தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மா என்ற பெயர்ச்சொல் புணருமாறு

மா என்ற பெயர் விலங்குகளையும் மாமரத்தையும் உணர்த்தும். இஃதுஅல்வழிக்கண் வன்கணம் வந்துழியும் இயல்பாம்.எ-டு : மா +குறிது, சிறிது தீது பெரிது = மா குறிது, மா சிறிது,மா தீது, மா பெரிது,வேற்றுமைக்கண், மா என்பது மரமாயின், அகர எழுத்துப் பேறளபெடையும்இனமெல்லெழுத்தும் பெற்று முடியும்; விலங்கைக் குறிக்குமாயின் னகரச்சாரியை பெற்று வருமொழி வன்கணத்தோடு இயல்பாக முடியும்.எ-டு: மாஅந்தளிர், மாஅங்கோடு; மான்கோடுமாங்கோடு என, மாமரத்தைக் குறிக்கும் சொல் அகரம் பெறாதுமெல்லெழுத்து மிகுதலுமுண்டு; மாவின் கோடு – எனச் சிறுபான்மை இன்சாரியைபெறுதலுமாம். (தொ.எ.231 நச். உரை)

மாங்காய்ச் சீர்ச் சந்த விருத்தம்

ஐந்து மாங்காய்ச்சீர் பெற்ற அடி நான்கான் அமைவது; இறுதியில்நெட்டெழுத் தொன்று மிகுவது.எ-டு : ‘பூபால ரவையத்து முற்பூசை பெறுவார்பு றங்கானில்வாழ்கோபால ரோவென்று ருத்தங்க திர்த்துக்கொ தித்தோதினான்காபாலி முனியாத வெங்காம னிகரான கவினெய்தியேழ்தீபால டங்காத புகழ்வீர கயமன்ன சிசுபாலனே’ (2:1: 116)ஐந்தாம்சீர் தண்பூவாகவும் வரலாம்; முதலடியிற் காண்க. (வி. பா. பக்.56)

மாணிக்கவாசகர் குவலயானந்தம்

இக்குவலயானந்த அணிநூலை இயற்றியவர் மாணிக்க வாசகர் என்ற சைவர். இவர்அகத்தியர் வரைந்த சிவவியா கரணம் என்ற நூலை முதனூலாகக் கொண்டு இந்நூலைஇயற்றினார் என்று இதன் சிறப்புப்பாயிரம் குறிக்கிறது. நூலாசிரியரேவரைந்ததோர் உரையும் இந்நூற்கு உள்ளது. நூலைப் பதிப்பித்தவர் அதனைஉரையுடன் பதிப்பிக்க வில்லை. இந்நூல் உறுப்பியல் அணியியல்சித்திரவியல் என்ற மூன்று பகுப்புக்களையும், அவற்றுள் முறையே 150 12029 நூற்பாக்களையும் கொண்டு அமைந்து உள்ளது. இந்நூலின் இறுதியில் சிலபகுதிகள் கிட்டாமல் போயிருக்கலாம் என்பது உணரப்படுகிறது. உறுப்பியலில்சொல்லிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது; அவ்வியலின் இறுதியில் யாப்புப்பற்றிய சில செய்திகள் உள்ளன. அணியியலில் 87 அணிகள் கூறப்பட்டுள.இறுதியியலில் சித்திரகவிகள், நூற்குற்றங்கள் முதலியனகுறிக்கப்பட்டுள்ளன.இந்நூல் குறிப்பிடும் சில அணிகள் உண்மையில் அணிகள் தாமா என்றே ஐயம்எழுகிறது. பேராசிரியர், பிற்காலத்தார் தாம்தாம் நினைத்தவற்றை யெல்லாம்அணியென்று பெய ரிட்டு வழங்கத் தலைப்பட்டனர் என்றுரைத்த செய்திக்குஇந்நூல் இலக்கியமாக உள்ளது. எனலாம்!இந்நூல் குறிப்பிடும் 87 அணிகளுள் ஏறத்தாழ 40 அணிகள் இவ்வாசிரியரேபடைத்துக் கூறுவன. அவற்றுட் பல உவமை, அதிசயம், தற்குறிப்பேற்றம்என்பவற்றுள் அடங்கிவிடுவன.இந்நூலின் மூலத்தை டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தி னின்று பெற்றுஅம்மூலமாத்திரமே வெளியிட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை),உரையையும் சேர்த்து வெளியிட்டிருப்பின் இதனை நன்குணரலாம்.

