ. 1) இடம்பெற்றுள்ளன இவை. |
முதுநாரை | முதுகுருகு போல இதுவும் தலைச்சங்க காலத்து நூலாய், இதுபோதுஇறந்துபட்டது. (இறை. அ. 1 உரை) |
முதுமகன் | முப்பதுக்கு மேற்பட்ட பிராயமுடையவன். (பன்.பாட். 234) |
முத்தப்பருவம் | பிள்ளைத் தமிழாகிய பிரபந்தத்துள் ஐந்தாவது பருவம்;குழந்தையைத் தனக்கு முத்தம் தருமாறு தாய் கேட்ப அமைத்துப் பாடுவது.செங்கீரை போன்ற பிற பருவம் போல, இதன்கண்ணும் பத்துப் பாடல்கள் வரும்.‘கனிவாய் முத்தம் தருகவே’ போன்ற வாய்பாட்டால் பாடல் முடியும். |
முத்தம் | கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்பெறும் அகத்துறை களுள்ஒன்று. தலைவன் தோழியிடம் தலைவிக்கு அளிப்ப தற்குக் கையுறையாகக் கொண்டுசென்ற முத்தினைத் தோழி தன் நயமான பேச்சினால் கையுறையாகக் கொள்வதைமறுத்துக் கூறுவதாக இவ்வகத்துறைப் பாடல் அமையும். (திருவரங்கக்.61) |
முத்து வீரியம் | முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப்பட்ட ஐந்திலக்கண நூல்; 19ஆம்நூற்றாண்டினது.எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்ததி காரங்களிலும்முறையே எழுத்தியல் மொழியியல் புணரியல் எனவும், பெயரியல் வினையியல்ஒழிபியல் எனவும், அகவொழுக்கவியல் கள ஒழுக்கவியல் கற்பொழுக்கவியல்எனவும், உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் எனவும், சொல் லணியியல்,பொருளணியியல் செய்யுளணியியல் எனவும் அதிகாரம்தோறும் மும்மூன்றுஇயல்கள் உள. அதிகாரம் தோறும் தற்சிறப்புப் பாயிரம் ஒன்று பரம்பொருளைவாழ்த்தி அதிகாரத்தை நுதலிப் புகுகிறது. இவை நீங்கலாக ஒன்பதுஇயல்களிலும் முறையே 114, 44, 297; 135, 48, 125; 59, 24, 9; 38, 61,167; 25, 104, 31 எனும் எண்ணிக்கைப்பட நூற்பாக்கள் நிகழ் கின்றன.“சுப்பிரமணிய தேசிகன் கவிப்பெருமாள் கேட்டுக்கொண்ட தற்கிணங்க,உறந்தையகத் தெழுந்தருளிய முத்துவீரமா முனிவன், அகத்திய நூல்வழியேஇந்நூலைத் தன் பெயர் நிறுவி வகுத்தனன்” என்கின்றதுசிறப்புப்பாயிரம்.திருப்பாற்கடல்நாதன் என்ற பெயரினர் இதன் உரையாசிரியர். |
முத்து வீரியம் சொல்லணிகள் | பலவகை மடக்குக்கள், காதை கரப்பு, கரந்துறைபாட்டு, வினா உத்தரம்,எழுத்து வருத்தனம், எழுத்தழிவு, மாலை மாற்று, நிரோட்டகம், மாத்திரைச்சுருக்கம், மாத்திரை வருத்தனம், திரிபங்கி, திரிபாதி, ஒற்றுப்பெயர்த்தல், பிறிதுபடுபாட்டு என்பன முத்துவீரியச் சொல்லணிகளாம்.(மு.வீ. சொல்லணி. 1-25) |
முத்துவீர உபாத்தியாயர் | 19ஆம் நூற்றாண்டினர்; தம்பெயரால் முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கணநூல் இயற்றியுள்ளார். இதன் சூத்திரங்கள் ‘நூற்பா’ எனப்படும்ஆசிரியயாப்பின. திருப்பாற்கடல்நாதன் கவிராயர் இந்நூற்கு உரைஎழுதியுள்ளார். நூலாசிரியர் தச்சமரபினர். |
முத்துவீரிய எழுத்ததிகாரச்செய்திகள் | இந்நூல் எழுத்ததிகாரம் எழுத்தியல், மொழியியல், புணரியல்- என்றமூன்று இயல்களையுடையது. அதிகாரத் தற்சிறப்புப் பாயிரம் நீங்கலாகஇவற்றில் முறையே 115, 45, 298 ஆக 458 நூற்பாக்கள் உள. எழுத்தியலில்நன்னூலின் எழுத்தியற் செய்தி சுருக்கியும் விரித்தும்கூறப்பட்டுள்ளது. எழுத்து, உயிர்மெய், மயக்கம்- முதலியவற்றின்பரியாயப் பெயர்கள் கூறப்பட் டுள்ளன. அளபெடை எட்டுவகைப்படும் எனக்கணக்கிடப் பட்டுள்ளது. மொழியியலின் தொடக்கத்தில் ஓரெழுத்தொரு மொழிகள்,பெயர் வினை என்ற பகுப்பு, மொழி எழு வகைப்படும் என்ற பிறர்கூற்று -என்பன குறிப்பிடப்பட்டுள. வடமொழி எழுத்துக்கள் தமிழில் திரிந்துவழங்குமாறும் வடமொழித் தீர்க்க குண விருத்தி சந்திகளும், வடசொற்கள்தமிழில் திரிந்து வழங்குமாறும் விரித்துப் பேசப்பட்டுள. புணரியலில்,பொதுப் புணர்ச்சி – உருபு புணர்ச்சி – உயிரீறு மெய்யீறுகுற்றியலுகரஈறு ஆகியவற்றின் புணர்ச்சி- யாவும் நன்னூலையும்தொல்காப்பியத்தையும் ஒட்டிக் கூறப்பட்டுள. கோ-மா- என்பன யகரஉடம்படுமெய் பெறுதல், எண்ணுப் பெயர்கள் உருபேற்குமிடத்து இன்சாரியைபெறுதல், ழகரம் தகரம் வருவழி டகர மாதல், ழகரமானது நகரம் வருவழிணகரமாதல் – முதலியன புதியன புகுதலாக இப்புணரியலுள் இடம் பெற்றுள. |
முத்துவீரிய எழுத்தியலுள்காணப்படும் விசேடக் குறிப்புக்கள் சில | மெல்லெழுத்தின் பிறப்பிடம் தலை (எழுத். 43). எடுத்தலும் படுத்தலும்என ஓசை இருவகைத்து (59). நகரம் ‘பொருந்’ என ஒரு சொற்கண்ணேயே இறுதியாகவரும் (90). கைந்நொடி யாகிய மாத்திரை உன்னுகிற காலத்துக் கால்மாத்திரை, விரலை ஊன்றுகின்ற காலத்து அரை, விரல்களை முறுக்குகிறகாலத்து முக்கால், முறுக்கியவற்றை ஓசைப்பட விடுக்கிற காலத்து ஒன்று-என முறையே அமையுமாறு (98)- இன்னோரன்ன செய்திகள் பிற இலக்கண நூலில்காணப்படாவாய் இந் நூற்கே விசேடமான குறிப்புக்களாம். |
முத்துவீரிய எழுத்தியல் சுட்டும்பரியாயப் பெயர்கள் | எழுத்து – இரேகை, வரி, பொறி- என்பன (நுற்பாஎண்3)உயிர் – அச்சு, ஆவி, சுரம்,பூதம் – என்பன (7)குற்றெழுத்து – குறுமை, இரச்சுவம், குறில் – என்பன (9)நெட்டெழுத்து – நெடுமை, தீர்க்கம், நெடில் – என்பன (11)மெய் – ஊமை, உடல், ஒற்று, காத்திரம் – என்பன (13)வல்லெழுத்து – வன்மை, வன்கணம், வலி- என்பன (15)மெல்லெழுத்து – மென்மை, மென்கணம், மெலி- என்பன (17)இடையெழுத்து – இடைமை, இடைக்கணம், இடை-என்பன (19)சார்பு – புல்லல், சார்தல்,புணர்தல் என்பன (23)ஆய்தம் – அஃகேனம், தனிநிலை – என்பன (28)சுட்டு – காட்டல், குறித்தல் – என்பன (29)வினா – வினவல், கடாவல் – என்பன (30)அளபெடை – அளபு, புலுதம்- என்பன (33)இடைநிலை சங்கம், புணர்ச்சி, சையோகம், புல்லல்,மெய் மயக்கம் } கலத்தல், மயக்கம், இடைநிலை என்பன (66) மாத்திரை – மட்டு, அளவு,மிதம், வரை – என்பன (97) |
முத்துவீரியப் புணரியலுள்காணப்படும் சில சிறப்புச் செய்திகள் | தழாத் தொடர்களை ‘மயங்கியல் மொழி’ என்று குறிக்கும் மு.வீ.தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியது. அவையும் நிலை வருமொழிகளாக நின்றுபுணர்தற்குரியன.எ-டு: தெய்வ மால் வரை’ (‘மால் தெய்வ வரை’ என்க.)(5)ஆ,மா,கோ- என்று பெயர்கள் இன்சாரியை பெறுதலுமாம்.எ-டு : ஆவினை, மாவினை, கோவினை (16)கோ,மா, இவற்றின் முன் யகர உடம்படுமெய் வருதலுமாம்.வருமாறு: கோயில், மாயிரு ஞாலம் (25)எண்கள் எல்லாம் இன்சாரியை பெறும்.எ-டு : ஒன்றினை, நான்கினை (69)நிலா என்னும் பெயர் இன்சாரியை பெறும். (தொல். கூறுவது வேறு. 228நச்.) வருமாறு.: நிலாவின் காந்தி (93)இரா என்னும் பெயர்க்கு இன்சாரியை இல்லை (தொல். கூறுவது வேறு. 227.நச்.) (94)ழகரம் வேற்றுமைக்கண் தகர நகரங்கள் வருமிடத்தே, முறையே டகர ணகரமாகத்திரியும். (இப்புணர்ப்பு வீரசோழியத்துள் கண்டது)எ-டு :கீழ்+ திசை = கீட்டிசை; சோழ + நாடு = சோணாடு (210,211) |
முத்துவீரியம் | 19ஆம் நுற்றாண்டில் முத்துவீர உபாத்தியாயர் என்பவரால்,தொல்காப்பியம் நன்னூல் முதலியவற்றில் அரியவாகக் கூறப் பட்டுள்ளசெய்திகளை எளிமைப்படுத்திக் கூறுவதற்காக இயற்றப்பட்ட ஐந்திலக்கண நுல்முத்துவீரியம். இஃது எழுத்து சொல் பொருள் யாப்பு அணி – என்னும்ஐம்பிரிவுகளை யுடையது. அவற்றுள் எழுத்ததிகாரம், எழுத்தியல் மொழி யியல்புணரியல் – என்னும் முப்பகுப்பினது. சொல்லதிகாரம், பெயரியல் வினையியல்ஒழிபியல்- என்னும் முப்பிரிவிற்று. பொருளதிகாரம், அகவொழுக்க இயல்களவொழுக்க இயல் கற்பொழுக்க இயல் – என்னும் முப்பாலது. யாப்பதிகாரம்,உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என்ற மூவியலினது. இனி எஞ்சியஅணியதிகாரம், சொல்லணியியல் பொருளணியியல் செய்யுளணியியல் – என்ற மூன்றுஇயல்களான் இயன்றது. இந்நூற்கு உரை வரைந்தவர் திருநெல்வேலித்திருப்பாற்கடல் நாதன் கவிராயர் என்று கருதுகிறோம். ஐந்து அதிகாரங்களிலும் முறையே 458, 310, 92, 266, 159, ஆக 1285 நுற்பாக்கள் உள்ளன.ஐந்து அதிகாரங்களிலும் உள்ள தற்சிறப்புப் பாயிர நுற்பாக்களையும் கூட்ட1290நுற்பாக்களாம். |
முத்துவீரியம் சுட்டும் ‘பேசுங்கிளவி’ | ‘பேசுங் கிளவி’ யாகிய வழங்கும் சொல் சங்கதம், பாகதம், சனுக்கிரகம்,அவப்பிரஞ்சனம் – என நால்வகைப்படும். இந் நான்கனுள், சங்கதமும்சனுக்கிரகமும் தேவர்மொழி யாகும். அவப்பிரஞ்சனம் என்பது இழிந்தோரதுமொழி. ஏனைய பாகதம் என்பது நாடுகளெல்லாம் வழங்கும் மொழி.பாகதம் தற்பவம் எனவும், தற்சமம் எனவும், தேசிகம் எனவும்மூவகைப்படும். ஆரியச் சிறப்பெழுத்தானும், பொதுவும் சிறப்புமாகியஇரண்டெழுத்தானும் தமிழில் சிதைந்து வருவது தற்பவமாம். எ-டு : சுகி,போகி; அரன், அரி.ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகிய மொழி தற்சமமாம்.எ-டு : அமலம், காரணம், கமலம்.தேசிகம் என்பது திசைச்சொல் ஆகும். எ-டு: தாயைத் தள்ளை என்றுவழங்குவதும், தந்தையை அச்சன் என்று வழங்குவதும் காண்க. (மொழி.26-33) |
முத்துவீரியம் சுட்டும் அளபெடைவகைகள் | இயற்கையளபெடை – அழைத்தல், விலைகூறல், புலம்பல் – இவற்றுள்வருவதுசெயற்கை – செய்யுளில் சீர்தளை கெட்ட விடத்துப் புலவன்கொள்வது.இன்னிசை யளபெடை – ‘கெடுப்பதூஉம்’ எடுப்பதூஉம்’ (குறள்15)சொல்லிசை யளபெடை – தளைஇ (தளைந்து என்பது திரிந்துஅளபெடுத்தது.)நெடிலளபெடை – தனி நெட்டெழுத்து அளபெடுப்பது : ஆஅகுறிலளபெடை – குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது:பழூஉப் பல்ஒற்றளபெடை – கண்ண்எழுத்துப்பேறளபெடை – உவாஅப் பதினான்கு |
முத்துவீரியம் சுட்டும் தத்திதம்பற்றிய செய்திகள் | மொழி முதற்கண் நிற்கும் இகர ஏகாரங்கள் ஐகாரம் ஆகும்.எ-டு : கிரியில் உள்ளன கைரிகம்: வேரத்தால் வருவது வைரம் (வேரம்- கோபம்; வைரம் – பகைமை)மொழி முதற்கண் நிற்கும் உகர ஊகார ஓகாரங்கள் ஒளகாரம் ஆகும். எ-டு:குருகுலத்தில் வந்தவர் கௌரவர்; சூரன்மகன் சௌரி; சோமன் புதல்வன்சௌமியன்.மொழி முதற்கண் நிற்கும் அகரம் ஆகாரம் ஆகும். எ-டு: சனகன் மகள்சானகி; தசரதன் புதல்வன் தாசரதி. (மொழி. 43 – 45) |
முத்துவீரியம் சுட்டும் மொழியிடைஎழுத்தெண்ணிக்கை | மொழி ஓரெழுத்து முதலாக ஒன்பது எழுத்து இறுதியாகத் தொடர்ந்து வரும்.(பகுபதம், பகாப்பதம் – என நன்னூல் பதத்தைப் பாகுபடுத்தியமை போல மு.வீ.பாகுபடுத்திலது-)எ-டு: கா, அணி, அறம், அகலம், அருப்பம், அம்பலவன், அரங்கத்தான்,உத்தராடத்தான், உத்தரட்டாதி யான் – என முறையே காண்க. (மொழி. 9) |
முத்துவீரியம் சுட்டும் மொழிவகை | முத்துவீரியம் ஏழ் மொழிவகைகளைச் சுட்டுகிறது. அவை வருமாறு:நிலம், நீர் – பிரிக்கப்படாத தனிமொழிதேரன், ஊரன் – பிரிக்கப்படும் இணைமொழிஅரசர் வந்தார் – தொடர்ந்து வரும் துணைமொழிநங்கை, வேங்கை – தனிமொழியும்,(நம்+கை, வேம்+கை -எனத்)தொடர்மொழியும் ஆகும் பொதுமொழிசந்திரன் – ஒருமையைக் காட்டும் தணமொழிமுனிவர்கள் – பன்மையைக் காட்டும் கணமொழிஆண், பெண் – இவை இருதிணையிலும் கலந்து பொதுவாக வரும் கலப்புறு மொழி(மொழி. 8) |
முத்துவீரியம் சுட்டும் வடமொழிச்சந்திகள் | முத்துவீரியம், தீர்க்கசந்தி குணசந்தி விருத்திசந்தி- ஆகிய மூவகைவடமொழிச் சந்திகளைக் குறிக்கிறது. நிலைமொழி யும் வருமொழியும்வடசொல்லாக அமையுமிடத்தே இவை நிகழ்கின்றன.அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலிலும் அ ஆவருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட,இடையில்ஓர் ஆகாரம்தோன்றும்.எ-டு :பத + அம்புயம் = பதாம்புயம்; சேநா + அதிபதி =சேநாதிபதிஆ) நிலைமொழியீற்றில் இ ஈ நிற்க வருமொழி முதலிலும் இ ஈவருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையில் ஓர் ஈகாரம்தோன்றும்,எ-டு : மகி + இந்திரன் = மகீந்திரன்; புரீ + ஈசன்= புரீசன்.இ) நிலைமொழியீற்றில் உ ஊ நிற்க, வருமொழி முதலிலும் உஊவருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையில் ஓர் ஊகாரம்தோன்றும்.எ-டு: குரு + உதயம் = குரூதயம்; சுயம்பூ + ஊர்ச்சிதம் =சுயம்பூர்ச்சிதம்.இவை மூன்றும் தீர்க்க சந்தியாம்.அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் இ ஈ வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஏகாரம்தோன்றும்.எ-டு: நர + இந்திரன் = நரேந்திரன்; உமா + ஈசன் = உமேசன்ஆ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் உ ஊ வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஓகாரம்தோன்றும்.எ-டு: தாம + உதரன் = தாமோதரன்; கங்கா+ ஊர்மி =கங்கோர்மி.இவை இரண்டும் குணசந்தியாம்.அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் ஏ ஐ வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஐகாரம்தோன்றும்.எ-டு: சிவ + ஏகநாதன் = சிவைகநாதன்; மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்.ஆ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் ஓ ஒள வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஒளகாரம்தோன்றும்.எ-டு : கலச + ஓதனம் = கலசௌதனம்; மகா + ஒளடதம் = மகௌடதம். (மொழி.34-41)இவை இரண்டும் விருத்திசந்தியாம். |
