ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ப, வ நிகழ்காலம் காட்டுதல் | உண்ணாகிடந்தான் – உண்ணாவிருந்தான் என, ஆகிடந்து – ஆவிருந்துஎன்பனவும், வருதி – பெயர்தி – வருந்துதி – பொருதி – புலம்புதி – எனத்தகரஒற்றும், உண்பல் – வருவல் – எனவும் நோக்குவேற்கு – உண்பேற்கு -எனவும் முறையே வினையும் வினையாலணையும் பெயரும் ஆகிய இவற்றில் பகர வகரஒற்றுக்களும், சிறுபான்மை நிகழ்காலம் காட்டும். (நன். 143 இராமா.) |
பகாப்பதம் | பகுபதம் போலப் பகுத்துப் பார்த்தால் பகுதி விகுதி முதலிய பயன்விளைவின்றி, இடுகுறியாய்ப் பகுக்கப்படாமல் பகுதி மாத்திரமேயாய்நிற்கும் பெயர் – வினை – இடை – உரி – என்ற நால்வகைச் சொல்லும்பகாப்பதமாம்.எ-டு : நிலம், நீர்; நட, வா; மன், கொன்; உறு, கழி (நன்.131) |
பகாப்பதம் போல்வன | பகாப்பதம் பகுக்கப்படாத இயல்பின்கண்ணே மிக்குச் செல்லும் எனவே,பின்வரும் பதங்கள் முடிந்த இயல்பின் கண்ணும் சிறுவரவிற்றாகப்பகாப்பதம் கொள்ளப்படும். அவை பகுக்கப்படினும் பகாப்பதம் போல்வனவேஎன்றவாறு. அவை வருமாறு :அவன், அவள், அவர், தமன், தமள், தமர் என்றாற்போல்வன. இவை ஈறுபகுக்கப்படினும் பகுதி வேறு பொருள்படாதன.சாத்தன், கொற்றன் – என்றாற் போல்வன சாத்தையுடையான் சாத்தன், கொற்றையுடையான் கொற்றன் என்றாற் போல ஈறு பகுக்கப்பட்டுப் பகுதி வேறுபொருள்படும்; இடுகுறிமாத்திரை யாயே நிற்குமிடத்து அவ்வாறுபொருள்படா.கங்கை கொண்ட சோழபுரம், சோழனலங்கிள்ளி, பாண்டியன் பல்யாகசாலைமுதுகுடுமிப் பெருவழுதி என்றாற் போல்வன நிலைமெழி வருமொழியாகப்பகுக்கப்பட்டுப் பல பொருள் உணர்த்தினும், தொன்றுதொட்டு ஒருபிண்டமாயஒரு பொருளையே உணர்த்தி நிற்பன.மேலும், சாத்தன் சாத்தி முடவன் முடத்தி என்றாற்போலும்விரவுப்பெயர்கள் பகுதிவிகுதியாகப் பகுக்கப்படினும், விகுதி வகையான்உயர்திணை ஒருமையே யன்றி அஃறிணை ஒருமையும் இவை உணர்த்தும் என்றற்குவிதி இல்லாமையால், உயர்திணையோடு அஃறிணை விரவி வரும் விரவுப்பெயர்களும் சிறுபான்மை பகாப்பதம் போல்வனவாம். (இ. வி. எழுத். 40) |
பகாப்பதம், பகுபதம் தன்னொடும்பிறிதொடும் புணர்தல் | எ-டு : பொன்முடி, பொன்கொள் – பெயரொடு பெயர், பெயரொடு வினை; வாபோ, உண் சாத்தா – வினை யொடு வினை, வினையொடு பெயர்; ‘அது மற்றம்ம தானே’ (சீவக. 2790) – இடையோடு இடை; ‘அது கொல் தோழி காம நோயே’ (குறுந். 5) – பெயரோடு இடை; ‘கொம்மைக் குழகு ஆடும்’ – உரியோடு உரி; ‘ மல்லற் செல்வமொடு ’ – உரியொடு பெயர்;பதம் நான்கும் தனித்தனியே தன்னொடும் பிறிதொடும் புணர்ந்தன.மலையன் மன்னவன், மலையன் மன் – பெயர்ப் பகுபதத்தொடுபெயர்ப்பகுபதமும் பெயர்ப்பகாப்பதமும்.உண்டான் தின்றான், உண்டான் சாத்தன் – வினைப் பகுபதத் தொடுவினைப்பகுபதமும் பெயர்ப் பகாப் பதமும்.பகுபதம் தன்னொடும் பிறிதொடும் தனித்தனியே புணர்ந்தன.(நன். 150 மயிலை.) |
பகுதி | ‘பிருஹதி’ என்ப வடநூலார். எழுத்துவகை 26 பேதமாம் எனப்பட்டசந்தங்களுள் ஒன்று; ஒற்றொழித்து, உயிரும் உயிர்மெய்யும் அடி ஒன்றற்குஒன்பதெழுத்தாய் வருவது.எ-டு : இளையார் கனிவா யெனவேவிளையா மதுவே தருநோய்தளர்வார் நிறைநேர் கவருளுளவே லளியே யுரையாய். (வீ. சோ. 139 உரை) |
பகுதி முதலிய ஆறு | பகுதி, பெரும்பாலும் வேறுபடாது பகுபதத்தின் முதற்கண் நிற்பது;விகுதி, வேறுபட்டு இறுதிக்கண் நிற்பது. இடைநிலை, பெரும்பாலும் இனையதுஇத்துணையது என அளத்தற்கு அரிதாய்ப் பதம் முடிப்புழிக் காலமும்பொருண்மையும் காட்டி ஆண்டே காணப்படுவது. சாரியை, அன் ஆன் முதலாகஎடுத்தோதப்பட்டு எல்லாப் புணர்ச்சிக்கும் பொதுவாகச் சிறுபான்மைபொருள்நிலைக்கு உதவிசெய்து பெரும்பாலும் இன்னொலியே பயனாக வருவது.சந்தி, இன்னது வந்தால் இன்னது ஆம் எனப் புணர்வழித் தோன்றும் செய்கை.விகாரம், செய்யுள் தொடையும் பதத்துள் அடிப்பாடும் ஒலியும் காரணமாகவலித்தல் மெலித்தல் முதலாக ஆக்குவது. இஃது இடைநிலை முதலியவற்றால்முடியாதவழி வருவது. (இ. வி. எழுத். 42 உரை)தன் இயல்பினான் நிற்பது பற்றிப் பகுதி என்றும், அவ்வாறு நிற்கும்பகுதிப்பொருளைத் தன்னகப்படப் பின்னின்று விகாரப்படுத்தலால் விகுதிஎன்றும், பகுதிவிகுதிகளின் இடை நிற்பதால் இடைநிலை என்றும், பகுதிவிகுதிகளைச் சார்ந்து இயைந்து நிற்றலால் சாரியை என்றும், நிலைமொழி வருமொழி சந்தித்ததால் உண்டாகிய தோன்றல் திரிதல் கெடுதல் களைச் சந்திஎன்றும், செய்யுள் அடி தொடை முதலிய வற்றால் வலித்தல் மெலித்தல் முதலியவிகாரப்படுதலால் விகாரம் என்றும் காரணக்குறியாய் வந்தன. (நன். 133இராமா.) |
பகுதி விகுதி இடைநிலைகள் | பொருள் ஆதி அறுவகைப் பகாப்பதங்களே பகுபதங்கட்குப் பகுதிகளாம்.போல், நிகர் – இவை இடைப் பகுதிகளாம். சால், மாண் – இவை உரிப்பகுதிகளாம். செம்மை, சிறுமை – இவை பண்புப் பெயராகிய விகாரப்பகுதிகளாம். புக்கான், பெற்றான், விட்டான் என்றும் (பகுதிவிகாரப்பட்டு) வரும்.கேள், கொள், செல், தா, சா, வா, கல், சொல் – இவையும்விகாரப்பகுதிகளாம். (வினைச்சொல்லாங்கால், இவை விகாரப்படுவன.)உழு, தொழு, உண், தின் – இவை இயல்புப் பகுதிகளாம்.அன், ஆன், அள், ஆள், அர், ஆர், து, ஐ, அ – பிறவும் ஐம்பாற் பெயர்ப்பகுபத விகுதியே.காலம் காட்டா இடைநிலைகள் ஆமாறு உணர்த்துதும்:பெயர்ப்பகாப்பதமும் வினைப்பகாப்பதமும் ஆகிய பகுதி நிறுத்திநச்சாரியையும் ஞச்சாரியையும் இடைநிலையாக வைத்து அவ்வப்பாலுக்குரியவிகுதியை ஈற்றின்கண்ணே தந்தது பகுபதமாம்.கிளை இளை கடை நடை – எனப் பெயர்ப்பகுதியும், அறி துணி குறை மொழி -என வினைப்பகுதியும் நிறுத்தி, ந் ஞ் – என இடைநிலையும் அர் எனஇறுதிநிலையும் கூட்டிக் கிளைநர் இளைநர் கடைநர் நடைநர் – என்றும்,கிளைஞர் இளைஞர் கடைஞர் நடைஞர் – என்றும், அறிநர் துணிநர் குறைநர்மொழிநர் – என்றும், அறிஞர் துணிஞர் குறைஞர் மொழிஞர் – என்றும்புணர்ந்து வருதல் காண்க.‘நண்ணலும் நெறியே’ என்ற மிகையால், வலைச்சி வண்ணாத்தி – இவற்றுள்சகரமெய்யும் தகரமெய்யும் இடைநிலையாயின. பிறவும் அன்ன. (தொ. வி. 83 -85 உரை) |
பகுதிப்பொருள் விகுதி | தமக்கென ஒருபொருளின்றிப் பகுதியின் பொருளே தம்பொரு ளாய்ப்பகுதியோடு இணைந்து பகுதித்தன்மைப் பட்டுப் பின் இடைநிலை விகுதிகளோடுஇணைந்து சொல் லாக்கத்துக்கு உதவுவன. இரு, இடு முதலியன பகுதிப்பொருள்விகுதி. எழுந்திருந்தான், எழுந்திட்டான் என்புழி, இரு இடு என்பனபகுதிப்பொருள் விகுதியாய், முதனிலையோடு இயைதற்குரிய துச்சாரியை பெற்றுஎழுந்திரு எழுந்திடு – என்று நின்றவழி, அவையும் முதனிலைத்தன்மைப்பட்டு மேல்வரும் விகுதி முதலியன ஏற்கும். எழுந்திருக்கின்றான்எழுந்திருப்பான் எழுந்திடுகின்றான் எழுந்திடுவான் என்பன முறையேநிகழ்காலம் எதிர்காலம் காட்டும். சொற்களில் இரு இடு – என்றபகுதிப்பொருள் விகுதி வந்தமைக்கு எடுத்துக்காட்டாம். (சூ. வி. பக்.41) |
பகுதியை இடைப்பகாப்பதம் எனல் | ‘முதனிலைப் பெயர்வினை’ என்னாது ‘தத்தம் பகாப்பதங்கள்’ என்றமையின்,இருவகைப் பகுபதத்துள்ளும் (பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம்)பகுதியும் ஓர் உறுப்பு ஆதலின் விகுதி முதலியவற்றொடு தொடர்ந்துநிற்பதன்றிப் பிரிந்து நில்லாமையானும், பிரிந்தவழிப் பகுதியாய்உறுப்பின் பொருள் தாராமையானும் இருவகைப் பகுதி உறுப்புக்களும்‘இடைப்பகாப்பதம்’ என்பது பெற்றாம். (நன். 134 சங்கர.) |
பகுபதம் | இடுகுறியாய் நிற்கும் பகாப்பதம் போலாது, பகுதி விகுதி யாகவும்அவற்றோடு ஏனைய உறுப்புக்களாகவும் பகுக்கப் படும், பொருள் இடம் காலம்சினை குணம் தொழில் என்னு மிவை பற்றி இவை காரணமாக வரும் பெயர்களும்,தெரிநிலை யாயும் குறிப்பாயும் காலத்தைக் கொள்ளும் முற்று வினை யெச்சம்பெயரெச்சம் என்னும் வினைச்சொற்களும் பகுபத மாம். வினைமுற்றுப் பகுபதம்எனவே, அம்முற்று வேற்றுமை கொள்ள வரும் வினையாலணையும் பெயரும்பகுபதமாம். புளி, கடு முதலிய ஆகுபெயர்கள் காரணத்தான் வருமேனும் விகுதிமுதலிய உறுப்பு இன்மையின் அவை பகுபதம் ஆகா. நட, வா முதலியன விகுதியொடுபுணராமையின் பகுபதம் ஆகா எனக் கொள்க.எ-டு : பொன்னன், அகத்தன், ஆதிரையன், கண்ணன், கரியன், ஊணன் -பெயர்ப் பகுபதம் ஆறு.நடந்தான், நடக்கின்றான், நடப்பான் – தெரிநிலை உடன்பாட்டுவினைமுற்று.நடந்த, நடக்கின்ற, நடக்கும் – தெரிநிலை உடன் பாட்டுப்பெயரெச்சம்.நடந்து, நடக்க, நடக்கின் – தெரிநிலை உடன்பாட்டுவினையெச்சம்.நடவான் – எதிர்மறை வினைமுற்றுநடவாத; நடவாமல் – எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கள்பொன்னன், அகத்தன், ஆதிரையன் – குறிப்பு வினைமுற்றுகரிய, பெரிய; அன்றி, இன்றி – குறிப்புப் பெயரெச்சவினையெச்சங்கள்நடந்தான், நடந்தவன் – தெரிநிலை வினையா லணையும் பெயர்பொன்னன்…. ஊணன் – குறிப்பு வினையாலணையும் பெயர். (நன். 132சங்.) |
பகைநாள் | செய்யுட் பொருத்தத்தில் பொருத்தமற்ற நாள்கள்; அவை யாவன; பாட்டுடைத்தலைவனது பெயர்க்குரிய நாள் தொடங்கி எட்டாவது இராசிக்கண் உற்றஇரண்டேகால் நாளும், எண்பத் தெட்டாம் கால் பொருந்திய வைநாசிக நாளும்முதலாயின. தலைவனது பெயர்க்கு முதற்சீர் எடுத்துக் கூறற்கு இவைபொருத்தமற்றனவாம். (இ. வி. பாட். 36, 37)‘நாள் பொருத்தம்’ காண்க. |
பஞ்ச பாரதீயம் | இசைத்தமிழ் இலக்கணநூல்; தேவஇருடி நாரதனால் செய்யப்பட்டது. இதுபோன்ற தொன்னூல்கள் இறந்தன. (சிலப். அடியார்க். உரைப்பாயிரம்) |
பஞ்சகம் | ஒரு பொருளைப் பற்றிப் பாடும் ஐந்து பாடல்களின் தொகுதி. (L)இது பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றிப் பாடிய பாடல் தொகுதியாகஇருக்கும். சிறுபான்மை மக்களுள் மேம் பட்டாரைப் பற்றியும் இதுபாடப்பெறும். ஐந்து பாடல் களும் வெவ்வேறு பாவும் பாவினமுமாகவரும்.எ-டு : காந்தி பஞ்சகம். |
பஞ்சமரபு | நாடக இலக்கணநூல்; அறிவனாரால் இயற்றப்பட்டது. தமது உரைக்கு உதவியநாடக இலக்கணநூல் ஐந்தனுள் இதனை யும் ஒன்றாகக் குறிப்பிடுவர்அடியார்க்கு நல்லார். (சிலப். உரைப் பாயிரம்) இந்நூல் அண்மைக்காலத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. |
பஞ்சரத்தினம் | ஐந்து செய்யுள் கொண்ட பிரபந்தம் (L) இசைப்பாடல்கள் ஐந்து வெவ்வேறு இராகத்தில் அமைந்தவற்றதுதொகுதியும் இப்பெயர் பெறும். தியாகய்யரது ‘பஞ்சரத்ன கீர்த்தனம்”எனப்படுமாறு காண்க. |
படுத்தல் ஓசையால் பெயராதல் | தாழ்ந்த ஓசையான் கூறுவது படுத்தலோசையாம். வினையைப் பெயராக்கவேண்டிய இடத்தும் உரிச்சொல்லைப் பெயராக்க வேண்டிய இடத்தும்படுத்தலோசையால் கூறுதல் வேண்டும்.எவன் என்பது படுத்தலோசையால் பெயராயிற்று. (தொ. சொ. 221 நச்.உரை)அஃது இயல்பாக வினாவினைக்குறிப்புச் சொல்.தெவ் என்பது உரிச்சொல்லாயினும், படுத்தலோசையால் பெயராயிற்று. (தொ.எ. 184 நச். உரை) |
பட்டினப் பாலையின் அமைப்பு | இவ்வஞ்சி நெடும்பாட்டு ஆசிரியஅடி விரவிவந்த ஏந்திசைத் தூங்கல்விரவியல் குறளடி வஞ்சிப்பா. (யா. வி. பக். 357) |
பட்டினப்பாலை | பத்துப்பாட்டுள் ஒன்பதாவதாகிய இது வஞ்சி நெடும் பாட்டு எனப் பெயர்பெறும். இதனுள் ஆசிரிய அடியொடு, கலியடியும் இயற்சீர் வெள்ளடியும்மயங்கி வந்தன. (யா. வி. பக். 127) |
பண்புத்தொகை இருவகை | பண்பு தொக்க தொகையும், பெயர் தொக்க தொகையும் எனப் பண்புத்தொகைஇருவகைப்படும். கருங்குவளை என்பது பண்பு தொக்க தொகையாம்; ஆயன் சாத்தன்என்பது பெயர் தொக்க தொகையாம். (நன். 152 இராமா.) |
பண்புப் பகாப்பதங்கள் | செம்மை, சிறுமை. சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை,திண்மை, உண்மை, நுண்மை என்பன வும், இவற்றுக்கு மறுதலையான வெண்மை கருமைபொன்மை பசுமைகள், பெருமை, அணிமை, நன்மை, தண்மை, பழைமை, வன்மை, கீழ்மை,நொய்ம்மை, இன்மை, பருமை என்பனவும் இவைபோல்வன பிறவும் பண்புப்பகாப்பதம். (நன்.134 மயிலை.)இக்கூறிய வாய்பாடுகள் எல்லாம் சொல் நிலையால் பகுபத மாயினும்,மைவிகுதிக்குப் பகுதிப்பொருளன்றி வேறுபொரு ளின்மையின், பொருள்நிலையால்பகுக்கப்படா என்பார் ‘பண்பிற் பகா நிலைப்பதம்’ என்றார். (நன். 135சங்கர.) |
பண்புப் பகுதிக்குச் சிறப்புவிதி | பண்புப் பகுதிகளாகிய கரு, செவ் முதலியன மைவிகுதியொடு சேர்ந்துகருமை, செம்மை முதலியனவாகிப் பண்புப் பொருளி னின்றும் வேறுபொருள்வகுக்கப்படாத நிலைப்பதம் ஆகும். மைவிகுதிக்குப் பண்புப்பொருளன்றிவேறுபொருள் இன்மை யின், செம்மை கருமை முதலியன சொல்நிலையால் பகுபதம்போன்று இருப்பினும் பொருள்நிலையால் பகாப்பதமேயாம். (நன். 135சங்கர.) |
பண்புப்பகுதி புணருமாறு | செம்மை சிறுமை முதலிய பண்புச்சொற்கள் வருமொழியாக நிகழும் விகுதியோஅன்றிப் பதமோ புணரும்வழி, இறுதி விகுதியாகிய மை போதலும்,பண்புச்சொல்லின் இடையே நின்ற உகரம் இகரமாதலும், அதன் முதற்கண் நின்றகுறில் நெடிலாதலும், முதற்கண் நின்ற அகரம் ஐகாரமாதலும், இடையே நின்றவல்லொற்று இரட்டுதலும், முன்நின்ற மெய் திரிதலும், வருமொழிவல்லெழுத்திற்கு இனமான மெல் லொற்று மிகுதலும், பிறவும் உரியனவாம்.ஈறுபோதல் எல்லா விகாரத்துக்கும் கொள்க.எ-டு : நன்மை + அன் > நல் + அன் = நல்லன் – ஈறு போதல்கருமை + அன் > கரி + அன் = கரியன் – ஈறுபோதலும் இடை உகரம் இகரம்ஆதலும்பசுமை + அடை > பாசு + அடை = பாசடை – ஈறு போதலும், ஆதி நீடலும்சிறுமை + உயிர் > சிற்ற் + உயிர் = சிற்றுயிர் – ஈறு போதலும், தன் ஒற்றுஇரட்டலும்பசுமை + தார் > பசுந் + தார் = பசுந்தார் – ஈறு போதலும், இன ஒற்றுமிகுதலும்பசுமை + தார் > பைந் + தார் = பைந்தார் – ஈறுபோத லும், ஈற்றயல் உயிர்மெய்கெடுதலும், முதல் அகரம் ஐ ஆதலும், இன ஒற்று மிகுதலும்செம்மை + ஆ > செம் + ஆ > செத் + ஆ > சேத் + ஆ = சேதா – ஈறு போதலும், ஈற்றயல் மகரம் தகரமாகத்திரிதலும், முதல் உயிர் நீடலும்செம்மை + அன் = செம்மையன் – யகர உடம்படு மெய் பெற்று இயல்பாகமுடிந்தது. (நன். 136)கருங்குதிரை முதலாயின (பண்புத்தொகை ஆதலின்) பகுபதம் அல்லவேனும்,பண்பு அதிகாரப்பட்டமையால் பதப்புணர்ச்- சிக்கும் ஈண்டே சொன்னார் என்க.(பண்புத்தொகையெல் லாம் பண்புப்பெயர்ப் புணர்ச்சி பெறுமாறு கொள்க).(நன். 135 மயிலை.) |
பதம் எனப்படுவது | எழுத்து ஓரெழுத்தாகத் தனித்தோ இரண்டு முதலாகத் தொடர்ந்தோ பொருள்தருவது பதம் எனப்படும். (பதம், மொழி, சொல் இவை ஒரு பொருட் கிளவிகள்).(நன். 128)இறிஞி – மிறிஞி எனில் எழுத்துத் தொடருமேனும் தன்னை யுணர்த்துமன்றிப் பிறபொருள் தாராமையின் பதம் ஆகாது என்பார் ‘பொருள் தரின்’என்றார். ‘ தன்னை உணர்த்தின் எழுத்தாம்;பிறபொருளைச், சுட்டுத ற்கண்ணேயாம் சொல் ’ என்ப ஆதலின், பொருள் என்றது பிற பொருள் என்பார் ‘உணர்த் தின்’என்னாது ‘தரின்’ என்றார். அணு வென்னும் ஒலி நுட்பத் தால்எழுத்தானாற்போல, எழுத்தென்னும் ஒலி நுட்பத்தால் மொழியாம் என்பார்‘பதம்’ என்றார். இப் பதவியலுக்கு மேற்கோள் ஆரியமே என்பார் மொழிஎன்னாது ‘பதம்’ என்றார். (நன். 128 சங்கர.) |
பதவியல், புணரியல் தொடர்பு | பதவியலுள் பதங்கள் ஆமாறு உணர்த்தி, புணரியலுள் பதங்கள் தம்முள்புணருமாறு உணர்த்தினமையின் இவை தம்முள் இயைபுடையன. (நன். 150மயிலை.) |
பதிகம் | 1. தெய்வத்தைப் பற்றிப் பெரும்பான்மையும் பத்துச் செய்யு ளாற்பாடப்படும் பிரபந்தம். தேவாரம் திவ்விய பிரபந்தங் களுள் காண்க.2. பாயிரம் (நன். 1 ) (L) |
பதினாறு படலம் | சிலப்பதிகாரம் அரும்பதவுரையாசிரியரால் மேற்கோளாகஎடுத்துக்காட்டப்பட்டதோர் இசைத்தமிழ் நூல் (சிலப். 7 : 12 – 16).வார்தல் முதலாகப் பட்டடை ஈறாகக் கிடந்த எட்டு வகை இசைக் கரணங்களின்இலக்கணத்தைப் பதினாறு படலத்துள் கரணவோத்திற் காணுமாறு குறிப்புரைபணிக்கிறது. |
பதினோராம் திருமுறை யாப்பு | ஆசிரியர் பன்னிருவரால் பாடப்பெற்ற நாற்பது பிரபந்தங் களதுதொகுப்புப் பதினோராம் திருமுறை. திருவாலவா யுடையார் அருளியதிருமுகப்பாசுரம் நேரிசை ஆசிரியப் பாவாம். நக்கீரர் அருளியதிருமுருகாற்றுப்படையும் அது. இரட்டைமணிமாலை நான்கும் மும்மணிக்கோவைமூன்றும், கோயில் நான்மணிமாலை ஒன்றும் என்னுமிவை வெண்பா, கட்டளைக்கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பால் இயன்றன.எழு கூற்றிருக்கை ஆசிரியப் பாவாம். உலா ஒன்றும் கலிவெண்பா யாப்பிற்று.கலம்பகம் ஒன்றும் பலவகைப் பாவும் பாவினமும் விரவ இயன்றது.காரைக்காலம்மையார் அருளிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டும்ஆசிரியவிருத்த யாப்பின; பண்ணோடு பாடப்படும் நடையின. அவர் அருளியஅற்புதத் திருவந்தாதி 101 வெண்பாக்களால் மண்டலித்தமைய இயன்றது.ஐயடிகள் காடவர் கோன் அருளிய க்ஷேத்திரக் கோவை தற்போது 24வெண்பாக்களாகவே எஞ்சியுள்ளது. சேரமான்பெருமாள் நாயனார் அருளியபொன்வண்ணத்தந்தாதிக் கட்டளைக் கலித்துறை நூறு கொண்டு அமைந்தது.நக்கீரர் அருளிய வற்றுள் கைலை பாதி காளத்திபாதி அந்தாதி 100 வெண்பாக்களால் அமைந்தது; திரு ஈங்கோய் எழுபது, எழுபது வெண் பாக்களால் இயன்றது;பெருந்தேவபாணி 67 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கோபப் பிரசாதம் 91அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கார் எட்டு எட்டு வெண்பாக்களான் இயன்றது;திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 157 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா. இனிக்கல்லாட தேவ நாயனார் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடினார்; 38அடிகளால் அமைந்த ஆசிரியப்பா அது. கபிலதேவ நாயனார் இயற்றிய சிவபெருமான்திருவந்தாதி ‘ஒன்று, முதலாகத் தொடங்கி ‘ஒன்று’ என முடியும் 100வெண்பாக்களால் இயன்றது. பரணதேவ நாயனார் அருளிய சிவபெருமான்திருவந்தாதி யும் 100 வெண்பாக்களால் ஆயது. பட்டினத்துப் பிள்ளை யார்அருளிய திரு ஏகம்ப முடையார் திருவந்தாதி கட்டளைக் கலித்துறை நூறுகொண்டு அமைந்தது; திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பத்து ஆசிரியப்பாவால்அந்தாதித் தொடை பெற அமைந்தது. நம்பியாண்டார் நம்பி அருளிய கோயில்திருப்பண்ணியர் விருத்தம் எழுபது கட்டளைக் கலித்துறையான் அந்தாதித்துஅமைந்தது; திருத்தொண்டர் திருவந்தாதி 89 கட்டளைக் கலித்துறைப் பாடலால்அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 100 கட்டளைக்கலித்துறையான்இயன்றது; ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 10 கட்டளைக்கலித்துறையான் அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை பேதைமுதலாகிய ஏழு பருவத்து மகளிரைத் தனியே பிரித்துக் கூறாது, பொதுவாக,மகளிர் காமுறாநிற்கத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருஉலாப் போந்ததன்மையைச் சுட்டிக் கலிவெண்பா யாப்பால் இயன்றது (மாலை-தன்மை); ஆளுடையபிள்ளை யார் திருத்தொகை 65 அடிகளான் இயன்ற கலிவெண்பா;திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதச மாலை 11 ஆசிரிய விருத்தப் பாக்களான்இயன்றது.பிற பிரபந்தங்கள் தத்தம் பெயராலே யாப்புத் தோன்ற நின்றன.(இலக்கணத். முன். பக். 89-92) |
