தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பெண் பருவம்

பேதை (வயது 6, 7), பெதும்பை (11), மங்கை (12), மடந்தை (13) அரிவை(25), தெரிவை (31), பேரிளம் பெண் (40) என்பன.வாலை (5), தருணி (11), பிரவுடை (40), விருத்தை (40க்கு மேல்)என்றும் சில பருவம் கூறுப. (பிங். 939) பேதை முதலிய பருவ மகளிர்க்குவயது பிறவாறும் கூறுப. (இ.வி.பாட். 99 – 103)(ஆ. நி. 72, பிங். 941. நா. நி. 118, பொ.நி. 97)

பெண்கலை

வண்ணப்பாவின் பின் பகுதி.

பெண்ணெழுத்து

1. உயிர்மெய் (பிங். 1359). 2. நெட்டெழுத்து. (வெண்பா. முதன் மொ.6)

பெண்பாற் பிள்ளைக்கவி

பெண்பாற் பிள்ளைத் தமிழ்; அது காண்க.

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

இருபாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாக உரிய காப்பு, செங்கீரை,தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்னும் ஏழு பருவங்களோடே,பெண்பாற்கே சிறப்ப உரியவான கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள்அமைய, சந்த விருத்தத்தாலும் பிற ஆசிரிய விருத்தத்தாலும் பாடப்படும்பிரபந்தம். அம்மானை, நீராடல், ஊசல் என இறுதிப் பருவங்கள் அமையப்பெறுவனவும் உள. ‘பிள்ளைத் தமிழ்’ காண்க. (இ. வி. பாட். 47)

பெண்பாற் பிள்ளைப்பாட்டு

‘பெண்பாற் பிள்ளைத் தமிழ்’ காண்க.

பெண்பாற்பெயர்ப் பகுபதம் சிலவற்றதுமுடிபு

பெண்பாற்பெயர்ப் பகுபதம் முடிப்புழி இன்ன குலத்தார் என்னும்பொருண்மை தோன்ற முடிக்க.அரசி என்னும் பகுபதம் முடியுமாறு: ‘தத்தம்….. பகுதியாகும்’ (நன்.133) என்பதனான் அரசு என்னும் பகுதியைத் தந்து, ‘அன் ஆன்’ (139)என்பதனான் இகர விகுதியை நிறுவி, ‘உயிர்வரின் உக்குறள்’ (163)என்பதனான் உகரத்தைக் கெடுத்துச் சகர ஒற்றின்மேல் ‘உடல்மேல்’ (203)என்பதனான் இகரஉயிரை ஏற்றி முடிக்க.பார்ப்பனி: ‘தத்தம்… பகுதியாகும்’ என்பதனான் பார்ப்பான் என்னும்பகுதியை முதல்வைத்து, அதனை ‘விளம்பிய பகுதி’ (138) என்பத னான்பார்ப்பன்- என அன் ஈறாக்கி, ‘அன் ஆன்’ என்பதனான் இகர விகுதியைக்கொணர்ந்து உயிரேற்றி முடிக்க.வாணிச்சி: வாணிகன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பதனான்‘கன்’ கெடுத்து, இகரவிகுதியைக் கொணர்ந்து சகர இடைநிலையை வருவித்துஅதனைமிகுவித்து, உயிரேற்றி முடிக்க.உழத்தி: உழவன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பத னான்‘வன்’கெடுத்து, இகர விகுதி கொணர்ந்து, ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்இயம்பலின்’ (140) என்பதனான் தகர இடைநிலையை வருவித்து, அதனைமிகுவித்து, உயிரேற்றி முடிக்க.தச்சிச்சி: தச்சன் என்னும் பகுதியை ‘அன்’ கெடுத்து நிறுவி, இகரவிகுதியைக் கொணர்ந்து ‘இலக்கியம் கண்டதற்கு’ என்பதனான் ‘இச்’ என்னும்இடைநிலையை வருவித்து உயிரேற்றி முடிக்க. (நன். 144 மயிலை.)

பெண்பாலெழுத்து

பெண்ணெழுத்து, நெட்டெழுத்து ஏழும் ஆம்.(இ. வி. பாட். 13)

பெதும்பை

எட்டு முதலாகப் பதினொன்று காறும் ஆண்டு நிகழும் பெண்பாற் பருவம்;உலாமகளின் பருவமேழனுள்ளும் இஃது இரண்டாவது. (இ. வி. பாட். 100)

பெயர் இன்னிசை

பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சாருமாறு இன்னிசை வெண்பாவால் 90,70,50 என்ற எண்ணிக்கைப்படப் பாடுவ தொரு பிரபந்தம். (இ. வி. பாட். 65)