முத்துவீரியம் சுட்டும்வடமொழியாக்கம் | ஆரிய உயிரெழுத்துப் பதினாறனுள் நடுவில் நிற்கும் நான்கும்இறுதியில் நிற்கும் இரண்டும் அல்லாத ஏனைய பன்னிரண்டும், ஆரியமெய்யெழுத்து முப்பத்தேழனுள் ககரம் முதல் ஐந்து வருக்கங்களின் முதலில்நிற்கும் க ச ட த ப – என்பனவும் அவற்றின் இறுதியில் நிற்கும் ங ஞ ண நம – என்பனவும் ய ர ல வ ள – என்பனவும் ஆகிய பதினைந்தும் ஆரியம் தமிழ்என்னும் இருமொழிக்கும் பொதுவெழுத்துக்களாம். இனி, ஆரியத் திற்கேசிறப்பான எழுத்துள், மேறகூறியவாறு இடை யிலும் இறுதியிலும் நிற்கும்உயிர் ஆறும், பொது நீங்கலாக எஞ்சிய மெய் இருபத்திரண்டும் இடம்பெறும்.ஆரியத்திற்குரிய சிறப்பெழுத்துக்கள் தமிழில் வடசொல்லாகு மிடத்தேதிரியப் பெறும். அவை திரியுமாறு:8ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் ய எனவும்திரியும். 30ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் யஎனவும் திரியும். 31ஆம் மெய் யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில்ட எனவும் திரியும். 32ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும்இடையில் த எனவும் திரியும். 33ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் அஎனவும் இடையில் க எனவும் திரியும். 35ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில்க எனவும் இடையில் க்க் எனவும் திரியும். (மொழி. 11 – 20)ஆகார இறுதிப் பெயர் ஐகாரமாகவும், ஈகார இறுதிப்பெயர் இகரமாகவும்திரியப் பெறும். எ-டு : மாலா- மாலை; புரீ – புரி.பிறவும் நன்னூலாரைப் பின்பற்றியே மொழிந்துள்ளவாறு காண்க. (மொழி.23-26)தத்திதம் பற்றிய குறிப்பு ‘முத்துவீரியம் சுட்டும் தத்திதம்’என்பதன்கண் காண்க. |
முன் முடுகு வெண்பா | முன்னிரண்டடிகள் முடுகிய சந்தம் கொண்டு வரும் வெண்பாவகை. ‘புளிமா’ச்சீர் தொகுப்பின் சந்தம் முடுகும். |
முன்: புணருமாறு | முன் என்ற சொல் பெயராகவும் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர நின்றஇடைச்சொல்லாகவும், குறிப்பு வினை யெச்ச ஈறாகவும் வரும். அச்சொல்வன்கணம் வரின் இயல் பாகவும் ஈற்று னகரம்திரிந்தும், ஏனைய கணங்கள்வரின் இயல்பாகவும் புணரும்.எ-டு : முன் கொண்டான், முற் கொண்டான்; முன் ஞான் றான், முன்வந்தான். வன்கணம்வரின் திரிதலே பெரும்பான்மை. உயிர்வரின்,தனிக்குறில்முன் ஒற்றாகிய நிலைமொழி னகரம் இரட்டும். முன் + அடைந்தான்=முன்னடைந்தான். (தொ. எ. 333 நச்.) |
முன்னிலை மொழிக்கண் இறுதியில் வாராஎழுத்துக்கள் | ஒள என்ற உயிர், ஞ் ந் ம் வ் – என்ற மெய்கள், குற்றியலுகரம்- என்பனமுன்னிலை ஏவலொருமை வினைக்கண் தாமே ஈறாக வாரா. எனவே, ஒளவும், ஞ்ந் ம்வ் – என்னும் மெய்களும் உகரம் பெற்று முன்னிலை வினைக்கண் ஈறாக வரும்,குற்றியலுகரம் முற்றியலுகரமாக நீண்டு முன்னிலை வினைக்கண் ஈறாகவரும்.எ-டு: கௌவு கொற்றா, கௌவுக் கொற்றா; உரிஞு கொற்றா, உரிஞுக்கொற்றா; பொருநு கொற்றா, பொருநுக் கொற்றா; திருமு கொற்றா, திருமுக்கொற்றா; தெவ்வு கொற்றா, தெவ்வுக்கொற்றா; கூட்டு கொற்றா, கூட்டுக்கொற்றா – இவ்வீறுகள் ஆறும் உகரம் பெற்று வல்லினம் மிகாமலும் மிக்கும்உறழ்ந்தன. (தொ. எ. 152 நச்.) |
முன்னிலை மொழிக்கு ஒள ஞ் ந் ம் வ்குற்றியலுகரம் இவற்றை விலக்கியதன் காரணம் | முன்னிலை ஒருமை விகுதிகள் இ ஐ ஆய் – என்பன. இகரம் நீ என்றபெயரிலுள்ள ஈகாரத்தின் திரிபு. ஆய் என்பது ஐ என்பதன் நீண்ட வடிவே.ஐயன் என்ற பெயரின் முதனிலை ஐ. ஒளவை என்ற பெயரின் முதனிலை ஒள. கன்னடமொழி யில் ஆடூஉ முன்னிலைவினைகளில் ஐ-சேர்ந்து ‘கேள்வை’ என வரும்;மகடூஉ முன்னிலைவினைகளில் ஒள- சேர்ந்து ‘கேள் வெள’ என வரும். இவ்வாறேதமிழிலும் பண்டைக் காலத்தில் ஆடூஉ முன்னிலைவினைக்கண் ஐயும், மகடூஉமுன்னிலை வினைக்கண் ஒளவும் சேர்த்து வழங்கினர். பிற்காலத்துப்படர்க்கைக்கண்ணேயன்றி முன்னிலைக் கண்ணும் அஃறிணை வழக்கு வந்தமையால்அவ்வேறுபாடு வேண்டா என ஒழிக்கப்பட்டபோது, ஒள முன்னிலைக்கண் வருதல்நீக்கப்பட்டது.முன்னிலைப் பன்மைக்கண் செய்யும்- இரும்- என்பன போன்ற ஏவலில் காணும்உம்விகுதி பண்டைச் செய்யுளில் காணப்பட வில்லை. ‘உண்ம் என இரக்கும்’(புறநா. 178) ‘தின்ம் எனத் தருதலின்’ (150) – என மகர ஈற்று முன்னிலைச்சொல் வந்துள்ளன. இச்சொற்களை நோக்க, மகரமெய் பன்மையைக் குறிக்கிறது.செய்கும்- வருதும்- என்ற தன்மைப்பன்மை முற்றுப் போல, உண்ம்- தின்ம்-என்பன முன்னிலைப் பன்மை வினையைக் குறிக்கின்றன. செந்தமிழில் நீம்என்பதன்கண் உள்ள மகரத்தை விலக்கியதனால், வினைக்கண்ணும் உண்ம் என்பதுபோல மகர ஈறு வாராது விலக்கப்பட்டது. ஒளவும் மகரமும் தொல். காலத்துமுன்னரே விலக்கப்பட்டன.மொழியிறுதிக் குற்றியலுகரமும் முற்றியலுகரமாக ஒலிக்கும். அவ்வாறுஒலித்தல் முன்னிலைவினைக்கண்ணே என்பதும், ஆண்டுப் பொருள் வேறுபடும்என்பதும், நச்சினார்க்கினியர் காது கட்டு கத்து முருக்கு தெருட்டு -என முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நிற்கும் என்றுஇதனை விளக்கியுள்ளார் என்பதனை நோக்கக் குற்றிய லுகரத்து இறுதிமுன்னிலை வினைக்கண் வாராது என்பதும் பெறப்படும்.ஞகரம் ‘உரிஞ்’ எனத் தொழிற்பெயர் ஒன்றன்கண்ணும், நகரம் ‘வெரிந்’என்ற பெயர்ச்சொற்கண்ணும் ‘பொருந்’ என்ற தொழிற்பெயர் ஒன்றன்கண்ணும்வருமாதலின் அவை வினைக்கண் வாரா. “ஞ் ந்- முன்னிலை ஏவற்கண் வரும்;ஆண்டு அவை உகரம் பெறும்” என்று நன்னூலார் கூறியது போலத் தொல்.குறிப்பிடாமையால், ஞ ந-க்கள் தொழிற் பெயர்க்கண் அன்றி முன்னிலைவினைக்கண் வாரா.வகரம் அவ் இவ் உவ் – என்னும் சுட்டுக்களிலும், தெவ் என்னும்பெயர்ச்சொல்லிலுமன்றி வருதல் இன்மையின், அது முன்னிலை வினைக்கண்வாராது என விலக்கப்பட்டது.இவ்வாறு ஒள- ஞ் ந் ம் வ் – குற்றியலுகரம் – என்பன முன்னிலைவினைக்கண் வாரா என விலக்கப்பட்டன. (எ. ஆ. பக். 115, 116) |
முன்னிலை மொழிக்கு முற்றத் தோன்றாதன | முன்னிலை மொழியாவது முன்னிலைவினை. முன்நின்றான் தொழில்உணர்த்துவனவும் முன்நின்றானைத் தொழிற் படுத்துவனவும் – எனமுன்னிலைவினை இரு வகைத்து. முன்நின் றானைத் தொழிற்படுத்துவனவற்றைத்தெளிவு கருதி ‘ஏவல் வினை’ என்று கூறலாம். இவ்வேவல் வினை ஒருமைக்குஎல்லா ஈற்று வினைப்பகுதிகளும் பயன்படலாம்;என்றாலும் ஒள என்னும்உயிரீறு, ஞ் ந் ம் வ் – என்னும் புள்ளியீறு, குற்றிய லுகர ஈறு – என்பனமுன்னிலை ஏவல் ஒருமை வினையாக வாரா. இவை ஏவல் வினையாக வரவேண்டுமாயின்,உயிரீறும் புள்ளியீறும் உகரம் பெற்று வரவேண்டும்; குற்றியலுகர ஈறுமுற்றியலுகர ஈறாகிவிடும்.எ-டு: கௌவு கொற்றா; உரிஞு கொற்றா, பொருநு கொற்றா, திருமுகொற்றா, தெவ்வு கொற்றா, கூட்டு கொற்றா – இவற்றுள் வருமொழி வல்லெழுத்துவிகற்பித்து மிகுதல் கொள்க.கூட்டு என்பது ஏவலொருமை முற்றாகியவழி முற்றியலுகர ஈற்றது.(தொ.எ.152 நச். உரை)குற்றியலுகரஈறு வருமொழி வல்லெழுத்து மிக்குக் கூடுக் கொற்றா எனவும்வரும் (இயல்பாதலே அன்றி). (153 இள.உரை) |
முன்னிலை வினை, ஏவல் | முன்னிலைவினை என்பது தன்மைவினை படர்க்கைவினை கட்கு இனமாகியமுன்னிலை வினையைக் குறிக்கும். இனமின்றி முன்னிலை யொன்றற்கே உரியதுஏவல்வினை. ஆகலின் முன் னிலைவினை என்பது ஏவல்வினையை உணர்த்தாமையின்‘ஏவல்’ எனத் தனியே அதனை விதந்து கூறினார். (நன். 161 சங்கர.) |
முன்றில் : சொல்லமைப்பு | முன் என்ற நிலைமொழியை அடுத்து இல் என்ற வருமொழி புணருமிடத்து,இடையில் னகரம் தனிக்குறில் முன் ஒற்றாக இரட்டி முன்+ன்+இல்=முன்னில்என வருதலே முறை. அதனைவிடுத்து நிலைமொழியீற்று னகரஒற்றை அடுத்து அதன்இனமாகிய றகரஒற்று வந்து சேர, முன்+ற்+இல் = முன்றில் என வருதல்இலக்கணத்தொடு பொருந்திய மரூஉமுடி பாம். இல்லத்தினது முன்னிடம்(முற்றம்) என்று பொருள் படும் இச்சொல், இல்+முன்= இன்முன்- என முறையேபுணர்ந்து வாராமல் முன்பின் நிலைமாறி முன்றில் என்று வந்தமைமரூஉவின்பாற்படும். இங்ஙனம் முன்பின் தொக்கன வற்றைப் பிற்காலத்தார்இலக்கணப் போலி என்பர். (தொ.எ. 355 நச். உரை)இது கடைக்கண், என்றாற்போல வரும் மரூஉமுடிபு போலன்றி, முன்னில் எனஒற்று இரட்டி முடியற்பாலது, இரு மொழிக்கும் இயல்பு இலதோர் ஒற்றுமிக்கு முடிந்த மரூஉமுடிபு. (னகரத்தோடு இயையுடையது ற்.) (356 இள.உரை) |
முப்பாற் புள்ளி (2) | ஆய்தம் என்னும் முப்பாற் புள்ளி. ‘புள்ளி’ ஈண்டு ஒலியைக்குறிக்கும். இவ்வெழுத்து நா-அண்ணம்-முதலாய உறுப்புற்று அமையப்பிறவாமல், வாயிதழ் அங்காப்ப மிடற்றிசையான் அரைமாத்திரை யளவொடுபிறப்பது. ஆதலின் அது தான் சார்ந்துவரும் அ இ உ என்னும்குற்றுயிரோசைகளின் சாயலைப் பெற்றொலிக்கும். (எகர ஒகரங்கள் இகர உகரஒலியுள் அடங்கும்.) ஆய்தம் உயிர் ஏறலின்றி யாண்டும் ஒலிப்போடு வரும்பண்பினது என்பது விளங்க, ஒலிக்குறிப் புடையதாகிய இதனை விதந்து ‘ஆய்தம்என்ற முப்பாற் புள்ளியும்’ என்றார் ஆசிரியர். ‘முப்பாற்புள்ளி’ எனவே,அதன் வரிவடிவும் முக்கோணமாக அமைத்துக் கொள்ளப்படும். ஆய்தம் யாண்டும்ஒலிப்பொடு நிற்றலின், இதனை உயிர் ஊர்வதில்லை. அரை மாத்திரை யளவிற்றுஆதலின் இது மெய்யினை ஊர்வதில்லை. இங்ஙனம் உயிருக்கும் ஒற்றுக்கும்இடைப்பட்டு நிற்றலின், உயிர் போலவும் ஒற்றுப் போலவும் ஆய்தம் முறையேஅலகு பெற்றும் பெறாதும் வரும். (தொ. எ. 2 ச. பால.) |
முப்பேட்டுச் செய்யுள் | இவ்விலக்கியத்துள் நான்கடியின் மிக்கு ஆறடியான் வந்த பாடல்களும்உள. அவை கலிவிருத்தத்தின்பாலோ, கொச்சகக் கலியின்பாலோ சார்த்திக்கொள்ளப்படும்.(யா. வி. பக். 365) |
மும்மணி மாலை | வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அகவலும் முறையே ஒன்றனை அடுத்துஒன்று வர, முப்பது பாடல்கள் அந்தா தித்து முதலும் இறுதியும்மண்டலித்து வரப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 60.) |
மும்மணிக் கோவை (1) | தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்று; ஆசிரியப் பாவும்,வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் ஒன்றனை யடுத்து ஒன்றாகத் தொகைமுப்பது பெற அந்தாதித் தொடையால் மண்டலித்து வரப் பாடுவது.எ-டு : குமரகுருபரர் அருளிய சிதம்பர மும்மணிக்கோவை.(இ. வி. பாட். 55) |
மும்மணிக் கோவை (2) | இத்தொடர்நிலைச் செய்யுளின் பாடல்கள் இறுதி எழுத்தும் சொல்லும்இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பத் தொடையால் இணைந்துள்ளன.(யா. வி. பக். 205) |
முரச பந்தம் | கான வாரண மரிய வாயினனேதான வாரண மரிய வாயினனேமான வாரண மரிய வாயினனேகான வாரண மரிய வாயினனேஇது, மேலிரண்டடிகளுந் தம்முட் கோமூத்திரியாகவும், கீழிரண்டடிகளுந்தம்முட் கோமூத்திரியாகவும், சிறுவார் போக்கி, மேல்வரி மற்ற மூன்று வரிகளிலும் கீழுற்று மீண்டு மேனோக்கவும், கீழ்வரியும் அவ்வாறே மற்றமூன்று வரி களிலும் மேலுற்று மீண்டு கீழ்நோக்கவும் பெருவார் போக்கி,இந்தவார் நான்கும் நான்கு வரிகளாகவும் முடியுமாறு காண்க. |
முரச பெந்தம் | மிறைக்கவி வகைகளுள் ஒன்று.பாடல்போ த வா ன து வா த ராமா த வா த ண வா த நாநா த வா ண த வா ர வாவே த வா ன து வா ர காமுதலடி – நான்கடிகளையும், இம்முறையே நெடுவார் குறுவார்களாகப்போக்கிக் காண்க.பதவுரை -போத – ஞானவானே!வானது ஆதரா – வானவர் ஆதரிக்கப்பட்டவனே!மாதவா – திருமகள் காந்தனே!நா தணவாத நாத – நாவை விட்டு நீங்காத என் நாதனே!தவா அரவா – அழிவில்லாத அராவை யுடையவனே!வான வேத துவார கா (எனச் சொல் மாற்றுக) – பரமபதமிட மாக நின்றும்பூமியில் வருதற்குப் பெருமை யுடைய வேதத்தை வாயிலாக உடையோனே! என்னைக்காப்பாயாக! (மா. அ. 284 உரை) |
முரண் என்னும் தொழிற்பெயர்ப்புணர்ச்சி | முரண் என்ற தொழிற்பெயர் ஏனைய தொழிற்பெயர் போல உகரச் சாரியையும்வருமொழி வன்கணமாயின் வல்லெழுத்து மிகுதலும் பெறாது, பொதுவிதிப்படிஅல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண்ணும், வேற்றுமைக்கண்திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்றுப் புணரும்.எ-டு : முரண்கடிது, ஞெகிழ்ந்தது, யாது, இழிந்தது – அல்வழிக்கண்இயல்பு. முரட்கடுமை, முரண் ஞெகிழ்ச்சி, முரண்வலிமை, முரணடைவு – எனவேற்றுமைக்கண் வன்கணம் வரின் ணகரம் டகர மாகத் திரிந்தும், ஏனையகணங்கள் வரின் இயல்பாக வும் புணர்ந்தது.முரண் + நீட்சி = முரணீட்சி – என வருமொழி முதல் நகரம்திரிந்தவழி நிலைமொழியீற்று ணகரம் கெட்டது. (தொ. எ. 150 நச்.)முரண் + கடுமை = முரண்கடுமை, முரட்கடுமை. அரண்+ கடுமை =அரண்கடுமை, அரட்கடுமை -என்ற உறழ்ச்சி முடிவும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் உண்டு.(தொ.எ. 309 நச்.உரை) |
முறுவல் | இறந்துபட்டதொரு பண்டை நாடகத்தமிழ்நூல்.(சிலப். உரைப்.) (L) |