மாத்திரை

இஃது ஒரு காலஅளவின் பெயராம். இயல்பாகக் கண்ணை இமைத்தல் நேரமும்,கையை நொடித்தல் நேரமும் ஒரு மாத்திரையாம். கை நொடித்தலின்கண், நினைத்தஅளவில் கால்மாத்திரையும், கை நொடித்தற்குக் கட்டைவிரலை நடு விரலொடுசேர்த்த அளவில் அரைமாத்திரையும், அவ்விரு விரல்களையும் முறுக்கும்அளவில் முக்கால்மாத்திரையும், விடுத்து ஒலித்த அளவில் ஒருமாத்திரையும்ஆகிய காலம் கழியும் என்பர்.எழுத்தொலியை மாத்திரை என்ற காலஅளவு கொண்டு கணக்கிடுவர். (தொ. எ. 7நச். மு. வீ. எழுத். 98)

மாத்திரை அளவுகள்

கண்ணிமைத்தல் நேரமும் கைநொடித்தல் நேரமும் ஒரு மாத்திரை நேரத்தைப்பொதுவாகக் குறிப்பன. ஓர் அகங் கைக்கு மேல் நான்கு அங்குலம் இடைகிடப்பமற்றோர் அகங்கையை வைத்துக் கொண்டு மெல்லவும் விரையவும் இன்றிஅடித்தல், விரைதலும் நீட்டித்தலு மின்றி முழங் காலைக் கையால்சுற்றுதல் – முதலியனவும் ஒரு மாத்திரை அளவின. குருவி கூவுதல் ஒருமாத்திரைக்கும், காகம் கரைதல் இரண்டு மாத்திரைக்கும், மயில் அகவுதல்மூன்று மாத்திரைக் கும், கீரியின் குரல் அரை மாத்திரைக்கும் அளவு.நோயில்லாத இளையோன் குற்றெழுத்தினைக் குறைந்த அளவில் எத்துணை நேரம்ஒலிப்பானோ அத்துணை நேரம் ஒரு மாத்திரை எனப்படும். (எ. ஆ. பக். 18)

மாத்திரை அளவுகள் பற்றிய விரிவானஅட்டவணை

அறுவகை இலக்கண நூலார் ஆ ஈ ஊ ஏ ஓ – என்பன நெடில் என்றும், ஐ ஒள-என்பன இரண்டும் தனித்தனி ஒன்றரை மாத்திரை பெறுவன என்றும், ஆகவேஅவற்றைக் குறில் நெடில் என்றும் கொள்வர்.நூல்கள்தொல்காப்பியம் 1 2 1 ½ ½ ½ ½ – ¼ 1 1வீரசோழியம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ – ¼ 3 1நேமிநாதம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 1நன்னூல் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1இலக்கணவிளக்கம் 1 2 1 1 ½ ½ ½ ½ – ¼ 3 1தொன்னூல்விளக்கம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1சுவாமிநாதம் 1 2 1 ½ ,1 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 1முத்துவீரியம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1அறுவகைஇலக்கணம் 1 2 1 ½ 1 ½ ½ ½ – – – – – –

மாத்திரைக்கு இமை, நொடி ஈரளவு கோடல்

கட்புலனாகிய இமைக்காலமும், செவிப்புலனாகிய நொடிக் காலமும் கருதிக்கோடற்கு இரண்டு ஓதினார். (நன். 99 மயிலை.)