பதிற்றந்தாதி | பத்து வெண்பா அல்லது பத்துக் கலித்துறை இவற்றால் அந்தாதித் தொடையாகமண்டலித்துப் பாடப்படும் பிரபந்தம். (இவ்விரண்டு யாப்பினாலும்அடுத்தடுத்து இருபது பாடலாக அந்தாதித்துப் பாடுவதே இரட்டைமணிமாலையாம்என்க.) இவை வெண்பாப் பதிற்றந்தாதி, கலித்துறைப் பதிற்றந்தாதி எனப்பெயர் பெறும். (இ. வி. பாட். 81) |
பதிற்றுப் பத்தந்தாதி | பெரும்பான்மையும் பத்துப் பாடற்கு ஒருவகைச் சந்தமாகப் பத்துவேறுபட்ட சந்தங்களால் நூறு செய்யுள் அந்தாதித் தொடையாக மண்டலித்துப்பாடும் பிரபந்தம். சந்த விருத்தம்எ-டு : மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி. (L ) |
பதிற்றுப்பத்துப் பதிகம் | பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியத்துள், ஒவ்வொருபத்துப்பாட்டும் ஒரு மன்னன்மேல் பாடப்பட்டவற்றின் இறுதியில்,அப்பத்துப்பாடல்களின் கருத்தையுட் கொண்டு பாடப்பட்ட பாடல்;கிடைத்துள்ள (முதலும் இறுதியும் நீங்கலான) எட்டுப்பத்துப்பாடல்கட்கும் எட்டுப் பதிகங்கள் காணப்படுகின்றன. பதிகத்தின்இறுதியில் உரைநடையால் புலவர் பாடிப் பெற்ற பரிசில்கள் உரையாசிரியரால்குறிக்கப் பட்டுள. பத்துப்பாடல்கட்கும் அமைந்த சிறப்புப் பெயர் களும்வரையப்பெற்றுள. இப்பதிகம் நூலாசிரியரால் பாடப் பட்டன அல்ல எனவும்உரையாசிரியர்தாமே பாடின என்றும் கூறுவர். |
பதும பந்தம் | மாறா மாலாலே மாறாமாமாறா மாவேளே மாறாமாமாறாமா கோவா மாறாமாமாறாமா வாதே மாறாமா.இது, நடுப் பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத் துள்ள அகவிதழ்புறவிதழ் சென்று வலமே அடுத்த புற விதழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்துஅடுத்த அகவிதழ் வழிபுறவிதழ்சென்று முதலடிமுற்றி, மறித்தும்பொகுட்டினின்றும் கீழ் வலக் கோணத்துள்ளஅக விதழ் புறவிதழ்வழி அடுத்த கீழ்க்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ளஅகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி, மறித்தும்பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ளபுறவிதழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மேலிடக்கோணத்துள்ள அகவிதழ்வழிஅதன்புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்றுமேலிடக்கோணக் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவிதழகவிதழ்சென்றுபொகுட்டினிழிந்து முதலடி தொடங்கிச் சென்ற கோணத்திதழ்களிற் சென்றுநான்காமடி முற்றியவாறு காண்க. |
பத்தாம் திருமுறை யாப்பு | திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாம்.இதன்கண் பாடல்கள் நாற்சீரடி நான்கால் நிகழ்வன. பெரும்- பாலும்வெண்டளையே பயிலும் கொச்சகக் கலி யாப்பின இவை. தளைகள் விரவி வரும்கலிவிருத்தப் பாடல்களும் சில வாக உள. நாலாம் தந்திரத்துப் பகுதிபதின்மூன்றும் அந்தா தித் தொடையால் நிகழ்வன. (இலக்கணத். முன். பக்.88, 89) |
பத்தினிச் செய்யுள் | ஆரிடப் போலியாக அமைந்த ‘கண்டகம் பற்றி’ என்று தொடங்கும் வெண்பாஇரண்டாம் அடியில் ஐந்து சீர்கள் பெற்று வெண்பா யாப்பில் சிறிதுதிரிந்து பத்தினிச் செய்யுள் என்ற குறிப்பொடு காணப்படுகிறது. (யா. வி.பக். 370) |
பத்தின் முன் எண் நிறை அளவுப்பெயர்களும் பிற பெயர்களும் புணருமாறு | பத்து என்பதன்முன் ஒன்று முதல் பத்து ஈறாகிய எண்ணுப் பெயர்களும்,ஆயிரம் கோடி என்ற எண்ணுப் பெயர்களும், நிறைப்பெயர் அளவுப்பெயர்களும்,பிற பெயர்களும் வந்து புணருமிடத்து, நிலைமொழியீற்று உயிர்மெய் கெட,இன்னும் இற்றும் ஆகிய சாரியைகளுள் ஏற்றதொன்று இடையே வரும்.வருமாறு : பதினொன்று, பதின்மூன்று, பதினாயிரம், பதின் கழஞ்சு,பதின்கலம், பதின்மடங்கு – இன்சாரியை பெற்றுப் புணர்ந்தன.பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுக்கோடி,பதிற்றுத்தூணி – இற்றுச் சாரியை பெற்றுப் புணர்ந்தன.இவ்விதி ஒன்பது என்னும் நிலைமொழிக்கும் பொருந்தும்.வருமாறு : ஒன்பதினாயிரம், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதின் கலம்,ஒன்பதின் மடங்கு; ஒன்பதிற்றொன்று, ஒன்பதிற்றிரண்டு, ஒன்பதிற்றுக்குறுணிபத்துக்கோடி, ஒன்பது கோடி எனச் சாரியை பெறாது இயல் பாக முடிதலும்கொள்க. (நன். 197) |
பத்தின்முன் இரண்டு புணருமாறு | ‘பத்து’ நிலைமொழி; ‘இரண்டு’ வருமொழி. நிலைமொழி யீற்றுஉயிர்மெய்யாம் தகர உகரம் கெட, ஈற்றயல் தகர ஒற்று னகர ஒற்றாக,‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி,பத்து + இரண்டு > பத் + இரண்டு > பன் + இரண்டு = பன்னி ரண்டு என்றாகும். (நன். 198) |
பத்து ‘பஃது’ ஆதல் | அடிப்படைச்சொல் பத்து என்பதே. பத்து என்பதன் இடையே தகரஒற்றுக் கெடஅவ்விடத்து ஆய்தம் வரப் பஃது என்றாகும் என்பர் தொல்.பஃது என்பதன் ஆய்தஒலி ஈற்றெழுத்தாகிய தகரஒலியை ஒட்டித் திரிந்துஒலிப்பதாகும். அதுவே நாளடைவில் தகரம் போல ஒலிக்கப்படத் தொல்.காலத்துக்கு முன்னரேயே பத்து என்பது இயற்சொல் போல வழக்கத்தில்மிகுந்துவிட்டது என்பதும், பஃது அதன் திரிபாகக் கொள்ளப்பட்டதுஎன்பதும் போதரும். (எ. ஆ. பக். 172) |
பத்து விச்சை | ஆடைநூல் போல்வது. அது காண்க. (யா. வி. பக். 491) |
பத்தெழுத்தடி வெண்பா | எ-டு : ‘குணம்புரியா மாந்தரையும் கூடுமால் என்னே மணம்கமழும் தாமரைமேல்மாது ’(யா. வி. பக். 495 – 497) |
பத்தொன்பது | ‘ஆசிரியர் தொல்காப்பியனார் பத்தொன்பது என்பதற்குப் புணர்ச்சி விதிகூறாமை’ காண்க. (நிலைமொழிக் குற்றுகரஈறு வருமொழி முதல் ஒகரவுயிர்ஏறிமுடியும் என்பது.) |
பந்தடிப்பாட்டு | விளையாட்டுப் பருவத்துச் சிறுமியர் பந்தடித்து விளையாடு கையில்பாடும் பாட்டு விசேடம். சிலப்பதிகாரத்துள் ‘கந்துக வரி’ என்ற பெயர்பெற்ற சந்த விருத்தப்பாடல் மூன்றும் பந்தடிப் பாட்டே யாம். ( L) |
பந்தி | எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று.ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்குப் பத்து எழுத்துவருவது.எ-டு : குறியா ரெனவே புனலின்மீதுறுதா மரைமே லுறைவார்தாம்நெறியார் சடையாய் நினபாதமறிவா ரினியா ரறிவாரே. (வீ.சோ. 139 உரை) |
பனம்பாரனார் | அகத்தியனார் மாணாக்கருள் ஒருவர்; இவரியற்றிய இலக் கண நூல்பனம்பாரம் என இவர் பெயராலேயே வழங்கியது. இவர் தொல்காப்பியத்திற்குச்சிறப்புப் பாயிரமும் இயற்றி யுள்ளார். |
பனம்பாரம் | தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணக்கராகிய பனம்பார னார் இயற்றியஇலக்கண நூல்; அவர் பெயராலேயே அப்பெயர் பெற்றது. அகத்திணை அல்லாதவழிவஞ்சியடி யொடு சொற்சீரடி மயங்கும் என்பதற்குப் பனம்பாரச் சூத்திரம்ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. (யா. வி. பக். 125) |
பனாஅட்டு : சொல்லமைப்பு | பனை + அட்டு : ஈற்று ஐகாரம் தனக்கு முன் உயிர்முதல் மொழி வர, ஒருசொல் தன்மைப்படப் புணருமிடத்துச் சொல்லின் இடையது ஆதலின், அஃதுஒருமாத்திரை அளவு ஒலிக்கும். ‘பனைஅட்டு’ பனஅட்டு என்றொலிக்கும். பனஎன்பதன் ஈற்று அகரமும் அட்டு என்பதன் முதல் அகரமும் சேர்ந்து ஓர்ஆகாரமாகிப் பனாட்டு என ஒலிக்கும். வரு மொழி ‘அட்டு’ என்பதனை அறிவிக்க,ஆகாரத்தின் முன்னர் அகரம் அறிகுறியாக எழுதப்படும்; எழுதப்படுதலன்றிஅகரம் ஒலிக்கப்படாது. இங்ஙனம் பனாஅட்டு என்ற சொல் அமையும்.நன்னூலார் அகரத்தை விடுத்துப் பனாட்டு என்றே கூறினார். (பனாட்டு -பனையினது தீங்கட்டி) (எ. ஆ. பக். 146) |
பனி என்ற காலப்பெயர்ப் புணர்ச்சி | பனி என்ற காலப்பெயர் நிலைமொழியாய் வருமொழி வன் கணத்தொடுபுணருமிடத்து அத்துச்சாரியையும் இன்சாரியை யும் பெறும்.எ-டு : பனியத்துக் கொண்டான் – பனியிற் கொண்டான், சென்றான்,தந்தான், போயினான்.பனிக்காலத்தில் கொண்டான் என்றாற்போல ஏழன் பொருள்விரிக்கப்படும். (தொ. எ. 241 நச்.) |
பனுவல் | பல இலக்கணங்களையும் உள்ளடக்கி இயற்றப்படும் இலக் கணநூல் பொதுவாகப்பனுவல் என்றே குறிப்பிடப்படும். (தொ. எ. பாயிரம்) |
பனை என்னும் அளவுப் பெயர்ப்புணர்ச்சி | பனை என்னும் அளவுப் பெயர் குறை என்னும் வருமொழி யொடு புணரும்வழிஇன்சாரியை பெறும்; சிறுபான்மை இன்சாரியை பெறாது வருமொழி வல்லெழுத்துமிகுதலும் கொள்க.வருமாறு : பனையின் குறை, பனைக்குறைஇதற்குப் பனையும் அதிற் குறைந்ததும் என உம்மைத் தொகைப்படப் பொருள்கூறுக. (தொ. எ. 169 நச்.) |
பனை என்பதன் புணர்ச்சி | பனை என்பது அம்முப் பெற்று ஐ கெட்டுப் பனங்காய், பனஞ்செதிள்,பனந்தோல், பனம்பூ என வரும். பனை ஈண்டுப் புல்லினம்.பனை + அட்டு = பனாஅட்டு என ஐ கெட்டு ஆகாரம் புணர்ந்துமுடியும்.இது போலவே, ஓரை + நயம் = ஓராநயம், விச்சை + வாதி = விச்சாவாதி,கேட்டை + மூலம் = கேட்டா மூலம், பாறை + கல் = பாறாங்கல், பாறங்கல் எனமுடியும்.பனை + கொடி = பனைக்கொடி (தொ. எ. 283 – 285 நச்.)பனையின் குறை என்றாற்போல உருபிற்குச் சென்ற சாரியை பொருட்புணர்ச்சிக்கண்ணும் வரும். (பனையினது குறை முதலாக ஆறன் பொருள்படஉரைக்க). (285 நச். உரை)பனை என்ற (மரப்) பெயர் நிலைமொழியாக நிற்ப, கொடி வருமொழி யாயின்இடையே ககரமெய் மிகும். பிற வன்கணம் வரின், நிலைமொழியீற்று ஐகாரம் கெடஇடையே அம்முச் சாரியை மிகும். ‘திரள்’ வருமொழியாயின் வலி மிகுதலும்‘ஐ’ போய் அம்முச் சாரியை பெறுதலுமாம். ‘அட்டு’ வருமொழி யாயின்நிலைமொழியீற்று ஐ கெட வருமொழி முதல் அகரம் நீளும். இவையெல்லாம்வேற்றுமைப் புணர்ச்சி.வருமாறு : பனை + கொடி = பனைக்கொடி (பனை உருவத்தை எழுதிய கொடி);பனை + காய், செறும்பு, தூண், பழம் > பன் + அம் + காய், செறும்பு….. = பனங்காய், பனஞ்செறும்பு,பனந்தூண், பனம்பழம்; பனை + திரள் = பனைத்திரள், பனந்திரள்; பனை +அட்டு > பன் + ஆட்டு = பனாட்டு.(பனந்தூண் – பனையால் செய்யப்பட்டதூண்; பனாட்டு – பனையினதுதீங்கட்டி) (நன். 203) |
பன் என்ற சொல் புணருமாறு | பன் என்பது பஞ்சினைப் பிரித்தெடுக்கும் தொழிலையும் பஞ்சினையும்குறிக்கும்.அஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வந்துழி உகரமும்வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வந்துழி உகரமும்,யகரம் வருவழி இயல்பும், உயிர் வருவழி ஒற்று இரட்டுதலும் பெற்றுப்புணரும்.எ-டு : பன்னுக் கடிது, பன்னு நெடிது, பன்னு வலிது, பன் யாது,பன் னரிது; பன்னுக் கடுமை, பன்னு நெடுமை, பன்னுவலிமை, பன்யாப்பு,பன்னருமை. (தொ. எ. 345 நச்.) |
பன்னிரண்டாம் திருமுறை யாப்பு | திருத்தொண்டர் புராணம் ஆம் பெரியபுராணம் பன்னிரண் டாம் திருமுறையாகஅமைவது. கொச்சகக் கலிப்பா, பலவகைப்படும் அறுசீர் விருத்தங்கள்,எழுசீர் விருத்தங்கள், எண்சீர் விருத்தங்கள், சந்தம் வாய்ந்த எழுசீர்விருத்தம், எண்சீர் விருத்தம், கலித்துறை, கட்டளைக் கலித்துறை,கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் எனப் பலவகை யாப்புக்கள்இத்திருமுறையில் பயில்கின்றன. (இலக்கணத். முன். பக். 98) |
பன்னிரண்டு : புணர்நிலை | பத்து + இரண்டு : பத்து என்பதன் ஈற்றுயிர்மெய் கெட நின்ற ‘பத்’என்பதன் தகர ஒற்றுக் கெட, ப என்ற தனிக்குறிலை அடுத்து னகரஒற்றுஇரட்டித்துப் ‘பன்ன்’ என்று நிற்ப, இரண்டு என்ற வருமொழி புணரப்பன்னிரண்டு என முடிந்தது என்பர் தொல்.பத்து என்பதற்குப் பான் என்பது பரியாயப் பெயர். பான் + இரண்டு :நிலைமொழி முதலெழுத்துக் குறுகிப் ‘பன்’ என்றாகி நிற்க,தனிக்குறில்முன் ஒற்றிரட்டிப் பன்னிரண்டு எனப் புணர்ந்தது எனலாம்.இங்ஙனமே பன்னொன்று, பன்மூன்று, பன்னான்கு, பன்னாறு எனக்கன்னடமொழிக்கண் வழங்குதல் காணத்தக்கது. (எ. ஆ. பக். 171) |
பன்னிரு பாட்டியல் | செய்யுள் வகைகளைப் பற்றிக் கூறும் பாட்டியல் நூல்களில் மிக்கதொன்மையானது. இந்நூல் ஒருவரால் இயற்றப்பட் டது என்றும், பன்னிருவரால்இயற்றப்பட்டது என்றும் கூறுவர். இதன்காலம் 12ஆம் நூற்றாண்டிற்குமுற்பட்ட காலம்; காலம் துணியக் கூடவில்லை. இதன்கண், பாயிரம் நீங்கலாக231 நூற்பாக்கள் உள. மேற்கோளாக வந்த நூற்பாக் களையும் கூட்டியுரைப்பர் ஒருசாரார். எழுத்தியல், சொல் லியல், இன இயல் என்பனஇந்நூற்பாகுபாடுகள். இனவிய லுள் பிரபந்த வகைகள் விரிவாகப்பேசப்படுகின்றன. எழுத்தியலும் சொல்லியலும் முறையே எழுத்தும் சொல்லும்பற்றிய பன்னிரு பொருத்த நிலைகளைப் பேசுவதால், இந்நூற்குப் பெயர்அத்தொகைப்பெயரால் அமைந்தது என்றும் கூறுவர். |
பன்னிருபடலம் | அகத்தியருடைய மாணாக்கர் பன்னிருவராலும் தனித்தனி ஒவ்வொருவரும்ஓரோரு படலம் யாக்கப் பன்னிரண்டு படலங்களாக அமைந்த புறப்பொருள் நூல்.வஞ்சிப்பாவினுள் ஆசிரிய அடி மயங்கி வருவது பெரும்பாலும் அகத்திணைப்பாடற்கண் இல்லை என்பதற்குப் பன்னிருபடலப் பெருந் திணைச் சூத்திரம்மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. வெட்சி கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை,நொச்சி-என்ற திணைகள் தம்முள் மறுதலைப்பட்டன என்பதனை விளக்கவும்பன்னிரு படலச் சூத்திரங்கள் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக்.128, 571)அகத்தியன்பால் தமிழிலக்கணத்தைக் குற்ற மற உணர்ந்த தொல்காப்பியன்முதலான பன்னிருவராலும் பாங்குறப் பகரப்பட்டதாகப் பன்னிருபடலம்சொல்லப்படுகிறது, புறப்பொருள்வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்துள். |
பன்மணிமாலை (1) | அந்தாதித் தொடையாய் அமைந்த தொடர்நிலைச் செய்யுள் களுள் ஒன்று.இதன்கண் இறுதி எழுத்தும் சொல்லும் இடை யிட்டுத் தொடுத்த செய்யுள்அந்தாதிவிகற்பத்தைக் காணலாம். (யா. வி. பக். 196, 205) |
பன்மணிமாலை (2) | கலம்பகம்தான், அதன் உறுப்புக்களுள் ஒருபோகும் அம்மானை யும் ஊசலும்இன்றி ஏனைய உறுப்புக்களெல்லாம் வரப் பாடும் பிரபந்தவகை. (இ. வி. பாட்.54) |
பயோதரப் பத்து | நங்கை நகிலினைப் பத்துப்பாடல் ஆசிரிய விருத்தத்தாலோ கட்டளைக்கலித்துறையாலோ பாடும் பிரபந்தம். (நவ. பாட். 49) |
பரசு, இங்கு, ஏது முற்றியலுகர ஈற்றனவாதல் | மழு என்ற படைக்கலத்தைக் குறிக்கும் பரசு என்பதும், பெருங் காயம்என்று பொருள்படும் இங்கு என்பதும், காரணம் என்ற பொருளில் வரும் ஏதுஎன்பதும் வடசொற்கள் ஆதலின், ஆரியச் சொற்களுக்குக் குற்றியலுகர ஈறுஇன்மையின், ஆரியச்சொற்கள் திரிந்த வடசொற்களாகிய இவை குற்றிய லுகர ஈறுஆகாது முற்றியலுகர ஈற்ற ஆயின. (தொ. எ. 36, 152 நச். உரை)பரசு – வழிபடு; இங்கு – தங்கு – என்று (தமிழில்) ஏவலொருமைவினையானாலும், முன்னிலைக்கண் குற்றியலுகர ஈறு வாராது என்ற கருத்தான்இவை முற்றியலுகர ஈறுகளேயாம்.ஆரியச்சொல்லுக்குக் குற்றியலுகர ஈறு இல்லாமல் இருக்க லாம். ஆனால்அவை தமிழிற்கேற்ப வடசொல்லாகத் திரிக்கப் பட்ட நிலையில், ஏனையதமிழ்ச்சொற்கள் போல, இங்கு ஏது தாது என்பன முதலான வடசொற்களும்குற்றியலுகர ஈற்றன என்று கோடலே பொருந்தும். (எ. கு. பக். 46) |
பரணர் பாட்டியல் | இருடிகள் அல்லாத ஏனையோராய், மனத்தது பாடவும், சாவவும் கெடவும்பாடல் தரவும் வல்ல கபிலர் கல்லாடர் மாமூலர் பெருந்தலைச்சாத்தனார்முதலானாரோடு ஒப்ப எண்ணப்பட்டவர் பரணர். இவரால் இயற்றப்பட்ட பாட்டியல்நூல் ஒன்றிருந்ததாக அறிகிறோம். (யா.வி. பக். 371) (தொ.சொல். 81நச்.) |
பரணி | போர்முகத்தில் ஆயிரம் யானைகளை அழித்து வென்ற வீரனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிரபந்த வகை. (இ. வி. பாட். 78) |
பரணி உறுப்புக்கள் | கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை கூறல், காளி கோயில் பாடுதல்,பேய்களைப் பாடுதல், காளிக்குக் கூளி கூறல், கூளிக்குக் காளி கூறல்,தலைவன் புகழ் பாடுதல், போர் பாடுதல், களவேள்வி என்பன. (இ. வி. பாட்.79) |
பரத சேனாபதீயம் | ஆதிவாயிலார் என்பாரால் இயற்றப்பட்ட நாடகத்தமிழ் நூல். சிலப்பதிகாரஉரையாசிரியர் அடியார்க்குநல்லார் தாம் வரைந்த உரைக்கு ஆதாரமாகமேற்கொண்ட நாடகத்தமிழ் நூல் ஐந்தனுள் ஒன்று. (சிலப். உரைச்சிறப்புப்.) |
பரதசங்கிரகம் | இந்நூல் நாட்டிய சாத்திரமாகிய பரதத்தின் இலக்கணத்தைத் தொகுத்துச்சுருங்க உரைப்பது. பாயிரத்துள் இதன் பெயர் பரதசார சங்கிரகம் என்றுசுட்டப்பெற்றுள்ளது. இந்த நூற்பொருள் முத்தமிழொடும் தொடர்புடையதாகஇருக் கிறது. இயற்றமிழ்க் குறிப்புக்களும் இசைத்தமிழ் இலக்கணங் களும்பரதநாட்டியத்தின் இயல்பினை விரித்துரைக்கும் முகத்தால் இடம் பெற்றுள.இந்நூலிற் காணப்படும் சூத்தி ரங்கள் 262. அவற்றின் யாப்புவகைகள்வெண்பா, ஆசிரிய விருத்தம், கலித்துறை, நூற்பா என்பன. வெண்பாக்களேமிகுதியாக உள. இந்நூற்குப் பண்டைய உரையொன்று காணப்படுகிறது. தெளிவானசுருக்கவுரை அது.இந்நூலாசிரியர் பெயர் அறம்வளர்த்தான் என்பது. காலம் 16 ஆம்நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்ப.அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பெரும்புலவர் க. வெள்ளைவாரணனாரைப்பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் 1954ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.இப்பதிப் பில் இந்நூலோடு, அறம் வளர்த்தான் இயற்றிய ஆசிரிய நடையான்அமைந்த (தேவதைரூப அவினயத்தை விளக்கும்) அவினயக் கிரந்தம் என்ற நூலும்இடம் பெற்றுள்ளது. |
பரதம் | நாடகத்தமிழ் நூலாகிய தொன்னூல்களில் முற்றும் அழிந்து பட்ட ஒன்று.(சிலப். உரைச்சிறப்புப்.) |
பரிசில் வழங்காதவன் அழிவு | பரிசில் வழங்காதவன்மேல் முன் முறையாகப் பாடியதற்கு மாறுபடவழுக்களால் முன்மொழி எடுத்து இயற்பெயர் தோறும் அழிவுண்டாகுமாறுசெய்யுள் பெயர்த்தெழுதி அப்பிரபந்தத்தைச் செந்நூல் சுற்றிச் செம்மலர்சார்த்திக் கவர்தெரு, காளிகோயில், பாழ்மனை, மயானம் முதலிய இடங்கட்குஎடுத்துச் சென்று, அப்பரிசில் வழங்காதானை நினைந்து பழுத்த இரும்பினால்அகம் நொந்து அச் சுவடியைப் புலவன் சுடுவானாயின், அப்பாடப்பட்டான்ஓராண்டில் மாய்வான்; இவ்வாறு ஒன்றும் செய்யாமல் இதயம் நொந்துகொண்டுபுலவன் இருக்குமாயினும், அவன் தன் கிளைஞரோடு இறுதியாவான் என்றுஅகத்தியரது உண்மை நூல் நெறி கூறுகிறது. (பி. ம. 58)சிதம். பாட். மரபியல் 19 சூத்திரமும் இக்கருத்துக்களையேகூறுகிறது.புரவலன் குற்றமுடைய பாடல்களைக் கொண்டால் அவன் செல்வம் அகலும்; தீராநோய் கூடும்; சுற்றமும் புகழும் சூனியமாகும்; காலமிருத்து கடுகிவந்திடும். (பி. ம. 60) |