பெயர் நேரிசை

பாட்டுடைத்தலைவன் பெயரையும் ஊரையும் சார்ந்து வருமாறு தொண்ணூறும்எழுபதும் ஐம்பதும் நேரிசை வெண்பாவால் கவிகள் பாடின், அவை பெயர்நேரிசைஎனவும் ஊர்நேரிசை எனவும் வழங்கப்படும். ஈண்டுப் பாட்டுடைத் தலைவனதுபெயரைச் சார்ந்துவரப் பாடப் படும் 90, 70, 50 ஆகிய நேரிசைவெண்பாவாலமைந்த பிரபந்தம். (இ. வி. பாட். 70)

பெயர் புணர்நிலை வேற்றுமை வழிய

பெயர் புணர்நிலை – பெயர்ச்சொல் இணையும்வழி. பெயர்ச் சொல் புணரும்வழியிலேயே வேற்றுமைப் புணர்ச்சி அமையும். நால்வகைச் சொற்களும்இருவழியும் புணரும் என எய்தியதனை மறுத்துப் பெயர்ச்சொல் புணரும்நிலையே வேற்றுமையாம் எனவே, வினைச்சொல் முதலியமூன்றும் புணரும்வழிஅல்வழிய ஆவன அன்றி, வேற்றுமை வழிய வாரா;பெயர்ச்சொற்கள், வேற்றுமைவழி -அல்வழி – என இருவழியும் ஆம் என்பது. (சூ. வி. பக். 51)எ-டு :சாத்தன் மகன்-பெயரொடு பெயர்-வேற்றுமைப் புணர்ச்சிநிலம் கடந்தான்-பெயரொடு வினை – வேற்றுமைப் புணர்ச்சிவந்த சாத்தன்-வினையொடு பெயர் -அல்வழிப்புணர்ச்சிமற்றிலது-இடையொடு வினை – அல்வழிப்புணர்ச்சிநனிபேதை- உரியொடு பெயர் – அல்வழிப்புணர்ச்சிதவச்சேயது-உரியொடு வினை – அல்வழிப்புணர்ச்சிமற்றைப் பொருள்- இடையொடு பெயர்- அல்வழிப் புணர்ச்சிநால்வகைப் புணர்ச்சியும் வேற்றுமை அல்வழி என இரண் டாய் அடக்கலின்,வினைவழியும் உருபு வரும் என்பதுபட நின்றதனை இது விலக்கிற்று. (தொ. எ.117 இள. உரை)“ஆயின் இவ்விலக்குதல் ‘வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது’ என்றவினையியல் முதல் சூத்திரத்தான் பெறுதும் எனின், அது முதனிலையைக்கூறியதாம்.” (தொ. எ. 116 நச். உரை)

பெயர் மாலை

‘நாம மாலை’ என்பதன் பரியாயப் பெயர். அது காண்க.

பெயர் விகுதி பெறுதல்

வில்லன் வில்லான், வளையள் வளையாள், ஊரர் ஊரார், வில்லி வாளி அரசிசெட்டிச்சி, காதறை மூக்கறை -இவை வினையின் விகுதிகள் சில பெயரில்வந்தன. (அன் ஆன், அள் ஆள், அர் ஆர், இ, ஐ – என்பன.) (நன். 140சங்கர.)

பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறல்

இடையும் உரியும் பெயர்வினைகளை அடுத்தல்லது தாமாக நில்லாமையின்பெயர்வினைகளுக்கே புணர்ச்சி கூறப் பட்டது. (தொ.எ.109 இள. உரை)இடைச்சொல்லும் உரிச்சொல்லும் புணர்க்கும் செய்கைப் பட்டுழிப்புணர்ப்பு சிறுபான்மை ஆதலின் அவை விதந்து கூறப் பெறவில்லை. (108 நச்.உரை)