முற்றவை | அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. ‘கற்றோர் மொய்த்த முற்றவைநடுவண்’ (பெருங். உஞ்சைக். 36 – 245) (L) |
முற்றாய்தம் | தனக்குரிய அரைமாத்திரையைக் குறையாமல் பெறும் ஆய்தம் முற்றாய்தமாம்.அது தனக்கு முன் குற்றெழுத்தைக் கொண்டு, தனக்குப் பின்னர்ப்பெரும்பான்மையும் கு சு டு து பு று – என்ற ஆறெழுத்துக்களுள் ஒன்றுபெற்று மொழியின் இடையில் நிகழும்.அஃகு, கஃசு, ஒன்பஃது – முதலாக ஈற்று வல்லின வகையால் வரும்முற்றாய்தம் ஆறாம். (குற்றியலுகரமே அன்றி வல்லினப் புள்ளியை ஊர்ந்துபிற உயிர் வரினும் அஃது ஆய்தத்தை அடுத்துவரும் உயிர்மெய்யாம். எ-டு:பஃறி)அவ்+ கடிய = அஃகடிய; அ +கான் = அஃகான் – எனப் புணர்ச்சி வகையான்வரும் முற்றாய்தம் ஒன்றாம்.இலகு – இலஃஃகு, விலகி – விலஃஃகி – எனச் செய்யுள் விகாரத் தால்(விரித்தல்) வரும் முற்றாய்தம் ஒன்றாம்.இவ்வாற்றால் முற்றாய்தம் எட்டு ஆதல் அறியப்படும். (நன். 90உரை) |
முற்றியலுகரம் கெட்டு முடிதல் | அது இது உது – என்பன அன்சாரியையொடு பொருந்தும்வழி, உகரம் கெட, அதன்இதன் உதன் – எனவரும். அவை இன்சாரியையொடு புணரும்வழியும் உகரம் கெட,அதின் இதின் உதின் – என வரும். (தொ. எ. 176 நச். உரை)ஆறு என்பது அறு என நின்றவழி, வருமொழியாக ‘ஆயிரம்’ வரின், அறுஎன்பதன் உகரம் கெட, அற் + ஆயிரம் = அறாயிரம் – என முடியும். (469)சுட்டுமுதல்உகரமே அன்றிப் பிற உகரமும் உயிர் வருவழிக்கெடுதலுமுண்டு. கதவழகியது, களவழகியது, கனவழகியது- என்பனவற்றின்கண்இறுதி உகரம் கெட நின்ற ஒற்றின்மேல் வருமொழி முதல் அகரம் ஏறிமுடிந்தவாறு, (176 நச்.)எல்லாம் என்பது வற்றும் உருபும் பெற்று ஈற்றில் உம்மை பெறுவழி,எல்லாவற்றையும்- எல்லாவற்றொடும் – என வரும். ‘ஒடு’ என்பதனோடு ‘உம்’சேருமிடத்து, ஒடுவின் உகரம் கெட ‘ஒடும்’ என உம்மொடு புணரும். (189நச்.)அது +அன்று, இது+அன்று, உது+ அன்று, அதன்று, இதன்று, உதன்று – எனஉகரம் கெட்டு நின்ற தகர ஒற்றோடு உயிர் புணரும். (258 நச்.) |
முற்று ஆதி இடை மடக்கு | எ-டு : ‘ கொண்டல் கொண்டலர் பொழில்தொறும் பண்ணையாய் பண்ணை யா யத்துள்ளார் வண்டல் வண்டலர் தாதுகொண் டியற்றலின்வரு மண மண ல்முன்றில் கண்டல் கண்டக மகிழ்செய ஓதிமம்கலந் துறை துறை வெள்ளம் மண்டல் மண்டல முழுதுடன் வளைதரு வளைதரு மணிவேலை.’கொண்டல் கொண்டு அலர், பண்ணினை ஆயும் பண்ணை, வண்டல் வண்டு அலர்தாது, கண்டல் கண்டு, கலந்து உறை துறை, மண்டல் மண்தலம், வளைதரு வளை தரு- எனப் பிரித்துப் பொருள் செய்க.“உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கும் சங்குகளைக் கொழிக் கும் அழகியகடலே! கீழ்க்காற்றைக்கொண்டு பூக்கின்ற சோலைகள்தொறும், இசையை ஆராயும்விளையாடற் சிறுமியர் சிற்றிலை வண்டுகளால் வெளிப்படும் மகரந்தத்தூள்களைக் கொண்டு இயற்றுதலின் மணம் வீசவும், மணற் பகுதியிலே தாழையைக்கண்டு மனம் மகிழ் கூரவும், அன்னங்கள் கூட்டமாகத் தங்கியிருக்கும்நீர்த்துறையில் வெள்ளத்தைக் கொண்டு ஏறாதொழிவாயாக!” எனச் சிறுமியர்விளையாடல் கண்டு மகிழும் தாயர் கடலைப் பரவிய இப்பாடற் கண், நான்குஅடிகளிலும் முதலிலும் இடையிலும் இடை யிட்டு மடக்கியவாறு. (தண்டி. 95உரை) |
முற்று ஆதி இடையிட்ட மடக்கு | எ-டு : ‘ தோடு கொண்டளி முரன்றெழக் குடைபவர் குழல்சேர்ந்த தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்ந் தவர்தம் தோடு தைந்தசெஞ் சாந்தணி திரண்முலை இடைதோய்ந் தோடு தண்புனல் நித்திலம் துறைதொறும் சொரியும்.’தோடு கொண்டு – கூட்டம் ;தோடு கொண்ட – பூவின் இதழ்;தோள் துதைந்த, (தோய்ந்து) ஓடு தண்புனல் – எனப் பிரித்துப் பொருள்செய்க.“கூட்டமாக வண்டுகள் ஒலித்தெழ, நீராடுவார் கூந்தலில் பொருந்திய இதழ்கொண்ட இனிய மலரைச் சுமந்து, அகில் மணந்து, அம்மகளிருடைய தோள்களில்பூசிய செஞ்சந்தனம் தம்மிடத்துப் பூசப்பட்ட திரண்ட முலையிடையே தோய்ந்துஓடும் குளிர்புனல் முத்துக்களை நீர்த்துறைதோறும் குவிக் கும்” என்றபொருளமைந்த இப்பாடற்கண், தோடு என்ற சொல், பாடலின் நான்கடிகளிலும்பிறசொற்றொடர்கள் இடையிட்டு வர, அடிமுதற்கண் மடக்கி வந்தமை காணப்படும். (தண்டி. 95 உரை.) |
முற்று ஆதி இறுதி மடக்கு | எ-டு : ‘ நிரையா நிரையா மணிபோல்நிறை கோடல்கோடல் வரையா வரையா மிருள்முன்வரு மாலைமாலை விரையா விரையா எழுமின்ஒளிர் மேகமேகம் உரையா உரையா ரினும்ஒல்லன முல்லைமுல்லை .’“கோடல்! நிரையா ஆநிரை மணிபோல் நிறை கோடல், வரையா அரை யாம இருள்முன் வரும் மாலை மாலை, விரையா, இரையா மின் ஒளிர் மேகம் எழும், முல்லைமுல்லை, ஏகம் உரையா உரையாரினும் ஒல்லன.” – எனப் பிரித்துப் பொருள்செய்யப்படும். யாமிருள்: அகரம் தொகுத்தல்.“காந்தளே! வரிசையாக வருகின்ற பசுக்கூட்டங்களின் மணி ஓசையைப் போலஎங்கள் நிறையைக் கவராதே. அளவிட முடியாத அரையாம இருளுக்கு முன்வரும்மயக்கம் தரும் மாலைக்காலத்தில், விரைந்து ஒலித்துக்கொண்டு மின்ன லாகியஒளியைத் தரும் மேகங்களும் எழும். ஒன்றும் உரை யாத புகழாளராகியதலைவரினும், முல்லைநிலத்து முல்லைக்கொடிகளும் பகையாயின” எனக்கார்ப்பருவ மாலைக் காலத்துத் தலைவி தலைவன் பிரிவால் வருந்திக் கூறியஇப்பாடற்கண், அடிதோறும் முதலும் இறுதியும் மடக்கியமையால், இதுமுதலிறுதி முற்று மடக்கு ஆம். (தண்டி. 95) |
முற்று ஆதி மடக்கு | நான்கடியும் முதலில் மடக்கி வரும் பாடல்.எ-டு : ‘ வரைய வரைய சுரம்சென்றார் மாற்றம் புரைய புரைய எனப் பொன்னே! – உரையல் நனைய நனைய தொடைநம்மை வேய்வர் வினையர் வினையர் விரைந்து.’வரைய – களவொழுக்கத்தை நீக்க, மலைகளையுடைய;புரைய – மேம்பட்டவை, குற்றமுடையவை;நனைய – மதுவினையுடைய, குளிர்ச்சியினையுடைய;வினையர் – வினையில் வல்ல தலைவர், வினையை முடிப்பர் – எனப் பொருள்செய்க.“நீக்கத்தக்க களவொழுக்கத்தை நீக்க, (வரைவிற்கு வேண்டும் பொருள்தேடிவர) மலைகளையுடைய சுரம் கடந்து சென்ற தலைவருடைய மேம்பட்ட சொற்கள்குற்றமுடையன என்று இதுபோது சொல்லற்க! பொன் போன்றவளே! மதுவினை யுடையகுளிர்ச்சியையுடைய மாலையை, எடுத்த செயலைச் செய்து முடிக்கவல்ல நம்தலைவர் தம் வினையை முடித்தவ ராய் விரைந்து வந்து, நமக்குச்சூட்டுவார்” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிவிடை ஆற்றுவித்தஇப்பாடற்கண், நான்கடியும் முதற்கண் மடக்கியவாறு. (தண்டி. 95) |
முற்று இடை மடக்கு | பாடலின் நான்கடிகளிலும் ஒவ்வோரடி இடையிலும் ஒரே சீர் மடக்கி(வெவ்வேறு பொருள்பட) வருதல்.எ-டு : ‘பரவி நாடொறும் படியவாம் பல்புகழ் பரப்பும்இரவி சீறிய படியவாம் பரிஎரி கவரவிரவி மான்பயில் படியவாம் வேய்தலை பிணங்கும்அருவி வாரணம் படியவாம் புலர்பணை மருதம்!’படி அவாம், படிய வாம், படிய ஆம், படிய ஆம் என்று பிரித்துப் பொருள்செய்க. (உலகினர் விரும்பும், படியுமாறு தாவிச் செல்லும், தன்மையஆகும், படிந்து கலக்க ஆம் (-நீர்) – எனமுறையே பொருள் அமையும்)உலகினர் நாள்தோறும் போற்றி விரும்பும் பல புகழ்களைப் பரப்புகின்றசூரியகுலத்துச் சோழமன்னனால் கோபிக்கப் பட்ட நாடுகள், படியுமாறு தாவிச்செல்லும் விரைந்த செலவினை யுடைய நெருப்புக் கவரவே, தம்முள் விரவி,மான்கள் பயிலத்தக்க தன்மையுடைய முல்லை நிலங்கள் ஆம்; அருவிநீர் போன்றுதெளிந்த குளங்களில் அவன் யானைகள் படிந்து கலக்கவே, முன்புவயல்களையுடையவாயிருந்த அம் மருதநிலங்கள் இதுபோது நீர் வற்றிமூங்கில்கள் தம்முள் பிணங்கிச் செறிந்திருக்கின்ற வறண்ட பாலைநிலம்ஆம்.இவ்வாறு நான்கடியிலும், சொற்றொடர் பல இடையிட்டு வர, இடையே மடக்குவந்தவாறு. இதில் பிறிதொரு வகை வருமாறு.எ-டு : ‘மனமேங் குழைய குழை யவாய் மாந்தர்இனநீங் கரிய கரிய – புனைவதனத்துள் வாவி வாவி க் கயலொக்கும் என் உள்ளம்கள் வாள வாள வாங் கண்.’ஒவ்வோரடியிலும் இடையே அசையோ சீரோ மடக்கி வருவதும் முற்றுஇடைமடக்காம்.என் உள்ளம் கள்வாளுடைய வாள் அவாம் கண், மனம் ஏங்கு உழைய, குழைஅவாய், மாந்தர் இனம் நீங்க அரிய, கரிய, வதனத்துள் வாவி, வாவிக் கயல்ஒக்கும் – என்று பொருள் செய்யப்படும்.“என் மனத்தைக் களவு கொண்ட தலைவியின் வாளை யொத்த கண்கள் என் மனத்தைஏங்க வைக்கும் மான்பார்வை யொடு, காதணி வரை நீண்டு, கண்டவர் நீங்கமனமில்லாமை செய்தலுடையவாய், கரியனவாய், முகத்தில் உலாவி, குளத்திலுள்ள கயல்மீன்களை ஒத்துள்ளன” என்று தலைவன் தலைவியின் கண்களைநயந்துரைத்த இப்பாட்டின்கண், குழைய, குழைய – கரிய, கரிய – வாவி, வாவி- வாள, வாள – என்பன நான்கடி இடைமடக்காக வந்தவாறு.(தண்டி. 95 உரை) |
முற்று இடையிறுதி இடையிட்ட மடக்கு | ஒரு பாடலின் நான்கடிகளிலும் ஒரே சொல் இடையிலும் இறுதியிலும்இடையிட்டு மடக்கி வந்து பொருள் தருமாறு அமையும் மடக்கு வகை.எ-டு : ‘வா மான மான மழைபோல்மத மான மான நா மான மான நகமாழக மான மான தீ மான மான வர் புகுதாத்திற மான மான கா மான மான கவின்கான்கனல் மான மான .’வாம் மான மான; மழைபோல் மத மானம் (அம் சாரியை) ஆன; நாம் ஆன மான நகம்ஆழ் அகம் மானம் (அம் சாரியை) ஆன; தீம் (ஐகாரம் கெட்டது) ஆன; மானவர்புகுதாத் திறமான ஆன; கா மான மான கவின் கான் கனல் மானம் ஆன – என்றுபிரித்துப் பொருள் செய்யப்படும். கவின் கான் : எழுவாய்.“கவின் கானங்கள், தாவிச் செல்லும் மான்களினுடைய பெருமையையுடைய;மேகம் போன்ற மதயானைகளை உடையன; அச்சம் தரும் விலங்குகளுடைய நகங்கள்ஆழ்ந்து கிழிக்கும் மார்பினை மான்கள் உடையவாயின (-அத்தகைய மான்கள்பயில்வன) ; தீமையே வடிவமாயின; மக்கள் உள்ளே நுழையாத தன்மையுடையன ஆயின.சோலைகளை ஒப்ப மிக்க அழகுடைய அக்காடுகள் (இதுபோது வேனிலால்) நெருப்புவடிவினையுடைய ஆயின” என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘மான்’ என்ற சொல்இடையிடாதும் இடை யிட்டும் பாட்டின் இடையிலும் இறுதியிலும்மடக்கியவாறு. (தண்டி. 95 உரை)இம்மடக்கில் பிறிதொருவகை வருமாறு :‘நான்கடிகளிலும் இடைச்சீரும் இறுதிச்சீரும் மடக்கிவரும் மடக்கும்சீரின் எழுத்துக்கள் ஒவ்வோரடியிலும் வேறாக இருக்கலாம்.எ-டு : ‘மாறர் குருகூர் குருகூர் வடி வேல வேல நாறு மளகத் தளக த் துணை வீகை யீகை யாறி னகலா தகலாத தாமாக மாக நீற னிலவா னிலவா நினைத் தேக லேகல்’மாறர் குருகு ஊர் குருகூர் வடிவேல! ஏலம் நாறும் அளகத்தள் அகத்துள்நைவு ஈகை ஈகையா(ற்)றின் அகலா. தகலாததாம். ஆகம் மாகம் நீறு அல் நிலவால்நிலவா. நினைத்தே கல் ஏகல் -எனப் பிரித்துப் பொருள் செய்க.கற்பிடைத் தலைவன்பிரிவால் தலைவிக்கு நிகழக்கூடிய ஆற்றாமையைக்கூறித் தோழி தலைவனைச் செலவழுங் குவித்தது இது.“சடகோபருடைய, சங்குகள் தவழப்பெற்ற, குருகூரிலுள்ள கூரிய வேலைஏந்திய தலைவ! ஏலம் கமழும் கூந்தலையுடைய தலைவியது மனத்துயர், பொன்னைத்தேடித்தரும் நெறியால் நீங்காது. நின் பிரிவு தகுவதாகாது. இவள் மேனி,வானம் நீறாகும்படி இரவில் எழும் நிலவினால், அழகுகள் நிலவமாட்டா (-அழகுகெடும்). இதனை நினைத்தே கற்கள் நிறைந்த கடங்களின் வழியே பொருள் தேடச்செல்லுதலை நீக்குக” என்று பொருள்படும் இப்பாடற்கண், அடிதோறும்வெவ்வேறு சீர்கள் இடையும் இறுதியும் மடக்கி வந்தவாறு. (மா. அ.பாடல். 714) |
முற்று இறுதி மடக்கு | வெவ்வேறு சொற்கள் நான்கடியிலும் இறுதியில் மடக்கி வருவது.எ-டு : மாலை அருளாது வஞ்சியான் வஞ்சியான்வேலை அமரர் கடைவேலை – வேலைவளையார் திரைமேல் வருமன்ன மன்னஇளையா ளிவளை வளை.வஞ்சியான், வேலை, மன்ன, வளை என்ற சொற்கள் முறையே நான்கடிகளிலும்ஈற்றில் மடக்கியவாறு.அமரர் கடைவேலை, அவ்வேலைத் திரைமேல் வரும் அன்னம் அன்ன இவளைஅருளாது, வஞ்சியான், இவள் வளைகளை வஞ்சியான் – எனப் பிரித்துப் பொருள்செய்க.பண்டு தேவர்கள் பாற்கடல் கடைந்தபோது, அக்கடலின் வளைகளைக்கொழித்துவரும் அலைகளின்மேல் தோன்றிய அன்னம் போன்ற திருமகளை ஒத்த இவளை,வஞ்சிநகரை ஆளும் வேந்தன், தன் மாலையைத் தாராது வளைகளைக் கவர்ந்துவஞ்சிக்க மாட்டான்” எனத் தாயர் ஆற்றியவாறு கூறும் இப்பாடற்கண், முற்றுஇறுதி மடக்கு வந்தவாறு. (தண்டி. 95) |
முற்றுகர ஈற்றுப் புணர்ச்சி | ஒடு என்ற மூன்றனுருபு, ஆறனுருபு, ஏழு எண்ணும் இயல்பு எண்ணுப்பெயரும் ஒரு இரு – என்றாற்போலத் திரிந்த எண்ணுப் பெயரும், முற்றுகரஈற்று வினைப்பகுதி (அடு, பெறு- போல்வன), அது இது உது என்றசுட்டுப்பெயர் – ஆகியவற்றின் ஈற்று முற்றுகரம் வன்கணம் வரினும்இயல்பாகப் புணரும்.எ-டு : சாத்தனொடு சென்றான் – மூன்றனுருபுஎனது தலை – ஆறனுருபுஏழு கடல் – இயல்பு எண்ணுப்பெயர்ஒருகல், இருசொல் – திரிந்த எண்ணுப்பெயர்அடுகளிறு, பெறுபொருள் – முற்றுகர ஈற்று வினைப் பகுதிஅது சென்றது, இது கண்டான் – ஒருமைச் சுட்டுப் பெயர்.இவை இயல்பாகப் புணர்ந்தன.உதுகாண், உதுக்காண் – என இயல்பாயும் விகாரமாயும் வருவன அருகியேகாணப்படுகின்றன. ‘உதுக்காண்’ என்பது உங்கே என்ற பொருளில்வரும் ஒட்டிநின்ற இடைச்சொல் என்பாருமுளர். ‘உவக்காண்’ என்பதும் உங்கே என்றுபொருள் படும் ஒட்டி நின்ற இடைச்சொல் (குறள் 1185 பரி.) (நன். 179) |