பரிச்சேதம் | அத்தியாயம்; நூலினது பெரும்பாகுபாடு; படலம், இலம்பகம், சருக்கம்,காண்டம் என்பனவும் அது. (பிங். 2068) |
பரிபாடை | தமிழில் உத்திவகைகள் வடமொழியில் பரிபாடை என்ற சொல்லால்வழங்கப்படும்.‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ என்றாற்போலச் செவ்வனம்சொல்லுதல் உத்தியாம். செவ்வனம் சொல்லாது வேறொருவாற்றான் பொருந்தும்வகை உரைப்பது உத்தி வகையாம். உத்தி ‘யுக்தி’ (பொருந்தும் விதம்) என்றஆரியச் சொல்லின் திரிபாகும். (தொ. பொ. 665 பேரா.)சிவஞானமுனிவர் உத்தி என்பது பரிபாடை ஆகும் என்பர். (சிவஞா. பா. வி.பக். 9) |
பரிமாணனார் | பரிமாணம் (1) காண்க. |
பரிமாணம் (1) | பரிமாணனார் என்பவரால் யாப்புப் பற்றி வரையப்பட்ட இதன்நூற்பாக்களில் ஏழு யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களில் மேற்கோளாகக்காட்டப்படுகின்றன. அந்நூற் பாக்கள் தொடை விகற்பம், இரட்டைத் தொடை,வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா அடி வரையறை என்பன பற்றி அமைந்துள்ளன.(யா. வி. பக். 134, 182). |
பரிமேலழகர் | திருக்குறட்கு அமைந்த பண்டையுரையாசிரியர்களுள் தலை சிறந்தவர்.நுண்மாண் நுழை புலம் காட்டும் இவருரை என்றும் அறிஞருலகத்தேபோற்றப்படுதல் ஒருதலை. இவர் காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப.எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடற்கும் இவருரை காணப்படுகிறது.அதுவும்நுணுக்கம் வாய்ந்தது; ஆயின் குறிப்புரையாகவே உள்ளது. அவ்வுரையின்றேல்பரிபாடற்கு மெய்ப்பொருள் காண்டல் அரிது. வண்துவரைப் பெருமாள் என்றஇயற்பெயருடைய வைணவ அந்தணப் பெருமகனாராம் இவர் வடமொழி தென்மொழிஇரண்டிலும் பெரும்புலமை மிக்கார். இவரது திருக்குறளுரை ‘தண்டமிழின்மேலாம் தரம்’ எனப்படுகிறது. |
பருந்தின் விழுக்காடு | பருந்து நடுவே விழுந்து தான் கருதிய பொருளை எடுத்துக் கொண்டு போவதுபோல முடிக்கப்படும் பொருளை முடித்துப்போம் இயல்பினதாகிய சூத்திரநிலைபருந்தின் விழுக்காடு எனப்படும். (‘பருந்தின் வீழ்வு’ என்பதும் அது.)(நன். 18 மயிலை.)எ-டு : ‘ணனமுன்னும் வஃகான் மிசையும் மக் குறுகும்’(நன். 96)என்னும் இச்சூத்திரம் நன். 341, 114, 227, 120 என மேல்வரும்சூத்திரங்கள் எல்லாவற்றையும் வேண்டி நின்றவாறு. |
பறை | 1. ஒருவகைப் பிரபந்தம். 2. வரிக்கூத்து வகை. (சிலப். 3:13 அடி.உரை) 3. ஐவகை நிலத்திலும் முழக்கப்படும் தோற்கருவி. (L) |
பல : சொல்லிலக்கணம் | பல என்னும் சொல் பெயரெச்சக் குறிப்பாயும் ( பல குதிரைகள் ஓடின), குறிப்பு வினைமுற்றாயும் (குதிரைகள் பல ), குறிப்பு முற்று ஈரெச்சம் ஆகும் பெயரெச்சக் குறிப்பாயும்வினை யெச்சக் குறிப்பாயும் [ (பல குதிரைகள் ஓடின (பலவாகிய), குதிரைகள், பல ஓடின(பலவாய்) ], குறிப்பு வினையாலணையும் அஃறிணைப் பன்மைப் பெயராயும் [ பல ஓடின (பலவாகிய குதிரைகள்) ], பொருளாதி ஆறனுள் பண்பு காரணமாக வரும் அஃறிணைப் பன்மைப்பெயராயும் (குதிரைகள் ஒன்றல்ல, பல) என அறுவகைப்பட்டுப் பொருள்நோக்கம்முதலியவற்றால் இன்னதென்று துணியப்படும். (நன். 167 சங்கர.) |
பல : பண்பு அன்று, பெயர் என்பது | பல, சில – என அகர ஈற்றனவாக வைத்துப் புணர்த்த காரணம் யாதெனில்,அப்பண்புகள் பன்மை சின்மை – எனப் பகுதிப் பொருள் விகுதி (மை)யோடேனும், பலர் – பல, சிலர் – சில – என விகுதிப் பொருள்விகுதியோடேனும் (அர், அ) அன்றித் தனித்துநில்லா ஒற்றுமை நயம் பற்றிஎன்பது. (நன். 170 சங்கர.) |
பல என்பது ஏனைய பெயர்களொடு புணர்தல் | பல என்பது தன்முன் பிறபெயர் வரின், லகரம் றகர ஒற்றாகாது, அகரம்கெட்டுப் புணரும்.எ-டு : பல்கடல், சேனை, தானை, பறை, யானை, வேள்வி எனவரும்.உயிர் வருவழித் தனிக்குறில் முன் ஒற்று இரட்டிப் பல்லணி,பல்லாண்டு, பல்லிலை என்றாற்போல வரும்.‘பல்வேறு கவர்பொருள்’ (தொ. பொ. 114 நச்.)‘எண்ணரும் பன்னகை’ (114 நச்.)‘பல்லாற்றானும்’ (168 நச்.)‘பல்குறிப்பினவே’ (286 பேரா.)‘பன்முறையானும்’ (தொ . சொ. 396 நச்.)(தொ. எ. 214 நச்.) |
பல, சில தம்முள் புணருமாறு | பல சில என்பன தம்மொடு தாம் புணரின் இயல்பும், வல்லினம் மிகுதலும்,நிலைமொழியீற்று அகரம் கெடுதலும், அந்த லகரமெய் றகரமெய் ஆதலும், ஏனையபெயர் வரு மொழியாக வருமிடத்து நிலைமொழியீற்று அகரம் விகற்ப மாதலும்,(லகரமெய் றகரமாகச் சிறுபான்மை திரிதலும்) உள.வருமாறு : பலபல, பலப்பல, பல்பல, பற்பலசிலசில, சிலச்சில, சில்சில, சிற்சிலபலபொருள், பல்பொருள்; சிலபொருள், சில் பொருள்; பற்பகல், சிற்கலை(நன். 170) |
பலதிரட்டு | பலவாகச் சிதர்ந்து கிடக்கும் பலதிறச் செய்திகளைத் திரட்டிக் கூறும்தொகை நூல். (யாழ். அக.) |
பலமொழிகளிலும் சிலவிதிகள்ஒருதன்மையவாய் இருத்தல் | குறிலை அடுத்த ஒற்று வருமொழி முதலில் உயிர் வரின் இரட்டும்.எ-டு : சொல் + அரிது = சொல்லரிது‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டல்’ (தொ. எ. 160 நச்.)‘மொதலொள் ஹ்ரஸ் வைகஸ்வரமொதவெ பரம் ஸ்வரமதாகெ நணலயளங்கள்குதயிஸுகும் த்வித்வம்’ (கருணாடக ஶ ப்தமணி 79)என்பது கன்னட இலக்கணம்.‘ஙமோ ஹ்ரஸ்வாதசி ஙமுன் நித்யம்’ (பாணினீ. 8 : 3 : 32)என்பது வடமொழி இலக்கணம்.வடமொழியில் சில எழுத்துக்களின் பின் குறிலை அடுத்து நிற்கும்மெய்யும் இரட்டுகிறது.எ-டு : ப்ரத் ய ங்ஙா த்மா, ஸு கண்ணீ ஶ : – என்பன காண்க.(எ. ஆ. முன்னுரை பக். iii ) |
பலவகை எழுத்துக்கள் | ‘உருவே உணர்வே ஒலியே தன்மைஎ னஈ ர் எழுத்தும் ஈரிரு பகுதிய’1. காணப் பட்ட உருவம் எல்லாம்மாணக் காட்டும் வகைமை நாடிவழுவில் ஓவியன் கைவினை போலஎழுதப் படுவது உருவெழுத் தாகும்’2. கொண்டஓர் குறியால் கொண்ட அதனைஉண்டென்று உணர்வது உணர்வெழுத்து ஆகும்’3. ‘இசைப்படு புள்ளின் எழாஅல் போலசெவிப்புலன் ஆவது ஒலியெழுத்து ஆகும்’4. ‘முதற்கா ரணமும் துணைக்கா ரணமும்துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும்அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின்மிடற்றுப்பிறந்து இசைப்பது தன்மை யெழுத்தே’என்னும் இந்நான்கு பகுதியுள் ஒலியெழுத்தே செவிப்புல னாய்ப்பொருள்தரும் சிறப்புநோக்கி அதனை எடுத்தோதி னார். (நன். 256மயிலை.) |
பலவற்றிறுதி புணருமாறு | பலவற்றைக் குறிக்கும் பல்ல – பல – சில -உள்ள – இல்ல – என்னும்சொற்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியை இடையே பெற்றுப் புணரும்.எ-டு : பல்லவற்றை, பலவற்றை, சிலவற்றை, உள்ளவற்றை, இல்லவற்றை….பல்லவற்றுக்கண்,பல்லவற்றுக் கோடு, பலவற்றுக்கோடு, சிலவற்றுக் கோடு,உள்ளவற்றுக்கோடு, இல்லவற்றுக் கோடு, செதிள், தோல், பூ (தொ. எ. 174,220 நச்.)அல்வழிக்கண், பலகுதிரை – என்றாற்போல இயல்பாகப் புணரும். (தொ. எ.210 நச்.) |
பல்காப்பியம் | பல்காப்பியனாரால் இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கணநூல் (தொ. மர. 95பேரா. உரை) இதன் நூற்பாக்கள் இரண்டு, சீர் வரையறை பற்றியனஇக்காலத்துக் கிட்டியுள்ளன. இது தொல்காப்பியத்தில் விரிக்கப்பட்டசெய்தியை வகுத்துக் கூறிய நூலாகும். |
பல்காயனார் | பல்காயம் எனத் தம் பெயரால் ஓர் யாப்பிலக்கண நூல் இயற்றியவர். (தொ.மர. 95 பேரா. உரை) |
பல்காயம் | யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பண்டையயாப்புநூல்களுள் ஒன்று. இதன் நூற்பாக் களுள் 26 மேற்கோளாகக்காட்டப்பெற்றுள. அவை யாப்புறுப்புக்கள், அசை, சீர், தொடை, விட்டிசை,சீர் மயக்கம், அடிவரையறை, கூன், அடி வரையறை இல்லன-என்பன பற்றியனவாம்.(யா. வி. பக். 17 முதலியன) |
பல்சந்தமாலை | பத்துக் கவி முதலாக நூறுகவி ஈறாகச் சந்தம் பத்துவகை யாகப்பாடப்படுவதொரு பிரபந்தவகை. (இ. வி. பாட். 74) |
பல்லாண்டு | பெரியாழ்வாரால் அருளப்பட்ட பிரபந்தம்; பாட்டுடைத் தலைவனாம்நாராயணனைப் “பல ஆண்டு வாழ்க!” என ஏனை மக்களை வாழ்த்துவது போலவாழ்த்துவது.திவ்விய பிரபந் தத்தின் தொடக்கமாக அமையும் பன்னிரண்டுபாசுரம் அடங்கிய பதிகம் இது. சேந்தனார் அருளிய பல்லாண்டு ஒன்பதாம்திருமுறையுள் உள்ளது. (L) |
பல்வகைப் பெயரின் எச்சம் முன் வலிஇயல்பாதல் | எ-டு : உண்ட, உண்ணாநின்ற + குதிரை, செந்நாய், தகர், பன்றி எனத்தொழில்கொள் பெயரெச்சம் முன் இயல்பாயின.பொன்னன்ன, பொன்போன்ற, பொன்னனைய, பொன்னி- கர்த்த, பொன்னொத்த +குதிரை, செந்நாய், தகர், பன்றி என உவமைப்பண்பு கொள் பெயரெச்சம் முன்இயல்பாயின.பெரிய, சிறிய, செய்ய, இனிய, தண்ணிய + கமலம் – சரோருகம் – தாமரை -பங்கயம் எனப் பலவகைப் பண்புகொள் பெய ரெச்சம் முன் இயல்பாயின.உண்ணாத, தின்னாத + குதிரை, செந்நாய், தகர், பன்றி எனப் பெயரெச்சஎதிர்மறை முன் இயல்பாயின. (நன். 166 மயிலை.) |
பள் | (‘பள்’ உகரச்சாரியை பெற்றுப் ‘பள்ளு’ என வரும்.)1. நாடகப் பிரபந்தவகை. எ-டு: ‘முக்கூடற்பள்ளு’2. காளி முதலிய தெய்வங்கட்குப் பலி கொடுக்குங் காலத்துப்பாடப்படும் ஒரு பண். (L) |
பள், கள் புணருமாறு | பள், கள் என்பன ‘புள்’ என்ற பொருட்பெயர் போல இரு வழியும் உகரச்சாரியையும் பெற்றுப் புணரும். இருவழியும் ளகரம் டகரமாய்த் திரிந்துமுடிதலும் ஆம்.வருமாறு : பள்ளுக்கடிது, பள்ளுக்கடுமை; பட்கடிது, பட் கடுமை;கள்ளுக்கடிது, கள்ளுக்கடுமை; கட் கடிது, கட்கடுமை, (404 இள.உரை.) |
பள்ளியெழுச்சி | அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் பிரபந்தம். (L) |
பள்ளு | ‘பள்’ காண்க. |
பவ்வீ, நீ, மீ முன் வல்லினம் வந்துபுணருமாறு | ‘பீ’ என்னும் இடக்கர்ப்பெயர், நீ என்னும் முன்னிலைப் பெயர், மேலாயபண்பையும் மேலிடத்தையும் உணர்த்தும் மீ என்னும் சொல் – இவற்றின்முன்வருமொழி முதல் வன்கணம் வருமிடத்தே அல்வழிக்கண் இயல்புபுணர்ச்சியாம்.மீ இயல் பாகப் புணர்தலேயன்றி வலியும் மெலியும் மிக்குப் புணர்தலுமுண்டு.எ-டு : பீகுறிது, நீ குறியை, மீகண்; மீக்கூற்று,மீந்தோல்மீகண் என்பது கண்மீ என்பதன் இலக்கணப்போலி யாய் அல்வழி ஆயிற்று.மீக்கூற்று – மேலாய சொல் லாற் பிறந்த புகழ் எனப் பண்புத்தொகை அன்மொழி.மீந்தோல் – மேலாய தோல் எனப் பண்புத்தொகை.(நன். 178 சங்.) |
பாகதம் | நாடுகளெல்லாம் வழங்கும் மொழி பாகதமாம். (மு. வீ. மொழி. 30) |
பாகதவகை | தற்பவம், தேசிகம், தற்சமம் என பாகதம் மூவகைப்படும்.(மு. வீ. மொழி. 31) |
பாக்களின் பண்புகளை எடுத்துரைக்கவல்லோர் | அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆமாறு சொன்ன நூல் களுள்ளும், அவைசார்பாக வந்த சோதிடமும் சொகினமும், வக்கின கிரந்தமும், மந்திரவாதமும்,மருத்துவ நூலும், சாமுத் திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும்,பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கலநூலும் முதலாயவற்றுள்ளும் உள்ள மறைப்பொருள் உபதேசிக்க வல்லராய், கவிப்பெருமையோடு,சாவவும் கெடவும் பாடுமாறும் மனத்தது பாடுமாறும் பாடப்படுவோருக்குவரும் நன்மையும் தீமையும் அறியுமாறும் வல்லராய், உரைக்கவல்லசான்றோர்கள். அவ்வல்லோராவர். (யா. வி. பக். 491) |
பாசண்டங்கள் | வைதிக சமயத்தின் மாறுபட்ட புறச்சமயக் கொள்கைகளைக் குறிப்பிடும்நூல்கள். இவற்றின் அடிகள் சொற்சீரடியின் பாற்படும். (யா. வி. பக்.373) |
பாடக மடக்கு | பாடகம் என்பது வளைவாக மடங்கியிருக்கும் ஒரு வகைக் காலணி. இக்காலணியை மடக்குவது போல இரண்டிரண்டு அடிகள் ஒரே அளவினை உடையனவாய்மடங்குவது பாடக மடக்காம்.எ-டு : ‘ஓத நின்றுல வாவரும் வேலைவாய்மாத ரங்க மலைக்கு நிகரவேஓத நின்றுல வாவரும் வேலைவாய்மாத ரங்க மலைக்கு நிகரவே.’ஓத நின்று உலவா அரு வேலைவாய் மாதர் அங்கம் அலைக்கும் நிகரவே, ஓதம்நின்று உலவாவரும் வேலைவாய் மாதரங்கம் மலைக்கு நிகரவே-நின்று சொல்லமுடியாத அரிய காலத்தின்கண் இப்பெண்ணுடைய உறுப்புக்களைத்துன்புறுத்துமாறு (அக்கால நிகழ்ச்சிகள்) பொருந்தின; வெள்ளம்நிலைபெற்று உலவி வருகின்ற கடலில் பெரிய திரைகள் மலைக்கு ஒப்பாகஇருக்கும்.முதல் ஈரடியும் மீண்டு பின் ஈரடிகளாக மடக்குதலின், பாடகமடக்காயிற்று, இப்பாடல். (தண்டி. 96) |
பாடலனார் உரை | பாடலனார் என்பாரால் உரைக்கப்பட்ட இலக்கணநூல். இதன்கண், நூல்,நூல்வகை, நாற்பயன், எழுமதம், பத்து வகைக் குற்றம், பத்துவகை வனப்பு,முப்பத்திருவகை உத்தி என்பன விளக்கப்பட்டுள்ளன. (யா. வி. பக்.427) |
பாடியகாரர் | பாணினீயத்தின் பேருரையாசிரியரான பதஞ்சலி. (பி.வி. 1 உரை)(L) |
பாடியம் | பாஷ்யம்; விருத்தியுரையாகிய பேருரை. (L) |
பாடுதுறை | 1) புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை; ‘பாடுதுறை முற்றிய கொற்றவேந்தே’ (புறநா. 21 )2) தத்துவராயர் பாடிய பல (வேதாந்தி பனுவல். (L) |
பாட்டின் வகை | பா உறுப்பான் எழுந்து ஒலிக்கும் பாட்டின் வகையாவன – ஆசுகவி,மதுரகவி, சித்திரகவி, அகலக்கவி என்பன. (இ.வி.பாட். 3) |
பாட்டியல் | பிரபந்த இலக்கணம் கூறும் நூல். பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் முதலாயின காண்க. |
பாட்டியல் கூறும் பாச் செய்திகள் | வெண்பா முதலிய நால்வகைப் பாவிற்கும் அவற்றின் இனங்களுக்கும் நிறம்,திணை, பூ, சாந்து, புகை, பண், திறன், இருது, திங்கள், நாள், பக்கம்,கிழமை, பொழுது, கோள், இராசி, தெய்வம், திசை, மந்திரம், மண்டிலம்,பொறி, எழுத்து முதலாகிய பண்புகள் கூறப்படும். இவற்றை அறிந்துஆராதிப்ப, இவை யாவர்க்கும் கல்வியும் புலமையுமாக்கி நன்மை பயக்கும்.இவை யெல்லாம் திணைநூலுள் விரிக்கப் படும். (யா. வி. பக். 488) |
பாட்டியல் நுவல்வன | பாட்டு, நூல், உரை, பிசி, முதுசொல், மந்திரம், குறிப்புரை, வழக்குமரபு, செய்யுள் மரபு, வருண மரபு, நாற்புலவர், அவை, அகலக்கவியைச்செய்து கொடுப்போர், அகலக்கவி கொள் வோர் இப் பதினான்கு திறத்தஇலக்கணமும் ஆம். (இ. வி. பாட். 1 ) |
பாட்டியல் மரபு | இந்நூல் இறந்துபட்டதொரு பாட்டியல் பற்றிய நூல். இது ‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்னும் குற்றத்திற்கு இலக்கியமாகப்பேராசிரியரால் (தொ. பொ. 663) குறிப்பிடப் பட்டுள்ளது. பாட்டியல்கூறும் பத்துவகைப் பொருத்தம் போல்வன அவருக்கு உடன்பாடல்ல.இந்நூலின் 3 நூற்பாக்கள் ஆரிடச் செய்யுளுக்கும் அச் செய்யுள்பாடுவோருக்கும் உரிய இலக்கணங்களை உணர்த்து வனவாக யாப்பருங்கலவிருத்தியில் (பக். 370, 371) மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன. |
பாணினி, பாணினீயம் | பாணினியால் இயற்றப்பட்ட இலக்கணத்தின் பெயர் பாணி னீயம். பாணினிபாரத நாட்டின் வடமேற்குக் கோடிப் பகுதி யில் வாழ்ந்தவர். இவரது காலம்கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியது. ஏறத்தாழ 4000 சூத்திரங்களைக்கொண்ட வடமொழி இலக்கணநூலைப் பாணினி இயற்றினார். இவர் தமக்கு முன்வாழ்ந்த இலக்கணம் வல்லார் அறுபத்து நால்வர் இந்நூலுள்குறிக்கப்பட்டுள்ளனர். தம் காலத்துக்கு முற்பட்ட நூல்கள் ஆகியதாதுபதம், கணபதம் என்ற இரண்டனையும் பாணினி குறித்துள்ளார். தாதுமஞ்சரி, பதமஞ்சரி எனப் பிற் காலத்தெழுந்தவை அவற்றை அடியொற்றியனவே.பாணி னியே உத்திவகைளை முதன் முதலாகக் கையாண்டவர். அவ்வுத்தி வகைகள்‘பாஷேந்து சேகரம்’ என்ற நூலாகச் 18ஆம் நூற்றாண்டில்அமைக்கப்பட்டுள.பாணினியால் மிகுதியும் குறிப்பிடப்பட்டவர் சாகடாயநர், கார்க்கியர்,சாகல்யர் முதலானோர். பெயர்ச்சொற்கள் யாவும் வினைப்பகுதியாகியதாதுக்களிலிருந்து தோன்றிய னவே என்ற சாகடாயநர் கொள்கையைப் பாணினி தம்நூலில் முழுதும் அடியொற்றியுள்ளார்.பாணினீயம் தோன்றிய பின்னர் ஏனைய இலக்கணங்கள் மறைந்துவிட்டசெய்தியொன்றே இதன் பெருஞ்சிறப்பினைக் காட்டும்.கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாணினீயத்தில் 1245 சூத்திரங்களுக்குக் காத்தியாயனர் என்ற வரருசி வார்த்திகம் (-காண் டிகை) ஒன்றுவரைந்தார். அடுத்துக் குணிவிருத்தி முதலிய உரைகள் தோன்றின. கி.மு.முதல் நூற்றாண்டில் பதஞ்சலி யால் வரையப் பட்ட மாபாடியம் என்ற பேருரைஇப்போது 1713 சூத்திரங்களுக்கே கிடைத்துள்ளது.பாணினீயம் முழுமைக்கும் கி.பி. 650-ஐ ஒட்டிய காலத்தில் காசி நகரில்வாழ்ந்த ஜயாதித்யர், வாமநர் என்ற பெருமக்க ளால் காசிகாவிருத்தி என்றவிளக்கவுரை இயற்றப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டில் பர்த்ருஹரி என்பவரால்மாபாடிய விளக்கமான வாக்கியபதீயம் என்ற நூலும், 13ஆம் நூற்றாண் டில்கையடர் என்பவரால் கையடம் என்ற நூலும் இயற்றப் பட்டன. 15ஆம்நூற்றாண்டில் இராமபத்திரர் என்பவரால் பிரகிரியா கௌமுதி என்ற நூல்இயற்றப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் பட்டோஜீ என்பவரால் சித்தாந்தகௌமுதி இயற்றப்பட்டது; அஃது இன்னும் எளிமையாக்கப்பட்டு 19ஆம்நூற்றாண்டில் வரதாசர் என்பவரால் லகு கௌமுதி என்று சுருக்கிவரையப்பட்டது. (பி. வி. பக் 434-436) |
பாதமடக்கு | எழுத்துமடக்கு, அசை மடக்கு, சீர் மடக்கு, அடிமடக்கு என்ற மடக்குவகைகளில் சிறப்பான மடக்கு அடிமடக்கு எனப்படும். இம்மடக்கு இரண்டடிமடக்குதலும், மூன்றடி மடக்குதலும் நான்கடி மடக்குதலும் எனமூவகைப்படும்.முதல் ஈரடி மடக்குதல், முதலடியும் மூன்றாமடியும் மடக்கு தல்,முதலடியும் ஈற்றடியும் மடக்குதல், கடையிரண்டையும் மடக்குதல்,இரண்டாமடியும் ஈற்றடியும் மடக்குதல், இடையீரடி மடக்குதல் என ஈரடிமடக்கு ஆறும்; ஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல், இரண்டாமடிஒழித்து ஏனைய மூன்றடியும் மடக்குதல், மூன்றாமடி ஒழித்து ஏனை மூன்றடிமடக்குதல், முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல் – என மூவடிமடக்கு நான்கும்;நான்கடியும் மடக்குதலாகிய மடக்கு ஒன்றும்; ஒரு சொல்லானே நான்கடிமுழுதும் மடக்கும் சொல்மடக்கு ஒன்றும்; இரண்டடியாக மடக்கும் பாதமடக்கு1, 2 – 3, 4; 1, 3 – 2, 4; 1,4 – 2, 3 என மடக்கும் மூன்றும்; பாடகமடக்கு ஒன்றும்;எனப் பாதமடக்கு 6+4+1+1+3+1 = 16 ஆகும். (தண்டி. 96 உரை) |
பாதமயக்கு | மூவர் மூன்று ஆசிரிய அடி சொன்னால், தான் ஓரடி பாடிக் கிரியைகொளுத்துவது.எ-டு : ‘ஈயல்புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகநா. 8-1)கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37)நன்னாள் பூத்த பொன்னிணர் வேங்கை (அகநா. 85 – 20) மலர்கொயலுறுவதென் மனமவள் மாட்டே’இது பழவடி மூன்றினொடு தாம் ஓரடி பாடிப் பாக்கணார் பாடிய பாதமயக்கு. (யா. வி. பக். 541) |