பெயர்இடைநிலைகள்

வானவன், மீனவன், வில்லவன், எல்லவன், கதிரவன், சூரியவன் – என்பன அகரஇடைநிலை பெற்றன.சேரமான், கட்டிமான் – என்பன மகர இடைநிலை பெற்றன.வலைச்சி, புலைச்சி – என்பன சகர இடைநிலை பெற்றன.புலைத்தி, வண்ணாத்தி – என்பன தகர இடைநிலை பெற்றன.வெள்ளாட்டி, மலையாட்டி – என்பன டகர இடைநிலை பெற்றன.கணக்கிச்சி, தச்சிச்சி- என்பன ‘இச்’ இடைநிலை பெற்றன.சந்தி வகையானும் பொதுச்சாரியை வகையானும் முடியாவழி இவ்வாறு வருவனஇடைநிலை எனக் கொள்க. (நன். 140 மயிலை.)அறிஞன் என்பது ஞகர இடைநிலை பெற்றது.ஓதுவான், பாடுவான் – என்பன வகர இடைநிலை பெற்றன.வலைச்சி, புலைச்சி – என்பன சகர இடைநிலை பெற்றன.வண்ணாத்தி, பாணத்தி; மலையாட்டி, வெள்ளாட்டி; தந்தை, எந்தை, நுந்தை-என்பன தகர இடைநிலை பெற்றன. (நன். 141 சங்கர.)அறிஞன், வினைஞன், கவிஞன் – ஞகரஒற்று இடைநிலை பெற்றன.ஓதுவான், பாடுவான் – வகரஒற்று இடைநிலை பெற்றன.வலைச்சி, இடைச்சி – சகரஒற்று இடைநிலை பெற்றன.செட்டிச்சி, தச்சிச்சி – ‘இச்சு’ என்னும் இடைநிலை பெற்றன.கதிரவன், எல்லவன், வானவன் – அகர உயிராம் இடைநிலை பெற்றன.சேரமான், கோமான், வடமன் – மகரஒற்று இடைநிலை பெற்றன. (நன். 141இராமா.)உண்டவன் உரைத்தவன் உண்ணாநின்றவன் உண்பவன் – முதலிய வினைப்பெயர்கள்முக்கால இடைநிலைகள் (ட், த், ஆநின்று, ப் முதலிய) பெற்றவாறும், வானவன்மீனவன் வில்லவன் எல்லவன் கதிரவன் கரியவன்-முதலியவை‘அ’ என்னும் இடைநிலைபெற்றவாறும், சேரமான் கட்டிமான்-முதலியவை மகர இடைநிலை பெற்றவாறும்,வலைச்சி பனத்தி மலையாட்டி முதலியவை முறையே சகர தகர டகர இடை நிலைபெற்றவாறும், செட்டிச்சி, தச்சிச்சி – முதலியவை ‘இச்சு’ என்னும்இடைநிலை பெற்றவாறும் காண்க. பிறவும் அன்ன. (இ. வி. 52. உரை)

பெயர்நிலைச்சுட்டு

பெயர்நிலைச் சுட்டாவது சுட்டுநிலைப் பெயர் என்றவாறு. அவை பொருளைஒருவர் சுட்டுதற்குக் காரணமான நிலையையுடைய பெயர்கள். அவை உயர்திணைப்பெயரும் அஃறிணைப் பெயரும் என இருவகைய. பொதுப்பெயரென ஒன்று இன்று. அஃதுஅஃறிணைப் பெயராகவோ உயர் திணைப் பெயராகவோ, ஒருநேரத்தில் ஒன்றாகத்தான்இருத்தல் வேண்டும். ஆதலின், பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்அஃறிணைப்பெயர் என்ற இரண்டனுள் அடங்கும். (தொ. எ. 117நச். உரை)பெயர்நிலைச்சுட்டு-பெயராகிய பொதுநிலைமையது கருத்து. (118 இள.உரை)பெயர் புணரும் நிலையாகிய கருத்தின்கண் (எ. கு. பக். 124)

பெயர்ப்பகுபதம் தன்னொடும்பிறிதொடும்புணர்தல்

மலையன் மன்னவன்- மலையன் மன் எனவும், வானவன் வாளவன் – வானவன் வாள்எனவும், பரணியான் பாரவன் – பரணியான் பார் எனவும், இளையள் மடவாள் -இளையள் பெண் எனவும், கரியான் மலையன் – கரியான் கால் எனவும், ஊணன்தீனன்- ஊணன் உரம் எனவும் பெயர்ப்பகுபதம் தன்னொடும் பிறிதொடும் வந்தது.(நன்.150 மயிலை.)

பெயர்ப்பகுபதம் பிரிப்பு

பெயர்ப் பகுபதம் பிரித்தால், பகுதி பகாப்பதமும் விகுதி வேறுபொருளில் இடைச்சொல்லுமாய்த் தொடர்ந்து நின்று பொருளை விளக்கும். அவைஊரன், வெற்பன், வில்லி, வாளி- என்பன. (நன்.131 மயிலை,)

பெரிய பம்மம்

பழைய யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. அசைக்கு உறுப் பாகும்எழுத்துக்கள் பதினைந்து என்பதற்கு இந்நூல் சூத்தி ரம் மேற்கோளாகஎடுத்துக்காட்டப்பட்டுள்ளது.(யா. வி. பக். 31)

பெரிய முப்பழம்

பாட்டியல் மரபு கூறுவதொரு பண்டையிலக்கண நூல்.(யா. வி. பக். 555)

பெரியவாச்சான் பிள்ளை

13ஆம் நூற்றாண்டினராகிய வைணவ ஆசாரியார்; திருப் பனந்தாளை யடுத்தசேய்ஞலூரில் தோன்றியவர்; ஸ்மார்த்தச் சோழியர்; பின் வைணவர் ஆகியவர்;திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் வியாக்யானம் வரைந்துள்ளார்.பெரியாழ்வார் திருமொழியின் பெரும்பகுதிக்கு இவர் வரைந்த வியாக்யானம்கிட்டவில்லை. திருவாய்மொழிக்கு இவர் வரைந்த இருபத்து நாலாயிரப்படிமிகச் சிறந்தது என்ப. நம்பிள்ளையினது ஈடு இதனைப் பெரும்பாலும்விளக்குவதாக அமைந்துள்ளது.