முற்றுகரம் கெடுதல் | நிலைமொழியீற்றில் நிற்கும் முற்றியலுகரம் வருமொழி முதற் கண் உயிர்வருவழிக் கெடுதலும் உண்டு. அல்வழி வேற்றுமை – என இருவழியும்கொள்க.எ-டு: உயர்வு + இனிது= உயர்வினிது; கதவு + அடைத்தான் = கதவடைத்தான்(நன். 164) |
முற்றும் முற்று மடக்கு(இடையிடாதது) | ஒரே அடி நான்கடியுமாக வரும் மடக்கு; இந்நான்கடி மடக்கினை ஏகபாதம்எனவும் கூறுப. (திருஞானசம்பந்தர் அருளிய முதல்திருமுறைக்கண்(பண்முறைத் தேவாரம்) 127 ஆம் பதிகம் பன்னிரண்டு பாசுரங்களும்இவ்வகையின.எ-டு : ‘வான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயின’வான் அகம் தரும் இசைய ஆயின, வானகம் தரும் இசை அவாயின; வானகம் தரும்இசைய ஆயின, வான் நகம் தரு மிசைய ஆயின – எனப் பிரித்து பொருள்காண்க.வானகம் – ஆகாயம், விண்ணுலகம், பெரிய மலை;இசை – ஓசை, எழுச்சி, புகழ்.மேகங்கள் கடலிடத்தில் கொடுக்கும் ஓசையை உடையன- வாய் ஆகாயத்தைக்கைப்பற்றிக் கொள்ளும் எழுச்சியை விரும்பின; விண்ணுலகத்தில் ஓங்கும்புகழுடையனவாகிய பெரிய மலைகள் மேலிடத்தில் மரங்களைக் கொண்டுள்ளன. மிசை- மேலிடம். (தண்டி. 96 உரை) |
முற்றும் முற்றுமடக்கு(இடையிட்டது) | முதல் இடைகடை யென ஒவ்வோரடியிலும் மூவிடத்தும் சொற்கள் மடக்கிவருவது.எ-டு : ‘ களைகளைய முளரிவரு கடை கடை ய மகளிர்கதிர் மணியுமணியும் வளைவளை யக் கரதலமு மடைமடைய மதுமலரு மலையமலைய இளையிளை யர் கிளைவிரவி யரியரி யின் மிசைகுவளை மலருமலருங் கிளைகிளை கொள் இசை அளிகள் மகிழ்மகிழ் செய் கெழுதகைய மருதமருதம் .’முளரிக்களை களை(ய) அருகுஅடை கடைய மகளிர் கதிர் மணியும், அணியும்வளை வளைய கரதலமும், அடை அம்மடைய மது மலரும், மலைய மலைய, இளைய இளையர்கிளைவிரவி அரிஅரியின்மிசை குவளைமலரும் அலரும்; கிளைகிளைகொள் இசைஅளிகள் மகிழ் கெழுதகைய மருத (மரங்களையுடைய) மருதம் மகிழ்செய்யும் -என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்.தாமரையாகிய களைகளைக் களைய அவற்றின் அருகே அடையும் உழத்தியர் அணிந்தஒளி வீசும் மணிகளும், அணிந்திருந்த வளைகளால் வளைக்கப்பட்ட கைகளும்,அடைக்கப் பட்ட மடையிலுள்ள தேனை உடைய பூக்களும், ஒன்றோ டொன்று நலன்அழிப்பதற்கு மாறுபட, மிக்க இளைஞர் குழாம் கூடி அரிகின்றநெற்கதிர்கள்மீது குவளைப் பூக்களும் மலரும். கிளை என்னும் நரம்பின்ஒலி ஏனை ஒலியினங்களொடு தொடர்பு கொள்ளும் ஓசை போலப் பாடும் வண்டுகள்தேனையுண்டு மகிழுமாறு விளக்கமுடைய மருதமரங்களையுடைய மருத நிலம்மகிழ்ச்சியைத் தரும் – என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அடிதோறும் முதல்இடை கடை என மூன்றிடங்களிலும் வெவ்வேறு சொற்கள் மடக்கி வந்தன. இடையேபிற சொற்கள் இடையிடுதலின் இதனை ‘இடையிட்ட முற்று மடக்கு’ என்றும்கூறுப. (தண்டி. 95) |
மூன்றாமடி ஆதிமடக்கு | நான்கடிச் செய்யுளில் மூன்றாம் அடியின் தொடக்கத்தில் முதற்சீர்மடக்கி (இரண்டாம் சீராகவும்) வருவது.எ-டு : ‘தேங்கானல் முத்(து) அலைக்கும் தில்லைப் பெருந்தகைக்குஓங்காரத் துட்பொருளாம் ஒண்சுடர்க்கு – நீங்கா மருளா மருளா தரித்துரைக்கும் மாற்றம்பொருளாம் புனைமாலை ஆம்.’மருளாம் – ஆசையாகிய; மருள் – பாசம்“கானலில் முத்து அலைக்கும் தில்லையில் பெருந்தகையாய், ஓங்காரத்துஉட்பொருளாம் சோதிவடிவாகிய சிவபெரு மானுக்கு, நீங்காத ஆசையாகியபாசத்தினை மேற்கொண்டு அடியார்கள் கூறும் சொற்கள் மேம்பட்ட பொருள்களும்அணியும் மாலைகளும் ஆம்” என்று பொருள் படும் இப்பாடற்கண், மூன்றாமடிஆதியில் ‘மருளா’ என்ற சீர் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95) |
மூன்றாமடி ஒழிந்த மடக்கு | எ-டு : ‘கோவ ளர்ப்பன கோநக ரங்களேகோவ ளர்ப்பன கோநக ரங்களேமேவ ளக்கர் வியன்திரை வேலைசூழ்கோவ ளர்ப்பன கோநக ரங்களே’.கோ – பெரிய, ஒளி, அரசன், மேம்பாடு, பூமி என்ற பொருள் களிலும்,கோநகரங்கள் – மேம்பட்ட ஊர்கள், இறைவனுடைய ஊர்கள் என்றபொருள்களிலும் வந்துள்ளன. கோந(ன) கரங்கள் – அரசன் கைகள்.பெரிய நகரங்கள் ஒளியை மிகுப்பன; அரசன் பெருக்குவன இறைவன்கோயில்களே; கடல் தனது அலையோடும் கரை யோடும் சூழ்ந்திருக்கும்நிலவுலகத்தைக் காப்பன அரசனுடைய கைகளே என்று பொருள்படும் இப்பாடற்கண்,முதலாம் அடியே இரண்டாம் நான்காம் அடியாக மடக்கி வந்தவாறு. (தண்டி.96) |
மூன்றாமடி நான்காமடியாக மடக்கியது | எ-டு : ‘தளைவிட் டார்மகிழ் மாறன்தன் வெற்பில்வான்முளைவிற் போல்நுத லீர்! உங்கள் முன்றில்வாய்வளைவிற் கோமன் மதனம் படுக்கவோவளைவிற் கோமன் மதனம் படுக்கவோ’.“பற்றற்றார் பரவும் சடகோபன் மலையில் வானவில் போன்ற நெற்றியுடையீர்!உங்கள் இல்லத்து முகப்பில், (வளை விற்கோ-) சங்குவளையல்களை விற்பேனோ,(மன் மதனம் படுக்க-) என்னிடம் நிலைபெற்ற விருப்பம் என் அறிவைஅகப்படுத்த, (வளை வில்கோ-) வளைக்கும் கரும்புவில்லை யுடைய என்பகையாகிய (மன்மதன் அம்பு அடுக்கவோ-) மன்மதன் தொடுக்கும் அம்புகளாகியபூக்களை உங்கள் குழற்குச் சூட்டுவேனோ?” எனத் தலைவன், தலைவி தோழிஇருவரிடமும் குறையுற்று நிற்றலைக் கூறும் இப்பாடற்கண், மூன்றாமடிநான்காமடியாக மடக்கி வந்தவாறு. (மா. அ. பாடல் 739). |
மூன்றாமடியொடு நான்காமடிஆதிமடக்கு | எ-டு : ‘ஆயிரம்பெற் றான் ஒருமூன் றைந்துற்றான் ஆதியர்க்கு,மேய முதல்வனெனும் மெய்வேதம் – பாய் திரைப்பால் ஆழியா ன் ஆழியான் அஞ்சிறைப்புட் பாகனெனும் கோழியான் கோழியான் கோ’.கண் ஆயிரம் பெற்றான் – இந்திரன்கண் மூன்று பெற்றான் – சிவன்கண் மூன்றும் ஐந்தும் உற்றான் – பிரமன்.பால் ஆழியான் – பாற்கடலையுடையவன்; ஆழியான் – சக்கராயுதத்தையுடையவன்; கோழியான் – உறையூரிலிருப் பவன், கோழிக்கொடியை உயர்த்தமுருகன். கோ – கண்.பாற்கடலை யுடையவனும் சக்கராயுதம் ஏந்தியவனும் கருடனை ஊர்பவனும்உறையூரில் உகந்திருப்பவனும் ஆகிய திருமால், கோழிக்கொடியையுடையமுருகன், ஆயிரங் கண்ணான் ஆகிய இந்திரன், முக்கண்ணனாகிய சிவபெரு மான்,எண்கண்ணனாகிய பிரமன் ஆகிய எல்லோருக்கும் முதல்வன் என்ப.ஆழியான், ஆழியான் – கோழியான், கோழியான் – மூன்றாமடி நான்காமடி ஆதிமடக்கு. (மா. அ. பாடல் 632) |
மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி:சிறப்பு விதி | மூன்றாம் வேற்றுமை எழுவாய் நிலைமொழியாய் நிற்ப, அவ் வெழுவாயாகியநிலைமொழிப்பொருளால் ஆகின்ற செயப்பாட்டு வினைச்சொல் வருமொழியாகவருமிடத்து, வருமொழி முதற்கண் வரும் வல்லினம் பொதுவிதியால் மிக்குமுடிதலே யன்றி, உறழ்ச்சியும் இயல்பும் ஆகும். உயிரீறு மெய்யீறு- என்றஇருவகை நிலைமொழியும் கொள்க. இப்புணர்மொழி மூன்றாம்வேற்றுமைத்தொகை.எ-டு: அராத் தீண்டப்பட்டான், சுறாப் பாயப்பட்டான் – என்றுமிக்கு முடிதலே பெரும்பான்மை.பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான்; உறழ்ச்சிபுலிகோட்பட்டான், புலிக்கோட்பட்டான் }பேய்பிடிக்கப்பட்டான், புலிகடிக்கப்பட்டான்இயல்பு.கோட்படுதல் என்பது மூன்றாம் வேற்றுமை எழுவாயால் ஒரு சாத்தற்குஏற்பட்ட நிலை. கொள்ளுதல் மூன்றாம் வேற்றுமை எழுவாயின் தொழில்.தம் தொழில்: சாத்தன் உண்டான் என்புழி, சாத்தனாகிய எழுவாயின்தொழில்.தம்மினாகிய தொழில் : சாத்தன் புலி கடிக்கப்பட்டான் என்புழி, ஓர்எழுவாயால் சாத்தனுக்கு ஏற்பட்ட தொழில்; அஃதாவது கடிக்கப்படுதல். (நன்.256) |
மூன்றிடத்தும் மடக்குப் பதினைந்து | மூன்றிடத்தும் மடக்காவது, ஓரடியின் முதல் இடை கடை என்ற மூவிடத்தும்எழுத்தோ அசையோ சீரோ மடக்கி வரலாம். இது பதினைந்து வகைப்படும். அவைபின் வருமாறு:முதலடி மூன்றிடத்தும் மடக்கு, இரண்டாமடி மூன்றிடத்தும் மடக்கு,மூன்றாமடி மூன்றிடத்தும் மடக்கு, நான்காமடி மூன்றிடத்தும் மடக்கு,முதலடியும் இரண்டா மடியும் மூன் றிடத்தும் மடக்கு, முதலாமடியும்மூன்றாமடியும் மூன்றிடத் தும் மடக்கு, முதலடியும் நான்காமடியும்மூன்றிடத்தும் மடக்கு, கடையிரண்டடியும் மூன்றிடத்தும் மடக்கு,இடையிரண்டடியும் மூன்றிடத்தும் மடக்கு, இரண்டாமடி யும் நான்காமடியும்மூன்றிடத்தும் மடக்கு, ஈற்றடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும்மடக்கு, ஈற்றயலடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, முதலடிஒழிந்த ஏனை மூன்றிடத்தும் மூவடியும் மடக்கு, முதலயலடி ஒழிந்த ஏனைமூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, நாலடியும் மூவிடத்தும் முற்று மடக்குஎன்பன. (மா. அ. 261) |
மூன்று பொருள் சிலேடை இணைமடக்கு | எ-டு : ‘மாயன்சேய் வில்லும் மலர்ப்பொழிலும் காஞ்சனமும்காயம் புதைதிறங்கூர் கச்சியே – நேயமகத்தா ரகத்தா ரருவினையாட் செய்யுமகத்தார் மகத்தார்தம் வாழ்வு’.முதலிரண்டியும் சிலேடை : கடையிரண்டடியும் மடக்கு.நேயம் அகம் தாரகத்தார் – கருணையை ஆன்மாவுக்கு உயிர் நாடியாகஉடையவர்; அருவினை ஆட்செய்யும் மகத்தார் – நீங்குதற்கு அரிய வினைகள்அடிமைசெய்யும் மகத்துவத்தை உடையவர்; மகத்தார் தம் வாழ்வு – செய்யும்யாகத்தில் யூபத்தம்பமாக இருக்கும் திருமாலின் இருப்பிடம்; மாயன்சேய்வில் – திருமாலின் மகனாகிய மன்மதனுடைய கரும்பு வில்; காய் அம்புஉதை திறம் கூர்கச்சி – பிரிந்தவர்மீது கொடிய அம்பு செலுத்தும் காஞ்சிநகர்; மலர்ப்பொழில் காயம் புதை திறம் கூர் கச்சி – பூஞ்சோலைகள் தம்உயர்ச்சி யாலும் செறிவாலும் ஆகாயத்தை மறைக்கும் நிலை மிக்ககாஞ்சிநகர்;காஞ்சனம் – கண்ணாடி; காயம் – தன்னை நோக்கியாரது உடல் பிம்பத்தை;புதை திறம் கூர் கச்சி – தன்னிடம் உட்கொண்டு காட்டும் தன்மை மிக்ககாஞ்சி நகர் – என மன்மதனுக்கும் சோலைக்கும் கண்ணாடிக்கும் சிலேடையாக,‘காயம் புதை திறம் கூர்’ என்னும் தொடர் வந்துள்ளமையால், இப்பாடல்மூன்று பொருள் சிலேடையோடு இணைந்த மடக்காகும், (காயம் புதை திறம் கூர்:முச்சொல்லலங்காரம்) (மா. அ. பாடல் 756). |
மூன்றெழுத்தால் வரும் மடக்கு | ஒரு செய்யுளில் மூன்றே மெய்களும் அவற்றானாய உயிர் மெய்களும்மாத்திரமே வருவது மூன்றெழுத்து மடக்கு என்ற சொல்லணியின்பாற்படும்.எ-டு : ‘மின்னாவான் முன்னு மெனினு மினிவேனின்மன்னா வினைவே னெனைவினவா – முன்னானவானவனை மீனவனை மான வினைவென்வேன்மானவனை மானுமோ வான்?’மின்னா வான் முன்னும் எனினும், இனி இளவேனிலில் மன்னாது இனைவேனாகியஎன்னை வினவாத வானவனை யும் மீனவனையும் வெல்லும் வேலையுடைய முன்னானமானவனை வான் மானுமோ – எனப் பிரித்துப் பொருள் செய்க. (மானவன் -சோழன்).“மின்னி வானம் மழைபெய்யக் கருதும் எனினும், இப்பொ ழுது இளவேனிற்காலத்து மனம் நிலைபேறின்றி வருந்தும் என் நலன் குறித்து வினவாத,யாவர்க்கும் மேம்பட்ட சேரனையும் பாண்டியனையும் போர்வினையால் வென்றவேலினையுடைய மனுகுலத்துச் சோழனை வானம் ஒக்குமோ? ” எனப் பொருள்படும்இப்பாடற்கண், ம – வ – ன – என்ற மூன்றெழுத்துக்களே வந்தமை காணப்படும்.(தண்டி. 97 உரை) |
மூவகை மடக்கு | எழுத்து மடக்கு, சொல் மடக்கு, அடிமடக்கு என்பன. அணிநூலார் இம்மூவகைமடக்கினையே இடைவிடாத மடக்கு, இடைவிட்ட மடக்கு, இடைவிட்டு இடைவிடாதமடக்கு என மூவகையாகப் பகுப்பர். (மா. அ. 253) |
மூவகை மெய்த் தோற்றத்துக்கு உரியவளிகள் | வல்லினம் தலைவளியான் பிறப்பது; மெல்லினம் மூக்கு வளியான் பிறப்பது;இடையினம் மிடற்றுவளியான் பிறப்பது.(தொ.எ. 88 நச். உரை) |
மூவகைக் குறைகள் | அடிதொடை முதலிய நோக்கித் தொகுக்கும்வழித் தொகுத்தல் அன்றி,வழக்கின்கண் மரூஉப்போலச் செய்யுட்கண் மரூஉவாய், அடிப்பாடாக ஒருமொழிமுதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் குறைந்து வருதலும்செய்யுள்விகாரமாம். (நன். 156 சிவஞா.) |
மூவகைக்குறை செய்யுள்மரூஉ அன்மை | முதல் இடை கடைக் குறையாகிய மூன்றும் வழக்கின்கண் மரூஉப் போலச்செய்யுட்கண் மரூஉவாய் அடிப்பாடாக வரும் என்றும் பொருள் கூறுவர். அதுபொருந்தாது, அறுவகை விகாரங்களும் செய்யுள் செய்யும் சான்றோர் அழகு பெறஅச்செய்யுளில் வேண்டுழி வருவிக்க வரும் என்பதன்றே? அதை நோக்கிஇச்சூத்திரத்தை மாட்டெறிந்தார் ஆதலால், இதற்கும் செய்யுட் செய்யும்சான்றோர் வருவித்துழி வரும் என்பதே கருத்து. இது கருதியன்றே ‘ஒவ்வொருமொழி’ என்பதை ‘ஒருமொழி’ என இவர் இச்சூத்திரம் செய்தார்? இன்னும் அதுபொருந்தாது என்பதற்குப் ‘பசும்புற் றலைகாண் பரிது’ (குறள் 16)என்பதில் காண்பது என்பது ‘காண்பு’ எனக் கடைக் குறைந்ததும், ‘சான்றோர்என்பிலர் தோழி’ என்பதில் ‘சான்றோர் என்பார் இலர்’ என்பது ‘என்பிலர்’எனக் கடைக் குறைந்ததுமே சான்றாதல் உணர்க. இனி, வழக்கிடத்தும்இலைக்கறியை ‘லைக்கறி’ எனவும், ‘நிலா உதித்தது’ என்பதற்கு ‘லாஉதித்தது’ எனவும், ‘இராப்பகல்’ என்பதற்கு ‘ராப்பகல்’ எனவும், கேழ்வரகு‘கேவரகு’, நீர்ச்சிலை ‘நீச்சீலை’, போகி றான் ‘போறான்’, பாடுகிறான்‘பாடுறான்’ எனவும், ‘ஆனை யேறும் பெரும்பறையன்’ என்னும் மரபு பற்றிவந்த ‘தோட்டி யான் என்பதைத் ‘தோட்டி’ எனவும் தண்ணீர் ‘தண்ணீ’ வெந்நீர்‘வெந்நீ’ எனவும் முறையே இம்மூவகை விகாரங்களும் வருதல் கொள்க. (நன்.156 இராமா.) |