பாதாதி கேசம் | தலைமக்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவால் பாதம் முதல் முடி அளவும்கூறும் பிரபந்தம். சிறப்பாகத் தெய்வங்களை அவ்வாறு பாடுப. (இ. வி.பாட். 111) |
பாதிச் சமச் செய்யுள் | அளவழிச் சந்தங்களுள் நான்கடியும் சீர் ஒத்து முதலிரண் டடியும்எழுத்து மிக்குக் கடையிரண்டடியும் எழுத்துக் குறைந்து வருவதாம்.எ-டு : ‘மடப்பிடியை மதவேழம்தடக்கையால் வெயில்மறைக்கும்இடைச்சுரம் இறந்தோர்க்கேநடக்குமென் மனனேகாண்’இவ்வஞ்சித் தாழிசையுள் முதலிரண்டடியும் 9 எழுத்து; கடையிரண்டும் 8எழுத்து. (யா. வி. பக். 516) |
பாதிச் சமப்பையுட் சந்தம் | அளவழிச் சந்தச் செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்துமுதலடியெழுத்தும் மூன்றாமடி எழுத்தும் எண்ணிக்கை வேறாய் இரண்டாமடிநான்காமடி எழுத்து எண்ணிக்கை ஒத்து வருவது.எ-டு : ‘செஞ்சுடர்க் கடவுள் திண்டேர் இவுளிகால் திவளஊன்றும்மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயில் மாடத்தஞ்சுடர் இஞ்சி ஆங்கோர் அகழணிந் தலர்ந்த தோற்றம்வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.’ (சூளா.38)இதன்கண் முதலடி எழுத்து 17; மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடிநான்காமடி எழுத்து 15 என அமைந்துள்ள வாறு. (யா. வி. பக் 518) |
பாதிச்சம விருத்தம் | முதலடியும் மூன்றாமடியும் எழுத்துக் குறைந்தும் ஏனை இரண்டடியும்எழுத்து மிக்கும் நான்கடியும் சீர் ஒத்து வந்த அளவழிச் சந்தப்பாடல்.எ-டு : ‘மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்துவெய்யகையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தின்மையற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலைநெய்யற நிழற்றும் வேலோய் நினைத்தனை நினைக்க என்றான்’ (சூளா.198)இதன்கண், முதலடி மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடி நான்காமடிஎழுத்து 17 என அமைந்துள்ளவாறு. (யா. வி. பக். 517) |
பாமாலை | பெரும்பான்மையும் இறைவனைப் பற்றிய துதிப்பாடல்க ளாகிய பதிகம்,இரட்டை மணிமாலை, நான்மணிமாலை முதலாயின. ‘மாலை’ என்றமையால் அந்தாதியாகவரத் தொடுப்பது சிறப்புடைத்து. (L) |
பாயிர விருத்தி | தொல்காப்பியப் பாயிரத்துக்கு வரையப்பட்ட விருத்தியுரை.அரசஞ்சண்முகனார் இயற்றிய ‘பாயிர விருத்தி’ சென்ற நூற்றாண்டின்தொடக்கத்தில் இயற்றப்பட்ட விழுமிய தொரு விருத்தி. அவருக்கு முன்னர்மாதவச் சிவஞான முனிவர் பாயிரவிருத்தி எழுதியுள்ளார். |
பாரதியார் யாப்பு | மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய கவிதைகளுள் வசன கவிதைகளும்இன்ன என்று யாப்பு வரையறுக்க இயலாத பாடல்களும் நீங்கலான பிறவெல்லாம்வெண்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக்கலிப்பா, கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சித் துறை, கண்ணி, சிந்து,தாழிசை, கீர்த்தனை, தரவு கொச்சகக்கலிப்பா என்னும் யாப்புள் அடங்குவன.அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்களே மிக்குப் பயில்கின்றன.கட்டளைக் கலித்துறை, வஞ்சித்துறை என்பன அருகியே நிகழ்கின்றன. ‘புதியஆத்திசூடி’ சொற்சீரடி யாப்பிற்று. கலிவெண்பா யாப்பும் ஆண்டாண்டுநிகழ்கின்றமை காணலாம். (இலக்கணத். முன்.பக். 110, 111 ) |
பாரிசேடம் | பாரிசேடம் – எஞ்சியது. இது பிரமாணங்களுள் ஒன்று. பகுபதத்துள் பகுதிவிகுதி முதலிய உறுப்பெல்லாம் பகாப்பதம் ஆயினும், விகுதி முதலியவற்றைமேல் விதந்து கூறலின், ஈண்டுத் ‘தத்தம் பகாப்பதங்கள்’ என்றதுமுதனிலைகளையே என்பது பாரிசேடத்தால் பெற்றாம். (பிரமாணம் – அளவை) (நன்.134 சங்கர.) |
பாற்பொருத்தம் | செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் ஒன்று. குற்றெழுத்துஐந்தும் ஆண்பாலாம்; நெட்டெழுத்து ஏழும் பெண்பாலாம்; ஒற்றும் ஆய்தமும்பேடாம். ஆண்பாலைக் கூறுமிடத்து ஆண்பால் எழுத்துக்கள் அமையும். பெண்பாலைக் கூறுமிடத்துப் பெண்பால் எழுத்துக்கள் அமையும். இம்முறைமயங்கினும் அமையும். (இ. வி. பாட். 13) |
பாலாசிரியன் | பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப்பாலாசிரியர் நற்றாமனார்(அகநா. 92) பாடியுள்ளமை காண்க. |
பாலும் நீரும் போல | மெய்யும் உயிரும் உயிர்மெய்க்கண் முன்னும் பின்னும் பெற நிற்கும்என்றமையால், அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன்கலந்ததாகும்;விரல்நுனிகள் தலைப்பெய்தாற் போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது. (தொ.எ. 18 இள. உரை) |
பால்வரை கிளவி | ஒருபொருளின் பகுதியை உணர்த்தும் சொற்களாகிய அரை, கால், முக்கால்,அரைக்கால் முதலியன.செம்பால் – சமபாதி (தொ. பொ. 463 பேரா.)பால் – ஒன்று பிரிந்து பலவாகிய கூற்றின்மேற்றாதல்.(தொ. பொ. 13 நச். உரை) |
பாளித்தியம் | பிராகிருத மொழிகளில் ஒருவகையாகிய பாளி மொழிக்கு அமைந்த இலக்கணம்கூறும் நூல். யாப்பருங்கலக்காரிகை இப்பாளித்தியம் போலக் காரிகையாப்பிற்றாக இருத்தலை அதன் உரையாசிரியர் குணசாகரர் சுட்டுகிறார். (யா.கா. பாயிர உரை) |
பாழ் என்ற சொல் புணருமாறு | பாழ் என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின்அவ்வல்லெழுத்தினோடு ஒத்த மெல் லெழுத்தும் மிக்கு முடியும்.எ-டு : பாழ் + கிணறு = பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறுஇது பாழுட் கிணறு என ஏழாவது விரியும். வினைத்தொகை யாயின்,பாழ்கிணறு என இயல்பாகவே புணரும். (தொ. எ. 387 நச். உரை) |
பாவிற்கு நிறஉரிமை | வெண்பாவிற்கு நிறம் வெண்மை, ஆசிரியப்பாவிற்கு நிறம் செம்மை;கலிப்பாவிற்கு நிறம் கருமை; வஞ்சிப்பாவிற்கு நிறம் பொன்மை ஆகும். (இ.வி. பாட். 119) |
பாவிற்கு வருண உரிமை | வெண்பா அந்தணர்க்குரிய பா; அகவல் அரசர்க்குரிய பா; கலிப்பாவணிகர்க்குரிய பா; வஞ்சிப்பா வேளாளர்க்குரிய பா ஆகும். (இ. வி. பாட்.117) |
பாவிற்குத் திணை உரிமை | முல்லைத்திணைக்கு வெண்பாவும், குறிஞ்சித்திணைக்கு ஆசிரியப்பாவும்,மருதத்திணைக்குக் கலிப்பாவும், நெய்தல் திணைக்கு வஞ்சிப்பாவும்உரியனவாம். (இ. வி. பாட். 118) |
பாவில் புணர்ப்பு | ஒரு செய்யுள் நான்கு அடி யுடையதாக நால்வர் நான்கடி களுக்கும்ஈற்றுச் சீர்களைச் சொல்ல ஒருவன் ஏனைய சீர்களைப் பாடிச் செய்யுளைநிரப்பிக் கொடுப்பது என்ற சித்திரகவி வகை. (வீ. சோ. 181 உரை)நால்வர் முறையே பதியே, நதியே, யதியே, விதியே என்ற ஈற்றுச்சீர்களைக் கூற, ஒருவன்,‘பதிகளிற் சிறந்தது அரங்கப் பதியேநதிகளிற் சிறந்தது பொன்னிநன் னதியேயதிகளில் மிக்கோன் பூதூர் யதியேவிதிகளில் தக்கது வாய்மைசொல் விதியே’என்றாற்போலப் பாடி முடிப்பதாம்.பாவின் புணர்ப்பாவது நால்வர் நான்கு பாவிற் கட்டுரை சொன்னால் அவையேஅடிக்கு முதலாகப் பாடிப் பொருள் முடிப்பது.எ-டு : மலைமிசை எழுந்த மலர்தலை வேங்கை பொத்தகத் திருந்த நெய்த்தலைத் தீந்தேன் கண்டகம் புக்க செங்கண் மறவன் யாழின் இன்னிசை மூழ்கவீடுகெழு பொதியில் நாடுகிழ வோனே.’தடித்த எழுத்தின, நால்வர் நான்கு பாவில் உரைத்த கட்டுரை யின்தொடக்கச் சொற்கள். அவை முறையே முதல் நான்கடி களிலும் முதற்சீராக அமைய,இந்நேரிசை ஆசிரியப்பாப் பொருள் முற்ற இயற்றப்பட்டமையின் ‘பாவின்புணர்ப்பு’ ஆகும். (யா. வி. பக். 541) |
பாவைப்பாடல்கள் | பாவைப்பாடல்கள் ஒரே விகற்பத்தனவாகிய நாற்சீரடி எட்டுக் கொண்டபாடல்களாம். இவை வெண்டளையே பெற்று வருவன. பாடல் நிரையசையில்தொடங்கின், மிக அருகி ஈற்றுச்சீர் அடுத்த அடி முதற்சீரோடு இணையுமிடத்தே கலித்தளை வருதலுமுண்டு. நேரசையில் தொடங்குவன வெண்டளை பிறழாமல்வரும். இவை உண்மையில் ஈற்றடி அளவடியாக்கப்பட்ட பஃறொடை வெண்பாக்களேஎனலாம். வெண்பாக்களின் ஈற்றடியும் நாற்சீரடியாக்கப்படும் மரபுதொல்காப்பியத்தில் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது (செய். 72 நச்.)பிற்காலத்தார் முழுதும் வெண்டளையாக வரும் இப்பாவைப்பாடலைத் தரவுகொச்சகம் என்று கூறுவா ராயினர். திருவாசகத்தில் வரும் அம்மானைப்பாடல்களும் பாவைப்பாடல் போன்றனவே. நேரசையில் தொடங்கும் அம்மானைப்பாடல் ஈற்றடியும் அளவடியாக நிரம்பிய ஆறடிப் பஃறொடை வெண்பாவே. அதனையும்பிற்காலத் தார் தரவு கொச்சகம் என்ப.பாவைப்பாடல் ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிதலும், அம்மானைப்பாடல்‘அம்மானாய்’ என முடிதலும் மரபு. |
பாவைப்பாட்டு | “ஆசிரியங்களும் பாவைப்பாட்டும் அன்ன பிறவும் குறில் அகவல் தூங்கிசைவண்ணம் உடையன” என்பது. (யா. வி. உரை. பக். 415)திருப்பாவை, திருவெம்பாவை பாவைப்பாட்டுக்கு நூலாக அமைந்தஎடுத்துக்காட்டாம். இவை (பெரும்பான்மையும்) வெண்டளை பிறழாமல்அளவடியால் நிகழும் எட்டடிப் பாடல்கள்; பாடல்கள் ஒத்த அடி எதுகையால்ஒரு விகற்பம்பட நிகழ்ந்து ‘ஏலோரெம்பாவாய் என முடியும். ‘கோழியும்கூவின’ என்னும் பாவைப்பாட்டு ஐந்தடியால் நிகழ்ந்தது. (யா. வி. பக்.363) |
பாவைப்பாட்டு (2) | ஈரசை, மூவசைச் சீர்களான் இயன்ற நாற்சீரடி எட்டான் அமைந்து, வெண்பாயாப்பால், இசையொடு பொருந்தி, பாவை நோன்பு மேற்கொள்ளும் கன்னியரால்,வைகறையில் நன்னீராடற் பொருட்டு ஏனைய மகளிரைத் தம்மோடு உடன் வருமாறுதுயிலெடைநிலையாக, பாடப்பெறுவதே பாவைப்பாட்டாம்.எ-டு : ஆண்டாள் அருளிய திருப்பாவை, மணிவாசகர் அருளியதிருவெம்பாவை. (தென். இசைப். 16)(ஓரடியின் இறுதிச் சீர்க்கும் அடுத்த அடியின் முதற்சீர்க்கும்இடையே தளை இழுக்கினும் அமையும்) |
பாவையாடல் | பெண்பாற்பிள்ளைத் தமிழின் உறுப்புக்களுள் ஒன்று; பாட்டுடைத் தலைவிபாவையை வைத்துக்கொண்டு விளை யாடுதல். (திவா. பக். 310) |
பிங்கலகேசி | பொன்னிறமான மயிர்முடியை உடையாளொரு தலைவி யினுடைய பிறப்பு பண்புவரலாறு ஆகியவை கூறும் தொடர் நிலைச் செய்யுளும் அவள் பெயரால்அப்பெயர்த் தாயிற்று.பிங்கலகேசியின் முதற்பாட்டின் இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப்புரிக்காகப் புணர்க்கப்பட்டது. (யா. வி. பக். 39, 520) |
பிங்கலம் | பிங்கலம் வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன்கண் விருத்தசாதிவிகற்பங்கள் பலவும் விரித்துக் கூறப் பட்டுள்ளன. நான்கடியும் ஒத்தும்ஒவ்வாதும் பருவனவும், இரண்டடி ஒத்து நான்கடியால் வருவனவும்,பிறவாற்றான் வருவனவும், மாராச்சையும் மிச்சாகிருதி முதலாகிய சாதியும்,ஆரிடமும் பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும் பிங்கலம் முதலியவடமொழி யாப்புநூல்களில் விரித்துக் கூறப்பட் டுள்ளன. (யா. வி. பக்.370, 486) |
பிச்சியார் | கலம்பக உறுப்புப் பதினெட்டனுள் ஒன்று; சைவத்தவக் கோலத்தில் பிச்சையிரந்து நிற்பாளொருத்தியைக் காமுகன் ஒருவன் காமுற்றுப் பாடுவது.தவ வேடத்தில், நெற்றியில் திருநீறு அணிந்து கையில் சூலம் ஏந்திஇல்லம்தோறும் பிச்சை ஏற்றுச் செல்லும் இளம்பெண் ணின் வடிவழகு தன்உள்ளத்தைப் பிணித்த செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக்கூறுவதாகஅமைந்த அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல் இது. (மதுரைக்கல. 33) |
பிடா என்ற மரப்பெயர் புணருமாறு | பிடா என்ற மரப்பெயர் வருமொழி வன்கணம் வந்துழி, அகரஎழுத்துப்பேறளபெடையோடு, இனமெல்லெழுத்து மிகுத லும், அவ்வல்லெழுத்தேமிகுதலும், உருபிற்குச் செல்லும் இன்சாரியை பெறுதலும் ஆம்.எ-டு : பிடா + கோடு = பிடாஅங்கோடு, பிடாஅக்கோடு, பிடாவின்கோடு;பிடாஅத்துக் கோடு என அத்துப் பெறுதலுமுண்டு. (தொ. எ. 229, 230 நச்.உரை) |
பிட்டன் + கொற்றன் : புணருமாறு | பிட்டனுக்கு மகன் கொற்றன் என்ற கருத்தில், நிலைமொழி ‘அன்’ கெட்டு‘அம்’ புணர்ந்து, அது வருமொழிக் கேற்பத் திரிந்தது என்று கூறுவதைவிட,நிலைமொழி ஈற்று னகரம் வருமொழிக்கேற்ற மெல்லெழுத்தாகத் திரியும் என்றல்ஏற்றது.பிட்டன் + கொற்றன் = பிட்டங் கொற்றன்; அந்துவன் + சாத்தன் =அந்துவஞ் சாத்தன்; விண்ணன் + தாயன் = விண்ணந்தாயன்; கொற்றன் + பிட்டன்= கொற்றம் பிட்டன் (எ. ஆ. பக். 158) |
பிந்துமதி | சித்திரகவியுள் ஒன்று. எல்லா எழுத்தும் புள்ளியுடையன வாகவேவருவது.எ-டு : ‘நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென்செய்கொண்டென் செம்பொன்கொண் டென்.’(முன்பு எகர ஒகரங்கள் குறில் எனக் காட்டப்புள்ளி பெற்ற னவாய்எழுதப்பட்டன.) (யா. வி. பக். 548) |
பின் என்ற சொல் புணருமாறு | பின் என்ற சொல் பின்னுதல் தொழிலையும், கூந்தலை வாரிப் பின்னியபின்னலையும் உணர்த்தும். இஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும்வன்கணம் வந்துழி உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வந்துழி உகரமும், உயிர் வந்துழி ஒற்றிரட்டுதலும் பெற்றுப்புணரும்.எடு : பின்னுக்கடிது; பின்னு நன்று, பின்னு வலிது, பின் யாது,பின் னரிது; பின்னுக்கடுமை; பின்னுநன்மை, பின்னுவலிமை, பின்யாப்பு,பின்னருமை. (தொ. எ. 345 நச்.)பின் என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களுள்ஒன்று. இது பெயராகவும் வினை யெச்சமாகவும் நிற்கும். இடைச்சொல்லும்வினையெச்சமும் இயல்பாக முடியும்.எ-டு : என்பின் சென்றான், உண்டபின் சென்றான்பின் என்ற பெயர் வன்கணம் வருமொழியாக வந்துழி, பிற் கொண்டான் – எனனகரம் றகரமாகத் திரிந்தும், பின்கொண் டான் – என இயல்பாகவும் புணரும்.(தொ. எ. 333 நச்.) |
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறல் | ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்றவற்றை முறையே இறந்ததுவிலக்கல், எதிரது போற்றல் – என்னும் உத்திகளால் விலக்கியும்போற்றியும் கூறுதல் முதலியன (வழிநூற்குப்) பின்னோன் வேண்டும் விகற்பம்கூறலாம். (நன். 7 சங்கர.) |
பிபீலிகா மத்திமம் (1) | முதலடியும் ஈற்றடியும் எழுத்து மிக்கு, நடு இரண்டடியும் எழுத்துக்குறைந்து நாலடியும் சீரொத்து வரும் செய்யுள்.எ-டு : ‘பரவு பொழுதெல்லாம் பன்மணிப்பூட் டோவாவரவும் இனிக்காணும் வண்ணநாம் பெற்றேம்விரவு மலர்ப்பிண்டி விண்ணோர் பெருமான்இரவும் பகலும்வந் தென்தலைமே லானே’இதன்கண் முதலடியும் ஈற்றடியும் 13 எழுத்துப் பெற்றுவர, நடுஇரண்டடியும் 12 எழுத்துப் பெற்று வந்தவாறு. இஃது எறும்பின் உடலின்இடைப்பகுதிபோல இடையடிகள் இரண்டும் எழுத்துக் குறைந்துசுருங்கிவருவதால், தமிழில் ‘எறும்பிடைச் சந்தச் செய்யுள்’ என்று இதனைமொழி பெயர்த்துக் கூறுவர். (யா. வி. பக். 515) |
பிபீலிகா மத்திமம் (2) | எறும்பின் உடலிடை போல இடைப்பகுதி சுருங்கிவரும் பாடல்;‘எறும்பிடைச் சந்தச் செய்யுள்’ என (யா.வி.உரை) குறிக்கும் பாடல் (பக்.518), அளவழிச் சந்தச் செய்யுளெனவும் வழங்கும். அளவழிச்சந்தச்செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்து, முதலடியும் முடிவடியும்எழுத்தெண்ணிக்கையில் ஒத்து, இடையிரண்டடியும் ஓரோரெழுத்து முறையேஎண்ணிக்கை குறைய நிகழ்வது இது; மேலைப் பிபீலிகா மத்திமத்தின் (1)சிறிதே வேறுபட்டது. (வீ.சோ. 139 உரை)எ-டு : மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும்சந்தனத்துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும்அணிமலர் நாற்றமும் என்ன அன்னவால்அணிவரு சிவகதி அடைவ தின்பமே’. (சூளா. 2075)இதன்கண், முதலடியும் ஈற்றடியும் எழுத்து 14; இரண்டாமடி எழுத்து 13;மூன்றாமடி எழுத்து 12 – என வந்தவாறு. |
பிரகிருதி | இது தமிழில் முதனிலை எனவும், பகுதி எனவும் கூறப்படும். இதுபகுபதத்தினது முதல் பிரிவாய் நிற்றலின் முதனிலை (முதல் நிலை)எனப்பட்டது. பகாப்பதத்தின் சொல் முழுதும் பகுதியாம். இப்பகுதி,இடைநிலை விகுதி முதலிய ஏனை உறுப்புக்களொடு சேருமிடத்துவிகாரப்படுதலுமுண்டு. இரு, இடு முதலிய விகுதிகள் தன்னொடு சேரும்போதுஅவற்றைத் தன்னுள் அடக்கிய பகுதியாதலுமுண்டு. பகுதி இல்லாத சொல்லேஇல்லை எனலாம்.எ-டு : உண்டான் – உண் : பகுதியானை – இப்பகாப்பதம் முழுதும் பகுதி.வந்தான் – வா என்ற பகுதி குறுகி வ என நின்றது.எழுந்திருந்தான் – எழுந்திரு : பகுதிநட (ஏவலொருமை) – நட : பகுதி; ‘ஆய்’ விகுதி குன்றி வந்தது. (சூ.வி. பக். 41) |
பிரகிருதி | எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்கு 21 எழுத்தாக வரும்நாலடிச் செய்யுள்.எ-டு : ‘கந்தாரம் பாடியாடும் கான்மதுக ரமும் கன்னிகாரமும்செருந்தும்கொந்தாரும் குரவமும்கான் மலிதருங் கோகிலமும் தாதுகோதும்சந்தாரங் கோவையா ரமுந்தருணன் தடகடஞ்சா ரணங்கெள்ளிப்பார்வந்தார்தம் தேர்மிசையால் வரவுதனை அறிகுதிவண் தோகை நல்லாய்.’(வீ.சோ. 139 உரை) |
பிரத்தரித்தல் | பிரத்தாரஞ் செய்தல். (L) |
பிரத்தாரம் | கட்டளையடியிற் பல்வேறு வகையாக வரக்கூடும் அசை களையெல்லாம்மொத்தக் கணக்கிடுகை(யா. வி. பக். 503. ) (L) |
பிரத்தியயம் | விகுதி இடைநிலை வேற்றுமையுருபுகள் ஆகிய இடைச் சொற்கள் வடமொழியில்பிரத்தியயம் எனப்படும். வடமொழி யில் விகுதியே காலம் காட்டலின்,இடைநிலை வினைமுதற் பொருண்மை முதலியன பற்றி வரும். (சூ. வி. பக்.55) |
பிரத்தியயம் | தெளிவு; உறழ்ச்சி, கேடு, உத்திட்டம், இலகு குருச் செய்கை,விருத்தத் தொகை, நில அளவு என்பன ஆறும் தெளிவுகளாம். (வீ. சோ. 133)‘பிரத்தாரம் முதலாகிய ஆறு பிரத்தியயமும்’(யா. வி. பக். 502) |
பிரபந்த தீபிகை | 19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாட்டியல் நூல். ஆசிரியர்முத்துவேங்கட சுப்பையர் என்பார். இந்நூல் பி. பாஸ்கர ஐயரவர்களால்செந்தமிழில் (1918-19) வெளியிடப் பெற்றது. பன்னிரு சீர்க் கழிநெடிலடிஆசிரிய விருத்தமாக அமைந்த இதன் பாடல்கள் 26 கிடைத்துள. 26 ஆம் பாடலின்ஈற்றடி கிடைத்திலது. இன்னும் நான்கு பாடல்கள் இருந் திருக்கலாம்.கிடைக்கப்பெற்றவற்றுள் 80 பிரபந்த இலக் கணங்கள் சொல்லப்பட்டுள. எஞ்சியபாடல்கள் நான்கும் கிடைத்திருப்பின் 96 பிரபந்தங்களின் இலக்கணமும்முழுமை யாகப் பெறும் வாய்ப்புப் பெற்றிருப்போம். இலக்கண விளக்கம் -பாட்டியல் தஞ்சை சரசுவதி மகால் பதிப்பில் பிற்சேர்க்கையாக இந்நூல்சொற் பிரிப்போடு பொருள் புலப்படுவகையில் தரப்பட்டுள்ளது. |
பிரபந்த மரபியல் | 16ஆம் நூற்றாண்டில் இது தோன்றியது என்ப. இதன்கண் நூற்பாக்கள் 35உள. முதல் 21 நூற்பாக்களில் 96 பிரபந்த இலக்கணங்கள் குறிக்கப்பட்டுள.இந்நூலாசிரியர் பற்றிய செய்தி தெரியவில்லை. |