பெருங்கலித்தொகை

இறந்துபட்ட இடைச்சங்கத்து நூல்களிடையே ஒன்று என்ப; ‘இருங்கலிகடிந்த பெருங்கலித் தொகையொடு’ (சிலப். உரைப் பாயிரம்அடிக்குறிப்பு)

பெருங்காக்கைபாடினியம்

பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பட்டதோர் யாப்பிலக்கண நூல். இவர்தொல்காப்பியனார் காலத்தவர் என்பது பேராசிரியர் கருத்து. இவருடையநூலிலிருந்து 73 நூற்பாக்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இலக் கணவிளக்கம் செய்யுளியல் பிற்சேர்க்கை காண்க.

பெருங்காக்கைபாடினியார்

பெருங்காக்கை பாடினியம் எனத் தம் பெயரால் ஓர் யாப் பிலக்கணநூலியற்றிய புலவர். இவர் காலத்தில் ‘வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம்’என, வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் தமிழகஎல்லைகளாக இவைஇருந்தன என்பது இவர் இயற்றிய தற்சிறப்புப் பாயிரச் சூத்திரத்தால்போதருகிறது.

பெருங்குருகு

தலைச் சங்கத்தே வழக்கிலிருந்த ஓர் இசைத்தமிழிலக்கண நூல். (சிலப்.உரைப் பாயிரம்)

பெருங்குறிஞ்சி

பத்துப்பாட்டுள் ஒன்றாகிய, கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு,‘கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியிலும்’ (பரி. 19-77 உரை)

பெருஞ்சித்திரனார் பாடல்

இவர் பாடல்களில் சில, பாடல்கட்கு என்று வரையறுக் கப்பட்டஇலக்கணங்களின் மிக்கும் குறைந்தும் அமைந்தiவ; ஆரிடப்போலி எனவும் ஆரிடவாசகம் எனவும் அவை கூறப்படும். (யா. வி. பக். 370, 371)

பெருநாரை

தலைச்சங்கத்து வழக்குப் பெற்றிருந்த இசை இலக்கண நூல்களுள் ஒன்று.(சிலப் உரைப்.)

பெருநூல்

ஒரு பொருள் கிளந்த சூத்திரம், இனமொழி கிளந்த ஓத்து, பொதுமொழிகிளந்த படலம் – என்னும் இம்மூன்று உறுப்ப hன் இயன்ற இலக்கணம். (சிவஞா.பா. வி. பக். 9)எ-டு : தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல், சின்னூல், இலக்கணவிளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம்.

பெருந்தலைச் சாத்தனார் பாடல்

‘பெருஞ்சித்திரனார் பாடல்’ என்பதற்குரிய குறிப்பு ஈண்டும் கொள்க.(யா. வி. பக். 370, 371)

பெருந்தேவனார்

1. பாரதம் பாடிய சங்கப் புலவர். (தொ. பொ. 72 நச்.)2. ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர்3. பதினோராம் நூற்றாண்டினரான வீரசோழிய உரை யாசிரியர்.

பெருந்தேவபாணி

1. கடவுளரைத் துதிக்கும் இசைப்பா வகை. (சிலப். 6 : 35 உரை)2. பதினோராம் திருமுறையைச் சார்ந்த, நக்கீரரால் பாடப் பெற்ற ஒருசைவப் பிரபந்தம்.

பெருமகிழ்ச்சி மாலை

கற்புடைப் பெண்டிருடைய பெருமைகளைக் கூறுவதொரு பிரபந்தம்.(சது.)

பெரும்பொருள்

பொருட் பகுதி பற்றியதொரு விரிவான நூல் (சீவக. 187 நச். உரை). இதுபெரும்பொருள் விளக்கம் எனவும் பெயர் பெறும். இதன் பாடல்கள் பலபுறத்திணையியல் உரையிலும் புறத்திரட்டிலும் உள.

பெருவளநல்லூர்ப் பாசண்டம்

பாவினங்களுள் நவக்கிரகமும் வேற்றுப்பாடையும் விரவி வந்தால்,அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்க வேண்டும் என்பதற்குஎடுத்துக்காட்டாக இத்தொடர் நிலைச் செய்யுள் குறிப்பிடப்பட்டுள்ளது.(யா. வி. பக். 491)