மூவகைப் பெயரெச்சக் குறிப்பு முன்வலி வரின் இயல்பாதல் | அமர்முகத்த, கடுங்கண்ண, சிறிய, பெரிய, உள, இல, பல, சில (இவைபெயரடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு): பொன்னன்ன (இஃதுஇடைச்சொல்லடியாகப் பிறந்தது): கடிய (இஃது உரிச்சொல்லடியாகப் பிறந்தது)- இவற்றை நிலைமொழியாகவும், குதிரை – செந்நாய் – தகர்- பன்றி – என்பவற்றை வருமொழியாகவும் கொண்டு புணர்ப்பவே, இயல்பாக முடியும். (நன். 167சங்கர.) |
மூவடி மடக்கு | ஈற்றடி ஒழித்த ஏனை மூவடியும் மடக்கியது, ஈற்றயலடி ஒழிந்த ஏனையமூவடியும் மயக்கியது, முதலடி ஒழித்த ஏனைய மூவடியும் மடக்கியது,முதலயலடி ஒழித்த ஏனைய மூவடியும் மடக்கியது – என நால்வகைத்து.எடுத்துக்காட்டுக் கள் தனித்தனித் தலைப்புள் காண்க. (தண்டி. 96உரை) |
மூவடி முப்பது | இடைக்காடர் செய்ததாகக் கூறப்படுவதும், சிந்தடிச் செய்யுள் முப்பதுகொண்டதுமான ஒரு நூல். (தொ. பொ. 548 பேரா.) |
மூவராவான் ஒரு கருத்தன் | செய் என்னும் ஏவல்வினையின் பின்பு வி-பி- என்னும் இரண் டனுள் ஒன்றுவரின், செய்வி என்னும் பொருளைப் பெறும். இவையிரண்டும் ஒருங்குவரினும், ஒன்றே இணைந்து வரினும் ஏவல்மேல் ஏவல் தோன்ற, மூவராவான் ஒருகருத்தனைக் காட்டும். (ஏவுவார் மூவர்; இயற்றுதல் கருத்தா ஒருவன்.)எ-டு : நடப்பி, வருவி, மடிவி, சீப்பி, கேட்பி, அஃகுவி-இவை செய்வி என்னும் ஏவல்வினைப் பகாப்பதம்.நடத்துவிப்பி, வருவிப்பி, நடப்பிப்பி, கற்பிப்பி – விபி என்பனஇரண்டும் இணைந்தும் ஒன்றே இணைந் தும் வந்த செய்விப்பி என்னும்ஏவல்மேல் ஏவல் பகாப்பதம். (நன். 137 மயிலை.) |
மூவளபு இசைத்தல் | மூன்று மாத்திரை அளவு ஒலித்தல். இது தனித்த ஓரெழுத் திற்கு இன்று.எனவே, ஈbழுத்துக் கூடிய இடத்தேயே மூன்று மாத்திரை பெறும் என்பது.இதனால் அளபெடை என்பது நெடிலை அடுத்த இனக்குறிலே என்பது பெறப்படும். வடமொழியில் ஓரெழுத்தே அளபெடுக்குங்கால் மூன்று மாத்திரை அளவு ஒலிக்கும்என்பது தமிழ் நூலார்க்கு உடன்பாடின்மை பெறப்படும். (தொ. எ. 5) |
மூவிடத்து மகர ஈற்றுப் பெயர்அல்வழிப் புணர்ச்சி | மூவிடத்து மகர ஈற்றுப் பெயர்கள் எல்லாரும், எல்லீரும், தாம், நாம்,யாம், எல்லாம் – என்பன. அவை வருமொழி வன்கண மாயின் ஈற்று மகரம்இனமெல்லெழுத்தாய்த் திரியும்.வருமாறு: எல்லாருங்குறியர், எல்லீருங்குறியீர், தாங்குறியர், தாங்குறிய, நாங் குறியம், யாங் குறியேம்.மென்கணமாகிய ஞகரமும் நகரமும் வரின், எல்லாருஞ் ஞான்றார், எல்லாருந்நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர், எல்லீருந் நீண்டீர், தாஞ் ஞான்றார்,தாந் நீண்டார், நாஞ் ஞான்றாம், நாந் நீண்டாம், யாஞ் ஞான்றாம், யாந்நீண்டாம் – என வருமொழி மெல்லெழுத்தாகிய ஞகர நகரமாக மகரம்திரியும்.இடையினமும் உயிரும் வரின், எல்லாரும் யாத்தார், வந்தார்,அடைந்தார் – என மகரம் இயல்பாகப் புணரும். எல்லாம் என்பது வன்கணம்வரின் ஈற்று மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு வருமொழியொடு புணர்ந்துஇறுதிக்கண் உம்முச் சாரியை பெறும். எல்லாம்+குறிய > எல்லா +குறிய > எல்லாக் + குறிய+உம்= எல்லாக் குறியவும். ஏனைக் கணங்கள் வரின்மகரஈறு கெட்டு வருமொழியொடு புணர்ந்து இறுதிக்கண் உம்முச் சாரியைபெறும்.எல்லாம்+ ஞாண், நூல், மணி, வட்டு, அடை= எல்லா ஞாணும், எல்லாநூலும்,எல்லாமணியும், எல்லாவட்டும், எல்லா வடையும் (வகரம் உடம்படுமெய்)எல்லாம் வாடின, எல்லாமாடின – என இயல்பாக முடிதலும் கொள்க.சிறுபான்மை எல்லாம் என்பது, வலி வரின் மகரம் கெட்டு மெலிமிக்குஇறுதியில் உம்முப் பெற்று எல்லாங் குறியவும், எல்லாஞ் சிறியவும் – எனவரும்.உயர்திணைக்கண் எல்லாம் என்பது, எல்லாக் கொல்லரும், எல்லாநாய்கரும், எல்லா வணிகரும், எல்லா அரசரும் – என ஈறு கெட்டு, வன்கணத்துவலிமிக்கு ஏனைய கணத்து இயல்பாகப் புணர்ந்தும்,எல்லாங்குறியரும், எல்லாஞ்சிறியரும்- என ஈறு கெட்டு இனமெல்லெழுத்துமிக்குப் புணர்ந்தும், இவ்விரு திறத்தும் இறுதியில் உம்முச்சாரியைபெற்று முடிதல் கொள்க.எல்லாங் குறியர், எல்லாங் குறியீர், எல்லாங் குறியேம் – என ஈறுகெட்டு இனமெல்லெழுத்து மிக்கு இறுதிக்கண் உம்முப் பெறாது வருதலும்,எல்லாம் வந்தேம், எல்லா மடைந்தேம்- என இடைக்கணமும் உயிர்க்கணமும்வரின் இயல்பாகப் புணர்தலுமுள.நும் என்பது, ‘நீஇர்’ எனத் திரிந்து பயனிலை கொண்டு முடியும். எ-டு: நீஇர் கடியிர். (தொ.எ.320- 323 , 326 நச்.) |
மூவிடத்தும் நெடில்ஏழும்அளபெடுத்தல் | வாஅகை, ஈஇகை, ஊஉகம், பேஎகன், தைஇயல், தோஒகை, மௌஉவல் – எனவும்,படாஅகை, பரீஇகம், கழுஉமணி, பரேஎரம் வளைஇயம், புரோஒசை, மனௌஉகம் -எனவும்,குராஅ, குரீஇ, குழூஉ, விலேஎ, விரைஇ, உலோஒ, அனௌஉ – எனவும் முறையேமொழி முதல் இடை கடை என்ற மூவிடத் தும் ஏழ்நெட்டெழுத்தும் அளபெடுத்தன.(நன். 90 மயிலை.) |
மூவிடத்தும் மகரஈற்றுப் பெயர்வேற்றுமைப் புணர்ச்சி | எல்லாரும் என்பது தம்முச்சாரியையும், எல்லீரும் என்பதுநும்முச்சாரியையும், எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றுச்சாரியையும்உயர்திணைக்கண் நம்முச்சாரியையும் பெற்றுவரும். எல்லாரும் எல்லீரும்என்பவற்று இறுதி உம்முச் சாரியை பிரித்து வருமொழிக்குப் பின்னர்க்கூட்டப்பெறும்.எ-டு : எல்லார்தங்கையும், எல்லீர்நுங்கையும் – எனவும்எல்லாவற்றுக்கோடும், எல்லாநங்கையும் – எனவும்தம் நும் நம் – என்பவற்றது மகரத்தை வருமொழி வல்லெழுத் திற் கேற்பஇனமெல்லெழுத்தாகத் திரித்தும், எல்லாம் என்பதன் ஈற்று மகரத்தைக்கெடுத்தும் புணர்க்க. இயல்பு கணம் வரினும் இச் சாரியைகள் வரும்.எ-டு : எல்லார்தம்யாழும், வட்டும், அணியும் – எனவும்எல்லீர்நும்யாழும், வட்டும், அணியும் – எனவும்எல்லாவற்றுயாப்பும், வலியும், அடைவும் -எனவும்எல்லாநம்யாப்பும், வலியும், அடைவும் – எனவும் வருமாறுகாண்க.தாம் நாம் யாம் – என்பன தம் நம் எம் – என்றாகி வருமொழிக் கேற்ப.ஈற்று மகரம் கெட, இனமெல்லெழுத்து மிக்கு,தங்கை, தஞ்செவி, தந்தலை – என வரும். (நங்கை…. எங்கை…..முதலாகக் கொள்க.)மென்கணத்து மகரமும் இடையினமும் உயிரும் வரின் இயல்பாயும்,தனிக்குறில்முன் ஒற்று இரட்டியும் முடிதலும் கொள்க.எ-டு: தஞ்ஞாண், தந்நூல் – ஈற்று மகரம் கெட, வருமொழி மெல்லொற்றுஇரட்டுதல்.தம்மணி, தம்யாழ், தம்வட்டு – இயல்புதம் + இலை (தம்மிலை) – தனிக்குறில் முன் மகரம் உயிர்வரஇரட்டுதல்(நம் எம் – என்பவற்றொடும் ஒட்டுக.)தம காணம், எம காணம், நும காணம் – என ஈறு அகரச் சாரியைபெறுதலுமுண்டு.நும்மின் மகரம் வலி வரின் கெட்டு மெல்லொற்று மிக்கும், ஞகரநகரங்கள் வரின் அவ்வொற்று இரட்டியும், மகர யகர வகரங்கள் வரின்இயல்பாயும், உயிர்வரின் மகர ஒற்று இரட்டியும் புணரும்.எ-டு : நுஞ்செவி; நுஞ்ஞாண், நுந்நூல்; நும்மணி, நும் யாழ்,நும்வட்டு; நும்மாற்றல்.எல்லாரும் எல்லீரும் – என்பன இடையே தம் நும் – சாரியை பெறாமல்எல்லார்கையும் எல்லீர்கையும் – என்றாற் போல வருமொழியொடுபுணர்தலுமுண்டு. (தொ. எ. 320, 322, 324, 325 நச். உரை) |
மென்தொடர் வேற்றுமைக்கண்வன்தொடராய்த் திரிவனவும், திரியாதனவும், இரண்டுமாவனவும் | குரக்குக்கால், கழச்சுக்கோல், எட்டுக்குட்டி, மருத்துப்பை,பாப்புக்கால் எற்புச்சட்டம் – எனத் திரிந்தன. நாற்கணத் தொடும்ஒட்டுக.ஞெண்டுக்கால், வண்டுக்கால், பந்துத் திரட்சி, கோங்கிலை, இசங்கிலை,புன்கங்காய், பொதும்பிற் பூவை, குறும்பிற் கொற்றன் – என்றல்தொடக்கத்தன திரியாவாம்.குரக்குக்கடி, குரங்கின் கடி, வேப்பங்காய், வேம்பின் காய்,பாப்புத்தோல், பாம்பின் தோல் – என்றல் தொடக்கத்தன திரிந்தும்திரியாதும் வந்தன. (நன். 183 மயிலை.) |
மென்தொடர்க் குற்றியலுகரப்புணர்ச்சி | அல்வழிக்கண் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் வன்கணம்வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : குரங்கு கடிது, பஞ்சு சிறிது, வண்டுதீது, பந்து பெரிது,நண்பு பெரிது, கன்று பெரிது.1. மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் பெற்று முடிவனவும், 2.மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும்,3. மெல்லொற்றுத் திரியாது ஐகாரமும் வல் லெழுத்தும் பெற்றுமுடிவனவும் உள.எ-டு : 1. யாண்டு – ஓர்யாட்டை யானை, ஐயாட்டை எருது2. அன்று, இன்று – அற்றைக் கூத்தர், இற்றைப் போர்3. மன்று, பண்டு – மன்றைத் தூது, மன்றைப் பனை; பண்டைச்சான்றோர். (தொ.எ.425 நச். உரை)ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு, அங்கு, இங்கு, உங்கு, எங்கு – என்பனவல்லொற்று மிக்கு, ஆங்குக் கொண்டான் – என்றாற் போல முடியும். யாங்குஎன்பது யாங்குக் கொண்டான் – என வருதல் பெரும்பான்மை; யாங்கு கொண்டான்-என இயல்பாயும் முடியும். (நச் . உரை 427-429)மென்தொடர்மொழி வேற்றுமைக்கண் வன்கணம் வரின் வல் லெழுத்துமிகுதலுமுண்டு. எ-டு: குரங்குக்கால்இடையே மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து வல்லெழுத்துமிகுதலுமுண்டு.எ-டு : இருப்புத் தொடர், குரக்குக்கால்தத்தம் இனமான வல்லொற்றாகத் திரிதலுமுண்டு.எ-டு : எண்கு+குட்டி =எட்குக்குட்டி; என்பு + காடு:எற்புக்காடு; அன்பு + தளை=அற்புத்தளை.பறம்பிற் பாரி, குறும்பிற் சான்றோர் – என மெல் லொற்றுத்திரியாமையும் உண்டு.இயல்பு கணத்திலும் குரக்கு ஞாற்சி, குரக்கு விரல், குரக்கு(உ)கிர் – என மெல்லொற்று இனவல்லொற் றாதலுமுண்டு. (414 நச்.உரை)மென்தொடர்மொழிக் குற்றுகரஈற்று மரப்பெயர்கள் (புல்லும் அடங்கும்)அம்முப் பெற்றுத் தெங்கங்காய், சீழ்கம்புல், கம்பம் புலம், கமுகங்காய்என வருதலும் கொள்க. (தெங்கு, கமுகு – இவையிரண்டும் புல்லினம்.) (415நச். உரை)மெல்லொற்று வல்லொற்று ஆகாது அம்முச்சாரியை பெறும் மரப்பெயர்களும்உள. எ-டு: குருந்தங் கோடு, புன்கஞ் செதிள் (416 நச். உரை)அக்குச்சாரியை பெறுவனவும் உள. எ-டு:குன்றக்கூகை, மன்றப் பெண்ணை(418 நச். உரை)மெல்லொற்று வல்லொற்றாகத் திரியும் மரப்பெயர்களும் கொள்க.(புல்லினமும் அடங்கும்) எ-டு: வேப்பங் கோடு, ஈச்சங் குலை; (ஈஞ்சு :புல்லினம்) (416 நச். உரை)நிலைமொழியீற்றில் மென்தொடர்க் குற்றியலுகரம் நிற்ப, வருமொழிமுதற்கண் வன்கணம் வரினும், அல்வழிப் புணர்ச்சி யில் இயல்பாக முடியும்.(நன். 181)எ-டு: வந்து கண்டான், சென்றான், தந்தான், போயினான்.ஏழாம் வேற்றுமைஇடப்பொருள் உணரநின்ற அங்கு இங்கு உங்கு எங்குஆங்கு ஈங்கு ஊங்கு யாங்கு ஆண்டு ஈண்டு யாண்டு – என்னும் மென்தொடர்க்குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.எ-டு: அங்குக் கண்டான், இங்குச் சென்றான், ஆண்டுத் தந்தான்,யாண்டுப் போனான்…. முதலாகக் காண்க.ஏழாம் வேற்றுமைக் காலப்பொருள் உணரநின்ற அன்று இன்று என்று பண்டுமுந்து- என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின்முன்வரும் வல்லினம் இயல்பாகவே முடியும்.எ-டு: அன்று கண்டான், இன்று சென்றான், பண்டு தந்தான், முந்துபோயினான் (நன். 181 சடகோ. உரை)வேற்றுமைப் புணர்ச்சிக்கண், மென்தொடர்க் குற்றியலுகர ஈற்றுமொழிகளுள் சில நிலைமொழிகள் (நாற்கணம்வரினும்) தமக்கு இனமாகியவன்தொடர்க்குற்றியலுகர மொழி களாகத் திரியும்.எ-டு: மருந்து +பை = மருத்துப்பை; குரங்கு + மனம் =குரக்குமனம்; இரும்பு + வலிமை = இருப்புவலிமை; கன்று +ஆ =கற்றா(கன்றொடு கூடிய பசு)இவை வேற்றுமைப் புணர்ச்சி. வேப்பங்காய் என்பதும் அது; இடையேஅம்முச்சாரியை மிக்கது.நஞ்சு + பகைமை= நச்சுப் பகைமை (உவமத்தொகை)இரும்பு +மனம் =இருப்புமனம் (இதுவுமது)என்பு + உடம்பு = எற்புடம்பு (இருபெயரொட்டு)இவை அல்வழிப் புணர்ச்சி.குரங்கு +குட்டி =குரங்குக்குட்டி, குரக்குக்குட்டி(வேற்றுமை)அன்பு+தளை =அன்புத்தளை, அற்புத்தளை (அல்வழி)இருவழியும் விகற்பித்து வந்தவாறு. (நன். 184)அன்று, இன்று, (பண்டு, முந்து) ஐயாண்டு, மூவாண்டு- என்பன அற்றைப்பொழுது, இற்றை நாள் (பண்டைக்காலம், முந்தை வளம்) ஐயாட்டைப்பிராயத்தான், மூவாட்டைக் குழவி- என ஐகாரச்சாரியை ஈற்றில் பெற்றுப்புணர்ந்தன. அன்று முதலிய நான்கும் மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்துஐகாரச் சாரியை ஏற்றலும், பண்டு- முந்து- என்பன திரிபின்றி ஐகாரம்ஏற்றலும் காண்க. (நன். 185) |
மென்தொடர்க் குற்றியலுகரம் | உகரம் ஏறிய வல்லொற்றுக்களுள் ( கு சு டு து பு று) ஒன்றுமொழியீற்றதாய் நிற்ப அதன் அயலெழுத்து ஒரு மெல்லின மெய்யாக வரின்,அம்மொழியின் ஈற்றிலுள்ள குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரமாம்.குற்றியலுகரத்துக்கு மாத்திரை அரை.எ-டு : அங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, நன்றுமெல்லொற்று ஆறு ஆதலின், அதனை அடுத்து வரும் மென்தொடர்க்குற்றியலுகரமும் ஆறாம். (நன். 94) |