பிரபந்தம் | தொடர்நிலைச் செய்யுளாகிய பிள்ளைத்தமிழ் கலம்பகம் பன்மணிமாலைமும்மணிக்கோவை முதலாயினவும், தனி நிலைச் செய்யுளாகிய வளமடல் உலாமடல்உலா அநுராக மாலை முதலாயினவும் பிரபந்தம் என்னும் பெயரால் பிற்காலத்தேவழங்கப்பட்டன. இப்பிரபந்தம் 96 வகைப்படும் என்ப. இவற்றின் இலக்கணம்கூறும் நூல் பாட்டியல் எனப்படும்பிரபந்தமானது சாதகத்தின் நிலையையும், திதி நிலை, வார நிலை,நாண்மீன் நிலை, யோக நிலை, கரண நிலை, ஓரை நிலை, கிரகநிலை ஆகியஇவ்வேழ்வகை உறுப்புக்களின் நிலையையும் சோதிட நூலால் நன்குணர்ந்துஅவற்றால் தலைவற்குறுவன கூறுவது என்னும் தொகையகராதி. |
பிரமாணம் | லகுவும் குருவும் புணர்ந்து முறையே வரும் பாடல்.எ-டு : ‘கயற்க ருங்க ணந்நலார்முயக்க நீக்கி மொய்ம்மலர்புயற்பு ரிந்த புண்ணியர்க்கியற்று மின்க ளீரமே.’ (யா. வி. பக். 524) |
பிரமாணம் ஆகாத நூல்கள் | சின்னூல் (-நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து,பிரயோக விவேகம், சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி,இலக்கணவிளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச்செய்யப்படினும், ஆசிரி யனது கருத்துணராமல் மரபுநிலை திரியச்செய்யப்பட்ட மையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம்.(பிரமாணம்-நூல்நெறிக்குச் சான்றாக எடுத்துக்காட்டாகத் திகழும்வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர்அரசஞ்சண்முகனார். (பா.வி. பக். 104, 105) |
பிரயோக விவேகம் | 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய, தமிழால் அமைந்த இலக்கண நூல். இதன்ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர். தமிழின் சொல்லிலக்கணத்தை வடமொழியின்சொல் லிலக்கணத்தோடு ஆய்ந்து உணர்த்தும் இந்நூற்கண் காரக படலம், சமாசபடலம், தத்தித படலம், திங்ஙுப்படலம் என்னும் நான்கு இயல்களும்அவற்றுள் 51 காரிகைச் சூத்திரங்களும் உள. நூலாசிரியரே உரையும்வரைந்துள்ளார். மிக நுண்ணிய திட்பம் வாய்ந்த உரை அது. வடமொழிக்கே உரியசெய்திகளொடு தமிழிற்கே உரிய செய்திகளும் பல இடங்களில் வரையறுத்துஉரைக்கப்பட்டுள. இருமொழிக் கும் பெரும்பான்மையும் இலக்கணம் ஒன்றே என்றகருத்தினர் இவ்வாசிரியர். இலக்கணத்கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகரும்இக்கருத்தினர். ஏற்ற வடமொழி இலக்கணச் சொற் களுக்கு விளக்கமாகஉரைச்சூத்திரம் பல இவ்வாசிரியர் ஆண்டாண்டு இயற்றியுள்ளமை இவ்வுரையின்தனிச்சிறப்பு.தற்சிறப்புப் பாயிரம் முதற்சூத்திரமாக அமைய, நூல் அரங்கேற்றம்இறுதிச்சூத்திரமாக அமைகிறது.1973 இல் வெளியிடப்பெற்ற தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு விரிவானவிளக்க உரையொடு நூலாசிரியர் கருத்தைத் தெளிவிக்க வல்லது. |
பிராதிபதிகம் | பொருளுடையதாய், வினைமுதனிலை அல்லாததாய், இடைச் சொல் அல்லாததாய்வரும், பெயர் அடிப்படைச் சொல் வடமொழியில் பிராதிபதிகம் எனப்படும்.தமிழில் பிராதி பதிகமே முதல்வேற்றுமை ஆகும். வடமொழியில் பிராதி பதிகம்வேறு, முதல் வேற்றுமை ஏற்ற சொல்வடிவம் வேறு.உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொடராது பட்டாங்கு நிற்கும்பெயர்கள் பிராதிபதிகம் ஆம்.எ-டு : ஆ, அவன் (பி. வி. 7) |
பிரித்துப் புணர்க்கப்படாத தொடர்கள் | ‘புணரியல் நிலையிடை யுணரத் தோன்றாதன’ – காண்க. |
பிரிந்தெதிர் செய்யுள் | முதலில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் ஈற்றெழுத்துத் தொடங்கி மடக்கிஎழுதப்பட்டால் பிறிதொரு செய்யுளாக அமையு மாறு பாடப்படும் சித்திரகவி.எ-டு : ‘நீர நாகமா, தார மாகமே,வார மாகமா, ணார ணாககா’.நீரநாக – நற்குணத்தவனே! நீரிலுள்ள பாம்பில் துயில்பவனே!மா தாரமாக – திருமகள் தேவியாக;மேவு ஆரம் ஆக – பொருந்திய மாலையை அணிந்த மார்பனே!மாண் ஆரண ஆக – மேம்பட்ட வேதவடிவினனே!கா – என்னைப் பாதுகாப்பாயாக.எதிரேறு வருமாறு:‘காக ணாரணா, மாக மாரவா,மேக மாரதா, மாக நார நீ’மாகமார் அவாம் – மேலுலகத்துள்ளார் விரும்பும்;நார – நற்குணத்தையுடையவனே!மேக மாக – மேக வடிவனே!மா ரதா – பெருவீரனே!நாரணா – நாராயணன் என்னும் திருநாமத்தோனே!நீ கண் – நீயே பற்றுக்கோடாவாய்;கா – காப்பாயாக. (பொருள் கொண்டுகூட்டியுரைக்கப் பட்டது) (மா. அ.பாடல் 796) |
பிற மேல் தொடர்தல் | வன்மை ஊர் உகரம் தன் மாத்திரையின் குறுகுதற்கும் மொழிநிரம்புதற்கும் காரணம், அவ்வோரெழுத்துத் தொடர்தல் மாத்திரையின்அமையாது, பிற எழுத்துக்களுள் ஒன்றும் பலவும் மேல் தொடரவும்பெறுதல்.‘பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்’ (130) என்று வரை யறுத்தவற்றில்இங்ஙனம் ஈற்றயலும் ஈறுமாகக் கூறிய இரண்டும் ஒழித்து ஒழிந்த ஏழும்ஐந்தும் ஆகிய எழுத்துக் களைப் ‘பிறமேல் தொடரவும் பெறுமே’ என்றார்.‘தொடர வும்’ என்ற உம்மை இறந்தது தழீஇ நின்றது. ‘பெறுமே’ என்றது,தனிநெடில் ஒழிந்த ஐந்து தொடரும்; வன்மை ஊர் உகரம் குறுகுதற்கும் மொழிநிரம்புதற்கும் மேல் தொடர் தலும் இன்றியமையாமையின். (நன். 94சிவஞா.) |
பிறப்பின் புறனடை | பல எழுத்துக்களுக்குப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்படினும், எடுத்தல்,படுத்தல், நலிதல் என்ற எழுத்துக்குரிய ஒலிமுயற்சி- யான் ஒன்றற்கொன்றுபிறப்பு வேறுபாடுகள் அவ்வற்றுள் சிறிது சிறிது உளவாம். ‘தந்தது’என்பதன்கணுள்ள தகரங் களின் ஒலிவேறுபாடு போல்வன காண்க. (நன். 88) |
பிறப்புக்கு முதல்துணை இடவகை | எழுத்துக்கள் நெஞ்சும் தலையும் மிடறும் என்னும் முதல் இடவகையினும்,நாவும் அண்ணமும் இதழும் எயிறும் மூக்கும் என்னும் துணை இட வகையினும்புலப்படும். (நேமி. எழுத். 6) |
பிறப்பொலியில் திரிபு | ஒவ்வொரு தானத்துப் பிறக்கின்ற எழுத்துக்கள் கூட்டிக் கூறப்பட்டனவாயினும், நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய வேறுபாடுகள்சிறியன சிறியனவாக உள. அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் – என்றவகையானும், தலையிசை மிடற்றிசை நெஞ்சிசை மூக்கிசை – என்ற வகை யானும்பிறவகையானும் வேறுபடுதல். ‘ஐ’ விலங்கலோசை உடையது. (இ. வி. எழுத். 14உரை.) |
பிறிது படு பாட்டு | மிறைக்கவிகளுள் ஒன்று; ஒருவகை யாப்பமைதியுடன் அமைந்த பாட்டினைவேறுதொடையும் அடியும் கொண்ட பாட்டாகப் பிரித்தாலும் சொல்லும் பொருளும்வேறுபடா மல் அதுவும் ஓர் யாப்பமைதியுடைய செய்யுளாக அமை யும்படிசெய்வது.எ-டு : ‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டுவரியளி பாட மருவரு வல்லி இடையுடைத்தாய்த்திரிதரு காமர் மயிலியல் ஆயம் நண் ணாத்தேமொழிஅரிவைதன் நேரென லாம்இயற் றையயாம் ஆடிடனே’இப்பாட்டுக் கட்டளைக் கலித்துறை யாப்பு. தலைவன் தலைவியது ஆடிடம்கண்டு நெஞ்சுடன் கூறியது இது.“தலைவியிடத்தே ஆசையால் இங்கு வந்த நாம் விரும்பத்தக்க தாய்,வண்டுகள் பாட, இடை போன்ற கொடிகள் ஆடி அசைய, அழகாக இருக்கும் இந்தஇடம், தன் ஆயத்துடன் இங்கே இன்று வாராத நம்தலைவியைப் போலவே தோன்றுகிறது” என்று தலைவன் நெஞ்சொடு கிளக்கும் இப்பாடலை ஆறடிகள் கொண்டநேரிசை யாசிரியப்பாவாகப் பிரிப்பி னும், தொடையழகும் பொருளும்கெடாமலேயே அமையும். பிறிதாக வரும் அப்பாடல் வருமாறு :‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும்பரிசு கொண்டு வரியளி பாடமருவரு வல்லியிடை யுடைத்தாய்த் திரிதரும்காமர் மயிலியல் ஆயம் நண்ணாத்தேமொழி அரிவைதன் நேரெனல்ஆமியற்(று) ஐய யாம்ஆ(டு) இடனே.’ (தண்டி. 98 உரை) |
பிற்காலத்து எழுந்த பாப்பாவினஎடுத்துக்காட்டு நூல்கள் | 1. மாறன் பாப்பாவினம் – திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16ஆம்நூற்றாண்டு2. சிதம்பரச் செய்யுட் கோவை – குமரகுருபர சுவாமிகள் 17ஆம்நூற்றாண்டு3. திருஅலங்கல்திரட்டு – குமரகுருதாச சுவாமிகள் 20ஆம் நூற்றாண்டுமுற்பகுதி4. அரங்கன்துதி அமுதம் – சக்திசரணன் 20ஆம் நூற்றாண்டுபிற்பகுதி5. யாப்பும் பாட்டும் – அரங்க. நடராசன் (புதுவை) 21ஆம்நூற்றாண்டு |
பிள்ளைக் கவிப்பருவம் | ஆண்பாற் பிள்ளைத்தமிழாயின் ஆண்பாற்குப் பதினாறாண் டும்,பெண்பாற்பிள்ளைத் தமிழாயின் பெண்பாற்குப் பூப்புப் பருவமும், எல்லைஎன்கிறது இந்திரகாளியம். மூன்று முதல் இருபத்தொரு திங்கள் அளவும் எனஎல்லை வகுக்கிறது. பன்னிரு பாட்டியல். அந்நூற் கருத்துப்படி ஆண்பாற்குஏழு, ஐந்து, மூன்று ஆண்டுகள் எனக் கொண்டு பாடுதலும், பன்னீ ராண்டுஎல்லையாகக் கொண்டு பாடுதலும் உண்டு. பெண் ணுக்குப் பன்னீராண்டு என்பதுவெண்பாப் பாட்டியல் செய்தி. அரசற்கு முடிகவித்தல் பருவம் எல்லைஎன்னும், நவநீதப் பாட்டியல். பிரபந்த தீபிகை பருவந்தோறும் திங்கள்அல்லது ஆண்டு எல்லை வகுக்கிறது. காப்பு – 2 திங்கள்; செங்கீரை 5திங்கள்; தால் – 7 திங்கள்; சப்பாணி – 9 திங்கள்; முத்தம் – 11திங்கள்; வருகை – ஓர் ஆண்டு நிறைவு; அம்புலி – ஒன்றரை ஆண்டு; சிற்றில்2 ஆண்டு; பறை முழக்கல் – 3 ஆண்டு; இரதம் ஊர்தல் – 4 ஆண்டு. மூன்றுமுதல் 21 திங்கள் வரை ஒற்றைப்படைத் திங்களில் இப்பருவங்கள் கொள்ளப்படும் என்று சிதம்பரப் பாட்டியல், இ.வி. பாட்டியல், தொ.வி.செய்யுளியல் என்பன கூறுகின்றன.இந்திரகாளியம் பல பருவங்களைக் கூறுகிறது. பிறப்பு, ஓகை, காப்பு,வளர்ச்சி, அச்சமுறுத்தல், செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,அம்புலி, சிற்றில், குழமகன், ஊசல் முதலியன அவை.பிற பாட்டியல்கள் ஆண்பாற்பருவம் எனவும், பெண்பாற் பருவம் எனவும்,பத்தாக வகுத்துத் தனியே வரையறுக்கின் றன. காப்பு, செங்கீரை, தால்,சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற்பிள்ளைத் தமிழுக்கும்பொதுவான பருவங்கள். ஆண்பாற்கே சிறப்பாக உரிய இறுதி மூன்று பருவங்கள்சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன. இனிப் பெண்பாற்கே உரியஇறுதிப்பருவங்கள் கழங்கு, அம்மானை, ஊசல் எனவும், சிற்றிலிழைத்தல்,சிறுசோறாக்கல், குழமகன், ஊசல், காமன் நோன்பு எனவும் வெவ்வேறுபாட்டியல்களில் சொல்லப்பட்டுள்ளன. பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பலபருவங்கள் இறுதியில் கூறப்படினும், பொதுவான அவ்வே ழோடே சிறப்பானஎவையேனும் மூன்றே கூட்டிப் பத்துப் பருவமாகப் பாடுதலே மரபு.இந்நூல்கள் குறிப்பிடாத நீராடற்பருவம் மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழில்பாடப் பட்டுள்ளது.இனி, யாப்புப் பற்றிய கருத்து; இந்திரகாளியம், பருவ மொன்றுக்கு 1,3, 5, 7, 9 அல்லது 11 எனக் கொச்சகக்கலி, 12 அடியின் மிகாதநெடுவெண்பாட்டு ஆகிய இவ்யாப்பில் பாடப்படும் என்று கூறும். பிறப்பு,ஓகை, வளர்ச்சி, அச்சம் ஆகிய நான்கும் 1, 3, 5 அல்லது 7 எனச் செய்யுள்பாடப் பெறும் எனவும் அந்நூல் கூறுகிறது. பன்னிருபாட்டியல், அகவல்விருத்தம் கலிவிருத்தம் கட்டளை ஒலி நெடுவெண் பாட்டு இவற்றால்பிள்ளைக்கவி பாடப்படும் எனவும்; வெண்பாப் பாட்டியல்சிதம்பரப்பாட்டியல் இலக்கண விளக்கப் பாட்டியல் தொன்னூல் விளக்கச்செய்யுளியல் சுவாமி நாதம் என்பன, வகுப்பு அகவல்விருத்தம் இவற்றால்பாடப்படும் எனவும்; நவநீதப்பாட்டியல், மன்ன விருத்தம் ஈரெண்கலை வண்ணச்செய்யுள் இவற்றால் பாடப்படும் எனவும்; முத்து வீரியம்அகவல்விருத்தத்தால் பாடப்படும் எனவும் கூறுகின்றன.பருவத்திற்குப் பத்துப்பாடல் என்பது பெரும்பான்மையான பாட்டியல்களதுவரையறை. காப்புப் பருவத்துக்கு பாடல்கள் 9 அல்லது 11 என வரவேண்டும் எனநவநீதப் பாட்டியலும் இ.வி. பாட்டியலும் குறிக்கின்றன.காப்புப்பருவத்தில் பாடப்படும் கடவுளர் இன்னார் என்பதும்,அவர்களுள் முதற்கண் பாடப்படுபவர் திருமாலே என்பதும், இப்பருவத்துள்பாடப்படும் அக்கடவுளர் பற்றிய செய்தியில் கொலைத் தொழில்தவிர்க்கப்படும் என்பதும் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல்,நவநீதப் பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் – என இவை கூறும்சிறப்புச் செய்தி. |
பிள்ளைக்கவி | 1. பிள்ளைத்தமிழ் எனப்படும் பிரபந்தம்.2. முன்னோர் பாடிய செய்யுளடிகள் பலவற்றை எடுத்துக் கொண்டு, தான்சிறிதளவு இயற்றிப் பாடல் அமைப்பவன். (இ. வி. பாட். 45, 175) |
பிள்ளைத் தமிழ் | பிள்ளைக் கவி; இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும், பெண்பாற்பிள்ளைத்தமிழ் எனவும் இருவகைப்படும். இதன் பருவங்கள் முதலியன‘பிள்ளைக்கவி’ யுள் காண்க. |
பிள்ளைத்தமிழின் பருவங்கள் | காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பனஇருபாற் பிள்ளைத்தமிழ்க்கும் பொதுவான பருவங்கள். ஆண்பாற்கேயுரியன.சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன; இனிப் பெண்பாற்கேயுரியன : கழங்கு,அம்மானை, ஊசல் என்பன. (இ. வி. பாட். 46) |
பிள்ளைத்தமிழின் யாப்பு | வகுப்பும் ஆசிரியவிருத்தமும் பிள்ளைத்தமிழ் பாடும் யாப்பு. பிறபாட்டியல்கள் கூறுவன ‘பிள்ளைக்கவி’ எனும் தலைப்புள் காண்க. (இ. வி.பாட். 47) |
பிள்ளைத்தமிழ் கொள்ளும் காலம்,அதன் புறநடை | (பாட்டுடைத் தலைவனோ, தலைவியோ) பிறந்து மூன்றாம் திங்கள் முதல்இருபத்தொரு திங்கள்காறும் ஒற்றித்த திங்களில் நிறைமதிப் பக்கத்தில்பிள்ளைக்கவி கொள்ளப் படும்.பிள்ளைப்பருவம் கழியும் முன்னரே பாடுதல் வேண்டும் என்பது குறிப்பு.முதியோரைப் பிள்ளையாகக் கருதிப் பாடு மிடத்தும்இப்பிள்ளைப்பருவத்தினராகவே கொண்டு பாடவேண்டும். ஒற்றைப்படை மங்கலம்தருவது; நிறைமதிப் பக்கம் (-சுக்கில பக்கம்) வளர்ச்சி தருவது).இனி, பிள்ளைக்கவி, மேற்கூறிய திங்களெல்லையில் பாட முடியாக்கால்,மூன்று, ஐந்து, ஏழ் ஆகிய ஒற்றை பெற்ற ஆண்டிலும் கொள்ளப்படும். (இ. வி.பாட். 49, 50) |
பிள்ளைப்பாட்டு | பிள்ளைத்தமிழ்; அது காண்க. |
பீ என்ற பெயர் புணருமாறு | பீ என்பது மலத்தைக் குறிக்கும் இடக்கர்ப் பெயர். அது பீ குறிதுஎன்றாற் போல வருமொழி வன்கணத்தோடும் இயல் பாகப் புணரும்.ஆ என்ற நிலைமொழிமுன் பீ என்பது வருமொழியாய்ப் புணருமிடத்துஇகரமாகக் குறுகி வலிமிக்கு ஆப்பி எனப் புணரும். (தொ. எ. 250, 233நச்.) |
பீர் என்ற சொல் புணருமாறு | பீர் என்பது வருமொழி வன்கணம் வந்துழி மெல்லெழுத்து மிக்குப்புணரும். பீர் அத்துப் பெறுதலும், அம்முப் பெறுத லும், இயல்பாதலும்ஆம்.பீர்ங் கொடி – மெல்லெழுத்து மிக்கது; ‘பீரத் தலர்’ – அத்துப் பெற்றது; ‘பீரமொ டு பூத்த’ – அம்முப் பெற்றது; ‘பீர்வாய்ப் பிரிந்த’ – இயல்பாயிற்று. (தொ. எ. 363, 364 நச்.உரை) |
புகழ்ச்சி மாலை | அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் வியத்தகும்மகளிரது சிறப்பினைக் கூறும் பிரபந்தம்.(இ. வி. பாட். 106) |
புடை நூல் | புடை நூலாவது சார்புநூல். முதனூல் வழிநூல்களுக்குச் சிறு பான்மைஒத்துப் பெரும்பாலும் வேறுபட்டிருப்பது சார்பு நூலாயிற்று. (நன். 8இராமா.) |
புடைபெயர்ச்சி விகுதி புணர்ந்துகெட்டவை, கெட்டுப் பின் முதல் நீண்டவை | ‘கெடு வாக வையாது’ (குறள் 117) என்புழிக் கெடு என்பது புடைபெயர்ச்சியைஉணர்த்தும் தல்விகுதி கெட்டு நின்றது. (‘ அறி கொன்று’ குறள் 638 – ‘களிறுகளம் படுத்த பெருஞ் செய் ஆடவர்’ நெடுநல். 171 என்பன போல்வனவும் அன்ன.)கேடு என்பது புடைபெயர்ச்சியை உணர்த்தும் தல்விகுதி கெட்டுப்பின்னர் முதல் எகரம் நீண்டது. (கோள், ஊண் என்பன போல்வனவும் அன்ன) (சூ.வி. பக். 33) |
புட்கரனார் எழுத்துக் குறி வெண்பா | ‘எழுத்துக் குறி வெண்பா’ – காண்க. (யா. வி. பக். 371) |
புணரியல் | இது தொல்காப்பிய எழுத்துப்படலத்து நான்காம் இயல்; 40 நூற்பாக்களைஉடையது. இதன்கண், எல்லாச் சொற்களும் உயிரீறு புள்ளியீறு இவற்றுள்அடங்கும் என்பதும், குற்றிய லுகர ஈறு புள்ளி யீற்றுள் அடங்கும்என்பதும், உயிர்மெய்யீறு உயிரீற்றுள் அடங்கும் என்பதும், மெய்யீறுகள்எல்லாம் புள்ளி பெறும் என்பதும், மெய்ம் முதல்கள் எல்லாம் உயிரொடுகூடி உயிர்மெய் முதலாகும் என்பதும், மெய்ம்முதல் உயிர் முதல் என்பனமெய்யீறு உயிரீறு என்பவற்றொடு புணரும் என்பதும், பெயரொடு பெயரும்தொழிலும் தொழிலொடு பெயரும் தொழிலும் புணருமிடத்து இயல்பே யன்றித்திரிபும் நிகழும் என்பதும், அத்திரிபானது மெய்பிறி தாதல் – மிகுதல் -குன்றல் – என்ற மூன்றனுள் அடங்கும் என்பதும், நிலைமொழியும்வருமொழியும் அடையொடு கூடியும் புணரும் என்பதும், புணர்ச்சிவேற்றுமைப்புணர்ச்சி யும் அல்வழிப்புணர்ச்சியும் என இருவகைப்படும்என்பதும், எழுவாய்த்தொடரும் விளித்தொடரும் அல்வழியாகும், இரண்டாம்வேற்றுமைத்தொடர் முதல் ஏழாம் வேற்றுமைத் தொடர் ஈறாக ஆறுமே வேற்றுமைப்புணர்ச்சியாகும் என்ப தும், புணர்ச்சிக்கண் கு – கண் – அது – என்றஉருபுகள் பெறும் விகாரம் இவை என்பதும், வேற்றுமைப் புணர்ச்சிக்குநிலைமொழி பெயரே என்பதும், உயர்திணை அஃறிணை ஆகிய இருவகைப் பெயரைஅடுத்தும் சாரியை வரும் என்பதும், சாரியைகள் இவை என்பதும், நிலைமொழிவரு மொழிகளுக்கு இடையே வரும் சாரியைகளுள் திரிபுடையன உள என்பதும்,சாரியை பெறாதனவும் உள என்பதும், எழுத்துச் சாரியைகள் இவை என்பதும்,உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்புபுணர்ச்சி என்பதும், மெய்யீறுபோல்வது குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி என்பதும், உடம்படு மெய்உயிரீற்றையும் உயிர்முதலையும் இணைக்க இடையே வரும் என்பதும்,எழுத்துக்கள் ஒன்று பலவாதல் ஒலியானேயே தெளிவாக உணரப்படும் என்பதும்இந்நாற்பது நுற்பாக்க ளால் குறிக்கப்பட்டுள்ளன. (தொ.எ. 103-142.) |
புணர்ச்சி | மெய்யையும் உயிரையும் முதலும் இறுதியுமாக உடைய பகாப்பதம் பகுபதம்என்னும் இருவகைச் சொற்களும் தன்னொடு தானும் தன்னொடு பிறிதுமாய்வேற்றுமைப் பொருளிலாவது அல்வழிப் பொருளிலாவது பொருந்து மிடத்து,நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவும் மூவகைத் திரிபு கொண்டும்பொருந்துவது புணர்ச்சியாம். உயிர்மெய்யை மெய்முதல் எனவும் உயிரீறுஎனவும் பகுத்துக் கொள்க. திசைச்சொல்லும் வடசொல்லும் பெயர்வினை இடை உரிநான்கும் பகாப்பதம் பகுபதம் என்ற இரண்டனுள் அடங்கும். (நன். 151) |
புணர்ச்சி நிலைபெற்று அமைதல் | புணர்ச்சியாவது நிலைமொழி ஈற்றெழுத்தொடு வருமொழி முதலெழுத்துப்புணர்வது. நிலைமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப்பிறந்து கெட்டுப்போக,வருமொழியது முத லெழுத்துப் பின்னர்ப் பிறந்து கெட்டமையான், முறையேபிறந்து கெடுவன ஒருங்குநின்று புணருமாறு இன்மையின் புணர்ச்சிஎன்பதொன்று இன்றாம்பிற எனின், அச்சொற் களைக் கூறுகின்றோரும்கேட்கின்றோரும் அவ் வோசையை இடையறவுபடாமை உள்ளத்தின்கண்ணேஉணர்வராகலின், அவ்வோசைகள் உள்ளத்தின்கண்ணே நிலைபெற்றுப்புணர்ந்தனவேயாம். ஆகவே, பின்னர்க் கண்கூடாகப் புணர்க் கின்றபுணர்ச்சியும் முடிந்தனவேயாம் என்பது. (தொ. எ. 108 நச். உரை) |
