தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பேடியெழுத்து

ஆய்த எழுத்து. (இ. வி. பாட். 13)

பேதை

எழுவகைப் பருவமாகப் பிரிக்கப் பெற்ற மகளிரில், முதற் பருவத்தினள்;வயது வரையறை ஐந்து முதல் ஏழாண்டு அளவும். (இ. வி. பாட். 99)

பேன் என்ற பெயர் புணருமாறு

பேன் என்பது பண்டைக்கால இயற்பெயர்களுள் ஒன்று. பேன் என்ற இயற்பெயர்தந்தை என்ற முறைப்பெயராடும், மக்கள் முறைமையில் வரும்இயற்பெயர்களொடும் புணரும்வழி, இயற்பெயர்களுக்குரிய சிறப்புப்புணர்ச்சி விதி பெறாது, அஃறிணை விரவுப்பெயரின் பொதுவிதியான்முடியும்.எ-டு : பேன்+ தந்தை = பேன்றந்தை (பேனுக்குத் தந்தை)பேன் + கொற்றன் = பேன்கொற்றன் (பேன் என்ப வனுக்கு மகனாகியகொற்றன்) (தொ.எ.351 நச்.)

பேரகத்தியம்

அகத்தியரால் இயற்றப்பட்டதோர் இலக்கணநூல்; அளவிற் பெரியதாயிருந்தமை‘சிற்றகத்தியம்’ என்ற பெயரை நோக்கப் புலனாம். இஃது இறந்துபட்டது. இஃதுஇயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலக்கணமும் கூறிய மகா பிண்டமாகஇருந்தது. (மா. அ. பாயிரம். 20)

பேராசிரியர்

தொல்காப்பிய உரையாசிரியர்; நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர்.காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப. இவர் பொரு ளதிகாரத்தில்நச்சினார்க்கினியரால் மூன்று இடங்களில் போற்றப்பட்டுள்ளார்.மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் பொருளதிகார நான்குஇயல்கட்கும் இவர் உரை உள்ளது. திருக்கோவையார் உரையாசிரியரொருவர்க்கும்பேராசிரியர் என்ற பெயர் உண்டு. இவ்விருவர் உரையும் திட்ப நுட்பம்வாய்ந்தவை; தமிழுக்குப் பெருமை கூட்டுவன.

பேரிளம்பெண்

எழுவகைப் பருவ மகளிருள் இறுதிப் பருவத்தவள்; நாற்பது வயதினள்;என்றது முப்பத்திரண்டு முதல் நாற்பதுகாறும் நிகழும் ஆண்டினள். (இ. வி.பாட். 103)