மென்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுவினையெச்சம் | இருந்து கொண்டு, கண்டு சென்றான், சென்று தந்தான் – என்றாற் போல இவ்வகைக் குற்றியலுகரஈற்று வினையெச்சம்இயல்பாகப் புணரும். (தொ. எ. 427. நச்.)ஏழாவதன் காலப்பொருளவாகிய சொற்கள் இயல்பாகப் புணர்வன உள.எ-டு : பண்டு கொண்டான், முந்து கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான், என்று கொண்டான். (430 இள.)உண்டு என்ற சொல், உண்டு பொருள் – உள் பொருள்- என இருவகையாகப்புணரும். (எ. 430 நச்.)உண்டு காணம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை,உண்டு ஞானம், உண்டு யாழ், உண்டு ஆடை – என இயல்பாகப் புணர்வனவேபெரும்பான்மை. (430 நச். உரை)வண்டு என்பது வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்று வண்டின் கால் எனவரும். (420 நச்.)பெண்டு என்பது வேற்றுமைக்கண் இன்சாரியை யோடு அன்சாரியையும்பெற்றுப் பெண்டின்கை – பெண்டன்கை – என வரும். (421 நச்.)ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து – என்ற எண்ணுப் பெயர்கள்அன்சாரியை பெற்று ஒன்றன் காயம் – என்றாற் போலப் புணரும். ஒன்றனாற்கொண்ட காயம் என வேற்றுமைப் புணர்ச்சி (419 நச்.) |
மென்தொடர்மொழிப் புணர்ச்சி | குரங்கு, கழஞ்சு, எண்கு, மருந்து, பாம்பு, என்பன- மென்தொடர்க்குற்றுகரஈற்றுச் சொற்கள். இவை வேற்றுமைப் புணர்ச்சியில்,மெல்லொற்று வல்லொற்றாகத் திரிய வரு மொழி வல்லெழுத்து மிக்கு முடியும்;இயல்புகணமாயின் மெல்லொற்று வல்லொற்றாகத் திரிதல் ஒன்றுமே உண்டு-வருமாறு: குரக்குக்கால், குரக்குச்செவி, குரக்குத்தலை, குரக்குப்புறம் – எனவும், குரக்குஞாற்சி, குரக்குநிணம், குரக்கு முகம்,குரக்குவிரல், குரக்கு (உ) கிர்- எனவும் வரும்.ஞெண்டு, பந்து, பறம்பு, குறும்பு – என்றாற் போல்வன மெல் லொற்றுவல்லொற்று ஆகாதன; வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலும், இன்சாரியைஏற்று அதன் னகரம் றகர மாகத் திரிந்து முடிதலும் ஏற்ற பெற்றியாகக்கொள்க.வருமாறு: ஞெண்டுக்கால், பந்துத்திரட்டு; பறம்பிற் பாரி, குறும்பிற்சான்றோர்.‘மன்னே’ என்றதனான். குரக்குக்குட்டி – குரங்கின்கால், பாப்புத்தோல்- பாம்பின் தோல்- என ஒன்று தானே ஓரிடத்துத் திரிந்தும் ஓரிடத்துத்திரியாதும் வருதலும் கொள்க. இன்னும் அதனானே, ’அற்புத்தளை’ (நாலடி12:2) அன்பினாற் செய்த தளை – என வேற்றுமை யாதலேயன்றி, அன்பாகிய தளை-எனஅல்வழியும் ஆதலின், அல்வழிக்கண்ணும் மெல்லொற்று வல்லொற்றாகத் திரிதல்கொள்க. (இ.வி.எழுத். 103) |
மெய் பிறிது ஆதல் | இது புணர்ச்சியில் நிகழும் மூவகைத் திரிபுகளுள் ஒன்று. மெய் பிறிதுஆதல் – வடிவு வேறுபடுதல்.எ-டு : மண்+ குடம் = மட்குடம் – ணகரம் டகரமாய் வடிவுவேறுபட்டது. சொல் + கேட்டான்= சொற் கேட்டான் – லகரம் றகரமாய் வடிவுவேறுபட்டது.யான் + ஐ = என்னை- ‘யா’ என்பது ‘எ’என வடிவு வேறுபட, னகரம்இரட்டித்தது.இங்ஙனம் ஓரெழுத்துப் பிறிதோர் எழுத்தாய்த் திரியும் திரி பினைத்தொல். ‘மெய் பிறிதாதல்’ என்றார். (தொ.எ. 109 நச்.) |
மெய்: வேறு பெயர்கள் | ஊமை எனினும், ஒற்று எனினும், உடல் எனினும், காத்திரம் எனினும்மெய்யென்னும் ஒரு பொருட்கிளவி. (மு.வீ. எழுத். 13) |
மெய்க்கீர்த்தி | சொற்சீரடியால் வேந்தனுடைய புகழ் வரலாற்றினைக் கூறி அவன் தன்தேவியொடு வாழுமாறு வாழ்த்தி, அவனுடைய ஆட்சியாண்டினையும்,இயற்பெயரினையும் (பிற சிறப்புப் பெயர்களையும்) குறித்து விளக்கும்பாட்டு வகை. (இச்செய் யுள் நடையில் அவனுடைய போர் கொடை இவற்றின்வெற்றியேயன்றி, ஒரோவழி முன்னோர் வெற்றியும் இடம் பெறக் கூடும்.) (இ.வி. பாட். 71, பன்னிருபாட். 313) |
மெய்க்கீர்த்தி மாலை | சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்தகீர்த்தியை அழகுற மொழியும் பிரபந்தம். இது வேந்தற்கே சிறந்தது,‘மெய்க்கீர்த்தி’ வேந்தன் புகழ் சொல்லுவதாதலின். (இ. வி. பாட்.105) |
மெய்ப்பாட்டியல் | இது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாம் இயலாக உள்ளது. முன்ஐந்தியல்களில் கூறப்பட்ட அகப்புறச் செய்தி களை உடற்குறியால்வெளியிட்டு உவமத்தைப் போலப் பொருளைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு,அவ்வைந்தியல் களையும் அடுத்துச் செய்யுளியலை ஓட்டி அமைந்த உவம இயற்குமுன்னர்தராக ஆறாம் இயலாக அமைந்துள்ளது.இவ்வியலில் நாடகநூலார் குறிப்பிடும் மெய்ப்பாடுகள், இயற்றமிழ்அகம்புறம் பற்றிய செய்யுள்களுக்கு மிகத் தேவையாகப் பயின்று வரும்மெய்ப்பாடுகள், பயிலாது அருகிவரும் மெய்ப்பாடுகள், களவுக் காலத்தில்புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப் பின்நிகழும் மெய்ப்பாடுகள், களவுக்காலத்திற்கே சிறந்து கற்புக்காலத்தும்கலந்து வரும் மெய்ப்பாடுகள், வரைதல் வேட்கையைப் புலப் படுத்தும்மெய்ப்பாடுகள், கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகள், தலைவன் தலைவியர்க்குஉரிய பத்துவகை ஒப்புமைகள், நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகள் ஆகியவைஇறுதிப் புறனடைச் செய்தியோடு 27 நூற்பாக்களால் கூறப்பட்டுள.மெய்ப்பாடு கூறிய ஓத்து ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் எனப்பட்டது.அகத்திணையியல் முதல் பொருளியல் ஈறாகக் கூறப்பட்ட ஐந்தியல்களிலும்சுட்டப்படும் அகமும் புறமும் பற்றிய ஒழுகலாற்றிற்கும், பொருளியல்இறுதியில் சுட்டப் பட்ட காட்டலாகாப் பொருள் எல்லாவற்றிற்கும் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலின், இவற்றை வேறு கொண்டு ஓரினமாக்கிமெய்ப்பாட்டியல் என வேறோர் இயலாக, முன் கூறப்பட்ட அகப்பொருள்புறப்பொருள் பற்றிய ஐந்தியல் களொடும் தொடர்புடையதாகத் தொல்காப்பியனார்அமைத்துள்ளார். (தொ. பொ. 249 பேரா.)கூத்தநூலுக்குரிய இம்மெய்ப்பாடுகளை இயற்றமிழ் நூலா கியதொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் ஆராய்வது என்னையெனின்,இவ்வியற்றமிழில் அகம் புறம் பற்றிய பாடல்களுக்கு இன்றியமையாதசெய்திகளையே கூறினார்; சுவைக்கு ஏதுவாகிய பொருளினை அரங்கினுள் நிறீஇ,அது கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்தும் கூத்தனையும் அரங் கில்தந்து, பின்னர் அவையரங்கினோர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினைஉணர்வாராக வருகின்ற நாடக நூல் முறைமையெல்லாம் ஈண்டுக் கூறினாரல்லர்.(250 பேரா.)இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக் குறி புணர்ச்சிவழக்காறில்லை. உணர்வோடு உள்ளக்கருத்தை உரைக்கப் பல செயற்கைக் குறிவகுத்துக்கோடல் கூத்த நூல் வழக்காம். (மெய்ப். பாரதி. முன்.)இம்மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்பொருள் புறப் பொருள் துறைகள்அனைத்திற்கும் அமைய வருவனவும், சிறப்பாக அகத்துறைகளுக்கே ஆவனவும் எனஇருவகைப் படுதலின், பொதுவியல்புடையனவற்றை முன்னர்க் கூறிச்சிறப்பியல்புடையனவற்றைப் பின்னர்க் குறிப்பிடுகிறார். ஒருவருடையஉள்உணர்வுகளுள், மற்றவர் கண்டும் கேட்டும் அறியப் புற உடற்குறியால்புலப்படுவனவே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்படும். ஆதலின்,அவையே இவ்வியலில் விளக்கப்பட்டுள. (மெய்ப். பாரதி. முன்.) |
மெய்மயக்கம் | ஒரு சொல்லின்கண்ணும் புணர்மொழியின்கண்ணும் ஒரு மெய் தன்னொடும்பிறமெய்களொடும் கூடும் கூட்டம். ‘இடைநிலை மெய்மயக்கம்’, காண்க. |
மெய்மயக்கம் : உடனிலைமயக்கம்,வேற்றுநிலை மயக்கம் | மெய் பதினெட்டனுள்ளும் க் ச் த் ப் – என்னும் நான்கும் ஒழித்துநின்ற பதினாலு மெய்யும் ஒன்றன்பின் ஒன்று மாறி வந்து ஒன்றுவது(வேற்றுநிலை) மெய்மயக்கமாம். ரகர ழகரம் ஒழித்து நின்ற பதினாறுமெய்யும் தம் முன்னர்த் தாம் வந்து ஒன்றுவது உடனிலை மயக்கமாம்.இச்சொல்லப்பட்ட இரு கூற்று முப்பது மயக்கும் மொழியிடையிலேயாம்.உயிர்மெய் மயக்கம் இன்னதன் பின்னர் இன்னதாம் என்ற வரையறை இல்லை. (நன்.109 மயிலை.) |
மெய்மயக்கம் ஒருமொழி இருமொழிக்கண்கோடல் | இன்ன மெய்க்கு இன்ன மெய் நட்பெழுத்து, இன்னமெய் பகையெழுத்துஎன்பதனை உட்கொண்டே மெய்மயக்கமும் புணர்ச்சிவிதிகளும் அமைந்தன.லகரளகரங்களின் முன் யகரம் மயங்கும் என்பதனுக்கு எடுத்துக் காட்டுத்தரும்போது, கொல்யானை, வெள்யாறு- என்ற வினைத்தொகை பண்புத்தொகைகளை ஒருமொழியாகக் கொண்டு நச். குறிப்பிட்டு, இத்தொகையல்லாத் தனி மொழிக்கண்சொற்கள் ஆசிரியர்காலத்து இருந்து பின்னர் இறந்தனபோலும் என்றுகருதுகிறார்.இங்ஙனமே ஞ்ந் ம் வ் – என்னும் புள்ளி முன்னர் யகரம் வந்துமயங்குதற்கு உரிஞ் யாது, பொருந் யாது, திரும் யாது, தெவ் யாது – என்றுஇருமொழிகளைப் புணர்த்து எடுத்துக்காட்டுத் தருதலை விரும்பாது,உதாரணங்கள் இறந்தன என்றார். நூல் மரபு ஒருமொழிக்குள் அமையும்செய்திகளைச் சொல்லவே அமையும் ஆதலின், ஒரு சொல்லிலேயே மெய் மயக்கம்வரும் செய்தியைக் காட்ட வேண்டும் என்பது நச். கருத்து. இரு மொழிக்கண்வரும் மெய்மயக்கம் ‘புணர்ச்சி’ என்ற வேறு பெயரில் அமைதலின், அதனைமெய்மயக்கத்துள் அடக்குதல் கூடாது என்பது அவர் கருத்து. (தொ. எ. 24,27 நச். உரை)மெய்மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொது வாதலின்,மேற்கூறிய புணர்மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்கஒருவாற்றான் கூறியவா றாயிற்று என்பர் இளம்பூரணர். (23 இள. உரை) |
மெய்மயக்கம் நிகழும் இடன் | தொல். தனிமொழி இலக்கணத்தை மொழிமரபின்கண் கூறியுள்ளார்;மெய்மயக்கத்தை நூல்மரபில் கூறியுள்ளார். இம்மெய்மயக்கம் ஒரு மொழிக்கண்கொள்ள வேண்டுவதோர் இலக்கணமாயின், ஆசிரியர் தனிமொழியினைப் பற்றிக்கூறும் மொழிமரபில் கூறியிருப்பார். மொழியின் முதலில் நிற்கும்எழுத்துக்கள், ஈற்றில் நிற்கும் எழுத்துக்கள் இவற்றைக் கூறுமிடத்தேயேமொழியிடை நிற்கும் மெய்மயக்கத்தைக் கூற வேண்டும். மொழிமரபில் கூறாதுநுல்மரபில் மெய்மயக்கம் கூறிய அதனால், இதனை ஒருமொழிக்கண்ணேயே கொள்ளவேண்டுவதன்று. இங்குக் கூறப்பட்ட செய்தி, இன்ன மெய் யெழுத்தினோடு இன்னமெய்யெழுத்து மயங்கும் என்று அவற்றின் இயல்பினைக் கூறிய அத்துணையேஆகும். இதனை இடைநிலை மயக்கம் என்று கூறுவது தக்கதன்று; மெய்மயக் கம்என்றலே தகும். இம்மயக்கத்திற்கும் புணர்நிலைக்கும் வேற்றுமை உண்டு.புன்கால், பல்குதல் – முதலிய சொற்களில் ககரத்தொடு மயங்கிய னகர லகரமெய்கள், சந்தியில் பொற் குடம், பாற்குடம்- என்றாற் போலத் திரிவனஆயின. (எ. ஆ. பக். 23, 24) |
மெய்மயக்கம் நுல்மரபில் கூறப்பட்டகாரணம் | மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களும் ஈற்றில் வரும்எழுத்துக்களும் மொழியிடைப்படுத்து உணரப்பட வேண்டு தலின்,தனியெழுத்துப் பற்றிய நூல்மரபில் கூறப்படாது, மொழியிடைப்படுத்துஉணரப்படுவனவற்றைக் குறிக்கும் மொழிமரபில் வைக்கப்பட்டன. மொழியிடையேவரும் இடைநிலை மெய்மயக்கமும் மொழியிடைக் காணப்படுவ தொன்றாதலின்அதுவும் மொழிமரபில் வைக்கப்பட வேண்டு மெனின், மொழிக்கு இடையே வரும்எழுத்தென்னாது, இவ் வெழுத்துக்கு இவ்வெழுத்து நட்பு, அல்லன பகை – என்றசெய்தியையே விளக்குதலின், இச்செய்தி நுல்மரபில் கூறப் பட்டது. (சூ.வி.பக். 57) |
மெய்யின் இயற்கை | உருவாகி வடிவு பெறும் மெய்யெழுத்துக்களின் தன்மை யாவது, அவைஒலிப்பு உடையனவாயும் நிற்றல். புள்ளி யொடும்+ நிலையல் = புள்ளியொடுநிலையல். உம்மையான், புள்ளியொடு நில்லாமல் உயிரோடியைந்துஉயிர்மெய்யாகவும் நிற்கும் எனக்கொள்க. (உயிர் மெய் – உயிர்க்கும்மெய்) மெய்யானது ஒலிப்பின்றி உருவாதலும், உயிர்ப்பு உந்த அரைமாத்திரையளவு ஒலித்தலும், உயிர் இயைய இசைத்தலும் ஆகிய மூன்று நிலைகளையுடைத்து என்பது பெறப்படும். (தொ. எ. 15 ச. பால.) |
மெய்யும் ஒற்றும் புள்ளியும் | பதினெட்டு மெய்களும் வடிவு கொள்ளும் நிலைமைக்கண் செவிப்புலனாவதில்லைஆதலின், அந்நிலை மெய் என்றும் ஒற்று என்றும்கூறப்படுகிறது. அவற்றைச் செவிப்புலனாக்க வேண்டின், அகரம் முதலியஉயிர்ப்பிசைகளான் உந்தாமல், அனுகரண ஓசையை உயிர்ப்பாக்கி உந்த அவைசெவிப்புல னாகும். அங்ஙனம் வெளிப்படுத்தத் துணைபுரியும் ஓசையைஅரைமாத்திரையளவே இசைத்தல் வேண்டும் என, ‘ மெய்யின் அளவே அரையெனமொழிப ’ என்பர் தொல்காப்பியனார். அம்மெய்யினது முழுத்தன்மையும்புலப்படுத்த வேண்டின், அகரவுயிரைச் சாரியையாகக் கொடுத்து அதனால்வெளிப் படுத்தல் வேண்டும். இதனை ஆசிரியர் ‘ மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் ’ என்றார்.இவ்வாறாக அனுகரண உயிர்ப்பிசையும் அகரச்சாரியையும் இன்றிஅம்மெய்கள் மொழியுறுப்பாக ஓர் உயிரெழுத்தையோ உயிர்மெய் யெழுத்தையோசார்ந்து அவற்றின்பின் வருமிடத்து நன்கு ஒலிக்கும் அந்நிலையை(அல்-கால்-அவல்- காவல்) ஆசிரியர் ‘புள்ளி’ எனச் சுட்டிக் கூறுவர்.ஆகலின் புள்ளிமெய் ஒருமொழியின் இடையிலும் ஈற்றிலுமே நிற்கும்.இதனை ‘ மெய்யீறெல்லாம் புள்ளியொடுநிலையல் ’ என்றார்.ஒலிப்புற்று நிற்கும் புள்ளிமெய்கள் அந்நிலைமைக்கண் உயிர் ஏறஇடம் தாரா; ஒலிப்புநிலை நீங்கி வடிவுகொண்ட முன்னைய நிலையில்தான்உயிரேற இடம் தரும். இதனைப் ‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித்தியலாது , மெய்யொடு சிவணும் அவ்வியல்கெடுத்தே’ என்பார் ஆசிரியர். அங்ஙனம் மெய்யினை ஊர்ந்து அம்மெய்யினைவெளிப்படுத்துங்கால், உயிர் தன் தலைமைப்பாட்டினையும் பிறப்பிடத்தையும்இழந்து மெய்க்குத் துணையாகிறது. மெய் தலைமைப் பாடுற்று உயிர் மெய் எனநிகழ்கிறது. ஆதலின் உயிர்மெய்யினை மெய்யின் பிறிதொரு நிலையாகவேஆசிரியர் கூறுகிறார். ‘ புள்ளி யில்லா எல்லா மெய்யும்…உயிர்த்த லாறே ’ என்பது தொல். சூத்திரம். (தொ. எ. பக். 11 ச. பால.) |