புணர்ச்சி மாலை | தண்டக மாலை (சங். அக); வெண்பா முந்நூறு கவியால் அமைந்த பிரபந்தம்.(பி. தீ. 14) |
புணர்ச்சி விகாரங்கள் | பதத்தொடு பதம் புணருங்கால், சந்தி காரணமாகப் பலமுறை நிலைப்பதஈற்றெழுத்தாயினும் வரும்பத முதலெழுத்தாயினும் பலவிடத்து ஒருப்படஇரண்டும் வேறெழுத்தாகத் திரிதலும், முற்றும் கெடுதலும் ஆகும். பலமுறைஇருபத நடுவே ஆக்கமாக மிகலும் ஆம். இம்மூவிகாரம் அன்றியும், சிலமுறைஇருபதம் ஒருபதமாகத் திரண்டு கலப்புழிச் சில எழுத்து அவ்வழிவிகாரப்படும் எனக் கொள்க.அவை திரிபு (மெய் பிறிது ஆகல்), அழிவு (குன்றல்), ஆக்கம்(மிகுதல்), திரட்டு (வேத + ஆகமம் = வேதாகமம் போன்ற வடமொழிப்புணர்ச்சி) என்பனவாம். (தொ. வி. 21 உரை) |
புணர்ச்சி விகாரமும் புணர்ச்சி இல்விகாரமும் | இலக்கணக் கொத்தினைத் தழுவி உரைக்கப்படும் இவ்விகாரங் களுள்,புணர்ச்சி விகாரம் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி யால் நிகழும் தோன்றல்- திரிதல் – கெடுதல் – இம்மூன்றுமாம்.எ-டு : ஊர் + குருவி = ஊர்க்குருவி; வேல் + தலை = வேற் றலை;பழம் + நன்று = பழநன்று என முறையே காண்க.இருமொழிப் புணர்ச்சியானன்றி ஒருமொழிக்கண்ணேயே நிகழும் தோன்றல் -திரிதல் – கெடுதல் – நிலைமாறுதல் – விரித்தல் – நீட்டல் – குறுக்கல் -வலித்தல் – மெலித்தல் – தொகுத்தல் – முதல் இடைக் கடைக் குறைகள் -என்பன புணர்ச்சி இல் விகாரமாம்.எ-டு : யாது – யாவது; அழுந்துபடு – ஆழ்ந்துபடு; யாடு – ஆடு;மிஞிறு – ஞிமிறு, விளையுமே – விளையும்மே; இது – ஈது; தீயேன் – தியேன்;குறுந்தாள் – குறுத்தாள்; தட்டையின் – தண்டையின்; சிறியவிலை -சிறியிலை; தாமரை – மரை; ஓந்தி – ஓதி; நீலம் – நீல் (சுவாமி. எழுத்.27) |
புணர்ச்சிக்கண் க ச த பக்குரியஇயற்கை மெல்லெழுத்து | புணர்ச்சிக்கண் க ச த ப -க்களுக்குரிய இயற்கை மெல் லெழுத்துக்கள்,அவை தோன்றும் இடத்திலேயே தோன்றி மூக்கின் வளியிசையான் சற்றுவேறுபட்டொலிக்கும் ங ஞ ந ம -க்களாம்.எ-டு : விள + கோடு = விள ங் கோடு; விள + செதிள் = விள ஞ் செதிள்; விள + தோல் = விள ந் தோல்; விள + பூ = விள ம் பூ (தொ. எ. 143 நச்.) |
புணர்ச்சிக்குரிய நாற்கணம் | வன்கணம் மென்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் என்ற நான்கும்புணர்ச்சிக்கண் வருமொழி முதலெழுத்திற்குரிய நாற்கணங்களாம். இவற்றுள்வன்கணம் நீங்கலான ஏனைய மூன்று கணங்களும் பெரும்பாலும் இயல்பாகப்புணர்தலின் இயல்புகணம் எனப்படும். (தொ. எ. 203 – 207 நச்.) |
புணர்ச்சியில் விகாரங்கள் | புணர்ச்சியில் விகாரம் ஏழாம்.முதலாவது தோன்றல்.எ-டு : குன்று – குன்றம், செல்உழி – செல்வுழி. முறையே அம், வ் -தோன்றின.இரண்டாவது திரிதல்.எ-டு : மாகி – மாசி (ககரம் சகரமாகத் திரிந்தது)மூன்றாவது கெடுதல்.எ-டு : யார் – ஆர், யாவர் – யார் (முறையே யகர மெய்யும் வகரஉயிர்மெய்யும் கெட்டன)நான்காவது நீளல்.எ-டு : பொழுது – போது, பெயர் – பேர் (ஒகரமும் எகரமும் முறையேநீண்டன)ஐந்தாவது நிலைமாறுதல்.எ-டு : வைசாகி – வைகாசி (சகரம் ககரம் நிலைமாறின). நாளிகேரம் -நாரிகேளம், தசை – சதை, ஞிமிறு – மிஞிறு, சிவிறி – விசிறி.ஆறாவது மருவி வழங்குதல்.எ-டு : என்றந்தை – எந்தைஏழாவது ஒத்து நடத்தல்.எ-டு : நண்டு – ஞண்டு, நெண்டு – ஞெண்டு, நமன் – ஞமன்(நகரத்திற்கு ஞகரம் போலியாக வந்தது).(தொ. வி. 37 உரை) |
புணர்ச்சியும் மயக்கமும் | புணர்ச்சியும் மயக்கமும் வெவ்வேறே. புணர்ச்சி என்பது நிலைமொழிவருமொழிகள் தத்தம் தன்மை திரியாமல் செப்பின் புணர்ச்சி போல நிற்பது.மயக்கம் என்பது மணியுள் கோத்த நூல்போலத் திரிபுற்று நிற்பது.நிலைமொழியீற்றுக் குற்றுகரம் வருமொழி நாற்கணங்களொடும் புணருமிடத்துஎய்தும் திரிபுகளைத் தனக்கு முன்னும் பின்னும் நிற்கும் எழுத்துக்களேபெறத் தான் திரிபுறுதல் இன்மையின், குற்றியலுகர மயங்கியல் என்னாதுபுணரியல் என்றார். தனித்து வரல் மரபினையுடைய உயிரீறு புள்ளியீறுகள்அன்ன அல்லவாம். (தொ.எ.பக்.311 ச.பால.) |
புணர்ச்சியை எழுத்ததிகாரத்துக்கூறியமை | புணர்ச்சியாவது சொற்கள் ஒன்றோடொன்று அல்வழிப் பொருளிலோவேற்றுமைப்பொருளிலோ புணர்வதனைக் கூறுதலின் சொல்லதிகாரத்துக்கூறற்பாலது எனினும், நிலைமொழியீற் றெழுத்தினொடு வருமொழி முதலெழுத்துஇயைதலே புணர்ச்சி எனப்படுதலின், எழுத்தினோடு எழுத்துப் புணரும்புணரியலை எழுத்ததிகாரத்தில் கூறுதலே முறையாகும். ‘நிறுத்த சொல்லின்ஈறாகு எழுத்தொடு, குறித்துவரு கிளவியின் முதலெழுத்து இயை’தலேபுணர்ச்சி என்பது தொல். எழுத்ததிகார 108 ஆம் நூற்பாவால் புலனாம்.(எ.ஆ. பக். 1) |
புணர்நிலைச் சுட்டு | சொல்லப்பட்ட ஒரு சொல்லோடு அடுத்த சொல் கூடும் நிலைமையாகிய கருத்து.இந்நிலையில் முதலில் நிற்கும் சொல்லை ‘நிறுத்த சொல்’ என்றும், அடுத்துவரும் சொல்லைக் ‘குறித்து வரு கிளவி’ என்றும் கூறுப. நிறுத்த சொல்லொடுகுறித்து வரு கிளவி கூடும் நிலைமைக்கண், நிறுத்த சொல்லின் இறுதிஎழுத்தும், குறித்து வரு கிளவியின் முதலெழுத்தும் தம்முள் புணர்தலேபுணர்ச்சியாம்.(தொ. எ. 107 நச்.) |
புணர்ப்பாவை | சக்கரக் கவியாகிய மிறைக்கவி விசேடங்களைக் கூறும் பண்டைய நூல்;இதுபோது வழக்கற்றது. (யா. வி. பக். 533) |
புணர்மொழி ஆய்தம் | நிலைமொழி தனிக்குறிலை அடுத்த லகரஒற்று ஈற்றதாகவோ ளகரஒற்றுஈற்றதாகவோ இருப்ப, அல்வழிப் புணர்ச்சியில் வருமொழிக்கண் தகரம்முதலெழுத்தாக வரின், லகரமும் ளகரமும் ஆய்தமாகத் திரிந்து புணரும்நிலையுமுண்டு. அங் ஙனம் திரியும் நிலையில் ஆய்தம் புணர்மொழிக்கண்வரும்.எ-டு : கல் + தீது = கற்றீது, கஃறீது; முள் + தீது = முட்டீது,முஃடீதுஇத்திரிபுகளை நோக்க, ஆய்தம் றகரத்தை அடுத்தபோது அதன் ஒலியதாகவும்டகரத்தை அடுத்தபோது அதன் ஒலிய தாகவும் பண்டு ஒலிக்கப்பட்டிருத்தல்வேண்டும் என்பது புலனாகிறது. (தொ. எ. 39, 369, 399 நச்.) (எ. ஆ. பக்.85) |
புணர்மொழிக் குற்றியலிகரம் | நிலைமொழி இறுதியில் குற்றியலுகரம் நிற்ப, வருமொழி முதலில் யகரம்வரின், அவ்வுகரம் முற்றத் தோன்றாதாக அதனிடத்துக் குற்றியலிகரம்வரும்.எ-டு : நாகு + யாது = நாகியாது; வரகு + யாது = வரகியாது; எஃகு +யாது = எஃகியாது; கொக்கு + யாது = கொக்கி யாது; குரங்கு + யாது =குரங்கியாது; போழ்து + யாது = போழ்தியாது. (தொ. எ. 410 நச்) |
புணர்மொழிக் குற்றியலுகரம் | நிலைமொழி குற்றியலுகர ஈறாய் வருமொழியொடு புணரு மிடத்து அல்வழிவேற்றுமை என்ற இருநிலையிலும் குற்றிய லுகரம் நிலைபெற்றிருக்கும்.எ-டு : நாகு கடிது, நாகு கடுமை (தொ. எ. 408 நச். உரை)அல்வழி வேற்றுமை என்ற இருவகைப் புணர்ச்சிக்கண்ணும்நிலைமொழியிறுதிக் குற்றியலுகரம் முற்றியலுகரமாய் நிறைந்துவிடும்.ஆயின் நிலைமொழியிறுதி வல்லொற்றுத் தொடர்க் குற்றியலுகரமாக, அதுவும்ககர உகரமாக, வரு மொழியாகக் ககர முதல் மொழி வரின், குற்றியலுகரம்முற்றியலுகரம் ஆகாது குற்றியலுகரமாகவே நிற்கும்.எ-டு : நாகு கடிது, வரகு கடிது; நாகுகடுமை, வரகுகடுமை எனக்குற்றியலுகரம் முற்றியலுகரமாயிற்று.செக்குக்கணை, சுக்குக்கொடு எனக் குற்றியலுகரம் புணர் மொழிக்கண்முற்றியலுகரம் ஆகாது குற்றியலுகரமாகவே நின்றது. (தொ. எ. 409, 410 இள.உரை) |
புதியன புகுதல் | முற்காலத்து இல்லாத சில பிற்காலத்து இலக்கணமாக வருதல். அவைவருமாறு:தன்மை ஒருமைக்கண் அன்விகுதியும், பன்மைக்கண் ஓம் விகுதியும், நீர்உண்ணும் – நீர் தின்னும் – என உம் ஈற்றவாய் வரும் பன்மை ஏவலும்,அல்ஈற்று வியங்கோள் எடுத்தோதாத பிற ஈற்றவாய் இருதிணை ஐம்பால்மூவிடங்களிலும் வாழ்த்து முதலிய ஏவற்பொருளவாய் நிகழ்வனவுளவேல்அவையும்,உண்டு என்பது அஃறிணை ஒருமைக்கேயன்றிப் பிறவற்றிற்கும் பொதுவினையாய்வருதலும்,யார் என்னும் வினா வினைக்குறிப்புமுற்று அஃறிணைக்கண் வருதலும்,யார் என்பது ஆர் என மரீஇ வருதலும், ஈ-தா-கொடு – என்னும் மூன்றும்இழிந்தோன் – ஒப்போன் – மிக்கோன் – இரப்புரையாக முறையே வாராமல் மயங்கிவருவன உளவேல் அவையும்,மன் – கொல்- எனற்பால இடைச்சொற்கள் மன்னை – கொன்னை – எனவருவனவும்,‘அவனே கொண்டான்’ என்புழி ஏகாரம் ஒரோவழி ‘அவன் கொள்கிலன்’ எனஎதிர்மறைப்பொருள் தருதலும், (இன்னோ ரன்னவும்) புதியன புகுதலாம். (நன்.332, 337-339, 349, 407, 420, 422 சங்கர.) |
புதியா நுட்பம் | ஒரு தருக்க நூல் (வீ. சோ. 179 உரை) |
புத்தமித்திரனார் | வீரசோழிய நூலாசிரியர். இவர்காலம் 11ஆம் நூற்றாண்டு என்ப.வீரசோழியம் என்ற தலைப்பைக் காண்க. |
புய வகுப்பு | பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பக உறுப்பு. (மதுரைக்.11) |
புயவருணனை | சிறந்த தலைவனொருவனுடைய புயங்கள் செய்துள்ள வீரம் கொடை முதலியசெய்கைகளைப் பாராட்டி அப்புயங்களின் உருவ அமைப்பினையும் வருணித்தல்.(இது கலம்பகத்தில் புய வகுப்பு என்ற பெயரிற் காணப்படும் கலம்பகஉறுப்பாம்.) இது பாடாண்துறைகளுள் ஒன்று.காப்பியத் தலைவனுடைய திருப்புயங்கள் அடியவரை அளிக்கும் திறனையும்,பகைவர்களை அழிக்கும் திறனையும் புனைந்து கூறும் துறை. (திருவரங்கக் .7) |
புரவலனுக்குக் கேடு | ‘பரிசில் வழங்காதவன் அழிவு’ காண்க. |
புராண சாகரம் | பல அடியான் வந்த பஃறொடை வெண்பாக்களையும் கொண்டு அமைந்த தொரு பழையதொடர்நிலைச் செய்யுள்.(யா. வி. பக். 250) |
புரிக்கு | அளவழிச்சந்தங்களில், சீர் ஒத்து ஓரடியில் ஓரெழுத்து மிக்குவருவதாம்.எ-டு : ‘பேடையை இரும்போத்துத் (7)தோகையால் வெயில் மறைக்கும் (8)காடகம் இறந்தார்க்கே (7)ஓடுமென் மனனே காண்’ (7)இவ்வஞ்சித்துறை இரணடாமடி ஓரெழுத்து மிக்குச் சீர் ஒத்துவந்தவாறு.(யா. வி. பக். 514, 515) |
புரோவாதம் | யாதானும் ஒரு நிமித்தத்தான் ஒன்றனை முற்கூறி வேறொரு நிமித்தத்தான்அதனையே பின்னும் கூறுதல் அநுவாதம். அநுவாதத்திற்கு முன்னர்க்குறிப்பிடப்படுவது புரோவாதம். புரோவாதத்தை உணர்ந்தால்தான் அநுவாதத்தைஉணர முடியும்.எ-டு : ‘ அன் ஆன் அள் ஆள் ஆர் ஆர் ப(ம்) மார்அ ஆ குடுதுறு என் ஏன் அல் அன் ’ (நன். 140)முதலிற் கூறப்பட்ட ‘அன்’ விகுதி புரோவாதம்; பின்னர்க் கூறப்பட்ட‘அன்’ அநுவாதம். இரண்டாவது அன்விகுதியை நோக்க முதலாவது புரோவாதம் ஆம்.(சூ. வி. பக். 19) |
புறக்கருவி | இது கருவிவகை நான்கனுள் ஒன்று. ஈண்டுக் கருவியாவது நிலைமொழிவருமொழிப் புணர்ச்சிக்குக் கருவியாக உதவு வது. புறக்கருவியாவதுநிலைமொழி வருமொழிகளாய் நிற்கும் மொழிகளின் மரபு கூறுவது. அதுசெய்கையாகிய புணர்ச்சிக் குரிய கருவி கூறாது, புணர்ச்சிநிகழ்த்துவதற்குரிய மொழிகளின் மரபு கூறுதலின் புறக்கருவி ஆயிற்று.ஆகவே மொழிமரபு என்னும் இயல் புறக்கருவியாம். (தொ. எ. 1 நச். உரை) |
புறக்கோவை | புறப்பொருள் தலைவனைக் கிளவித்தலைவனாகக் கொண்டு பாடப்படும் ஒருபிரபந்தம் போலும்.எ-டு : திருவிருத்தம் முதலியன. (சாமி. 165) |
புறச்செய்கை | இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. செய்கையாவது நிலைமொழி வருமொழிப்புணர்ச்சி. நிலைமொழிக்குப் புறமாய் அதனை அடுத்து வந்து புணரும்வருமொழிச் செய்கை கூறுவது புறச் செய்கையாம்.லகர னகர ஈறுகளின் முன் வரும் தகரம் றகரமாகவும் நகரம் னகரமாக வும்திரிதலும், ளகர ணகர ஈறுகளின் முன் வரும் தகர நகரங்கள் டகர ணகரங்களாகத்திரிதலும் போல்வன புறச் செய்கையாம்.எ-டு : கல்+தீது = கற்றீது; பொன் + தீது = பொன்றீது; கல் +நன்று = கன்னன்று; பொன் + நன்று = பொன்னன்று; முள் + தீது = முட்டீது;முள் + நன்று = முண்ணன்று; கண் + தீது = கண்டீது; கண் + நன்று =கண்ணன்றுஇவற்றுள் வருமொழி முதலெழுத்தின் திரிபு புறச்செய்கை யாம். (தொ. எ.149, 150 நச்.) |
புறநானூற்றுத் துறைகள் | புறநானூற்றுக்குத் துறை வகுத்தவர் அனைவரும் புறப் பொருள்வெண்பாமாலை, பன்னிரு படலம் முதலிய புதுநூல் வழிகளால்புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும், அகத்திய மும் தொல்காப்பியமுமேதொகைகளுக்கு நூலாகலின், அந்நூல்களைத் துணைக் கொண்டே புறநானூற்றுக்குத்துறை கோடல் வேண்டும். இப்பொழுது வகுக்கப்பட்ட துறைகள் அவ்வளவுபொருத்தமுடையன அல்ல என்பது நச்சினார்க் கினியர் கருத்து. (தொ. பொ. 90நச்.) |
புறநிலை | 1. 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; “நீ வணங்கும் தெய்வம் நின்னைப்புறங்காப்ப நின் மரபு சிறப்பதாகுக!” என்று பாட்டுடைத் தலைவனைப்புகழ்ந்து பாடுவது.2. சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப். 8-41 உரை) |
புறனடை | இது நூற்பா வகை ஆறனுள் ஒன்று. சிறப்பு நூற்பாக்களின் புறத்தேஅடுத்து வருதலின் (புறன் + அடை) இது புறனடை எனப்படும். நுற்பாக்களின்புறத்தே நடத்தலின் ( புறம்+ நடை) புறநடை எனினும் அமையும். (இ.கொ.86)புறனடை நூற்பா, சிறப்பு நுற்பாக்களில் கூறப்படாது எஞ்சி நிற்கும்செய்திகளைக் கோடற்கு வழிகோலுவதாய் உள்ளது.பிண்டம், தொகை, வகை, குறி, செய்கை, புறனடை- என நூற்பாஅறுவகைப்படும். பெரும்பான்மையும் ஒவ்வோரியல் இறுதியிலும் புறனடைநூற்பா அவ்வியற் செய்தியை நிறைவு செய்வதற்காக இடம் பெறும். (நன்.பாயி. 20) |
புறப்பாட்டு | அகமல்லாத புறப்பொருட் செய்திகள் பற்றி அமைந்த புறநானூறு,பதிற்றுப்பத்து முதலியவற்றுப் பாடல்கள். புற நானூற்றுக்கே‘புறப்பாட்டு’ என்ற பெயரும் உண்டு.‘மீனுண் கொக்கின் (227) என்ற புறப்பாட்டும் அது’ என வரும்நச்சினார்க்கினியருரையுள் காண்க.(தொ. செய். 79 நச்.) |
புறப்புறக் கருவி | இது கருவிவகை நான்கனுள் ஒன்று. மொழிகள் ஆதற்குரிய எழுத்துக்களின்இலக்கணமும் பிறப்பும் கூறும் நுல்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவிகளாம். அவை புணர்ச்சிக்குரிய புறக்கருவிகளாகிய, மொழிகளை ஆக்கும்எழுத்துக்களின் இலக்கணமும் பிறப்பும் கூறுதலின் புறப்புறக்கருவிகள்ஆயின. (தொ. எ. 1 நச். உரை) |
புறப்புறச் செய்கை | இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும்செய்கை பெறாது நிற்ப, அவ்விரண்டை யும் பொருத்துவதற்கு உடம்படுமெய்போன்ற ஓரெழுத்து வருவது புறப்புறச் செய்கையாம்.எ-டு : மணி+ அழகிது > மணி + ய் + அழகிது = மணி யழகிதுகோ + அழகிது > கோ + வ் + அழகிது = கோவழகிதுஇடையே யகரஒற்றும் வகரஒற்றும் புறப்புறச் செய்கையான் வந்தன. (தொ. எ.1, 140 நச். உரை) |
புறப்பொருட்கோவை | புறப்பொருள்மேல் வருவன புறப்பொருட் கோவை.(சாமி. 167) |
புலவர் தம் வகைகள் (5) | கவி, கமகன், வாதி, வாக்கி என்று புகழப்படும் நால்வகை. ‘கவி’முதலியவற்றின் விளக்கம் தனித்தனித் தலைப்புள் காண்க.(இ. வி. பாட். 169) |
புளிமரப்பெயர் புணருமாறு | புளி என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று வருமொழி யொடுபுணரும்.எ-டு: புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல், புளியம்பூ;புளியஞெரி, புளியநுனி, புளியமுரி; புளியயாழ், புளியவட்டு -என வன்கணம் வருவழி அம்முப் பெற்றும், மென்கணமும் இடைக்கணமும்வருவழி அம்மின் மகரம் கெட்டும் புணர்ந்தவாறு. (தொ. எ. 244 நச்.) |
புள்: புணருமாறு | பறவையை உணர்த்தும் புள் என்ற பொருட்பெயர் இருவழி யும் வன்கணம்வந்துழித் தொழிற்பெயர் போல உகரமும் வல்லெழுத்தும் பெறுவதுபெரும்பான்மை; மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரப் பேறும்,யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ளகரஒற்று இரட்டுதலும்எய்தலாம்.எ-டு : புள்ளுக் கடிது, புள்ளுக்கடுமை; புள்ளு ஞான்றது,புள்ளுஞாற்சி; புள்ளு வலிது, புள்ளுவலிமை; புள் யாது, புள்யாப்பு;புள்ளரிது, புள்ளருமை.புள் என்பதன் ளகரம் வன்கணம் வந்துழி டகரமாகவும், மென்கணம்வந்துழி ணகரமாகவும் திரிதலுமுண்டு.எ-டு : புட் கடிது, புட்கடுமை; புண் ஞான்றது, புண்ஞாற்சி. புள்என்பதன்முன் இடைக்கணம் வருமொழியா யின் உகரம் பெற்றும் பெறாதும்புணரும்.எ-டு : புள்ளு வலிது, புள்ளு வலிமை; புள் வலிது, புள் வலிமை(தொ. எ. 403 நச்.) |
புள்ளி இறுதி | மெய்யினை ஈறாக உடைய சொற்கள். மெய்யீறுகளாவன, ஞ் ண் ந் ம் ன் ய்ர்ல் வ் ழ் ள் என்ற பதினொன்றாம்.எ-டு : உரிஞ், உண், பொருந், மரம், பொன், தேய், பார், செல்,தெவ், வாழ், கேள். (தொ.எ.78. நச்.) |
புள்ளி ஈற்று முன் உயிர் | நிலைமொழி புள்ளியீற்றதாக, வருமொழி முதலில் உயிர் வரின், அவ்வருமொழி உயிர் நிலைமொழியீற்றுப் புள்ளி யெழுத்தொடு கூடிஉயிர்மெய்யாய்விடும்.எ-டு : ஆல் + இலை = ஆலிலை; நாகு + அரிது = நாகரிதுமெய்யீறு புள்ளி பெறுவது போலக் குற்றியலுகர ஈறும் புள்ளி பெறும்எனவே, புள்ளியீறு என்பதனுள் மெய்யீறு குற்றுகர ஈறு என இரண்டும்அடங்கும். உயிர், மெய்யீற் றொடும் குற்றியலுகர ஈற்றொடும் சேர்ந்துஇயலும்.உயிர், இயல்பாய மெய்யீற்றொடும் குற்றியலுகர ஈற்றொடும் சேர்ந்துஇயலுதல் போலவே, விதியான் வந்த மெய்யீறு குற்றியலுகர ஈறு இவற்றொடும்சேர்ந்து இயலும்.எ-டு : அதனை – அத் + அன் + ஐ அவற்றொடும் – அவ் + வற்று + ஒடு +உம்அது என்பது உகரம் கெட்டு ‘அத்’ ஆயிற்று. முற்றியலுகர மாகிய ஒடுஎன்பது அவற்று என்பதனொடு சேர்ந்து அவற்றொடு – எனக் குற்றியலுகர ஈறாகி‘உம்’ புணர்ந்து, குற்றியலுகரத்தின் மீது உகரஉயிர் ஊர அவற்றொடும்என்றாயிற்று.உயிர்முதல்மொழி வர, நிலைமொழியீற்றுமுற்றியலுகரம் கெடும் என்றுகூறிய தொல். குற்றியலுகரம் கெடும் என்னா ராய் இயல்பாகப் புணரும் என்றேயாண்டும் கூறலின், குற்றியலுகர ஈற்றின் மேலும் உயிர் ஊர்ந்து வரும்என்பதே அவர் கருத்து. (எ. ஆ. பக். 105)புள்ளியீறாகிய குற்றியலுகரம் ஏற்ற எழுத்தில் குற்றியலுகரம் கெடஎஞ்சிநிற்கும் மெய்யின்மீது உயிர் ஏறி முடியும். இது சிவஞான. கருத்து.பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் கருத்தும் அதுவே.எ-டு : நாகு + அரிது > நாக் + அரிது = நாகரிது (எ. கு. பக். 142) |
புள்ளி பெறும் எழுத்துக்கள் | ஏகார ஓகாரங்களொடு வரிவடிவில் வேறுபாடில்லாத எகர ஒகரங்கள்,மெய்யெழுத்துக்கள், ஈற்றுக் குற்றியலுகரங்கள், ஆய்தம் – என்பன புள்ளிபெறும்.மகரக்குறுக்கம் மேற்புள்ளியோடு உட்புள்ளியும் பெறும்.(ம் {{special_puLLi}} )புள்ளி, எழுத்தின் இயல்பான மாத்திரையைப் பாதியாகக் குறைத்ததைத்தெரிவிப்பதற்கு அறிகுறியாக வரும். (தொ. எ. 15, 16, 14, 105, நச்.)(பொ. 320 பேரா.) |