மாத்திரைச் சுருக்கம்

மிறைக் கவிகளுள் ஒன்று; ஒரு சொல்லின் முதல் நெட்டுயிர்மாத்திரையைக் குறைத்தால் வேறொரு சொல்லாகிப் பிறிதொரு பொருள் தரஅமைப்பது. (பண்டைக் காலத்தில், எ, ஒ (இன்றைய ஏ, ஓ) என்ற நெடில்களைக்குறிலாக்க ஏடுகளில் எ ஒ – இவற்றின் மேல் புள்ளி யிட்டு (எ ) ஒ ) என்று) எழுதுவது மரபு.)எ-டு : ‘நேரிழையார் கூந்தலின்ஒர் புள்ளிபெறின் நீள்மரமாம்;நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்; – சீரளவுகாட்டொன்(று) ஒழிப்ப இசையாம்; கவின் அளவும்மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு.’ஓதி (பண்டு ‘ஒதி’ என்று எழுதப்பட்டது) என்பது கூந்தல்;நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், ஒதி – மரவிசேடம்.ஏரி (பண்டு ‘எரி’ என்று எழுதப்பட்டது) என்பது நீர்நிலை;நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், எரி – நெருப்பு.காந்தாரம் – காடு; முதல் நெட்டுயிர்மெய் குறிலானால், காந்தாரம் -கந்தாரப்பண்.கந்தாரம் என்ற சொல்லின் இடைநின்ற நெட்டுயிர்மெய் குறிலானால்,கந்தரம் – கழுத்துமாத்திரை குறைத்து ஒரு மாத்திரைத்தாகிய குறிலாக்கி வெவ்வேறு பொருள்காணும் சித்திரம் அமைதலின், இது மாத்திரைச் சுருக்கம் (சுதகம்)ஆயிற்று. (தண்டி. 98 உரை)

மாத்திரைப் பெருக்கம்

மிறைக் கவிகளுள் ஒன்று; ‘மாத்திரை வருத்தனம்’ எனவும் படும்.மாத்திரைச் சுருக்கத்தில் கூறிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும்மறுதலையாகக் கொண்டு பாடல் அமைப்பது. அஃதாவது ஒரு மாத்திரை அளவுடையகுறில் களை இரண்டு மாத்திரை அளவுடைய நெடில்களாக்கிப் பிறிதொரு பொருள்வரப் பாடுவது.எ-டு : ‘தருவொன்றை நீட்டிடத் தருணி கூந்தலாம்;மருவுதீ நீட்டிட மாண்புறும் நீர்நிலை;திருவுறு கழுத்தினை நீட்டத் தீம்பணாம்;உருவமேல் நீட்டிடின் உயர்ந்த காடுமாம்.’தரு – ஒதி; மங்கை கூந்தல் – ஓதிதீ – எரி; நீர்நிலை – ஏரிகழுத்து – கந்தரம்; தீம்பண் – கந்தாரம்‘கந்தாரம்’ மேலும் நீளின் காந்தாரம் (- காடு)எ-டு : ‘அளபொன் றேறிய வண்டதின் ஆர்ப்பினால்அளபொன் றேறிய மண்அதிர்ந் துக்குமால்;அளபொன் றேறிய பாடல் அருஞ்சுனைஅளபொன் றேறழ (கு) ஊடலைந் தாடுமால்’ (தண்டி. 98 உரை)அளபு (- மாத்திரை) ஒன்று ஏறிய வண்டு : (வண்டு – அளி) ஆளி;அளவு ஒன்று ஏறிய மண் : (மண் – தரை) தாரை;அளபு ஒன்று ஏறிய பாடல் : (பாடல் – கவி) காவி;அளபு ஒன்று ஏறிய அழகு : (அழகு – வனப்பு) வானப்பு.(வான்அப்பு – மழைநீர்)தன் மகள் உடன்போயவழி, தாய் புலம்புவதாக அமைந்தது இது.“காட்டில் ஆளி முழங்குவதால் என் மகளுடைய காவி (நீலோற்பலப்பூப்)போன்ற கண்கள், அச்சத்தால் மனம் நடுக்குறவே, தாரையாகக் கண்ணீர்பெருக்கும். அருஞ்சுனை நீர் மழைநீர்ப் பொழிவினால் அலைவுற்றுஅசையாநிற்கும்.”‘உகுமால்’ என்பது ககரம் விரித்தல் விகாரம் பெற்றது. காவி -உவமையாகுபெயரால், கண்.) (இ. வி. 690 – 5 உரை)