மெய்யெழுத்தின் இலக்கணம் | மெய்யெழுத்துத் தனித்தொலிக்கும் இயல்பின்றி, வாயுறுப்புக் களான்உருவாகி வடிவுற்று அனுகரண ஓசையான் ஒலிநிலை எய்தி, தடையுற்றுவெடித்தும் அடைவுற்று நழுவியும் தடை யின்றி உரசியும் நெகிழ்ந்தும்,நெஞ்சுவளி – மிடற்றுவளி – மூக்குவளி – இசைகளான் வெளிப்பட்டுச்செவிப்புலனாம்; உயிரும் உயிர்மெய்யுமாகிய எழுத்துக்களின்பின் உயிரிசைஅலகின் துணையான் புள்ளியுற்று ஒலிக்கும்; வாயுறுப்புக் களின் தொழில்முயற்சியும் வளியிசையும் காரணமாக வன்மை – மென்மை – இடைமை – என்னும்தன்மைகளைப் பெறும்; உயிரிசையைத் துணையாகக் கொண்டு அவற்றின் உந்துதலான் உயிர்மெய்யாகி இசைத்து அலகு பெறும்; உயிரும் குற்றியலிகரமும்குற்றியலுகரமும் ஏற இடங்கொடுத்து, அவ் வழித் தனது மாத்திரையை இழந்து,ஏறிய உயிரின் மாத்திரை யளவே தனக்கு அளவாகக் கொண்டு, உயிர்மெய் என்னும்குறியீடு பெற்று நிற்கும்; மொழிக்கண் விட்டிசை யாது தொடர்ந்துவரும்;உடன்நிற்றற்கு ஏலாத மெய் இணைய வருவழித் திரிந்து பிளவுபடாமல்தொடரும்; தனக்குப் பின் வரும் உயிர்மெய்யின் ஒலியை மயக்கித்திரிபுபடுத்தும்; உயிரைக் கூடியோ சார்ந்தோ சொல்லாயும் சொல்லுறுப்பாயும் அமைந்து பொருள் விளக்கும்; பண்ணிசைகளையும் வண்ணங்களையும்உண்டாக்கும்; உயிர்ப்பிசைகளை ஏற்று நெடுமை – குறுமை – என்னும்குறியீடு பெறும்; தம்மை ஊர்ந்த உயிர்களுக்கு வன்மை – மென்மை – இடைமை -என்னும் குறியீடுகளை எய்துவிக்கும்;தாம் உயிர்மெய் ஆவதற்குத்துணைசெய்யும் உயிர்களைத் தமக்குரிய பிறப்பிடத்தினின்று பிறக்கச்செய்து தாமே தலைமை பெறும்;மெய்-புள்ளி- உயிர்மெய்- என்னும் மூவகையாகச்செயற்பாடு பெற்றுவரும். (தொ. எ. பக். 19, 20 ச. பால.) |
மெலித்தல், மெலிப்பு | வல்லெழுத்தை இனமெல்லெழுத்தாக மெய்பிறிதாக்கிக் கோடல். அஃதாவதுவல்லெழுத்தை இனமெல்லெழுத்தாகத் திரித்தல்மகரஈற்றுப் பெயர் வன்கணம் வருமொழி முதலில் வரின் ஈற்று மகரம்கெட்டு வருமொழி வல்லெழுத்து இடையே மிக்கு,மரம் +கிளை =மரக்கிளை – என்றாற் போல வேற்றுமைப் புணர்ச்சிக்கண்வரும். ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகப் புணரும்போது, மரம்+குறைத்தான் =மரங் குறைத்தான் – என வல்லெழுத்து மிக வேண்டிய இடத்துஇனமெல்லெழுத்து வருதல் ‘மெலிப்பொடு தோன்றல்’ ஆகும். மெலிப்பு -மெல்லெழுத்து. (தொ.எ.157 நச்.) |
மெல்லின மெய் வருக்கத்தால் வரும்செய்யுள் | எ-டு : ‘நின்னைநா னென்னென்னே னின்னைநா னென்னுன்னேநின்னைநா னின்னெனே னின்னானி – னின்னானாநாநாநா நின்னுனா னூனநீ நன்னானேநீநா னெனநீ நினை’நின்னை நான் என் என்னேன்; நின்னை நான் என் உன்னேன்; நின்னை நான்நின்னானின் இன்னானா நின் என்னேன்; நாநா நாம், ஊனம், நின் உன் நான் நீ(த்துள்ள) நான் என நினை; நீ நன்னானே – எனப் பிரித்துப் பொருள்செய்க.“நின்னை யான் நின் செயல் பற்றி வினவேன்; நின் செயல்களை எக்காரணம்பற்றியும் நினையேன்; உன்னை நான் உன்னைச் சேர்ந்த எனக்கு இன்னாசெய்பவனாக நின் தன்னலம் கருதுகின்றாயே என்று கூறமாட்டேன்; நின் னையேவிரும்பும் நான் பலவித அச்சங்களையும் குற்றங்களை யும் உறுவேன். என்னைநீத்துவிடும் நீ, நானா இருந்து நினைத்துப்பார். நீ அதனை விடுத்துமகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருக்கிறாய்” என்ற பொருளுடைய இப்பாடற்கண்,நகரமும் னகரமும் ஆகிய இரண்டு மெல்லெழுத்து வருக்கங் களே வந்துள்ளன.(இ. வி. 689 உரை) |
மெல்லினப் பாடல் | எ-டு : ‘மானமே நண்ணா மனமென் மனமென்னுமானமான் மன்னா நனிநாணு – மீனமாமானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினுமானா மணிமேனி மான்’மானமான் மன்னா! மானமே நண்ணா மனம் என்மனம் என்னும், நனி நாணும் ஈனம்ஆம், ஆனா மி(ன்)னல் மின்னி முன்னே நண்ணினும், மானா (-ஒப்பில்லாத)மணிமேனி மான் என்று பிரித்துப் பொருள் கொள்க.“பெருமை பொருந்திய யானைகளையுடைய தலைவனே! அமையாத மின்னல் மின்னி நீவிடுத்த தூதாகத் தலைவி முன்னே வந்து காட்சி வழங்கினாலும், அதனால் நீவிரைந்து வருகையைக் குறித்து ஆறுதல் அடையாமல், ‘என் மனம் மானமில்லாதமனம்’ என்றும்,‘என் நாணும் மிகக் குறைகிறது’ என்றும், அழகியமேனியளாகிய தலைவி கூறிக் கொண்டிருந்தாள்” என்று வினைமுற்றி மீண்ட தலைவனிடம் தோழி கூறிய இப்பாடலில், மெல்லின மெய்களும் மெல்லினஉயிர்மெய்களுமே வந்துள்ளன. (தண்டி. 97 உரை) |
மெல்லினம் | ங்ஞ்ண் ந் ம் ன் – என்ற ஆறு மெய்யெழுத்துக்களும் மெல் லென்றமூக்கொலியால் பிறப்பன ஆதலின் மெல் லினத்தைச் சார்ந்தனவாம். (இம்மெல்லெழுத்தின் பிறப்பிடம் மூக்கு என்னும் நன்னூல். முத்து வீரியம்எழுத். 43ஆம் நுற்பா மெல் லினம் ஆறும் பிறக்கும் இடம் தலை என்கிறது.)(நன். 69) |
மெல்லெழுத்து ஆட்சியும் காரணமும்நோக்கிய பெயராதல் | ங் ஞ் ண் ந் ம் ன் – என்ற ஆறு மெய்களும் மெல்லெழுத்தாம். இவற்றைப்பின்னர் ‘மெல்லெழுத்து மிகினும்’(323), ‘மெல் லெழுத்து இயற்கை’- (145)என்றாற்போல எடுத்துக் குறிப்பிட வேண்டியும், இவை மென்மையானமூக்கொலியான் பிறத்தல் கருதியும் இவற்றை மெல்லெழுத்து என்றார். (தொ.எ.20 நச். உரை) |
மெல்லெழுத்து இயற்கை உறழ்தல் | மொழிக்கு முதலில் வருவன வல்லின உயிர்மெய் – 4, மெல்லின உயிர்மெய்-3, இடையின உயிர்மெய்-2, உயிர் – 12 என்பன. இவற்றுள் வல்லினம் அல்லாதமென்மை இடைமை உயிர்க்கணங்கள் ‘இயல்பு கணம்’ எனப்படும். இவை வரு மொழிமுதலில் வரின், நிலைமொழி ஈற்றிலோ வருமொழி முதலிலோ திரிபு ஏற்படாமல்இயல்பாகப் புணர்தலே பெரும்பான்மை. ஆனால் முதல்மொழி தொடர்மொழியாய்நிற்க அதனை அடுத்து வரும் மென்கணம் இயல்பாதலே யன்றிச் சிறுபான்மைமிக்கும் புணரும்.எ-டு : கதிர்+ஞெரி = கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; கதிர் +நுனி =கதிர்நுனி, கதிர்ந்நுனி; கதிர் +முரி = கதிர்முரி, கதிர்ம்முரிஇவ்வாறு மெல்லெழுத்து இயல்பாதலேயன்றி உறழ்ந்து முடிதலு முண்டு.(தொ. எ. 145 நச்.) |
மெல்லெழுத்து மிகா மரப்பெயர்கள் | ‘பெறுநவும்’ என்ற உம்மையால், அத்திக்காய் – அகத்திக்காய் -ஆத்திக்காய் – இறலிக்காய்- இலந்தைக்காய் – முதலாயின மெல்லெழுத்துப்பெறா எனக் கொள்க. (நன்.165 மயிலை.) |
மெல்லெழுத்து: வேறு பெயர்கள் | மென்மை எனினும், மென்கணம் எனினும், மெலி எனினும்மெல்லெழுத்தென்னும் ஒரு பொருட்கிளவி. (மு.வீ.எழு. 17) |
மேகவிடுதூது | காதலனிடம் மேகத்தைத் தலைவி தூது விடுவதாகப் பாடும் பிரபந்தவிசேடம்.எ-டு : திருநறையூர் நம்பி மேகவிடு தூது. (L) |
மேடகத்திரிசந்தம் | இது பழைய வடமொழி யாப்பு நூல்களுள் ஒன்று. நான்கடி விருத்த வகைகளில்பிறழ்ந்து வருவனவும், மாராச்சை மிச்சா கிருதி முதலிய சாதியும்,ஆரிடமும் பிரத்தாரம் முதலியவும், ஆறு பிரத்தியமும் இந்நூலுள் பரக்கக்கூறப்பட்டுள்ளன. (யா. வி. பக். 486) |
மைகாச மானம் | இது ‘சமானம்’ என்றே இருத்தல் வேண்டும்; ‘மைகா’ பிழைபடச்சேர்ந்துள்ளது.நான்கடியும் முற்றக் குருவே வரினும், முற்ற இலகுவே வரினும்,குருவும் இலகுமாய் முற்ற மாறி வரினும் ‘சமானம்’ ஆம். (வீ. சோ. பக்.193). |
மொழி இடைப் போலி | மொழி இடைக்கண் அகரத்துக்கு ஐகாரம் ச ஞ ய – என்னும் மெய்களுக்குமுன்னர்ப் போலியாக வரும்.எ-டு : அரசு – அரைசு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர் -அரையர்.ஐகாரத்தில் பின்னரும் யகரத்தின் பின்னரும், சிறுபான்மை யாகநகரத்திற்கு ஞகரம் போலியாக வரும்.எ-டு : மைந்நின்ற – மைஞ்ஞின்ற; கைந்நின்ற – கைஞ்ஞின்ற;செய்ந்நின்ற – செய்ஞ்ஞின்ற; நெய்ந்நின்று – நெய்ஞ் ஞின்று; இவைசெய்யுள் வழக்கு.உலக வழக்கிலும் ஐந்நூறு, ஐஞ்ஞூறு, சேய்நலூர் சேய்ஞலூர் என வருமாறுகாணக. (நன். 123, 124) |
மொழி இறுதி வரும் எழுத்துக்கள் | உயிர் பன்னிரண்டும், ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் மெய்யெழுத்துப்பதினொன்றும், குற்றியலுகரமும் மொழி யிறுதிக்கண் நிற்கும்எழுத்துக்களாம். ஆக அவை இருபத்து நான்கு. (நன். 107)தாமேயும் அளபெடுப்புழியும் மெய்யொடு கூடியும் வரும் உயிரீறுநூற்றறுபத்து மூன்றும், மெய்யீறு பதினொன்றும், குற்றுகர ஈறு ஒன்றும் -ஆகப் பொதுவகையானும் சிறப்பு வகையானும் ஈறு நூற்றெழுபத்தைந்தும் கொள்க.அவற்றுள் உதாரணம் காணாதன இருபத்திரண்டு. அவையும் வந்துழிக் காண்க.(இ.வி. 29 உரை)அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ – என்னும் உயிர் ஒன்பதும், ணகர மகர னகரம்என்னும் மெல்லினம் மூன்றும், ய ர ல வ ழ ள – என்னும் இடையினம் ஆறும்மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் (ஒகரம் நகரத்தொடு கூடி ‘நொ’ என இவ்வொருசொல்லிடத்தே மாத்திரம் ஈறாக வரும் என்பர் உரையாசிரியர்) (நே. எழுத்.8)உயிரெழுத்துக்களுள் எகர ஒகரம் நீங்கலான ஏனைய பத்தும், மெல்லினஎழுத்துக்களுள் ணகார மகார னகாரங்களாகிய மூன்றும், இடையினஎழுத்துக்களுள் வகாரஒற்று நீங்கலான ஐந்தும் மொழி இறுதிஎழுத்துக்களாம். (வீ.சோ. சந்திப். 8)அருகியே மொழியீறாக வரும் ஞகார நகார வகார ஒற்றுக்களை விடுத்துஏனையவற்றையே வீரசோழியம் குறிப்பிடுகிறது. |
மொழி இறுதிப் போலி | குறிலிணை அடுத்த மகரஈற்று அஃறிணைப் பெயர்களின் ஈற்று மகரத்துக்குனகரம் போலியாக வருதலுண்டு.எ-டு : அகம் – அகன் ; முகம் -முகன்; நிலம்- நிலம்; கலம் – கலன்(நன். 122)இனி, குற்றியலுகரஈற்றுப் பெயரின் இறுதி உகரத்துக்கு ‘அர்’ போலியாகவருதலும், ஈற்று லகரத்துக்கு ரகரம் போலியாக வருதலும், ஈற்றுமகரத்துக்கு லகரம் போலியாக வருதலும், சிறுபான்மை லகரத்துக்கு ளகரம்போலியாக வருதலும் உரையிற் கோடலாம்.எ-டு : சுரும்பு, சுரும்பர், வண்டு – வண்டர், சிறகு – சிறகர்;பந்தல் – பந்தர், சாம்பல் – சாம்பர், குடல் – குடர்;திறம்- திறல், பக்கம் – பக்கல், கூவம் -கூவல்;மதில் – மதிள் (நன். சடகோப. உரை) |
மொழி மரபு:பெயர்க்காரணம் | மொழிமரபு என்னும் ஆறன்தொகை, மொழியினுடைய மரபுகளைக் கூறும் இயல்- எனவிரிதலின் அன்மொழித் தொகை. நூல்மரபில் கூறிய எழுத்துக்கள் மொழியாகும்முறைமையும், அவை மொழிக்கண் நிற்கும் நிலையும், மொழிப் பொருள் மாறாமல்எழுத்து மாறி வரும் போலி மரபும் பற்றிக் கூறுதலின்,இவ்வியல் மொழிமரபுஎனப்பட்டது. (தொ. எ. பக். 98 ச. பால.) |
மொழி முதற்காரணம் அணுத்திரள் ஒலி | மொழிக்கு முதற்காரணம் எழுத்தானாற்போல, எழுத்திற்கு முதற்காரணம்அணுத்திரள் என்பது பெற்றாம். முற்கு வீளை முதலியவற்றிற்குமுதற்காரணமாய் அணுத்திரளின் காரிய மாய் வரும் ஒலி எழுத்தாகாமையின்,‘மொழி முதற்காரணமாம் ஒலி’ என்றார். சிதலது நீர்வாய்ச் சிறுதுகளால்பெரும்புற்று உருவமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்துஅணுவால் இம்பரில் சமைவது யாவரும் அறிதலின், அநாதி காரணமாகிய மாயையினைஈண்டுக் கூறாது, ஆதிகாரண மாகிய செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்குமுதற் காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு மாயை உடன்பாடன்று, அணுத்திரள்ஒன்றுமே துணிவு எனின், ‘பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல்’ என்னும்மதம்படக் கூறினார் என்றுணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது நுட்பத்தை.(நன். 58 சங்கர.) |
மொழி மூவழிக் குறைதல் | செய்யுளில் ஓசைநயம் கருதி ஒரோவழி அருகிப் பெயர்ச் சொற்கள்முதல்இடைகடைகளில் ஓரெழுத்துக் குறைந்து முதற்குறையாகவும்இடைக்குறையாகவும் கடைக்குறையாக வும் வருதல்செய்யுள்விகாரத்தின்பாற்படும். இக்குறை விகாரம் பகாப்பதத்தின் கண்ணது.(தொகுத்தல் விகாரம் புணர்மொழிக்கண்ணதாம்.)எ-டு : ‘மரையிதழ்’ (குறுந். 140) – தாமரை என்பது முதல்குறைந்தது. ‘ஓதி முது போத்து’ – ஓந்தி என்பது இடை குறைந்தது. ‘நீலுண்துகிலிகை’ – நீலம் என்பது கடைக் குறைந்தது (அம்). (நன்.156) |