புள்ளி மயங்கியல் | புள்ளி மயங்கியல் தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் எட்டாவதுஇயலாகும். இது 110 நுற்பாக்களை உடையது.ஞகார ஈற்று அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி; நகார ஈற்று அல்வழிவேற்றுமைப் புணர்ச்சி; ணகார ஈற்று அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி; மகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; னகார ஈற்று வேற்றுமை அல்வழிப்புணர்ச்சி; யகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ரகார ஈற்றுவேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; லகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி;வகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ழகார ஈற்று வேற்றுமை அல்வழிப்புணர்ச்சி; ளகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ஓத்தின் புறனடை -என்பன இதன்கண் அடங்கியுள. இப் புறனடை சிங்கநோக்காக முன்னுள்ள உயிர்மயங்கியலுக்கும் பின்னுள்ள குற்றியலுகரப் புணரியலுக்கும் ஒக்கும்.(தொ.எ.296- 405 நச்.) |
புள்ளி மயங்கியல் புறனடைச் செய்தி | மண்ணப் பத்தம் – அல்வழிக்கண் ணகர ஈறு அக்குப் பெற்றது.பொன்னப்பத்தம் – அல்வழிக்கண் னகர ஈறு அக்குப் பெற்றது.மண்ணங்கட்டி – அல்வழிக்கண் ணகர ஈறு அம்முப் பெற்றது.பொன்னங்கட்டி – அல்வழிக்கண் னகர ஈறு அம்முப் பெற்றது.மண்ணாங்கட்டி – அல்வழிக்கண் மரூஉ முடிவு.கானாங்கோழி – அல்வழிக்கண் மரூஉ முடிபு.வேயின்தலை – யகரஈறு வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்றது.நீர் குறிது – ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பு; வேர்குறிது,வேர்க்குறிது – ரகர ஈறு அல்வழிக்கண் உறழ்ச்சி; வடசார்க் கூரை,மேல்சார்க் கூரை – ரகர ஈறு வல்லெழுத்துப் பெற்ற மரூஉமுடிபு; அம்பர்க்கொண்டான், இம்பர்க் கொண்டான், உம்பர்க் கொண்டான், எம்பர்க் கொண்டான் -என ஏழன் உருபின் பொருள்பட வந்த பெயர்கள் வல்லொற்றுப் பெற்றன.தகர்க்குட்டி, புகர்ப்போத்து – ரகரஈறு இருபெயரொட் டின்கண்வல்லொற்று மிக்கது.விழன் காடு – லகரஈறு வேற்றுமைக்கண் றகரம் ஆகாது னகரம் ஆயிற்று.கல்லம்பாறை, உசிலங்கோடு, எலியாலங்காய், புடோலங்காய் – லகர ஈறுஅம்முப் பெற்றது.கல்லாம்பாறை – மரூஉ முடிபு பெற்றதுஅழலத்துக் கொண்டான் – அத்துப் பெற்றது.அழுங்கற் போர், புழுங்கற் சோறு – லகரஈற்று அல்வழித்திரிபு.வீழ் குறிது, வீழ்க் குறிது – ழகரஈற்று அல்வழி உறழ்ச்சி.தாழம்பாவை – ழகரஈறு அல்வழியில் அம்முப் பெற்றது.யாழின் கோடு – ழகரஈறு ‘இன்’ பெற்றது.முன்னாளைப் பரிசு, ஒருநாளைக் குழவி – ளகரஈறு ஐகாரமும்வல்லெழுத்தும் பெற்றது.குளத்தின் புறம் – மகரஈறு அத்தும் இன்னும் பெற்றது.பொன்னுக்கு, பொருளுக்கு, நெல்லுக்கு, பதினேழு, பல்லுக்கு,சொல்லுக்கு – வழக்கின்கண்ணும் செய்யுட்கண்ணும் புள்ளி யீறுகள் உகரம்பெற்றன.பல் +கு = பற்கு – என உருபேற்புழி, லகரம் றகரமாகத் திரிந்தது.(தொ.எ.405 நச்.) |
புள்ளும் வள்ளும் புணருமாறு | புள், வள் – என்பன தொழிற்பெயர் போல யகரம் அல்லாத மெய்ம்முதல்மொழிவருமிடத்தே உகரச்சாரியை பெறுதலு முண்டு; பொதுவிதிப்படி அல்வழியில்ஈற்று ளகரம் டகரத் தோடு உறழ்ந்து வருதல் மிகுதி; வேற்றுமையில் ளகரம்டகரமாகத் திரிதலே மிகுதி என்க.புள் + கடிது = புள் கடிது, புட் கடிது, புள்ளுக் கடிது -அல்வழிபுள் + கடுமை = புட்கடுமை, புள்ளுக்கடுமை – வேற்றுமைவள் + கடிது = வள் கடிது, வட் கடிது, வள்ளுக் கடிது -அல்வழிவள் + கடுமை = வட்கடுமை, வள்ளுக்கடுமை – வேற்றுமை புண் மெலிது,புண்மென்மை; புள் வலிது, புள்வலிமை – என ஏனைக்கணத்தொடும் புணர்த்துமுடிக்க. (நன். 234) |
புள்வகை | அகரம் வல்லூறு; இகரம் ஆந்தை; உகரம் காக்கை; எகரம் கோழி; ஒகரம்மயில். (பிங். 1354) |
புழன் : உருபொடு புணருமாறு | புழன் என்பது உருபேற்குமிடத்து அத்தும் இன்னும் மாறி வரப்பெறும்.வருமாறு: புழத்தை, புழனினைஇருசாரியையும் ஒருங்கே பெற்றுப் புழத்தினை எனவும் வரும்.(தொ.எ.193 நச். உரை) |
பூ : புணருமாறு | மலரை உணர்த்தும் பூ என்ற சொல் அல்வழிக்கண் வன்கணம் வரின் மிக்கும்,ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும். வேற்றுமைக்கண் வருமொழிவன்கணம் வரின் வல்லெழுத்து மிகுதலும் இனமெல்லெழுத்து மிகுதலும்உரித்து.எ-டு: பூக்கடிது; பூ நன்று, பூவறிது, பூ வழகியது (வகரம்உடம்படுமெய்); பூக்கொடி, பூங்கொடி (தொ. எ. 264, 268நச்.) |
பூ என்பதன் முன் வல்லினம் | பூ என்ற பெயர் நிலைமொழியாக நிற்க, வல்லினம் வருமொழி முதற்கண்நிகழுமாயின், இடையே வல்லெழுத்து மிகுதலே யன்றி அதற்கு இனமானமெல்லெழுத்தும் மிகும்.எ-டு : பூ + கொடி, சோலை, தடம், பொழில் = பூக்கொடி, பூங்கொடி;பூச்சோலை, பூஞ்சோலை; பூத்தடம், பூந்தடம்; பூப்பொழில்,பூம்பொழில்.வன்மைமென்மை மிகுதல் செவியின்பம் நோக்கிக் கொள்க. பூத்தொழில்,பூத்தொடை எனவும், பூம்பொழில் எனவும் வழங்குதல் காண்க. (நன். 200சங்.) |
பூ முதலியவற்றின் நிற உரிமை | வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்னும் நாற்பாவுக்கும், சூடுவன பூவும்,பூசுவன சாந்தும், உடுப்பன கலையும், அலங்கரிப்பன அணியும் முறையேவெள்ளையும் சிவப்பும் கருமையும் பொன்மை நிறமும் ஆம். (மருட்பாவிற்குவெண் சிவப்பு நிறமாம்) (இ. வி. பாட். 124) |
பூதத்தார் பாடல் | ஆரிடப் போலிக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுவது.“கறைப்பல் பெருமோட்டுக் காடு கிழவோட்(கு)அரைத்திருந்த சாந்துதொட்(டு) அப்பேய்மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக்குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு”இது பூதத்தாரும் காரைக்காற் பேயாரும் பாடியது. இவ் வெண்பாவுள்இரண்டாமடி குறைந்து வந்து, ஆரிடப் போலியாதலின் அமைந்தது. (யா. வி.பக். 371) |
பூதபுராணம் | தொல்காப்பியத்துக்கு முந்துநூல்களுள் ஒன்று. பூத புராணம் முதலாகியஅவையெல்லாம் சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின்,தொகுத்துச் செய்யப்பட்டு வழங்குநூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம்முதலாக இன்றுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொ. பொ. 652 பேரா. உரை) |
பூதி முதலியவற்றில் தீட்டியவரிவடிவு | ‘புள்ளிவிட் டவ்வொடு’ என்னும்சூத்திரத்தில் வரிவடிவு ஒலிவடிவுஎன்னும் எழுத்தின் இருதிறனும் விரவிக் கூறினார், திருநீறுமுதலியவற்றில் தீட்டிய வரிவடிவம் ஒலிவடிவு போலப் பயன் தரும் ஒற்றுமைகுறித்து.புள்ளிவிட்டு அவ்வொடு முன் உருவாதல், ஏனை உயிரோடு உருவு திரிதல்,உயிரின் வடிவொழித்தல் – வரி வடிவம்;உயிர் அளவாதல், ஒற்று முன்னாய் ஒலித்தல் – ஒலிவடிவம் (நன். 89சங்கர.) |
பூர்வ மீமாஞ்சை | வேதத்தில் கரும காண்ட ஆராய்ச்சி பற்றி iஜம்நி முனிவர் இயற்றியசாத்திரம். |
பூல்:புணருமாறு | பூல் என்ற மரப்பெயர் அல்வழிக்கண் வன்கணம் வரின் உறழ்ந்தும், இடைஉயிர்க்கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் அம்முச் சாரியையும் சிறுபான்மைஆம்சாரியையும் பெற்றுப் புணரும். மென்கணத்துள்ளும் ஞகரமகரங்கள் வருவழிலகரம் னகரமாய்த் திரியும் என்க.எ-டு : பூல்கடிது, பூற்கடிது – பூல்(ன்) ஞான்றது, பூல் வலிது,பூலழகிது – அல்வழி; பூலங்கோடு, பூலஞெரி, பூல விறகு; பூலாங்கோடு,பூலாங்கழி – வேற்றுமை. (தொ. எ. 368, 375 நச். உரை) |
பெண் பருவம் | பேதை (வயது 6, 7), பெதும்பை (11), மங்கை (12), மடந்தை (13) அரிவை(25), தெரிவை (31), பேரிளம் பெண் (40) என்பன.வாலை (5), தருணி (11), பிரவுடை (40), விருத்தை (40க்கு மேல்)என்றும் சில பருவம் கூறுப. (பிங். 939) பேதை முதலிய பருவ மகளிர்க்குவயது பிறவாறும் கூறுப. (இ.வி.பாட். 99 – 103)(ஆ. நி. 72, பிங். 941. நா. நி. 118, பொ.நி. 97) |
பெண்கலை | வண்ணப்பாவின் பின் பகுதி. |
பெண்ணெழுத்து | 1. உயிர்மெய் (பிங். 1359). 2. நெட்டெழுத்து. (வெண்பா. முதன் மொ.6) |
பெண்பாற் பிள்ளைக்கவி | பெண்பாற் பிள்ளைத் தமிழ்; அது காண்க. |
பெண்பாற் பிள்ளைத்தமிழ் | இருபாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாக உரிய காப்பு, செங்கீரை,தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்னும் ஏழு பருவங்களோடே,பெண்பாற்கே சிறப்ப உரியவான கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள்அமைய, சந்த விருத்தத்தாலும் பிற ஆசிரிய விருத்தத்தாலும் பாடப்படும்பிரபந்தம். அம்மானை, நீராடல், ஊசல் என இறுதிப் பருவங்கள் அமையப்பெறுவனவும் உள. ‘பிள்ளைத் தமிழ்’ காண்க. (இ. வி. பாட். 47) |
பெண்பாற் பிள்ளைப்பாட்டு | ‘பெண்பாற் பிள்ளைத் தமிழ்’ காண்க. |
பெண்பாற்பெயர்ப் பகுபதம் சிலவற்றதுமுடிபு | பெண்பாற்பெயர்ப் பகுபதம் முடிப்புழி இன்ன குலத்தார் என்னும்பொருண்மை தோன்ற முடிக்க.அரசி என்னும் பகுபதம் முடியுமாறு: ‘தத்தம்….. பகுதியாகும்’ (நன்.133) என்பதனான் அரசு என்னும் பகுதியைத் தந்து, ‘அன் ஆன்’ (139)என்பதனான் இகர விகுதியை நிறுவி, ‘உயிர்வரின் உக்குறள்’ (163)என்பதனான் உகரத்தைக் கெடுத்துச் சகர ஒற்றின்மேல் ‘உடல்மேல்’ (203)என்பதனான் இகரஉயிரை ஏற்றி முடிக்க.பார்ப்பனி: ‘தத்தம்… பகுதியாகும்’ என்பதனான் பார்ப்பான் என்னும்பகுதியை முதல்வைத்து, அதனை ‘விளம்பிய பகுதி’ (138) என்பத னான்பார்ப்பன்- என அன் ஈறாக்கி, ‘அன் ஆன்’ என்பதனான் இகர விகுதியைக்கொணர்ந்து உயிரேற்றி முடிக்க.வாணிச்சி: வாணிகன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பதனான்‘கன்’ கெடுத்து, இகரவிகுதியைக் கொணர்ந்து சகர இடைநிலையை வருவித்துஅதனைமிகுவித்து, உயிரேற்றி முடிக்க.உழத்தி: உழவன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பத னான்‘வன்’கெடுத்து, இகர விகுதி கொணர்ந்து, ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்இயம்பலின்’ (140) என்பதனான் தகர இடைநிலையை வருவித்து, அதனைமிகுவித்து, உயிரேற்றி முடிக்க.தச்சிச்சி: தச்சன் என்னும் பகுதியை ‘அன்’ கெடுத்து நிறுவி, இகரவிகுதியைக் கொணர்ந்து ‘இலக்கியம் கண்டதற்கு’ என்பதனான் ‘இச்’ என்னும்இடைநிலையை வருவித்து உயிரேற்றி முடிக்க. (நன். 144 மயிலை.) |
பெண்பாலெழுத்து | பெண்ணெழுத்து, நெட்டெழுத்து ஏழும் ஆம்.(இ. வி. பாட். 13) |
பெதும்பை | எட்டு முதலாகப் பதினொன்று காறும் ஆண்டு நிகழும் பெண்பாற் பருவம்;உலாமகளின் பருவமேழனுள்ளும் இஃது இரண்டாவது. (இ. வி. பாட். 100) |
பெயர் இன்னிசை | பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சாருமாறு இன்னிசை வெண்பாவால் 90,70,50 என்ற எண்ணிக்கைப்படப் பாடுவ தொரு பிரபந்தம். (இ. வி. பாட். 65) |
பெயர் நேரிசை | பாட்டுடைத்தலைவன் பெயரையும் ஊரையும் சார்ந்து வருமாறு தொண்ணூறும்எழுபதும் ஐம்பதும் நேரிசை வெண்பாவால் கவிகள் பாடின், அவை பெயர்நேரிசைஎனவும் ஊர்நேரிசை எனவும் வழங்கப்படும். ஈண்டுப் பாட்டுடைத் தலைவனதுபெயரைச் சார்ந்துவரப் பாடப் படும் 90, 70, 50 ஆகிய நேரிசைவெண்பாவாலமைந்த பிரபந்தம். (இ. வி. பாட். 70) |
பெயர் புணர்நிலை வேற்றுமை வழிய | பெயர் புணர்நிலை – பெயர்ச்சொல் இணையும்வழி. பெயர்ச் சொல் புணரும்வழியிலேயே வேற்றுமைப் புணர்ச்சி அமையும். நால்வகைச் சொற்களும்இருவழியும் புணரும் என எய்தியதனை மறுத்துப் பெயர்ச்சொல் புணரும்நிலையே வேற்றுமையாம் எனவே, வினைச்சொல் முதலியமூன்றும் புணரும்வழிஅல்வழிய ஆவன அன்றி, வேற்றுமை வழிய வாரா;பெயர்ச்சொற்கள், வேற்றுமைவழி -அல்வழி – என இருவழியும் ஆம் என்பது. (சூ. வி. பக். 51)எ-டு :சாத்தன் மகன்-பெயரொடு பெயர்-வேற்றுமைப் புணர்ச்சிநிலம் கடந்தான்-பெயரொடு வினை – வேற்றுமைப் புணர்ச்சிவந்த சாத்தன்-வினையொடு பெயர் -அல்வழிப்புணர்ச்சிமற்றிலது-இடையொடு வினை – அல்வழிப்புணர்ச்சிநனிபேதை- உரியொடு பெயர் – அல்வழிப்புணர்ச்சிதவச்சேயது-உரியொடு வினை – அல்வழிப்புணர்ச்சிமற்றைப் பொருள்- இடையொடு பெயர்- அல்வழிப் புணர்ச்சிநால்வகைப் புணர்ச்சியும் வேற்றுமை அல்வழி என இரண் டாய் அடக்கலின்,வினைவழியும் உருபு வரும் என்பதுபட நின்றதனை இது விலக்கிற்று. (தொ. எ.117 இள. உரை)“ஆயின் இவ்விலக்குதல் ‘வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது’ என்றவினையியல் முதல் சூத்திரத்தான் பெறுதும் எனின், அது முதனிலையைக்கூறியதாம்.” (தொ. எ. 116 நச். உரை) |
பெயர் மாலை | ‘நாம மாலை’ என்பதன் பரியாயப் பெயர். அது காண்க. |
பெயர் விகுதி பெறுதல் | வில்லன் வில்லான், வளையள் வளையாள், ஊரர் ஊரார், வில்லி வாளி அரசிசெட்டிச்சி, காதறை மூக்கறை -இவை வினையின் விகுதிகள் சில பெயரில்வந்தன. (அன் ஆன், அள் ஆள், அர் ஆர், இ, ஐ – என்பன.) (நன். 140சங்கர.) |
பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறல் | இடையும் உரியும் பெயர்வினைகளை அடுத்தல்லது தாமாக நில்லாமையின்பெயர்வினைகளுக்கே புணர்ச்சி கூறப் பட்டது. (தொ.எ.109 இள. உரை)இடைச்சொல்லும் உரிச்சொல்லும் புணர்க்கும் செய்கைப் பட்டுழிப்புணர்ப்பு சிறுபான்மை ஆதலின் அவை விதந்து கூறப் பெறவில்லை. (108 நச்.உரை) |
பெயர்இடைநிலைகள் | வானவன், மீனவன், வில்லவன், எல்லவன், கதிரவன், சூரியவன் – என்பன அகரஇடைநிலை பெற்றன.சேரமான், கட்டிமான் – என்பன மகர இடைநிலை பெற்றன.வலைச்சி, புலைச்சி – என்பன சகர இடைநிலை பெற்றன.புலைத்தி, வண்ணாத்தி – என்பன தகர இடைநிலை பெற்றன.வெள்ளாட்டி, மலையாட்டி – என்பன டகர இடைநிலை பெற்றன.கணக்கிச்சி, தச்சிச்சி- என்பன ‘இச்’ இடைநிலை பெற்றன.சந்தி வகையானும் பொதுச்சாரியை வகையானும் முடியாவழி இவ்வாறு வருவனஇடைநிலை எனக் கொள்க. (நன். 140 மயிலை.)அறிஞன் என்பது ஞகர இடைநிலை பெற்றது.ஓதுவான், பாடுவான் – என்பன வகர இடைநிலை பெற்றன.வலைச்சி, புலைச்சி – என்பன சகர இடைநிலை பெற்றன.வண்ணாத்தி, பாணத்தி; மலையாட்டி, வெள்ளாட்டி; தந்தை, எந்தை, நுந்தை-என்பன தகர இடைநிலை பெற்றன. (நன். 141 சங்கர.)அறிஞன், வினைஞன், கவிஞன் – ஞகரஒற்று இடைநிலை பெற்றன.ஓதுவான், பாடுவான் – வகரஒற்று இடைநிலை பெற்றன.வலைச்சி, இடைச்சி – சகரஒற்று இடைநிலை பெற்றன.செட்டிச்சி, தச்சிச்சி – ‘இச்சு’ என்னும் இடைநிலை பெற்றன.கதிரவன், எல்லவன், வானவன் – அகர உயிராம் இடைநிலை பெற்றன.சேரமான், கோமான், வடமன் – மகரஒற்று இடைநிலை பெற்றன. (நன். 141இராமா.)உண்டவன் உரைத்தவன் உண்ணாநின்றவன் உண்பவன் – முதலிய வினைப்பெயர்கள்முக்கால இடைநிலைகள் (ட், த், ஆநின்று, ப் முதலிய) பெற்றவாறும், வானவன்மீனவன் வில்லவன் எல்லவன் கதிரவன் கரியவன்-முதலியவை‘அ’ என்னும் இடைநிலைபெற்றவாறும், சேரமான் கட்டிமான்-முதலியவை மகர இடைநிலை பெற்றவாறும்,வலைச்சி பனத்தி மலையாட்டி முதலியவை முறையே சகர தகர டகர இடை நிலைபெற்றவாறும், செட்டிச்சி, தச்சிச்சி – முதலியவை ‘இச்சு’ என்னும்இடைநிலை பெற்றவாறும் காண்க. பிறவும் அன்ன. (இ. வி. 52. உரை) |
பெயர்நிலைச்சுட்டு | பெயர்நிலைச் சுட்டாவது சுட்டுநிலைப் பெயர் என்றவாறு. அவை பொருளைஒருவர் சுட்டுதற்குக் காரணமான நிலையையுடைய பெயர்கள். அவை உயர்திணைப்பெயரும் அஃறிணைப் பெயரும் என இருவகைய. பொதுப்பெயரென ஒன்று இன்று. அஃதுஅஃறிணைப் பெயராகவோ உயர் திணைப் பெயராகவோ, ஒருநேரத்தில் ஒன்றாகத்தான்இருத்தல் வேண்டும். ஆதலின், பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்அஃறிணைப்பெயர் என்ற இரண்டனுள் அடங்கும். (தொ. எ. 117நச். உரை)பெயர்நிலைச்சுட்டு-பெயராகிய பொதுநிலைமையது கருத்து. (118 இள.உரை)பெயர் புணரும் நிலையாகிய கருத்தின்கண் (எ. கு. பக். 124) |
பெயர்ப்பகுபதம் தன்னொடும்பிறிதொடும்புணர்தல் | மலையன் மன்னவன்- மலையன் மன் எனவும், வானவன் வாளவன் – வானவன் வாள்எனவும், பரணியான் பாரவன் – பரணியான் பார் எனவும், இளையள் மடவாள் -இளையள் பெண் எனவும், கரியான் மலையன் – கரியான் கால் எனவும், ஊணன்தீனன்- ஊணன் உரம் எனவும் பெயர்ப்பகுபதம் தன்னொடும் பிறிதொடும் வந்தது.(நன்.150 மயிலை.) |
பெயர்ப்பகுபதம் பிரிப்பு | பெயர்ப் பகுபதம் பிரித்தால், பகுதி பகாப்பதமும் விகுதி வேறுபொருளில் இடைச்சொல்லுமாய்த் தொடர்ந்து நின்று பொருளை விளக்கும். அவைஊரன், வெற்பன், வில்லி, வாளி- என்பன. (நன்.131 மயிலை,) |
பெரிய பம்மம் | பழைய யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. அசைக்கு உறுப் பாகும்எழுத்துக்கள் பதினைந்து என்பதற்கு இந்நூல் சூத்தி ரம் மேற்கோளாகஎடுத்துக்காட்டப்பட்டுள்ளது.(யா. வி. பக். 31) |
பெரிய முப்பழம் | பாட்டியல் மரபு கூறுவதொரு பண்டையிலக்கண நூல்.(யா. வி. பக். 555) |
பெரியவாச்சான் பிள்ளை | 13ஆம் நூற்றாண்டினராகிய வைணவ ஆசாரியார்; திருப் பனந்தாளை யடுத்தசேய்ஞலூரில் தோன்றியவர்; ஸ்மார்த்தச் சோழியர்; பின் வைணவர் ஆகியவர்;திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் வியாக்யானம் வரைந்துள்ளார்.பெரியாழ்வார் திருமொழியின் பெரும்பகுதிக்கு இவர் வரைந்த வியாக்யானம்கிட்டவில்லை. திருவாய்மொழிக்கு இவர் வரைந்த இருபத்து நாலாயிரப்படிமிகச் சிறந்தது என்ப. நம்பிள்ளையினது ஈடு இதனைப் பெரும்பாலும்விளக்குவதாக அமைந்துள்ளது. |
பெருங்கலித்தொகை | இறந்துபட்ட இடைச்சங்கத்து நூல்களிடையே ஒன்று என்ப; ‘இருங்கலிகடிந்த பெருங்கலித் தொகையொடு’ (சிலப். உரைப் பாயிரம்அடிக்குறிப்பு) |
பெருங்காக்கைபாடினியம் | பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பட்டதோர் யாப்பிலக்கண நூல். இவர்தொல்காப்பியனார் காலத்தவர் என்பது பேராசிரியர் கருத்து. இவருடையநூலிலிருந்து 73 நூற்பாக்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இலக் கணவிளக்கம் செய்யுளியல் பிற்சேர்க்கை காண்க. |
பெருங்காக்கைபாடினியார் | பெருங்காக்கை பாடினியம் எனத் தம் பெயரால் ஓர் யாப் பிலக்கணநூலியற்றிய புலவர். இவர் காலத்தில் ‘வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம்’என, வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் தமிழகஎல்லைகளாக இவைஇருந்தன என்பது இவர் இயற்றிய தற்சிறப்புப் பாயிரச் சூத்திரத்தால்போதருகிறது. |
பெருங்குருகு | தலைச் சங்கத்தே வழக்கிலிருந்த ஓர் இசைத்தமிழிலக்கண நூல். (சிலப்.உரைப் பாயிரம்) |
பெருங்குறிஞ்சி | பத்துப்பாட்டுள் ஒன்றாகிய, கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு,‘கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியிலும்’ (பரி. 19-77 உரை) |
பெருஞ்சித்திரனார் பாடல் | இவர் பாடல்களில் சில, பாடல்கட்கு என்று வரையறுக் கப்பட்டஇலக்கணங்களின் மிக்கும் குறைந்தும் அமைந்தiவ; ஆரிடப்போலி எனவும் ஆரிடவாசகம் எனவும் அவை கூறப்படும். (யா. வி. பக். 370, 371) |
பெருநாரை | தலைச்சங்கத்து வழக்குப் பெற்றிருந்த இசை இலக்கண நூல்களுள் ஒன்று.(சிலப் உரைப்.) |