மானினீ விருத்தம்

ஏழு கூவிளச்சீர்கள் அழகாகப் புணர இறுதியில் நெடிலைக் கொள்ளும் அடிநான்காய் அமைவது. வரும் காரிகையே இதற்கு எடுத்துக்காட்டாம்.எ-டு : கூவிள மேழுகு லாவநெ டிற்கடை கொள்வது மானனிநேரசைசேராவிள மாதிந டப்பது பேர்கவி ராசவி ராசித மென்றனரால்கூவிள மேகரு வார்விள மேயிவை கூடுவ சாத்துவி காசுலவும்பூவிள மென்முலை யாமமு தாரிரு பொற்குட மேந்துபொ லங்குழையே. (வி.பா.பக். 69)

மாபாடியம்

பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை; கி.மு. முதல்நூற்றாண்டில் வரையப்பட்ட இப்பேருரை இப்பொழுது 1713 சூத்திரங்கட்கேகிடைத்துள்ளது. (பி.வி. பிற்சேர்க்கை பக். 435)

மாபிங்கலம்

வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. பல வகை யாகத் திரிந்த நான்கடிவிருத்த விகற்பங்களும் மாராச்சையும் மித்தியா விருத்தியும் முதலாகியசாதியும், ஆரிடமும், பிரத் தாரம் முதலிய அறுவகைப் பிரத்தியமும்இதன்கண் குறிப் பிடப்பட்டுள்ளன. (யா. வி. பக்.)

மாபுராணம்

தமிழில் அகத்தியத்தின் பின்னர்த்தோன்றிய பேரிலக்கண நூல். இதன்சூத்திரங்கள் ஆசிரியத்தானும் வெண்பாவானும் ஆகியவை. இவை இக்காலத்துமிகச் சிலவே கிட்டியுள. இந் நூலில் மகரக்குறுக்கத்தின் பயனைஎடுத்தோதிய நூற்பா ஒன்று யாப்பருங்கல விருத்தியுள் மேற்கோளாக இடம்பெறு கிறது. (பக். 33) வஞ்சிப்பா அகப்பொருள் பற்றிய பாடல்களில்சிறுபான்மை வரினும் சிறப்பின்று என்பது குறிக்கப் பெற்றுள் ளது (பக்.128). உயிரளபெடையும் மகரக் குறுக்கமும் தலைவன் பெயருக்கும் அவன்பெயருக்கு அடையாகிய சொற்கும் புணர்ப்பது குற்றம் எனவும்சொல்லப்பட்டுள்ளது. (பக். 564)இடைச்சங்க காலத்து வழங்கிய இலக்கண நூலாக இதனை இறையனார் களவியலுரை(சூத்திரம் 1) குறிக்கிறது.(யா. வி. பக். 564)

மாராச்சை

வடமொழிச் செய்யுள் வகைகளுள் ஒன்று. இது மாத்ராகணம் பற்றி அமைவதுஎன்பர் ஒரு சாரார். (யா. வி. பக். 456)

மாருத கணம்

தேமாங்கனி எனும் வாய்பாடு பற்றி வருவதும், நூல் முதற் பாடல்முதற்சீராக அன்றிச் சொல்லாக வருதலாகாது என விலக்கப்பட்டஅமங்கலமானதுமான செய்யுட் கணம். இதனை வாயுகணம் என இலக்கண விளக்கம்கூறுமாறு காண்க (இ. வி. பாட். 40). மாமூலனார் ‘மாருத கணம்’ என்றார்என்பதும் அவ்வுரைச் செய்தி. இதற்குரிய நாள் சுவாதி; இதன் பயன்சீர்சிறப்பு நீக்கம் எனச் சொல்லப்பட்டுள்ளது.