மொழி வழி நிலை | ஒரு பாடலில் வந்த மொழியே மீண்டும் வர அமைப்பது. இது மடக்கணிவகைகளுள் அடங்கும்.எ-டு : ‘மாதராள் மாதர்நோக் குண்ட மடநெஞ்சம்காதலார் காதன்மை காணாதே – ஏதிலார்வன்சொல்லான் வன்பொறை சொல்லிலெழில் மானோக்கிஇன்சொல்லா லின்புறுமோ ஈங்கு’.“இப்பெண்ணின் காதல்பார்வையிற் பட்ட என் மடநெஞ்சம், நான் கொண்டஆசையை அறியாது, அயலார் போலத் தோழி யான் அரிதின் பொறுக்குமாறுவன்சொற்கூறி என்னை விலக்குவாளாயின், அது பற்றிக் கவலைப்படாமல் தலைவிஇனிமையாகப் பார்த்துக் கண்ணால் பேசிய சொற் களை நினைத்து இன்புறுமோ?”என்று, தலைவன், தன்னைத் தோழி சேட்படுத்தியவழி வருந்திக்கூறியஇப்பாடற்கண், மாதராள், மாதர் – காதலார், காதன்மை – வன் சொல், வன் பொறை- இன்சொல், இன்புறுமோ – எனச் சொன்ன சொல்லே ஒவ்வோரடியிலும் மீண்டுவருதல் மொழிவழி நிலையாம். (வேறு பொருள் படாமையின் மடக்கு ஆகாமை அறிக.)(வீ. சோ. 159 உரை) |
மொழிக்கு முதலில் வரும்எழுத்துக்களின் அட்டவணை | தொல் வீர நேமி நன்னூல்இல க்கண முத்து சுவாமிகாப்பியம் சோழியம் நாதம்விளக்க ம் வீரியம் நாதம்உயிர் 12 12 12 12 12 12 12க 12 12 12 12 12 12 12ச 9 12 12 12 10 12 12த 12 12 12 12 12 1212ந 12 12 12 12 12 12 12ப 12 12 12 12 12 12 12ம 12 12 12 12 12 12 12வ 8 8 8 8 8 8 8ய 1 6 3 6 1 6 8ஞ 3 4 3 4 3 4 6குற்றியலுகரம் 1 – – – – – -ங – – – 1 – – -கூடுதல் : 94 102 98 103 94 102 106உயிர் 12 12 12 12 12 12 12வல்லினம் 45 48 48 48 46 48 48மெல்லினம் 27 28 27 29 27 28 30இடையினம் 9 14 11 14 9 14 16குற்றியலுகர ம் 1 – – – – – -கூடுதல்: 94 102 98 103 94 102106 |
மொழிக்கு முதலில் வரும்எழுத்துக்கள் | உயிரெழுத்துப் பன்னிரண்டும், ககார சகார தகார நகார பகார மகாரவருக்கங்களும், வகார வருக்கத்தில் உ ஊ ஒ ஓ- அல்லாத எட்டும், யகாரவருக்கத்தில் அ ஆ உ ஊ ஓ ஓள- ஆகிய ஆறும், ஞகார வருக்கத்தில் அ ஆ எ ஓ -ஆகிய நான்கும் என்னும் இவையனைத்தும் தமிழ்ச் சொல்லுக்கு மொழி முதல்எழுத்துக்களாம். ஆக, அவை 12, 72, 8, 6,4 – என 102 ஆம். (வீ. சோ.சந்திப்.7)உயிர் பன்னிரண்டும், ககர வருக்க உயிர்மெய்கள் பன்னி ரண்டும், சகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், தகர வருக்க உயிர்மெய்கள்பன்னிரண்டும், நகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், பகரவருக்கஉயிர்மெய்கள் பன்னிரண்டும். மகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், வகரவருக்க உயிர்மெய்கள் எட்டும், ஞகர வருக்கத்தில் மூன்றும், யகரவருக்கத்தில் மூன்றும் ஆக, இத்தொண்ணுற்றெட்டு எழுத்தும் மொழிக்குமுதலாம்.(வகரம் அ ஆ இ ஈ எ ஏ ஐ ஒள – என்னும் எட்டுயிரொடும், ஞகரம் ஆ எ ஒ -என்னும் மூன்றுயிரொடும், யகரம் ஆ ஊ ஓ – என்னும் மூன்றுயிரொடும் கூடிமொழி முதலாம் என்க.) (நே. எழுத். 7)உயிர் பன்னிரண்டும், ககர சகர தகர நகர பகர மகர வருக்க உயிர்மெய்கள்தனித்தனியே பன்னிரண்டு பன்னிரண்டாக எழுபத்திரண்டும், உ ஊ ஒ ஓ- அல்லாதஎட்டு உயிர்களொடு கூடிய வகரவருக்க உயிர்மெய் எட்டும், அ ஆ உ ஊ ஓ ஒள-என்னும் ஆறு உயிர்களொடு கூடிய யகரவருக்க உயிர்மெய் ஆறும், அ ஆ எ ஒ -என்னும் நான்கு உயிர்களொடு கூடிய ஞகர வருக்க உயிர்மெய் நான்கும், அகரஉயிரொன்றொடும் கூடிய ஙகர உயிர்மெய் ஒன்றும் ஆக 103 எழுத்துக்கள்மொழிக்கு முதலாவன. (நன். 102-106)மொழிக்கு முதலாம் எழுத்துக்கள் பொதுவும் சிறப்புமாம் இருவகையானும்தொண்ணுற்று நான்காம் என்பது அறிக. ‘சுட்டுயா எகர……. முதலாகும்மே’(நன். 106) என்றாரும் உளராலோ எனின், முதலாவன இவை ஈறாவன இவை என ஈண்டுக்கருவி செய்தது மேல் நிலைமொழியீறு வருமொழி முதலோடு இயையப்புணர்க்கும்பொருட்டன்றே? அவ்வாறு புணர்த்தற்கு இயைபில்லாத ஙகரமும்அங்ஙனம் – இங்ஙனம் – உங்ஙனம்- யாங்ஙனம்- எங்ஙனம் – என இவ்வாறுமொழிக்கு முதலாம் என்றல் பயனில் கூற்றாம் என மறுக்க, அன்றியும்,அங்கு- ஆங்கு, யாண்டு – யாண்டையது, அன்ன – என்ன என்றாற்போலும்இவ்வொற்றுக்களும் மொழிக்கு முதலாம் என்றல் வேண்டுதலான், அவர்க்கும்அது கருத்தன்று என்க. (இ.வி.27 உரை) |
மொழிக்கு முதலும் இறுதியுமாம்எழுத்துக்கள் | பன்னீருயிரும், உயிரொடு கூடிய க ச த ப ஞ ந ம ய வ – என்னும் ஒன்பதுமெய்யும், குற்றியலுகரமும் மொழிக்கு முதலாவன.இவற்றுள் க த ந ப ம – என்னும் ஐந்து மெய்களும் பன்னீருயிரொடும்கூடி மொழிக்கு முதலாம். சகரமெய் அ ஐ ஒள – நீங்கலான ஒன்பதுஉயிர்களொடும், வகரமெய் உ ஊ ஒ ஓ – நீங்கலான எட்டு உயிர்களொடும்,ஞகரமெய் அ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஓள- நீங்கலான மூன்று உயிர்களொடும், யகரமெய் ஆஎன்பதனொடும் – கூடி உயிர்மெய்யாகி மொழிக்கு முதலில் வரும். வரவே,மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள் உயிர் 12, க த ந ப ம – வருக்கங்கள்(5 x 12=) 60, ச-9, வ – 8, ஞ-3, ய – 1, குற்றியலுகரம் 1-ஆக, 94ஆகும்.மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் உயிர் – 12, ஙகரம் நீங்கலான மெல்லினம்- 5, இடையினம் – 6, குற்றியலுகரம் – 1, ஆக 24 எழுத்துக்களாம்.இவற்றுள் உயிர்மெய் முதலை மெய்முதலாக வும், உயிர்மெய்யீற்றைஉயிரீறாகவும் கொண்டு, மொழிக்கு முதலும் ஈறுமாக வரும் எழுத்துக்களைஉயிர் – மெய் – குற்றியலுகரம் – என்ற மூன்று தலைப்பில் அடக்கி,மொழிக்கு முதலாவன உயிர் – 12, மெய் – 9, குற்றியலுகரம் – 1, ஆக, 22எனவும், மொழிக்கு ஈறாவன உயிர் – 12, மெய் -11, குற்றியலுகரம் – 1 ஆக24 எனவும் சுருக்கிக் கூறுப. (தொ.எ. 103 நச்.) |
மொழிபுணர் இயல்பு நான்கு | பெயரொடு பெயரும், பெயரொடு வினையும், வினையொடு வினையும், வினையொடுபெயரும் புணரும்போது, இயல்பாகப் புணர்தல் ஒன்று, திரிந்து புணர்தல்(மெய்பிறிதாதல்) – மிகுதல் – குன்றல் – என மூன்று, ஆக மொழிகள் தம்முள்கூடுமுறை நான்காம்.எ-டு: சாத்தன்+ வந்தான் = சாத்தன் வந்தான் – இயல்பு; பொன் +பூண்= பொற்பூண் – மெய் பிறிது ஆதல்; நாய்+ கால் = நாய்க்கால் – மிகுதல்;மரம் + வேர் =மரவேர் – குன்றல்; சாத்தன் + கை = சாத்தன் கை -பெயரொடுபெயர்; சாத்தன் + வந்தான் = சாத்தன் வந்தான் – பெயரொடு வினை; வந்தான்+ போயி னான் = வந்தான் போயினான் – வினையொடு வினை; வந்தான் + சாத்தன் =வந்தான் சாத்தன் – வினை யொடு பெயர் (தொ. எ. 108) |
மொழிப்படுத்திசைத்தல் | உயிர், மெய், உயிர்மெய்- என்ற எழுத்துக்களை ஒரு சொல்லில் அமைத்துஒலித்துக் காட்டுதல்.எ-டு : ஆல் – உயிர் முதல், மெய் ஈறு; பல – உயிர்மெய் முதல்,உயிர் மெய் ஈறு. (தொ. எ. 53 இள.)ஒற்றும் குற்றுகரமும் அரை மாத்திரை அளவினவாகக் குறைந்துஒலிக்குமேனும், அவை மொழியாக்கத்துக்குப் பயன்படுதலின் அவற்றையும்சேர்த்துச் சொற்களை உண்டாக்குதல்.ஆடு – உயிர்முதல், உயிர்ஈறு; ஆல் – உயிர்முதல், மெய்ஈறு;வரகு – மெய்முதல், குற்றியலுகர ஈறுஆ என்பது வேறு; ஆல் என்று லகர மெய்சேர்ந்தால் வரும் சொல் வேறு. வரஎன்பது வேறு; வரகு என்ற குற்றியலுகர ஈற்றுச் சொல் வேறு. (தொ. எ. 53,நச். உரை) |
மொழிமரபின் ஒழிபாகப் புணரியல்கூறுவது | தொல்காப்பிய எழுத்துப்படலம் நான்காம் இயலாகிய புணரியலின் முதல்நான்கு நுற்பாக்களும் மொழிமரபின் ஒழிபாக அமைந்துள்ளன.1. மொழிக்கு முதலில் வரும் உயிர் – உயிர்மெய் – குற்றியலுகரம் -என்ற மூன்றும், மொழிக்கு இறுதியில் வரும் உயிர் – மெய் – உயிர்மெய்-குற்றியலுகரம் – என்ற நான்கும் மெய் – உயிர் – என்னும் இரண்டனுள்அடங்கும் என்பதும், 2. ஈற்றில் வரும் மெய் புள்ளி பெற்று நிற்கும்என்பதும், 3. குற்றியலுகரமும் அவ்வாறு புள்ளி பெற்று நிற்கும்என்பதும், 4. உயிர்மெய் ஈறு உயிரீற்றுள் அடங்கும் என்பதும் -மொழிமரபின் ஒழிபாய்ப் புணர்ச்சிக்கு உபகாரப்படுதலின் புணரியல்தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை ஒருமொழியிலக்கணம் கூறலின்,புணரியல் பற்றியன அல்ல;மொழிமரபின் ஒழிபே. (தொ.எ.104-107 இள .உரை) |
மொழிமரபு கூறும் ஈரொற்றுடனிலை | தனிமொழியில் யகர ரகர ழகர மெய்களுக்கு முறையே ஙகரமும் ககரமும்,ஞகரமும் சகரமும், நகரமும் தகரமும், மகரமும் பகரமும் இணைந்து ஈரொற்றாய்நிற்றலே மொழிமரபில் கூறப்பட்ட ஈறொற்றுடனிலையாம்.இவற்றுள் பலவற்றிற்கு உதாரணம் இறந்தது.எ-டு : ங்க ஞ்ச ந்த ம்பய் தேய்ஞ்சது மேய்ந்தது மொய்ம்புர் – சேர்ந்தது -ழ் – வாழ்ந்தது -வேய்ங்குழல், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு- என்பன இரு மொழிப்புணர்ச்சிக்கண் வரும் ஈரொற்றுடனிலை யாதலின், இவை நூன்மரபின்மெய்ம்மயக்கத்திற்கே எடுத்துக்காட் டாகும். மொழிமரபில் கூறுவன யாவும்தனிமொழிக்கே உரிய செய்தியாம்.வேய்ங்குழல் – முதலியன புள்ளிமயங்கியல் 65, 68, 92ஆம்நுற்பாக்களில் கூறப்பட்டுள. (எ. ஆ. பக். 49 – 51) |
மொழிமரபு தனிமொழியில் நிற்கும்எழுத்திலக்கணமே கூறல் | நூற்பாக்கள் – 1-7 : நூல்மரபில் கூறிய சார்பெழுத்துப்பற்றியன.8,9 : அளபெடைக்கு ஆவதொரு விதி10-12 : மொழிகள் வகை13, 14 : மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் முறை, அவைமொழித்தன்மைப்பட்டு மயங்கும் மயக்கம்15-19: ஒருமொழிக்கண் மயங்கும் ஈரெழுத்துக்களும் அவற்றின்அளபும்20-24 : மொழிக்கண் நிற்கும் ஐ ஒள எழுத்துக்களில் படுவதொருவேறுபாடும் அளபும்25 : மொழியிறுதியில் நிற்கும் இகரத்தின் வேறுபாடு26-35: மொழிமுதற்கண் நிற்கும் எழுத்துக்கள்36-48: மொழிஈற்றில் நிற்கும் எழுத்துக்கள்49 : மொழியிறுதியில் நிற்கும் னகரத்தின் மாற்றம்35,37,39,40: தனிமொழியில் நிற்கும் சார்பெழுத்தைக் கூறி,இயைபுபட்டமையால் புணர்மொழிக்கண் படும் சார்பெழுத்தும் ஈண்டேகூறப்பட்டன, சூத்திரச் சுருக்கமும் பொருளியைபும் கருதி.இவவாற்றான், மொழிமரபு தனிமொழியில் நிற்கும் எழுத் திலக்கணமேகூறியதாம். (எ. ஆ. பக். 35) |
மொழிமரபு நூல்மரபினது ஒழிபு ஆமாறு | மொழிமரபு தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் இரண்டாம் இயல். இதன்கண்49 நூற்பாக்கள் உள. முதல் இயலாகிய நூல் மரபிற்குரிய ஒழிபுகள்மொழிமரபில் விளக்கப்படுகின்றன. துனித்துக் கூற இயலாது மொழிப்படுத்தேஉணரப்பட வேண்டிய சார்பெழுத்துக்கள் பற்றிய செய்தியும் இதன்கண்கூறப்பட்டுள.மொழிமரபின்கண்ணே முதல் 7 நூற்பாக்கள் சார்பெழுத்தின் ஒழிபு. அடுத்தஇரண்டு நூற்பாக்கள் உயிரளபெடையின் ஒழிபு. அடுத்த மூன்று நூற்பாக்கள்நெடில் குறில் இவற்றின் ஒழிபு. அடுத்த நூற்பா மெய்யின் ஒழிவு. 14ஆம்நூற்பா முதல் இயலிறுதி முடிய மெய்மயக்கத்தின் ஒழிபு. இப்பகுதியில்14ஆம் நூற்பா முதல் 20ஆம் நூற்பா முடிய மயக்கம்; அடுத்த ஐந்துநூற்பாக்கள் போலி; 26ஆம் நூற்பா முதல் 35ஆம் நூற்பா முடிய மொழிக்குமுதலாவன; அடுத்து வரும் 13 நூற்பாக்களும் மொழிக்கு இறுதியாவன. இறுதிநூற்பா போலி பற்றியது.இவ்வாற்றான் மொழிமரபு நூல்மரபினது ஒழியே யாகும். (சூ.வி. பக்.57) |
மொழிமுதற் போலி | மொழிமுதற்கண் அகரத்துக்கு ஐகாரம் ச ஞ ய – என்னும் மெய்களுக்கு முன்போலியாக வரும். (முன் : காலமுன்)எ-டு: பசல் – பைசல் , மஞ்சு – மைஞ்சு, மயல் – மையல்.இனி, ச ஞ ய – மெய்களுக்கு முன்னர் ஐகாரத்துக்கு அகரம் மொழிமுதற்போலியாக வருதலும் கொள்ளப்படும்.எ-டு: வைச்ச- வச்ச. ஐஞ்சு- அஞ்சு, பைய – பய. (நன். 123) |
மொழியாய்த் தொடர்தல் | எழுத்துக்கள் பலவற்றைக் கூட்டி நெருக்கி ஒருதொடர்ப்படக்கூறுமிடத்தும் தத்தம் வடிவும் அளவும் முதலாயின இயல்பின் திரியா,தனித்து நின்றாற் போலும் யாண்டும். (நன். 126 மயிலை.)எழுத்து ஒன்றோடொன்று மாலையில் தொடுக்கப்பட்ட மலர் போலத் தொடர்ந்துமொழியாகும். மாலையிலிருந்து மலர்களைச் சிதையாமல் உதிர்ப்பது போலமொழியிலுள்ள எழுத்துக்களைச் சிதைவின்றிப் பிரிக்கலாம்.சுண்ணத்தின்கண் அரிசனம் (மஞ்சட்பொடி) பிரிக்கப் படாமை போல்வதன்று,இத்தொடர்ச்சி. (நன். 127 சங்கர.) |
மொழியிடை எழுத்தெண்ணிக்கை | மொழி ஓரெழுத்து முதலாக ஒன்பதெழுத்து இறுதியாகத் தொடர்ந்துவரும்.எ-டு: கா, அணி, அறம், அகலம், அருப்பம், அம்பலவன், அரங்கத்தான்,உத்தராடத்தான், உத்தரட்டாதியான். (மு. வீ. மொழி. 10) |
மொழியியல் மொழி வகை ஏழு | ‘முத்துவீரியம் சுட்டும் மொழிவகை’ காண்க. |
மொழிவகை | எல்லா மொழியும் ஓரெழுத்துப்பதம், தொடரெழுத்துப் பதம் எனவும்,பகாப்பதம் பகுபதம் எனவும் இவ்விரண்டாய் அடங்கும் என்பதாம். இறிஞி,மிறிஞி- முதலாயின தொடர்ந்தன வேனும், பொருள் தாரா ஆகலின் பதம் ஆகா என்க(நன். 127 மயிலை) |
மோதிரப்பாட்டு | பண்ணத்தியாகச் சுட்டப்படுவனவற்றுள் ஒன்று.(தொ. பொ. 492 பேரா.) |
மோனை அந்தாதி | முதலடியின் முதலெழுத்தே அவ்வடியின் ஈற்றெழுத்தாக, அதுவே அடுத்தஅடிகளிலும் முதலெழுத்தாகவும் ஈற்றெழுத் தாகவும் வரத் தொடுப்பது.எ-டு : ‘ மே னமக் கருளும் வியனருங் கல மே மே வக விசும்பின் விழவொடு வரு மே மே ருவரை அன்ன விழுக்குணத் தவ மே மே வதன் திறநனி மிக்கதென் மன மே ’இப்பாடற்கண், அடிமோனை எழுத்தாகிய ‘மே’ என்பது பாடல் முழுதும்அந்தாதியாக வந்தவாறு. (யா. க. 52 உரை) |