பெருநூல் | ஒரு பொருள் கிளந்த சூத்திரம், இனமொழி கிளந்த ஓத்து, பொதுமொழிகிளந்த படலம் – என்னும் இம்மூன்று உறுப்ப hன் இயன்ற இலக்கணம். (சிவஞா.பா. வி. பக். 9)எ-டு : தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல், சின்னூல், இலக்கணவிளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம். |
பெருந்தலைச் சாத்தனார் பாடல் | ‘பெருஞ்சித்திரனார் பாடல்’ என்பதற்குரிய குறிப்பு ஈண்டும் கொள்க.(யா. வி. பக். 370, 371) |
பெருந்தேவனார் | 1. பாரதம் பாடிய சங்கப் புலவர். (தொ. பொ. 72 நச்.)2. ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர்3. பதினோராம் நூற்றாண்டினரான வீரசோழிய உரை யாசிரியர். |
பெருந்தேவபாணி | 1. கடவுளரைத் துதிக்கும் இசைப்பா வகை. (சிலப். 6 : 35 உரை)2. பதினோராம் திருமுறையைச் சார்ந்த, நக்கீரரால் பாடப் பெற்ற ஒருசைவப் பிரபந்தம். |
பெருமகிழ்ச்சி மாலை | கற்புடைப் பெண்டிருடைய பெருமைகளைக் கூறுவதொரு பிரபந்தம்.(சது.) |
பெரும்பொருள் | பொருட் பகுதி பற்றியதொரு விரிவான நூல் (சீவக. 187 நச். உரை). இதுபெரும்பொருள் விளக்கம் எனவும் பெயர் பெறும். இதன் பாடல்கள் பலபுறத்திணையியல் உரையிலும் புறத்திரட்டிலும் உள. |
பெருவளநல்லூர்ப் பாசண்டம் | பாவினங்களுள் நவக்கிரகமும் வேற்றுப்பாடையும் விரவி வந்தால்,அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்க வேண்டும் என்பதற்குஎடுத்துக்காட்டாக இத்தொடர் நிலைச் செய்யுள் குறிப்பிடப்பட்டுள்ளது.(யா. வி. பக். 491) |
பேடியெழுத்து | ஆய்த எழுத்து. (இ. வி. பாட். 13) |
பேதை | எழுவகைப் பருவமாகப் பிரிக்கப் பெற்ற மகளிரில், முதற் பருவத்தினள்;வயது வரையறை ஐந்து முதல் ஏழாண்டு அளவும். (இ. வி. பாட். 99) |
பேன் என்ற பெயர் புணருமாறு | பேன் என்பது பண்டைக்கால இயற்பெயர்களுள் ஒன்று. பேன் என்ற இயற்பெயர்தந்தை என்ற முறைப்பெயராடும், மக்கள் முறைமையில் வரும்இயற்பெயர்களொடும் புணரும்வழி, இயற்பெயர்களுக்குரிய சிறப்புப்புணர்ச்சி விதி பெறாது, அஃறிணை விரவுப்பெயரின் பொதுவிதியான்முடியும்.எ-டு : பேன்+ தந்தை = பேன்றந்தை (பேனுக்குத் தந்தை)பேன் + கொற்றன் = பேன்கொற்றன் (பேன் என்ப வனுக்கு மகனாகியகொற்றன்) (தொ.எ.351 நச்.) |
பேரகத்தியம் | அகத்தியரால் இயற்றப்பட்டதோர் இலக்கணநூல்; அளவிற் பெரியதாயிருந்தமை‘சிற்றகத்தியம்’ என்ற பெயரை நோக்கப் புலனாம். இஃது இறந்துபட்டது. இஃதுஇயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலக்கணமும் கூறிய மகா பிண்டமாகஇருந்தது. (மா. அ. பாயிரம். 20) |
பேராசிரியர் | தொல்காப்பிய உரையாசிரியர்; நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர்.காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப. இவர் பொரு ளதிகாரத்தில்நச்சினார்க்கினியரால் மூன்று இடங்களில் போற்றப்பட்டுள்ளார்.மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் பொருளதிகார நான்குஇயல்கட்கும் இவர் உரை உள்ளது. திருக்கோவையார் உரையாசிரியரொருவர்க்கும்பேராசிரியர் என்ற பெயர் உண்டு. இவ்விருவர் உரையும் திட்ப நுட்பம்வாய்ந்தவை; தமிழுக்குப் பெருமை கூட்டுவன. |
பேரிளம்பெண் | எழுவகைப் பருவ மகளிருள் இறுதிப் பருவத்தவள்; நாற்பது வயதினள்;என்றது முப்பத்திரண்டு முதல் நாற்பதுகாறும் நிகழும் ஆண்டினள். (இ. வி.பாட். 103) |
பொங்கத்தம் பொங்கோ | போரில் தோற்றவர் – ஆடிக்கொண்டு கூறும் அபயக்குரல் (திவ். பெரியதி10 – 2-1 வியாக்) |
பொது எழுத்து | ஆரிய உயிர் பதினாறனுள், நடுவிலிருக்கும் நான்குயிரும்கடையிலிருக்கும் இரண்டுயிரும் அல்லாத பத்துயிரும் ஆரியத்திற்கும்தமிழிற்கும் பொதுவெழுத்தாகும். இனி, ஆரிய மெய் முப்பத்தேழனுள்,ககரமுதல் ஐந்து வருக்கங்களின் முதலில் நிற்கின்ற க ச ட த ப-க்களும்,கடையில் நிற்கின்ற ங ஞ ண ந ம -க்களும், ய ர ல வ ள-க்களும் இருமைக்கும்பொது வெழுத்துக்களாம். (மு. வீ. மொழி. 11-13) |
பொதுக் கருவி | தொல்காப்பிய எழுத்ததிகாரத்து முதல் மூன்று இயல்களாகிய நூல்மரபு,மொழிமரபு, பிறப்பியல் என்பன. முதலெழுத்து சார்பெழுத்து, மொழி முதலில்வருவன, இறுதியில் வருவன, நட்பெழுத்து, பகையெழுத்து, எழுத்துக்களின்தோற்றம்- இவை பற்றியே இம்மூன்று இயல்களும் கூறுகின்றன. இவை செய்கைக்குநேரான கருவி அன்மையின் பொதுக்கருவி ஆயின. (சூ. வி. பக். 17) |
பொதுப் புணர்ச்சி | இருபத்துநான்கு ஈற்றுச் சொற்களின் முன் வருமொழி முதல் ஞ ந ம ய வஎன்னும் மெய்கள் வரின் இயல்பாகப் புணரும். தனிக்குற்றெழுத்தை அடுத்தயகரமெய், தனியாக நிற்கும் உயிரும் உயிர்மெய்யுமாகிய ஐகாரம், நொ துஎன்ற உயிர்மெய் யெழுத்துக்கள் – இவற்று முன் ஞ ந ம ய வ – வரின், அம்மெய்கள் மிகுதலுமுண்டு. நிலைமொழி ஈற்றில் ண ள ன ல – என்ற மெய்கள்நிற்குமாயின், வருமொழி முதற் கணுள்ள நகரம் ணகரமாகவும் னகரமாகவும்திரியும்.எ-டு : விள ஞான்றது, விள நீண்டது, விள மாண்டது, விள யாது, விளவலிது;மெய்ஞானம், மெய்ஞ்ஞானம்; கைநீட்சி,கைந்நீட்சி;நொ நாகா, நொந் நாகா; து நாகா, துந் நாகா. (ஞெள்ளா, மாடா, யவனா -என்பவற்றையும் கூட்டி வரு மெய்யெழுத்து மிகுக்க.)மண், முள், பொன், கல்+நன்று = மண்ணன்று, முண்ணன்று, பொன்னன்று,கன்னன்று(நிலைமொழியீற்று ளகரம் ணகரமாகவும், லகரம் னகரமாக வும் திரியும்என்க.) (நன். 158)பொதுப்பெயர்களுக்கும் உயர்திணைப்பெயர்களுக்கும் ஈறான மெய்கள்வல்லின முதல் மொழி வருமிடத்தே இயல்பாம். உயிரும் யகர ரகரமெய்களும்ஆகிய இவ்வீற்று அவ்விருவகைப் பெயர்கள் முன்னர் வருமொழி முதற்கண் வரும்க ச த ப – என்னும் வல்லின மெய்கள் மிகா. உயர்திணைப் பெயர்கள் சிலநாற்கணங்களொடு புணருமிடத்தே நிலை வருமொழிகள் விகாரப்படுவனவும் உள.எ-டு : சாத்தன், ஆண் + குறியன், சிறியன், தீயன், பெரியன் =சாத்தன் குறியன், சாத்தன் சிறியன், சாத்தன் றீயன், சாத்தன்பெரியன்;ஆண் குறியன், ஆண் சிறியன், ஆண் டீயன், ஆண் பெரியன்; சாத்தன்,ஆண் + கை, செவி, தலை, புறம் = சாத்தன்கை, சாத்தன் செவி, சாத்தன்றலை,சாத்தன்புறம்; ஆண்கை, ஆண்செவி, ஆண்டலை, ஆண்புறம்.பொதுப்பெயர் அல்வழி வேற்றுமை இருவழியும் இயல்பாக முடிந்தன.ஊரன், அவன் + குறியன், சிறியன், தீயன், பெரியன் = ஊரன் குறியன்,ஊரன் சிறியன், ஊரன் றீயன், ஊரன் பெரியன்; அவன் குறியன், அவன் சிறியன்,அவன் றீயன், அவன் பெரியன்;ஊரன், அவன் + கை, செவி, தலை, புறம் = ஊரன்கை, செவி, தலை, புறம்;அவன் கை, செவி, தலை, புறம்.உயர்திணைப்பெயர் இருவழியும் இயல்பாக முடிந்தன.சாத்தி, தாய் +குறியள், சிறியள், தீயள், பெரியள்= சாத்திகுறியள், சாத்தி தீயள்….., தாய் குறியள், தாய் தீயள்…..சாத்தி, தாய் + கை, செவி, தலை புறம்= சாத்திகை, சாத்திசெவி,……….., தாய்கை, தாய்செவி,………….நம்பி, சேய் + குறியன், சிறியன், தீயன், பெரியன் = நம்பிகுறியன், நம்பி சிறியன்…, சேய் குறியன், சேய் சிறியன்,…..நம்பி + கை, செவி, தலை, புறம் = நம்பிகை, நம்பிசெவி…..,சேய்கை, சேய்செவி…..அவர், ஒருவர் + குறியர், சிறியர், தீயர், பெரியர் = அவர்குறியர், அவர் சிறியர்,…………., ஒருவர் குறியர், ஒருவர்சிறியர்,………… + கை, செவி, தலை, புறம்= அவர்கை,அவர்செவி,………., ஒருவர்கை, ஒருவர்செவி,………..உயிரும் யகர ரகர மெய்யும் ஆகிய ஈற்றுப் பொதுப்பெயர் களும்உயர்திணைப்பெயர்களும் அல்வழி வேற்றுமை என இருவழியிலும் இயல்பாகமுடிந்தன.விராடன் + அரசன் =விராடவரசன்; கபிலன் + பரணன் = கபிலபரணர்; வடுகன்+ நாதன்= வடுகநாதன்; அரசன் + வள்ளல் = அரசவள்ளல் – இவை அல்வழிப்புணர்ச்சி.ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப் பள்ளி; குமரன் + கோட்டம் = குமரகோட்டம், குமரக் கோட்டம் – இவை வேற்றுமைப் புணர்ச்சிஇருவழியும் உயர்திணைப்பெயர் விகாரப்பட்டது. நிலை மொழி ஈறு கெடுதல்காண்க. ஒரோவழி வருமொழி முதல் வல்லெழுத்து மிகுதலும் காண்க. வருமொழிமுதலெழுத்து மிகுதல் வருமொழிச் செய்கை எனப்படும். (நன். 159 சங்.)நிலைமொழி ஈற்றில் நிற்கும் ஆ ஏ ஓ – என்னும் வினா இடைச்சொல்முன்னரும், நிலைமொழியாக நிற்கும் யா என்னும் வினாப்பெயரின் முன்னரும்,உயிரும் மெய்யுமாகிய ஈற்றினையுடைய விளிப்பெயர் முன்னரும் வன்கணம்வரின் இயல்பு புணர்ச்சியாம்.எ-டு : உண்கா சாத்தா? அவனே கொண்டான்? உண்கோ சாத்தா? யா குறியன?நம்பீ கொள், விடலாய் சொல்(உண்கா – உண்பேனோ என்னும் பொருளையுடையது; ஆகாரஈற்று வினா) (நன்.160)உயிரும் ய ர ழ – மெய்களும் ஆகிய ஈற்றினையுடைய முன்னிலை வினையும்ஏவல்வினையும், வருமொழி முதல் வன்கணம் வரின் இயல்பாகவும் உறழ்ந்தும்புணரும்.எ-டு : உண்டி, உண்டனை, உண்டாய்+ கொற்றா = உண்டி கொற்றா – முதலாகஇயல்பாக முடிந்தன.உண்டீர் + கொற்றீர் = உண்டீர் கொற்றீர் – என இயல்பாகமுடிந்தது.முன்னிலைவினை முன்னர் வன்கணம் வந்து இயல் பாகமுடிந்தவாறு.வா கொற்றா, பாய் சாத்தா, சேர் தேவா, வாழ் புலவா – என, உயிர் ய ரழ இறுதி ஏவல்வினை முன் வன்கணம் வர இயல்பாயிற்றுநட கொற்றா, நடக் கொற்றா; எய் கொற்றா, எய்க் கொற்றா; ஈர் கொற்றா,ஈர்க் கொற்றா; தாழ் கொற்றா, தாழ்க் கொற்றா; – என, இவை உறழ்ச்சிமுடிபு.இயல்பாதல் முன்னிலைவினைக்கண்ணும், உறழ்தல் ஏவல் வினைசிலவற்றின்கண்ணும் கொள்ளப்படும். (நன். 161) |
பொய்கைக் கதயானை சூழாசிரியர் | இப்பழம்புலவர் பாடிய வெண்பாக்களுள் மூன்று, ‘ஒற்றுப் பெயர்த்தல்’என்ற சித்திரகவிக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள. (யா. வி.பக். 542) |
பொய்கையார் | ‘ஆழி யிழைப்பப் பகல்போம்’ என்ற எழுத்தானந்த எடுத்துக் காட்டுவெண்பா பொய்கையார் என்ற பழம்புலவரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக்.558, 45) மூன்றாமெழுத்து ஒன்று எதுகைக்கும் (பக். 143),முற்றியலுகரத்தான் இற்ற பிறப்பு எனும் வாய்பாட்டு ஈற்றுச்சீர் அமைந்தபாடற்கும் (பக். 231), வெண்பா இலக்கணத்தில் திரிந்து ஆரிடப் போலியாய்அமையும் பாடல்களுக்கும் (பக். 369, 371) இவருடைய பாடல்கள்எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள. |
பொருட்டன்மை | பொருட்டன்மையாவது, ஒருபொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக்கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள்தோறும் நிற்கும்தன்மை. (நன். 287 சிவஞா.) |
பொருட்புணர்ச்சி | வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வேற்றுமையுருபு மறைந்து நிற்க,அவ்வுருபின் பொருள் அவ்வுருபு மறைந்தவழியும் திரிபுறாது நிற்க,வேற்றுமையுருபு தொக்கு நிற்கும் நிலைமொழி, பெரும்பான்மை வருமொழிமுதலெழுத்தாம் வன்கணத் தொடும் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் புணரும்புணர்ச்சி.பொதுவாகப் பொருட்புணர்ச்சி என்பது அஃறிணைப் பெயர் களுக்கேகொள்ளப்படும். தொல். உயர்திணைப்பெயர் களையும் விரவுப்பெயர்களையும்விதந்து ஓதியே முடிப்பார் என்பது. (தொ.எ. 153 நச். உரை)உருபு தொக்கு நின்ற பொருட்புணர்ச்சியே எழுத்ததிகார இறுதி இயல்கள்மூன்றன்கண்ணும் பெரும்பாலும் கூறப்பட் டுள. (203 நச். உரை) |
பொருட்பெயர்ப் பகுபதம் | குழையன் குழையள் குழையர் குழையது, குழையன குழையேன் குழையேம்குழையாய் குழையீர் – என இவ்வாறு வருவன ‘இப்பொருளினை உடையார்’ என்னும்பொருண்மைப் பொருட் பெயர்ப் பகுபதம். (நன். 133 மயிலை.) |
பொருத்தம் பத்து என்றல் | அகலக்கவிக்கும், அதனைக் கொள்ளும் பாட்டுடைத் தலை மகனுக்கும்பத்துப் பொருத்தங்கள் குறைவின்றி அமைதல் இன்றியமையாதது. புலவன்இயற்றிய அகலக் கவியைப் பாட்டுடைத் தலைமகன் கொள்வது என்பது பாமகளை அவன்மணம் செய்துகொள்ளுதலேயாம் என்ற மரபு ஏற்பட் டமையால், இவ்வாறுபொருத்தம் இருப்பதும் இன்றியமை யாதது எனப் பாட்டியல் நூல்கள்கூறுகின்றன.அப்பத்துப் பொருத்தங்களாவன மங்கலம், சொல், பால், வருணம், உண்டி,தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்பன. (இ. வி. பாட். 9,10) |
பொருநுதல் | ஒருவர் மற்றொருவர் போல வேடங்கொள்ளும் பொருநரது தொழில் பொருநுதல்ஆதலின், அஃது ஒத்தல் என்னும் பொருளுடையது. (நன். 208 சங்கர.) |
பொருளதிகாரம் | அகம் புறம் முதலியவற்றைக் கூறும் தொல்காப்பியம். (திவா. பக்.232.)இலக்கணவிளக்கம் என்ற நூலின் மூன்றாம்பகுதி. சொல்லதி காரத்தைஅடுத்து நிகழ்வது இது. |
பொருளியலின் கோட்பாடு | புலவர் தாம் எடுத்துக்கொண்ட பொருளைப் புனைந்துரை வகையால் கூறுமாறுபோல, அதனைக் கூறுதற்குக் கருவி யாகிய சொற்களைப் புனையுங்காலும்,குறிப்பாற் பொருள் தரும் சொற்களைப் பெருக அமைத்தலும், வெளிப்படைச்சொற்களுக்குக் குறிப்புப்பொருளை ஏற்றி அமைத்தலும் நல்லிலக்கியங்களைச்செய்யும் மரபாகும். அங்ஙனம் வெளிப் படைச் சொற்களும் குறிப்புப்பொருளைஉள்ளடக்கி நிற்கும் முறைமையைத் தெரிந்து அதனைப் படைத்த ஆசிரியன்கருதிய பொருளை உணர்ந்துகொள்ளும் பாங்கினை அறிவித்தலே பொருளியலின்கோட்பாடு. (தொ. பொரு. பாயிரம் ச. பால) |
பொருளியல் | தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் ஐந்தாவது.இருதிணை ஐம்பால் மூவிடங்களில் அமையும் சொற்கள் தம் பொருள்வேறுபட்டிசைப்பினும் அப்பொருள்களைக் கொள்ளவேண்டும் எனவும்,அகத்திணையியல் களவியல் கற்பியல் ஆகிய இயல்களில் கூறப்பட்ட பொருள்களில்சற்று வேறுபட்டு வருவனவும் பொருளாகக் கொள்ளப்பட வேண்டும் எனவும்அமைத்து, சொல் உணர்த்தும் பொரு ளையும் தொடர்மொழிப் பொருளையும் ஒருங்கேதொகுத் துச் சொற்பொருளின் வழுவமைதியினையும் பொருளின் வழுவமைதியினையும்ஒருங்கே கூறும் இப்பொருளியல் 54 சூத்திரங்களை (நச். உரைப்படி)உடையது. |
பொருளியல் : பெயர்க்காரணம் | இருதிணை ஐம்பாற்பொருள்களின் பண்பும் செயலுமாகிய வற்றைஉணர்த்தற்குச் சொல்லதிகாரத்துள் ஓதப்பெற்ற விதிகளான் ஆக்கமுற்றமைந்தசொற்கள், பொருளதிகாரத் துள் தலைவன் தலைவி முதலானோர் கூற்றுக்களுள்அமைந்து வருங்கால், அவை சொல்லிலக்கண நெறிபற்றி யமைந்த பொருளினின்றும்வேறுபட்டுத் தலைவன் தலைவி முதலானோர் கருதிய பொருளைப் பயந்து நிற்கும்எனவும், அங்ஙனம் பொருள் பயத்தற்கும் அச்சொற்களே கருவியாக உள்ளமையான்அப்பொருளும் அவற்றிற்குரிய பொருளே எனவும், பொருளதிகாரத்துள்சொற்பொருளை அறியும் முறைமை கூறுதல் பற்றி இவ்வியல் பொருளியல் எனப்பட்டது. (தொ. பொரு. பாயிரம்) |
பொருளிலக்கணம் | அகம், புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கண நூல். மெய்ப்பாடு, அணி,யாப்பு, மரபு என்பனவும் பொருளிலக் கணத்துள் அடங்கும். |
பொருள் ஆதி ஆறும் முதல் சினையுள்அடங்குதல் | பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் அறு வகைப் பெயருள்,பொருள் முதல் மூன்றும் முதலும், சினை முதல் மூன்றும் சினையுமாய்அடங்கும் என்பது அறிவித்தற்கு இம்முறை வைத்தார் என்க. (நன். 131மயிலை., இ.வி. 45 உரை) |
பொருள் தெரியா ஒலிகள் | கடலொலி, சங்கொலி போல்வன பொருள் புலப்பட மாட்டாத ஒலிகள். (தொ.எ. 1நச். உரை) |
பொருள் வரைந்து இசைக்கும் ஐகாரவேற்றுமை | ஏனை வேற்றுமைகளது பொருட்புணர்ச்சியது பொதுமுடி பினைத் தான் நீக்கிவேறு முடிபிற்றாகும் இரண்டாம் வேற்றுமை. (தொ.எ. 157 நச்.) |
பொலிபாடுதல் | களத்திற் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப் பாடுதல். |
பொலிப்பாட்டு | அறுவடை முடிவில் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு.‘பொலிப்பாட்டுப் பாடப் புகுந்தாள்’ (விறலி. 785) |
போக்கியம் | சித்திரகவி வகை பற்றிக் கூறும் பண்டைய நூல்; இக்காலத்துவழக்கிறந்தது. (யா. வி. பக். 533) |
போர்க்கு எழுவஞ்சி | பகைமன்னனது நாட்டினைக் கவரப் புறப்படும் மன்னன் தன் குடும்பஅடையாளப் பூவினொடு வஞ்சிப்பூவினையும் சூடும் ஆதலின், அவனால்சூட்டிக்கொள்ளப்பட்ட வஞ்சிப்பூச் சூடுதலைப் புகழும் பிரபந்த வகை.இது ‘வரலாற்று வஞ்சி’ என்று பாட்டியல் நூல்களில் கூறப்படும். அதுகாண்க. |
போலி இடைநிலைமயக்கம் ஆகாமை | போலிகளை இடைநிலை மயக்கத்தின் பாற்படுத்திப் பொருள் கூறுவாருமுளர்.இங்ஙனம் கூறிய எழுத்துக்கள் மொழிக்கு உறுப்பாகி ஒன்று நின்றநிலைக்களத்து மற்றொன்று அது போல மொழி நிரம்ப நிற்பதன்றி ஒன்றோடொன்றுமயங்கி இரண்டெழுத்தும் உடன் நிற்பது இன்மையானும், முதல் ஈறுஇடைநிலைகளுக்குப் புறனடையும் கூறிக் குறைவறுத்தமை யானும், ‘உறழாநடப்பன’ என்றும் ‘ஒக்கும்’ என்றும் ‘உறழும்’ என்றும் உவமஉருபுகொடுத்து இம் மூன்று சூத்திரம் கூறுத லானும், போலி இடைநிலைமயக்கத்தின்பாற் படாது என்க. (நன். 124 சங்கர.) |
போலி ஐகார ஒளகாரம் | அ இ, அய் – என்பன ஐகாரத்துக்குப் போலியாக வரும். ஐகாரச் சினைக்குப்போலியாக வரும் என்று தொல். கூறுதலின், சினை யெழுத்தாவது மொழியின்முதலில் வரும் எழுத்தைக் குறிக்காமல் இடையிலும் இறுதியிலும் வரும்எழுத்தைக் குறித்தலின், மொழி இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரமே‘அய்’ என வரும்’; மொழி முதற்கண் ‘அஇ’ ஐகாரத்துக்குப் போலியாகவரும்.அஉ என்பது ஒளகாரத்துக்குப் போலியாக வரும், ஒளகாரம் மொழி முதற்கண்வருமே அன்றி இடையிலும் இறுதியிலும் வாராமையின், இடையிலும் இறுதியிலும்வரும் ஐகாரத் துக்கு‘அய்’ போலியாவது போல, ஒளகாரத்துக்கு ‘அவ்’போலியாகும் என்று தொல்காப்பினார் குறிப்பிடவில்லை.வீரசோழியமும் நேமிநாதமும் மொழிமூவிடத்தும் ஐகாரத் துக்கு ‘அய்’போலியாகும் என்றும், ஒளகாரத்துக்கு ‘அவ்’ போலியாகும் என்றும் கூறின.ஆயின், “அஇ-ஐ,அஉ-ஒள” என்பதனை அவை குறிப்பிடவில்லை,(எ.ஆ.பக்.59,60)நன்னூலார் அஇ,அய்-என்பன ஐ போலவும், அஉ,அவ்-என்பன ஒள போலவும் ஆகும்என்று கூறியுள்ளார். பிற்காலத்து ஐ, ஒள-என்பனவற்றிற்கு அய் அவ்-என்றபோலிகளையும் எதுகைக்குக் கொண்டனர். (பி.வி.5உரை) |
போலிமொழி | போலும் என்னும் சொல் இது. இச்சொல்லில் உகரம் கெட்டு, எஞ்சிய லகாரம்னகாரமாகிப்‘போன்ம்’எனச் செய்யுளில் ஈரொற்று உடனிலைச் சொல்லாய்வரும்போது ஈற்று மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாய்மகரக் குறுக்கமாம். (தொ. எ. 51 நச்.) |
ப்ரக்ருதி பாவ ஸந்தி | திரிந்த புணர்ச்சிகள் மூன்று. அவை மெய் பிறிதாதல் (ஆதேசம்),குன்றல் (லோபம்), மிகுதல் (ஆகமம்) என்பன.மூன்று திரிபுகளுள், யாதானும் ஒன்று வரவேண்டிய இடத்தில் அதுவரப்பெறாதே இயல்பாகப் புணர்வது இயல்புபுணர்ச்சி எனப்படும். இதுவடமொழியில் பிரகிருதி பாவ ஸந்தி எனப்படும்.மெய்பிறிதாதலைத் திரிதல் எனவும், குன்றலைக் கெடுதல் எனவும்,மிகுதலைத் தோன்றல் எனவும், திரிந்த புணர்ச்சியை விகாரப் புணர்ச்சிஎனவும் நன்னூல் கூறும். (எ. ஆ. பக். 92) |