மார், அல், ஐ விகுதிகள்

‘காணன்மார் எமர்’ என மாரீறு எதிர்மறை வியங்கோ ளிடத்தும், டு து று- என்பன ஒன்றன் படர்க்கையிடத்தும், அல்விகுதி ‘மகன்எனல் மக்கட்பதடிஎனல்’ (குறள் 196) என வியங்கோள் எதிர்மறையிலும் உடன்பாட்டிலும், ஐஈறு ‘அஞ்சாமை அஞ்சுவ தொன்றின்’ என வியங்கோள் எதிர்மறையிலும் வரும்.(நன். 140 இராமா.)

மார்க்கண்டேயனார் காஞ்சி

மார்க்கண்டேயனார் என்ற பழம்புலவர் நிலையாமையாகிய காஞ்சித் திணையைப்பற்றிப் பாடிய ஆசிரியப்பா ஒன்று இழுமென் மொழியால் விழுமியதுநுவல்வதாகிய ‘தோல்’ என்ற வனப்புக்கு எடுத்துக்காட்டாகத்தரப்பெற்றுள்ளது. (யா. வி. பக். 399)

மாறனலங்காரம்

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள்கவிராயரால் இயற்றப்பட்ட அணியிலக்கணநூல். இவ்வரும்பேரணிநூற்குவிருத்தியுரையருளிச் செய்தவர் தென்திருப்பேரைக் காரிரத்தின கவிராயர்.இந்நூலுள் பாயிரமாக அமைந்த நூற்பாக்கள் – 64; பொதுவணியியல்நூற்பாக்கள் 21; பொருளணியியல் நூற்பாக்கள் – 166; சொல் லணியியல்நூற்பாக்கள் 48; எச்சவியல் நூற்பாக்கள் – 28. உதாரணப் பாடல் என்.844.இதன்கண், வைதருப்பம் கௌடம் என்னும் இருநடைக்கும் இடைப்பட்டதாகப்பாஞ்சாலம் என, மூவகைச் செய்யுள் நெறி சொல்லப்படும். பொதுப்பாயிரமும்சிறப்புப்பாயிரமும் நன்னூல் போன்ற பிறநூல்கள் கூறுவதினும் சிறப்ப உள.64 பொருளணிகள் விளக்கப்பட்டுள. மடக்கணியின் (சொல் லணி) விரிவானதிறங்கள் 18 நூற்பாக்களால் பல எடுத்துக் காட்டுக்களுடன் திகழ்கின்றன.வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாக இருப்பத்தாறுசித்திரகவிகள் சிறப்புற இடம் பெற்றுள.சூத்திரங்கள், பாயிரத்திலும் பொதுவணியியலிலும் வெண்பhக் களாகவேநிகழ்கின்றன. பிறவற்றில் ஆசிரிய நடையாக இயலுகின்றன.மானிடப் பாடலையே மறக்குமாறு வழிபடுதெய்வத்தை ஏத்துதலால்,செங்கண்மால் கோயில் கொண்டருளிய திருப்பதிகளைப் பற்றியும், மாறன்எனப்படும் நம்மாழ்வாரைப் பற்றியும் நூலாசிரியர் உதாரணப் பாடல்களைத்தாமே புனைந்து சடகோபராம் மாறன் பெயரால் இவ்வலங்கார நூலை அருளினார்.இன்று நிலவும் அணியிலக்கண நூல்க ளிடை இதனை ஒப்பதும் மிக்கது மில்லை.ஆயின் பயிலுதற் கண் கடுமை நோக்கி இவ்வரிய நூலை விரும்பிப் பயில்வார்அருகியே உளர்.இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கம்பெருமுயற்சியால் அரிதாகப் பதிப்பித்த இந்நூற்கு இன்று காறும்மறுபதிப்பில்லை. என்ற குறை நல்க அண்மையில் புதுவை-பிரஞ்சுப்பள்ளிவிளக்கங்களுடன் வெளியிட் டுள்ளது. இது திருவரங்க ஆண்டவன் ஆசிரமவெளியீடு.

