தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
போக்கியம்

சித்திரகவி வகை பற்றிக் கூறும் பண்டைய நூல்; இக்காலத்துவழக்கிறந்தது. (யா. வி. பக். 533)

போர்க்கு எழுவஞ்சி

பகைமன்னனது நாட்டினைக் கவரப் புறப்படும் மன்னன் தன் குடும்பஅடையாளப் பூவினொடு வஞ்சிப்பூவினையும் சூடும் ஆதலின், அவனால்சூட்டிக்கொள்ளப்பட்ட வஞ்சிப்பூச் சூடுதலைப் புகழும் பிரபந்த வகை.இது ‘வரலாற்று வஞ்சி’ என்று பாட்டியல் நூல்களில் கூறப்படும். அதுகாண்க.

போலி இடைநிலைமயக்கம் ஆகாமை

போலிகளை இடைநிலை மயக்கத்தின் பாற்படுத்திப் பொருள் கூறுவாருமுளர்.இங்ஙனம் கூறிய எழுத்துக்கள் மொழிக்கு உறுப்பாகி ஒன்று நின்றநிலைக்களத்து மற்றொன்று அது போல மொழி நிரம்ப நிற்பதன்றி ஒன்றோடொன்றுமயங்கி இரண்டெழுத்தும் உடன் நிற்பது இன்மையானும், முதல் ஈறுஇடைநிலைகளுக்குப் புறனடையும் கூறிக் குறைவறுத்தமை யானும், ‘உறழாநடப்பன’ என்றும் ‘ஒக்கும்’ என்றும் ‘உறழும்’ என்றும் உவமஉருபுகொடுத்து இம் மூன்று சூத்திரம் கூறுத லானும், போலி இடைநிலைமயக்கத்தின்பாற் படாது என்க. (நன். 124 சங்கர.)

போலி ஐகார ஒளகாரம்

அ இ, அய் – என்பன ஐகாரத்துக்குப் போலியாக வரும். ஐகாரச் சினைக்குப்போலியாக வரும் என்று தொல். கூறுதலின், சினை யெழுத்தாவது மொழியின்முதலில் வரும் எழுத்தைக் குறிக்காமல் இடையிலும் இறுதியிலும் வரும்எழுத்தைக் குறித்தலின், மொழி இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரமே‘அய்’ என வரும்’; மொழி முதற்கண் ‘அஇ’ ஐகாரத்துக்குப் போலியாகவரும்.அஉ என்பது ஒளகாரத்துக்குப் போலியாக வரும், ஒளகாரம் மொழி முதற்கண்வருமே அன்றி இடையிலும் இறுதியிலும் வாராமையின், இடையிலும் இறுதியிலும்வரும் ஐகாரத் துக்கு‘அய்’ போலியாவது போல, ஒளகாரத்துக்கு ‘அவ்’போலியாகும் என்று தொல்காப்பினார் குறிப்பிடவில்லை.வீரசோழியமும் நேமிநாதமும் மொழிமூவிடத்தும் ஐகாரத் துக்கு ‘அய்’போலியாகும் என்றும், ஒளகாரத்துக்கு ‘அவ்’ போலியாகும் என்றும் கூறின.ஆயின், “அஇ-ஐ,அஉ-ஒள” என்பதனை அவை குறிப்பிடவில்லை,(எ.ஆ.பக்.59,60)நன்னூலார் அஇ,அய்-என்பன ஐ போலவும், அஉ,அவ்-என்பன ஒள போலவும் ஆகும்என்று கூறியுள்ளார். பிற்காலத்து ஐ, ஒள-என்பனவற்றிற்கு அய் அவ்-என்றபோலிகளையும் எதுகைக்குக் கொண்டனர். (பி.வி.5உரை)

போலிமொழி

போலும் என்னும் சொல் இது. இச்சொல்லில் உகரம் கெட்டு, எஞ்சிய லகாரம்னகாரமாகிப்‘போன்ம்’எனச் செய்யுளில் ஈரொற்று உடனிலைச் சொல்லாய்வரும்போது ஈற்று மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாய்மகரக் குறுக்கமாம். (தொ. எ. 51 நச்.)