மாறனலங்காரம் கூறும் மிறைக்கவிகள்

வல்லினப்பாட்டு, மெல்லினப்பாட்டு, இடையினப்பாட்டு, நிரோட்டியம்,ஓட்டியம், ஓட்டிய நிரோட்டியம், அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை,வக்கிர உத்தி, வினா உத்தரம், சக்கர (நாலாரம், ஆறாரம், எட்டாரம்)பெந்தம், பதும பெந்தம், முரசபெந்தம், மாலை மாற்று, கரந்துறை செய்யுள்,காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள், பிறிதுபடு பாட்டு, சருப்பதோபத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், திரிபங்கி,எழுகூற்றிருக்கை என இருபத்தாறு. (மா. அ. 270)சதுரங்கபந்தம், கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரைவருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபதாதி – என்பவற்றுடன் 32ஆகும்.

மாறன் அகப்பொருள்

இந்நூல் 16ஆம் நூற்றாண்டில் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்ததிருக்குருகைப்பெருமாள் கவிராயர் குடும்பத்தில் தோன்றிய சடையன்என்பவரால் இயற்றப்பட்டது. இவரே மாறன் அலங்காரம்,திருக்குருகாமான்மியம் முதலியவற்றை இயற் றியவர். மாறனகப் பொருள்அகத்திணை இயலும் ஒழிபிய லும் விரிவாக உள்ளன. அவை தொல்காப்பியத்தையும்நச்சினார்க்கினியர் உரையையும் உட்கொண்டு அகப் பொருட்குச் சிறந்தவிளக்கமாக அமைந்தவை. இக்காலத்துக் கிட்டும் களவியல் வரைவியல்கற்பியல்களில் நம்பியகப் பொருளில் கூறப்படாத 30 துறைகள்காணப்படுகின்றன. களவு வெளிப்படற்குரிய கிளவித்தொகைகளில் வரைந்து கோடல்என்ற கிளவியை அமைத்து ஒன்பது துறைகளில் விளக்கியுள்ள இந்நூலில்காணப்படும் சிறப்புச் செய்தியாம். இதற்கு இலக்கியமான 527 பாடல்கள்கொண்ட திருப்பதிக் கோவை அமைந்துள்ளது. அண்மையில் நூல் முழுவதும்உரையுடன் வெளிவந்து உள்ளது. புதுவை ஃபிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியின்பதிப்பு அது.

மாறன் அலங்காரத்துள் காணப்படும்புதுமை

தண்டிஅலங்காரம் குறிப்பிடும் அணிகளுள் நுட்பம் என்பதனைக் குறைத்து,பிற முதனூல்களில் கூறப்பட்ட அணிகளையும் திரட்டி, முந்து நூல்களுள்கூறப்பெறாத பூட்டுவில் அணி – இறைச்சிப் பொருள்கோளணி – பொருள் மொழி அணி- என்பவற்றொடு வகைமுதல் அடுக்கணி – இணைஎதுகை அணி – உபாய அணி – உறுசுவைஅணி – புகழ்வதின் இகழ்தல் அணி என்னும் அணிகளையும் கூட்டிப் பொருளணிகளை64 ஆக மிகுத்து இந்நூல் கூறும். நுட்ப அணி ‘பரிகரம்’ என்ற அணியுள்அடக்கப்பட்டது. அடுத்த மூன்றும் சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும்புறத் திணையியலிலும் கூறியபடியே செய்யுட்கு அழகாதலின் கொள்ளப்பட்டன.ஏனைய ஐந்தும் அழகு எய்துவதால் இலக்கியம் கண்டு இவ்வணியிலக்கணத்துள்கொள்ளப் பட்டன. (மா.அ. 87)

மாறன் அலங்காரம் கூறும்சொல்லணிகள்

மடக்கு அணி வகைகள் (சூ. 252-269) வல்லினப் பாட்டு, மெல்லினப்பாட்டு, இடையினப் பாட்டு, நிரோட்டியம், ஓட்டியம், நிரோட்டிய ஓட்டியம்,அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை, வக்கிர உத்தி, வினா உத்தரம்,சக்கரபந்தம், பதும பந்தம், முரசபந்தம், நாகபந்தம், இரத பந்தம், மாலைமாற்று, கரந்துறை செய்யுள், காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள்,பிறிதுபடுபாட்டு, சருப்பதோபத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி,சுழிகுளம், திரிபங்கி, எழுகூற்றிருக்கை என்பன வும் சதுரங்க பந்தம்,கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபதாதி என்பனவும்கூட 32 வகைச் சித்திரகவிகள் மாறன்அலங்காரத்தில் இடம்பெறுவன.

மாறன் பாப்பாவினம்

பாக்களையும் பாவினங்களையும் நூற்பாக்களால் விளக்கா மல்இலக்கியங்களைக் கூறியே இந்நூல் விரிவாக விளக்கு கிறது. (குமர குருபரர்அருளிய சிதம்பர செய்யுட் கோவை யை இஃது இவ்வகையால் ஒக்கும்எனலாம்.)வெண்பா முதலான நூற்பாக்களும் அவற்றின் பாவினங் களும், மருட்பாவும்,பரிபாடலும் இதன்கண் இலக்கியமாகத் தரப்பட்டுள. நூலுள் 140 பாடல்கள்உள.இந் நூலாசிரியர் 16ஆம் நூற்றாண்டுப் புலவரான திருக்குரு கைப்பெருமாள் கவிராயர் என்ப. பாடல்கள் இன்ன யாப்பின என்று திட்ப நுட்பமுறவிளக்கும் சிறு குறிப்புக்கள் திருப் பேரைக் காரிரத்தினக் கவிராயரால்இயற்றப்பட்டன என்ப.

மாலை

பிரபந்த வகை. இது கட்டளைக் கலித்துறையாகவோ, வெண்பாவாகவோநூறுபாடல்கள் அந்தாதித் தொடையில் மண்டலித்து வருதல் சிறப்பு.எ-டு : திருவரங்கத்து மாலை. இது கட்டளைக் கலித்துறை யால்வந்தது.

மாலை மாற்று

மிறைக்கவிகளுள் ஒன்று; ஒரு பாட்டினை ஈற்றெழுத்தை முதலாகக் கொண்டு(-தலைகீழாகப்) படிப்பினும் அப்பாட் டாகவே மீளவருவது.எ-டு : ‘நீவாத மாதவா தாமோக ராகமோதாவாத மாதவா நீ.’நீவாத மாதவா – நீங்காத மாதவத்தை உடையவனே! தா மோக ராகமோ – வலியஅறியாமையாகிய ஆசைகள்; தாவா – நீங்க மாட்டா; (ஆதலின்) மாதவா (மாது அவா)- இப் பெண்ணின் ஆசையை; நீ – நீக்குவாயாக.திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய ஒரு பதிகம் பதினொரு பாடல்களுமே(மூன்றாம் திருமுறை 117ஆம் பதிகம்) மாலை மாற்றாக அமைந்தவை. அவையேஇச்சித்திர கவிக்கு மூலகவியாம். (தண்டி. 98 – 3)